நாக தோசம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நாக தோசம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 4 செப்டம்பர், 2012

நாக தோசம்,சர்ப்ப தோசம் தரும் ராகு கேது உங்க ஜாதகத்துல எப்படி.?ராசிபலன்


ராகு கேது இருவரும் சாயா கிரஹங்கள். இருவரைப் பற்றியும் பொதுவாகவே சொல்லவேண்டும் அதாவது:

ஒருவர் பிறக்கும்போது லக்னத்தில் ராகு கேது இவர்களில் யார் இருந்தாலும் ஜாதகர் புத்திரபாக்கியம் உண்டு. ஆயுள் விருத்தியில்லாதவர். செல்வந்தன். ஆனாலும், ஏதேனும் வியாதியால் கஷ்டப்பட்டுக்கொண்டே இருப்பார்.
இரண்டாவது இடத்தில் இருக்கும் ராகுவோ, கேதுவோ இருக்கப் பிறந்தவர் எப்போதும் ஏதோ ஒன்றைப் பற்றிக் கவலைப் பட்டுக்கொண்டேயிருப்பார். அற்ப வித்தையுள்ளவர். நடுத்தரவயதிற்கு மேல் பாக்கியவான் என்று சொல்லக்கூடிய நிலையை அடைபவர். தயை கருணை என்பது இல்லாத கடின சித்தம் உள்ளவர். சோம்பல் என்பது உடன் பிறந்தது போல் உறவாகும். இரு விவாக ப்ராப்தியுள்ளவர்.
மூன்றாவது இடத்தில் இருக்கும் ராகுவோ, கேதுவோ இருக்கப் பிறந்தவர் புகழ்மிக்கவர். திடீர் கோபத்திற்கு ஆளாவார். தைரியசாலி. அகால போஜனமுள்ளவர். லஷ்மியின் அருள்பெறும் பாக்கியமும் உண்டு என்று சொல்லவேண்டும்.
நான்காவது இடத்தில் இருக்கும் ராகுவோ, கேதுவோ இருக்கப் பிறந்தவர் தயவு தாஷண்யம் உள்ளவர். முன் சகோதரிகள் உள்ளவர். அற்ப புத்தியுள்ளவர். துன்மார்க்கர் என்று பெயர் எடுக்கும் சூழ்நிலையும் ஏற்படும்.
ஐந்தாம் இடத்தில் ராகு இருந்தால் முன்னோர் வழி சாபம்..புத்திர தோசம் என சொல்லப்படுகிறது..பூர்வபுண்ணியம் பாதிக்கப்படுகிறது..காரிய தடைகள் அதிகம் உண்டாகிறது..5 ஆம் அதிபதியும்,சுக்கிரனும்,குருவும் கெட்டால் குழந்தை இல்லை...அல்லது தாமதமாக பிறக்கும்..

ஆறாவது இடத்தில் இருக்கும் ராகுவோ, கேதுவோ இருக்கப் பிறந்தவர் ஸ்திர பாக்கியம் அதிகம் உள்ளவர். ஸ்திரீகள் மகிழும் வண்ணம் நடந்துகொள்பவர். சில ஸ்திரீகளின் பகைமையும் சம்பாதித்துக் கொள்ளவேண்டியதாகவும் ஏற்படும்.
ஏழாவது இடத்தில் இருக்கும் ராகுவோ, கேதுவோ இருக்கப் பிறந்தவர் நீர் ரோகத்தால் கஷ்டப்பட வேண்டியதாக ஏற்படும். வித்துவான் இரண்டு மனைவியர் உண்டு.
எட்டாவது இடத்தில் இருக்கும் ராகுவோ, கேதுவோ இருக்கப் பிறந்தவர் அதிகம் குறிப்பாக சொல்லவே;ணடியதில்லை. மற்ற கிரகங்களின் பார்வை, சேர்க்கை இவைகளைக் கொண்டு பலன் சொல்லலாம்.
ஒன்பதாம் இடத்தில் ராகு இருந்தால் தந்தை முரண்பாடானவர்..தந்தைக்கும்,ஜாதகருக்கும் ஆகாது..பங்காளி சண்டை இருக்கும்..குலதெய்வ வழிபாடு நின்று போகும்..பாக்யங்களை கெடுக்கிறது..நல்ல வீடு,மனைவி,குழந்தைகள் விசயத்தில் சில மன சஞ்சலங்களை உண்டாக்கும்..

பத்தாம் இடத்தில் ராகு இருந்தால் கேது இருந்தால் பணம் பறந்துவரும் என்பார்கள்..தொழில் ஸ்தானத்தில் ஒரு அசுபராவது இருப்பது தொழிலுக்கு பிரச்சினை இல்லை எனலாம்..

பதினொன்றாம் இடத்தில் இருக்கும் ராகு லாபத்தையே கொடுப்பார்..நல்லது...பணம் பல வழிகளிலும் வந்து சேரும்..குறுக்கு வழியில் கூட சம்பாதித்து விடுவார்...

12 ஆம் இடத்தில் ராகு மறைவது கேது மறைவது நல்லதுதான்...12ல் கேது மறுபிறப்பு இல்லை என்பார்கள்..எல்லா கஷ்டத்தையும் கொடுத்துவிடுவாரா..என்றால் அப்படி இல்லை..பிறபகுதியில் ஆன்மீக யாத்திரை,கோயில் கட்டுதல் போன்ற புண்ணிய பலன்களை சேர்ப்பார்..

கிரக நாயகர்கள் எந்த இடத்தில் இருந்தால் என்ன பலனைக் கொடுப்பார்கள் என்பது பொதுவாக சொல்லக்கூடியதே தவிர இதை வைத்து பலனைக் கனிக்கக்கூடாது. மற்ற கிரகங்களின் பார்வை, சேர்ககை, தசைகள், புத்திகள் இவைகளின் பலன்களையும் கவனிக்கவேண்டும்.

வெள்ளி, 20 ஜனவரி, 2012

புலிப்பாணி ஜோதிடம் சொல்லும் புத்திர தோசம்,நாகதோசம்,காள சர்ப்ப தோசம்

புலிப்பாணி ஜோதிடம் சொல்லும் புத்திர தோசம்,நாகதோசம்,காள சர்ப்ப தோசம்

ஒருவருடைய ஜாதகத்தில் புத்திர ஸ்தானமாகிய 5 ஆம் இடத்தில் ராகு அல்லது கேது இருந்து செவ்வாயால் பார்க்கப்பட்டால் கடுமையான புத்திர தோசம் உண்டாகிறது.அடிக்கடி கருச்சிதைவும்,குழந்தை பிறந்து இறத்தலும் உண்டாகிறது!சிலருக்கு புத்திர பலனே இருப்பதில்லை.இதை புலிப்பாணி பாடல் மூலம்,சொல்கிறார்;

‘’பாரப்பா இன்னமொரு பகரக் கேளு
பஞ்சமத்தில் கருநாகம் மறைந்தவாறும்
சீரப்பா ஜென்மனுக்கு புத்திர தோசம்
தீர்ப்பதற்கு விபரம் சொல்வேன் மைந்தா
கூறப்பா கோதையுமே அரசு சுத்தி 
குற்றமில்லாக் கன்னியற்கு உத்தம ஸ்தான செய்து
வீரப்பா விலகுமடா தோசம்
விதியுள்ள ஜென்மனவன் ஜெனிப்பான் பாரே’’

ஜாதகத்தில் ராகு 5ல் இருப்பின் அரச மரத்தை சுற்றி வந்து ,சுமங்கலிகளுக்கு குங்குமம்,மஞ்சள் முதலான மங்களப்பொருட்கள் கொடுத்து வண்ங்கினால் தோசம் நீங்கும் என்கிறார்.12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இனிப்பு கொடுத்து அவர்களுக்கு உணவும் கொடுத்து வசதி இருப்பவர்கள் உடைதானமும் செய்தால் இந்த தோசம் நீங்கும்.

காளசர்ப்ப தோசம்;

ராகு,கேதுவுக்கு நடுவில் அனைத்து கிரகங்களும் அமைந்து இருந்தால் அது காள சர்ப்ப தோசம் எனப்படும்.எம்.ஜி.ஆர்,ரஜினி ஜாதகத்தில் இந்த அமைப்பு இருக்கிறது.காள சர்ப்ப யோகம்,காள சர்ப்ப தோசம் என்று இருவகை உண்டு.ஆனாலும் ராகு,கேது பிடிக்குள் அனைத்து கிரகங்களும் இருந்தால் அந்த ஜாதகர் 30 வயதுக்கு மேல் நல்ல முன்னேற்றம் அடைவார்.அதுவரை போராட்டமான வாழ்க்கையாக இருக்கும்.






செவ்வாய், 4 அக்டோபர், 2011

ராகு, கேதுவின் ரகசிய சிறப்புப் பரிகாரம்


ராகு, கேதுவின் ரகசிய சிறப்புப் பரிகாரம்

    ஜாதகத்தில் செவ்வாய் தோஷத்திற்கு அடுத்தபடியாகச் சொல்வது ராகு-கேது தோஷம் என்பதே இதில் சர்ப்பதோஷம், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் மேலும் புத்திர தோஷம், பழங்கால வீடாயின் மனைக்குற்றம், பலவித தோஷங்களைக் குறிப்பிடும் வகையில் நமது முன்னோர்கள் சாஸ்திர வழியில் எடுத்துச் சொல்லியுள்ளனர். மேலும் இதற்கான பரிகாரம் செய்ய ஆயிரக்கணக்காக பணம் செலவழித்து ராமேஸ்வரம், காளஹஸ்தி, கொடுமுடி, திருநாகேஸ்வரம் முதலிய இடங்கள் சென்றுவர இயலாத ஏழ்மை நிறைந்த மக்களுக்காகவே இதைச் சொல்லுகிறேன். பரிகாரத்தை முறைப்படி உபதேசம் செய்யம் குருமார்களும் உண்டு ஏமாற்றுப் பேர்வழிகளும் உண்டு, எளிய வழிமுறைகளை சொல்கிறேன். எமது முன்னோர்கள் கிராம வழிமுறைகளை செய்து வருவார்கள். யார் வேண்டுமானாலும் இதைச் செய்யலாம், இதற்காக குருமார்கள் தேவையோ அதிகப் பணம் செலவு செய்யவோ தேவையுமில்லை.

    அமாவாசைதினம் வீட்டை பசுஞ்சாணத்தினால்(மெழுகி) சுத்தமான தண்ணீர் 1 டம்ளரில் கொண்டு வந்து அதில் சிறிது மஞ்சள் தூள் கலந்து சிறிது பச்சைக் கற்பூரம் போட்டு 5 பிரிகளையுடைய வலது கையில் கட்டிக்கொள்ளும் அளவில், வீட்டில் எத்தனை பேர்களுக்குத் தேவைப்படுகிறதோ,அத்தனை கயிறையும் அந்த டம்ளரில் போட்டு பூஜை அறையில் வைக்க வேண்டும். அமாவாசை முதல் பஞ்சமி திதிவரை மேலும் பஞ்சமி திதி எந்த கிழமையில் வந்தாலும் சரி கிராமப்புற வயல்வெளிகளில் பாம்பு புற்று இருக்கும் இடம் செல்லும்முன், பொங்கல் வைக்கத் தேவையான அடுக்குச் செவ்வரளி, பூ, பழம், தே;காய், மஞ்சள், குங்குமம், பச்சரிசி, பத்தி, கற்பூரம் 9 செட் வெற்றிலையுடன், களிப்பாக்கு ஆகியவற்றை முதலில் வீட்டில் டம்ளரில் உள்ள மஞ்சள் நீரில் புற்றின்மீது மாலை போல் போட்டு, புற்றைச் சுற்றிலும் 9 இடங்களில் வெற்றிலை பாக்கு மஞ்சள், குங்குமம் வைத்து அதன் அருகில் 9 இடங்களில் கற்பூரம் வைத்து அதன் அருகில் 9 அகல் விளக்கில் நெய்தீபம் ஏற்றிவைத்து சர்க்கரைப் பொங்கல் அல்லது வெண் பொங்கலை வைத்து தீபம் ஏற்றி வழிபாடு செய்யவும்.

 ராகுவின் சுலோகம், 'ஓம்சர்வராஜாய வித்மஹே பத்ம ஹஸ்தாய தீமஹி தந்நோ – ராகுபிரசோதயாத்' என்று மனதில் தியானித்து, தேங்காயை உடைத்து, புற்றின்மீது தண்ணீர் தெளித்து, கங்கையைவிட புனிதமான பசுவின் கோமியத்தையும் தெளித்து புகைப்பிரசாதம், திருநீறு, குங்குமம், தெளித்து, ராகு, கேது தோஷம் உள்ள ஆண், பெண், ஆண் வலது கரம் பெண் இடது கரம் என்று உங்கள் மனதுப்படி கயிற்றை அணிந்து குங்குமம், திருநீறு அணிந்துவிட, சர்ப்ப தோஷம், தார தோஷம், களத்திர தோஷம், புத்திர தோஷம், மாங்கல்ய தோஷம், தடைபடும். திருமணம் இனிதே நடைபெறும். வளமான வாழ்வு அமையப்பெறும். இந்தப் பரிகாரம் அனைத்து இன மக்களும் அதிகச் சிரமமின்றி சுலபமாக தாங்களே செய்துகொண்டு சிறப்படைய மேன்மையான வழிமுறை இது என்றால் இதன் ஆச்சரியம் உங்களுக்கே உண்மை விளங்கும்.