ராகு, கேதுவின் ரகசிய சிறப்புப் பரிகாரம்
ஜாதகத்தில் செவ்வாய் தோஷத்திற்கு அடுத்தபடியாகச் சொல்வது ராகு-கேது தோஷம் என்பதே இதில் சர்ப்பதோஷம், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் மேலும் புத்திர தோஷம், பழங்கால வீடாயின் மனைக்குற்றம், பலவித தோஷங்களைக் குறிப்பிடும் வகையில் நமது முன்னோர்கள் சாஸ்திர வழியில் எடுத்துச் சொல்லியுள்ளனர். மேலும் இதற்கான பரிகாரம் செய்ய ஆயிரக்கணக்காக பணம் செலவழித்து ராமேஸ்வரம், காளஹஸ்தி, கொடுமுடி, திருநாகேஸ்வரம் முதலிய இடங்கள் சென்றுவர இயலாத ஏழ்மை நிறைந்த மக்களுக்காகவே இதைச் சொல்லுகிறேன். பரிகாரத்தை முறைப்படி உபதேசம் செய்யம் குருமார்களும் உண்டு ஏமாற்றுப் பேர்வழிகளும் உண்டு, எளிய வழிமுறைகளை சொல்கிறேன். எமது முன்னோர்கள் கிராம வழிமுறைகளை செய்து வருவார்கள். யார் வேண்டுமானாலும் இதைச் செய்யலாம், இதற்காக குருமார்கள் தேவையோ அதிகப் பணம் செலவு செய்யவோ தேவையுமில்லை.
அமாவாசைதினம் வீட்டை பசுஞ்சாணத்தினால்(மெழுகி) சுத்தமான தண்ணீர் 1 டம்ளரில் கொண்டு வந்து அதில் சிறிது மஞ்சள் தூள் கலந்து சிறிது பச்சைக் கற்பூரம் போட்டு 5 பிரிகளையுடைய வலது கையில் கட்டிக்கொள்ளும் அளவில், வீட்டில் எத்தனை பேர்களுக்குத் தேவைப்படுகிறதோ,அத்தனை கயிறையும் அந்த டம்ளரில் போட்டு பூஜை அறையில் வைக்க வேண்டும். அமாவாசை முதல் பஞ்சமி திதிவரை மேலும் பஞ்சமி திதி எந்த கிழமையில் வந்தாலும் சரி கிராமப்புற வயல்வெளிகளில் பாம்பு புற்று இருக்கும் இடம் செல்லும்முன், பொங்கல் வைக்கத் தேவையான அடுக்குச் செவ்வரளி, பூ, பழம், தே;காய், மஞ்சள், குங்குமம், பச்சரிசி, பத்தி, கற்பூரம் 9 செட் வெற்றிலையுடன், களிப்பாக்கு ஆகியவற்றை முதலில் வீட்டில் டம்ளரில் உள்ள மஞ்சள் நீரில் புற்றின்மீது மாலை போல் போட்டு, புற்றைச் சுற்றிலும் 9 இடங்களில் வெற்றிலை பாக்கு மஞ்சள், குங்குமம் வைத்து அதன் அருகில் 9 இடங்களில் கற்பூரம் வைத்து அதன் அருகில் 9 அகல் விளக்கில் நெய்தீபம் ஏற்றிவைத்து சர்க்கரைப் பொங்கல் அல்லது வெண் பொங்கலை வைத்து தீபம் ஏற்றி வழிபாடு செய்யவும்.
ராகுவின் சுலோகம், 'ஓம்சர்வராஜாய வித்மஹே பத்ம ஹஸ்தாய தீமஹி தந்நோ – ராகுபிரசோதயாத்' என்று மனதில் தியானித்து, தேங்காயை உடைத்து, புற்றின்மீது தண்ணீர் தெளித்து, கங்கையைவிட புனிதமான பசுவின் கோமியத்தையும் தெளித்து புகைப்பிரசாதம், திருநீறு, குங்குமம், தெளித்து, ராகு, கேது தோஷம் உள்ள ஆண், பெண், ஆண் வலது கரம் பெண் இடது கரம் என்று உங்கள் மனதுப்படி கயிற்றை அணிந்து குங்குமம், திருநீறு அணிந்துவிட, சர்ப்ப தோஷம், தார தோஷம், களத்திர தோஷம், புத்திர தோஷம், மாங்கல்ய தோஷம், தடைபடும். திருமணம் இனிதே நடைபெறும். வளமான வாழ்வு அமையப்பெறும். இந்தப் பரிகாரம் அனைத்து இன மக்களும் அதிகச் சிரமமின்றி சுலபமாக தாங்களே செய்துகொண்டு சிறப்படைய மேன்மையான வழிமுறை இது என்றால் இதன் ஆச்சரியம் உங்களுக்கே உண்மை விளங்கும்.
1 கருத்து:
'ஓம்சர்வராஜாய வித்மஹே பத்ம ஹஸ்தாய தீமஹி தந்நோ – ராகுபிரசோதயாத்'
adhu "SARPARAJAYA" thaney?
கருத்துரையிடுக