கேது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கேது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 16 டிசம்பர், 2015

ராகுகேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017

ராகு கேது பெயர்ச்சிப்பலன்கள் 2016-2017

வருகிற ஜனவரி 8ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடக்கிறது.இப்போது கன்னி ராசியில் இருக்கும் ராகு சிம்மம் ராசிக்கு வருகிறார் .கேது மீனம் ராசியில் இருந்து கும்பம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார்..ராகு கேது பின்னோக்கிதான் பெயர்ச்சியாவார்கள்...8.1.2016 முதல் 27.7.2017 வரை யான பலன்கள் அனைத்து ராசியினருக்கும் கொடுத்துள்ளேன்.

ராகுவை போல கொடுப்பார் இல்லை.கேதுவை போல கெடுப்பார் இல்லை என்பார்கள் ...ராகு கேதுக்கள் நிழல் கிரகம்..சொந்த வீடுகள் இல்லையென்றாலும்...சூரியன்,சந்திரனையே முடக்கும் ஆற்றல் கொண்டவர்கள் ..சூரிய கிரகணம்,சந்திர கிரகணம் வருகிறது அல்லவா...அது ராகு கேதுக்களின் ஆதிக்கம் தான் ஜோதிடம் சொல்கிறது.அது பூமியின் நிழல் என அறிவியல் சொல்கிறது ஜோதிடமும் ராகு கேதுக்களை நிழல் கிரகங்களாகவே பார்க்கிறது.

ஜாதகத்தில் லக்னம் மற்றும் குடும்ப ஸ்தானத்தில் ராகு கேதுக்கள் அமர்ந்தால் நாகதோசம் என்கிறோம்...இவர்களுக்கு நடுவில் கிரகங்கள் மாட்டிக்கொண்டால் காளசர்ப்ப தோசம் என்கிறோம்.இவை இரண்டும் மிக கடுமையான தோசங்கள் ஆகும்.கணவன்/மனைவி ஸ்தனத்தையே கெடுத்து மோசமான குணமுள்ள கணவன்/மனைவி அமைய செய்துவிடும் வல்லமை கொண்டவை.இதற்காக என் வாடிக்கையாளர்களுக்கு திருமணம் எப்போது ஆகும் எனக்கேட்டு வருவோருக்கு சூட்சுமமான பரிகாரம் சொல்லி விரைவில் திருமணம் நடக்க நல்ல குணமுள்ள வாழ்க்கை துணை அமையவும் உதவியிருக்கிறேன்.புத்தகங்களில் வரும் பரிகாரங்கள் பலன் தருவதில்லை..

ராகு கேதுக்கள் ஜாதகத்தில் லக்னத்துக்கு எத்தனாம் இடத்தில் இருக்கிறதோ அந்த இடம் கெட்டுவிடும் என்பது ஜோதிட விதி.உதாரணமாக ராகு எட்டாம் இடத்தில் இருந்து ராகு திசை நடந்தால் பாம்பு பலமுறை கண்ணில் படும்.கடிக்கவும் செய்யும்.மாதவிலக்கு கோளாறுகள் ,கர்ப்பபை பிரச்சினை, ஆண்கள் எனில் கிட்னி சார்ந்த பிரச்சினைகள் உண்டாகும்.

விச உணவுகள் சாப்பிட்டு உயிர் விடவும் நேரலாம்..எட்டு ஆயுள் ஸ்தானம் என்பதால் நஷ்டம் உயிருக்கா,பொருளுக்காக என கேள்வி வந்துவிடும்.சொத்துக்கள் இருப்பின் உயிருக்கு பங்கம் வந்து விடும்.சுபர்களுடன் கூடி இருந்தால் அவ்வளவு பாதிக்காது.ராகு ஏழில் இருந்து திசை நடத்தினால் சுபர் பார்க்காவிடில் திருட்டு குணம் உடைய ,குடும்ப பெயரை முழுவதும் கெடுத்து விடக்கூடிய வாழ்க்கை துணை அமைந்து விடும்...

பேய் பிடிப்பது, மனநிலை பாதிப்பது எல்லாம் ராகுவின் பாதிப்புதான்.. கேது வறுமையையும், தரித்திரத்தையும் உண்டாக்கும்..என கேந்திர திரிகோனங்களில் கேது இல்லாமல் இருப்பது நல்லது....

குடும்பத்தில் எவ்வளவு பிரச்ச்சினைகள் இருப்பினும் கடன் ,மனக்குழப்பம்,வீட்டில் நிம்மதியின்மை,நோய் பாதிப்பு,வாஸ்து குறைபாடு இருப்பினும் நாங்கள் தயாரித்த தெய்வீக மூலிகை சாம்பிராணியை உபயோகப்படுத்துங்கள் ..நல்ல மாற்றங்களை கண்கூட உணர்வீர்கள் .ஒரிஜினல் சாம்பிராணியில் 27 வகையான தெய்வீக,வசிய மூலிகைகள் கலந்து தயாரிக்கப்பட்டுள்ளது.இன்னும் அதிக சக்தியுடன்,நறுமணத்துடன் புதிய தயாரிப்பில் கிடைக்கிறது.அரை கிலோ பாக்கெட் ரூ 500 மட்டும்.தொடர்புக்கு 9443499003

இந்த ராகு கேது பெயர்ச்சி உங்கள் ராசிக்கு எப்படி இருக்கிறது என பார்ப்போம்...


மேசம்;

மேசம் ராசியினருக்கு  ராசிக்கு 11 ல் லாபஸ்தானத்தில் கேது மாறுகிறார்..ராகு 5ஆம் இடத்துக்கு செல்கிறார்..பாவகிரகங்கள் லாபஸ்தானத்துக்கு வருவது நல்லது.அதனால் லாபம் பெருகும்.சேமிப்பு உயரும்...கும்பத்துக்கு கேது செல்வதால் மேசம் ராசியினர் நினைத்த காரியங்கள் அனைத்தும் தடையின்றி நிறைவேறும்.5அம் இடத்துக்கு ராகு வருவதால் சிம்மத்தில் இருக்கும் குருவால் ராகு குரு சேர்க்கையால் பூர்வீகத்துக்கும் குழந்தைகளுக்கும் வந்த சோதனைகள் விலகும்...2016 ஜூன் மாதம் குருப்பெயர்ச்சிக்கு பின்னர் பூர்வீகத்தில் சில பிரச்சினைகள் வரலாம் குழந்தைகளுக்கு சின்ன சின்ன மருத்துவ செலவுகள் வரலாம்..இதுவரை தொழிலில் இருந்த மந்தம் விலகும் தொழில் முன்னேற்றம் உண்டாகும் வருமானம் உயரும்.அஷ்டம சனி நம்மை கடுமையாக படுத்தி வந்தாலும் கேது தொழில் ஸ்தானத்தை விட்டு விலகி லாபத்துக்கு வருவது நிச்சயம் நன்மையை தரும்.அருகில் இருக்கும் ராகு கேது கோயில் சென்று வரவும்..

ரிசபம்;

ரிசப ராசினருக்கு ராகு ராசிக்கு நான்கில் வருகிறார்..கேது 10 ஆம் இடமாகிய தொழில் ஸ்தானத்துக்கு வருகிறார்...இது சுமாரான பலன்களையே தரும் .சுக ஸ்தானத்துக்கு ராகு வரும்போது சொத்துக்கள் சார்ந்த சிக்கல்கள் உண்டாக்கும் தாய்க்கு உடல்நிலை பாதிக்கும்.மருத்துவ செலவுகள் ,இட மாற்றம்,அலைச்சல் ,உண்டாகும் தொழிலுக்கு கேது வருவதால் பிறக்கும்போது கும்ப ராசியில் செவ்வாய் இருப்பவர்கள் தொழில் கடுமையாக பாதிக்கும்.தொழில் கூட்டாக இருந்தால் கவனமாக இருக்கவும் பார்ட்னரால் ஏமாற்றம் உண்டாகலாம்... சொத்துக்கள் சம்பந்தமான டாக்குமெண்டுகள் சரியா இருக்கான்னு பார்த்துக்குங்க..உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்க...திருப்பதி சென்று வந்தால் நல்லது

மிதுனம் ;

மிதுனம் ராசிக்கு ராகு மூன்றாம் இடத்துக்கு வருகிறார் ராகுவை போல கொடுப்பார் இல்லை என்று சொல்கிறோம் அது இவர்களுக்கு இப்போது பொருந்தும்.ராகு மூன்றில் வந்தால் இரட்டிப்பு லாபம் உண்டு.வருமானம் ,சேமிப்பு பெருகும் தொழில் முன்னேற்றம் உண்டாகும்..நல்ல பேச்சு திறமை கூடும்.பெரிய மனிதர்களின் தொடர்பு உண்டாகும்.நினைத்த காரியம் தடையின்றி நடைபெறும்..கேது 9ஆம் இடத்தில் மாறுவதால் தந்தைக்கும் தந்தை வழி உறவுக்கும் பாதிப்பான காலம்.வெளியூர்,வெளிநாடுகளில் வசிப்போருக்கு முன்னேற்றமான காலமாக இருக்கும்.ஸ்ரீரங்கம் ஒருமுறை சென்று வரலாம்

கடகம் ;

உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்துக்கு ராகு வருகிறார் கேது எட்டாம் இடத்துக்கு வருகிறார் .இரண்டில் ராகு தன லாபத்தை தரும்.திடீர் வருமானம் அதிர்ஷ்டத்தை தரும் அடுத்த குருப்பெயர்ச்சி வரை நல்ல யொகமுண்டு.பெரிய கடன் பிரச்சினைகள் சட்டென முடிக்கும் ஆற்றல் கொண்டது இந்த தன ராகு.கேது எட்டாம் இடத்துக்கு வருவதால் விஷக்கடி ஆபத்து உண்டு.விவசாயம் செய்வோர் கவனமுடன் செயல்படவும்.ராகு இரண்டுக்கு வருவதால் பேச்சுக்கு மதிப்பு,மரியதை அதிகரிக்கும்..தொழிலில் புதிய ஏற்றங்களும்,மாற்றங்களும் உண்டாக்கும்.. திருப்பதி சென்று வரலாம்

சிம்மம் ;
சிம்மம் ராசியினருக்கு ராசியிலியே ராகு வருகிறார்...கேது ஏழாம் இடத்துக்கு வருகிறார் .போனமுறை தன ஸ்தானம்,குடும்ப ஸ்தானத்தில் ராகு அமர்ந்து கடன் தொல்லை ,குடும்பத்தில் நிம்மதி யின்மை உண்டாக்கினார் இப்போது ராகு தன ஸ்தானத்தை விட்டு நகர்ந்ததே பெரிய யோகம்தான்.அந்த அடிப்படையில் இந்த ராகு கேது பெயர்ச்சி நல்லதே செய்யும்.
இருந்தாலும்,இது நாகதோசம் அடிப்படையில் ராசிப்படி அமைகிறது .இது சுமாரான பலன்களையே தரும் உங்கள் ராசியில் சந்திரனுடன் ராகு சேர்வதல் சந்திர கிரகணம் போலத்தான்.மனதில் குழப்பம்,சோர்வு,கவலை அதிகரிக்க செய்யும் என்பதால் வாரம் ஒருமுறை அருகில் இருக்கும் கோயிலுக்கு சென்று அரைமணி நேரம் அமைதியாக அம்ர்ந்து விட்டு வாருங்கள்..கடன் தொல்லை தீரும்,.குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாக்கும்.இரவு பயணங்களை தவிர்க்கவும். 

 கன்னி;

உங்கள் ராசிக்கு இதுவரை ஜென்மத்தில் இருந்து வந்த ராகு இனி 12ஆம் இடமாகிய விரய ஸ்தானத்துக்கு செல்கிறார் இனி எல்லாம் ஜெயமே.ஏழரை சனி முற்றிலும் விலகி விட்டது ஒரே எதிரி ராகுவும் விலகிவிட்டார் ..அதுவும் மறைந்து கெட்டு விட்டதால் இனி மகிழ்ச்சியும் சந்தோசமும் பெருகும்.நினைத்த ஆசைப்பட்ட காரியங்கள் தடையின்றி நடைபெறும்.வருமானம் அதிகரிக்கும் சேமிப்பு உயரும்.உறவுகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். விலகி இருந்த நட்பு,உறவுகள் ,இனி பகை மறந்து ஒன்று சேர்வர். 6ல் கேது வருவதால் எதிரிகள் அழிவர்.எதிர்ப்புகள் மறையும்.கடன் தொல்லைகள் தீரும்.நோய் தீரும்.சந்தோசமான காலம்.


துலாம் ;

உங்கள் ராசிக்கு ராகு லாபத்துக்கு வருகிறார் இதுவரை ராசிக்கு 12ல் இருந்து ராகு உங்களை அலைக்கழித்தார் இப்போது ராகு லாபத்துக்கு வருவதால் இனி சேமிப்பு உண்டாகும் வருமானம் இரட்டிப்பாகும்..உங்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி மிக யோகமாக அதிர்ஷ்டமாக அமைகிறது...5ல் கேது குழந்தைகளின் உடல்நலனில் கவனம் தேவை பூர்வீக சொத்து சார்ந்த பிரச்சினைகள் வரும்.சகோதரனால் சங்கடம் உண்டாகும்.. 3ல் ராகு இளைய சகோதரனுக்கு உடல் ஆரோக்கியம் பாதிக்கும்.வருமானம் பல வழிகளிலும் வந்து சேரும்.


விருச்சிகம் ;

ராகு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்திலும், கேது நான்காம் இடத்துக்கும் வருகிறார்கள் .ராசிக்கு தொழில் ஸ்தானத்து வரும் ராகு தொழிலில் பெரிய முன்னேற்றம் தருவார் ...தொழில் ஆதாயம் பெரிய மனிதர்கள் தொடர்பு உண்டாகும்...தாத்தா,பாட்டிக்கு ஆகாத காலம் .பிரிவினை இழப்பு உண்டாக்கும்.கேது நான்கில் வருவதால் உடல்நலன் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.ஏற்கனவே ஜென்ம சனி உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு மன உளைச்சலை உண்டாக்கி கொண்டிருக்கும் வேளையில் நாலில் கேது ,மருத்துவ செலவுகளை தரும்.இடுப்பு,கைகால் வலியை தரும் அலைச்சலை உண்டாக்கும்..இது சுமாரான பலன்களையே தரும்.திருச்செந்தூர் சென்று முருகனை தரிசித்து வரவும்..

தனுசு ;

ராசிக்கு 9ஆம் இடத்தில் ராகு வருகிறார் கேது ராசிக்கு 3ல் மறைகிறார்.வெளிநாடு வெளிமாநில நண்பர்களின் தொடர்பு உண்டாகும் பெரிய மனிதர்கள் ஆதரவால் பெரும் சாதனைகள் செய்வீர்கள்..நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும்,தந்தைக்கு மருத்துவ செலவுகள் உண்டாகும்.. இளைய சகோதரனுக்கு சில மருத்துவ செலவுகள் ,மாமனாருக்கு பாதிப்பு உண்டு.9ல் ராகு அதிர்ஷ்டத்தை உண்டாக்கும் ஏழரை சனி நடந்தாலும் குரு பலன் இருப்பதால் பெரிதாக பாதிக்காது குலதெய்வம் கோயில் சென்று வரவும்

மகரம் ;

ராசிக்கு இரண்டில் கேது வருகிறார் ..எட்டில் ராகு வருகிறார் ராகு எட்டாம் இடம் ஆயுள் ஸ்தானத்துக்கு வருகிறார் என பீதிய்டைய வேண்டாம்..எட்டு மறைவு ஸ்தானம் என்பதால் அதிர்ஷ்டம் உண்டாகும்..ராகு திசை நடப்போருக்கு மட்டும் எட்டில் ராகுசோதனைகளை தரும் காளஹஸ்தி சென்று வழிபட்டு வருவது அவசியம்.இரண்டில் கேது இருப்பதால் குடும்பத்தில் வீண் வாக்குவாதம் உண்டாக்கலாம் ...எட்டில் ராகு அதிக அலைச்சலை தரும்.மனக்குழப்பம்,பயம் தந்தாலும் திடீர் அதிர்ஷ்டமும் உண்டு எதிரிகள் தொல்லை நீங்கும் கடன் பாதிப்புகள் விலகும்.

கும்பம் ;

ராசிக்கு ஏழில் ராகு வருகிறார் ஏழாம் இடம் வாழ்க்கை துணையை குறிக்கும் கணவன் /அல்லது மனைவி ஸ்தானத்துக்கு ராகு வருவதால் அவர்கள் உடல் ஆரோக்கியம் சற்று பாதிக்கப்படலாம் ஆனால் நண்பர்களால் நிறைய ஆதாயம் உண்டு.திருமனம் ஆகாதவர்களுக்கு திருமனம் கூடி வரும்.கடன் தொல்லைகள் தீரும் வருமானம் அதிகரிக்கும்.சேமிப்பு உயரும்..கேது ஜென்மத்துக்கு வருவதால் விண் பயம் ,மன சோர்வு காணப்படும் விண் புலம்பல்கள் பலன் தராது.தாழ்வு மனப்பான்மை அதிகரிக்கும்.உற்சாகமாக இருங்கள் நல்லதே நடக்கும்.

மீனம்;

ராசிக்கு இதுவரை ஜென்மத்தில் இருந்து சோதனை மேல் சோதனை கொடுத்து வந்த கேது இனி ராசிக்கு 12ல் மறைகிறார் இனி நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும் உங்கள் துன்பங்கள் தீரும் பனக்கஷ்டம் இனி மெல்ல மெல்ல தீர்ந்து இயல்புக்கு வரும்.தொழிலில் இருந்த மந்தம் விலகி சுறுசுறுப்பு உண்டாகும்..ராகு ராசிக்கு 6ல் வருவதால் வம்பு,வழக்குகள் இனி தீரும்.கடன் முழுதும் அடைபடும்.சொத்துக்கள் ,வாங்கும் யோகமும் வீடு கட்டும் யோகமும் வந்து சேரும் திருமண முயற்சிகள் தடங்கலின்றி நடைபெறும்..எதிரிகள் தொல்லை இனி இருக்காது பகையாகி விலகியவர் மீண்டும் ஒன்று சேர்வர்.

திங்கள், 16 மார்ச், 2015

ராகு கேது தோசம் மறைந்திருக்கும் உண்மைகள்

 ராகு கேது தோசம் மறைந்திருக்கும் உண்மைகள்
 
கும்பத்தில்   ராகுவும்   சிம்மத்தில்   கேதுவும்  இருக்க    இறைவழிபாடும்,   கிரகங்களின்   வழிபாடும்   மிகுந்த    நன்மைத்   தரும்.

கும்பத்தில்   ராகுவும்     சிம்மத்தில்  கேதுவும்   இருக்கப்   பிறந்தவர்கள்   ஒரு  அதீதமான   சக்தியைப்   பெறுகின்றார்கள்.   பெரும்பாலும்     நாளை  நடப்பதை   முன் கூட்டியே   சொல்லக்கூடிய   ஆற்றலைப்  பெற்றிருப்பார்கள்.

ஆனால்  குடும்ப   பிரிவினையை அதிகம்   சந்திக்கக்   கூடிய  சூழ்நிலை  ஏற்படும்.   அண்ணன்   தம்பி   உறவு  சரியில்லை,    தகப்பனார்  உறவுகளை   சரி  செய்ய  இயலாது.   தாம்பத்ய   சுகம்  கானல்   நீர்  போல்  ஆகும்.   எடுப்பார்   கைப்பிள்ளை  போல்   ஆவார்கள்.   தேவையற்ற   பயம்,   மனதில்    சஞ்சலம்      முதலியவைகள்   ராகு,   கேதுக்கள்  ஏற்படுத்தும்.

சில   வீடுகளில்  புள்ளி  வைத்துக்   கோலம்  போடுவார்கள்.  அது   இருபாம்புகள்  இணைந்த்து  போல்   காணப்படும்.   இந்த  மாதிரி  கோலமிடும்   வீடுகளில்  கால சர்ப்ப தோசம்   பெற்றவர்கள்   இருக்கிறார்கள்  என்பதை  நாம்  அறியலாம்.

ஒரு  பெண்ணுக்கு   அடி   வயிற்றில்   பாம்பு  போல்  மச்சம்  இருந்தால்,   அவளது   கணவன்  இடி  விழுந்து    மரணம்  அடைகிறார். அது  போல   பாம்பு  போன்ற  மச்சம்   தொடையிலிருந்தால்,   அவர்களுக்கு   குழந்தைகள்   இறந்தே  பிறக்கிறது.     

முக்கிய   விஷயமாக  வெளியூர்  அல்லது   வெளி  இடங்களுக்கு  நாம்  செல்கின்ற   போது,   ராகு,  கேதுகளான   சர்ப்பங்கள்,   கிழக்கிலிருந்து   மேற்கில்   சென்றாலும்,   தெற்கிலிருந்து   வடக்கு   நோக்கிச்  சென்றாலும்   காரியம்   பலிதமும்,   பிரச்சனைக்களுக்கு   தீர்வு  ஏற்படும்   எனவும்,  மேற்கிலிருந்து   கிழக்கு   நோக்கியும்   வடக்கிலிருந்து  தெற்கு   சென்றால்   உயிர்  கண்டங்களும் ,  தேவையற்ர  பிரச்சனைகளால்    பாதிப்புகள்   ஏற்படும்   என்ற   நம்பிக்கையும்   மக்களிடையே   உள்ளது.


யாத்திரை   அல்லது   வெளியூர்   பயணங்கள்  செல்லும்   போது   மாறுபட்ட   நிலைகளில்  சர்ப்பங்களை   கண்டால்  மக்கள்  வீடுகளுக்கு   திரும்பி  வந்து   கற்றாலை  செடியின்  மூலம்   செய்யப்பட்ட   கரிவலம்  என்னும்    பொருளை  சாம்பிராணியில்  கலந்து   வீடு  முழுக்க    தூபம்   காட்டிய  பின்னரே   பயணத்தை  தொடர்ந்தனர்.

ஒரு   சிலருக்கு   முதுகில்  பிடிப்பு  அடிக்கடி  ஏற்படும்.  இவர்களுக்கு   மட்டும்   ஏன்   இப்படி   நிகழ்கிறது  என பார்த்தால்,   இவர்கள்  எப்பொழுதாவது   பாம்புகளை  அடிக்கும்  ட்த்தில்  இருந்திருப்பார்கள்.   அடிபட்ட   பாம்பு    தன்  உயிரை   விடும்   கடைசி   நேரத்தில்   அதன்  மூச்சுக்காற்று   காற்றில்   கலக்கும்  போது,   யார்,  யார்   அதை   சுவாசிக்கிறார்களோ   அவர்களுக்குத்   தான்   மேற்படி    பிடிப்பு    உடலில்   ஏற்படுகிறது   என்பது   அதிசயத்திலும்  அதிசயமாகும்.

ராகு கூட பலருக்கு யோகத்தை கொடுத்திருக்கிறது ஆனால் கேது சில முக்கியமான இடங்களில் அமர்ந்துவிட்டால் அந்த ச்தானத்தை கெடுத்து விடுகிறது சுபர் இருந்தால் தப்பிக்கலாம்...4ல் கேது இருப்பின் ஒழுக்கம் இருக்கும்,சுகம் இருக்காது சுகபோகமாக வாழ முடியாது ..கார்,பங்களா,என இருந்தாலும் தீராத நோயுடையவர்களாகவும் இருதய கோளாறு உடையவர்களாகவும் இருப்பர்..5ல் கேது இருந்தால் குழந்தை இல்லை என்பார்கள் ஆனால் பலருக்கு குழந்தை இருக்கிறது ஆனால் அக்குழந்தையால் பல தொல்லைகள் நிம்மதியை கெடுக்கிறது..

இவ்வாறு 2ல் கேது இருப்பின் வருமான தடை,11ல் கேது இருப்பின் பணம் தங்காமை,7ல் இருப்பின் மனைவியுடன் வாக்குவாதம்,9ல் இருந்தால் தந்தையுடன் ஒத்து போகாமை,ஊராருடன் ஒத்துப்போகாமை ,3ல் இருப்பின் சகோதரருடன்,மாமனாருடன்  கருத்து வேறுபாடு என இருக்கும். 6ல் இருந்தால் நல்லது எதிரி,கடன் இருக்காது..12ல் இருந்தாலும் பாதிப்பில்லை..

செவ்வாய், 4 செப்டம்பர், 2012

நாக தோசம்,சர்ப்ப தோசம் தரும் ராகு கேது உங்க ஜாதகத்துல எப்படி.?ராசிபலன்


ராகு கேது இருவரும் சாயா கிரஹங்கள். இருவரைப் பற்றியும் பொதுவாகவே சொல்லவேண்டும் அதாவது:

ஒருவர் பிறக்கும்போது லக்னத்தில் ராகு கேது இவர்களில் யார் இருந்தாலும் ஜாதகர் புத்திரபாக்கியம் உண்டு. ஆயுள் விருத்தியில்லாதவர். செல்வந்தன். ஆனாலும், ஏதேனும் வியாதியால் கஷ்டப்பட்டுக்கொண்டே இருப்பார்.
இரண்டாவது இடத்தில் இருக்கும் ராகுவோ, கேதுவோ இருக்கப் பிறந்தவர் எப்போதும் ஏதோ ஒன்றைப் பற்றிக் கவலைப் பட்டுக்கொண்டேயிருப்பார். அற்ப வித்தையுள்ளவர். நடுத்தரவயதிற்கு மேல் பாக்கியவான் என்று சொல்லக்கூடிய நிலையை அடைபவர். தயை கருணை என்பது இல்லாத கடின சித்தம் உள்ளவர். சோம்பல் என்பது உடன் பிறந்தது போல் உறவாகும். இரு விவாக ப்ராப்தியுள்ளவர்.
மூன்றாவது இடத்தில் இருக்கும் ராகுவோ, கேதுவோ இருக்கப் பிறந்தவர் புகழ்மிக்கவர். திடீர் கோபத்திற்கு ஆளாவார். தைரியசாலி. அகால போஜனமுள்ளவர். லஷ்மியின் அருள்பெறும் பாக்கியமும் உண்டு என்று சொல்லவேண்டும்.
நான்காவது இடத்தில் இருக்கும் ராகுவோ, கேதுவோ இருக்கப் பிறந்தவர் தயவு தாஷண்யம் உள்ளவர். முன் சகோதரிகள் உள்ளவர். அற்ப புத்தியுள்ளவர். துன்மார்க்கர் என்று பெயர் எடுக்கும் சூழ்நிலையும் ஏற்படும்.
ஐந்தாம் இடத்தில் ராகு இருந்தால் முன்னோர் வழி சாபம்..புத்திர தோசம் என சொல்லப்படுகிறது..பூர்வபுண்ணியம் பாதிக்கப்படுகிறது..காரிய தடைகள் அதிகம் உண்டாகிறது..5 ஆம் அதிபதியும்,சுக்கிரனும்,குருவும் கெட்டால் குழந்தை இல்லை...அல்லது தாமதமாக பிறக்கும்..

ஆறாவது இடத்தில் இருக்கும் ராகுவோ, கேதுவோ இருக்கப் பிறந்தவர் ஸ்திர பாக்கியம் அதிகம் உள்ளவர். ஸ்திரீகள் மகிழும் வண்ணம் நடந்துகொள்பவர். சில ஸ்திரீகளின் பகைமையும் சம்பாதித்துக் கொள்ளவேண்டியதாகவும் ஏற்படும்.
ஏழாவது இடத்தில் இருக்கும் ராகுவோ, கேதுவோ இருக்கப் பிறந்தவர் நீர் ரோகத்தால் கஷ்டப்பட வேண்டியதாக ஏற்படும். வித்துவான் இரண்டு மனைவியர் உண்டு.
எட்டாவது இடத்தில் இருக்கும் ராகுவோ, கேதுவோ இருக்கப் பிறந்தவர் அதிகம் குறிப்பாக சொல்லவே;ணடியதில்லை. மற்ற கிரகங்களின் பார்வை, சேர்க்கை இவைகளைக் கொண்டு பலன் சொல்லலாம்.
ஒன்பதாம் இடத்தில் ராகு இருந்தால் தந்தை முரண்பாடானவர்..தந்தைக்கும்,ஜாதகருக்கும் ஆகாது..பங்காளி சண்டை இருக்கும்..குலதெய்வ வழிபாடு நின்று போகும்..பாக்யங்களை கெடுக்கிறது..நல்ல வீடு,மனைவி,குழந்தைகள் விசயத்தில் சில மன சஞ்சலங்களை உண்டாக்கும்..

பத்தாம் இடத்தில் ராகு இருந்தால் கேது இருந்தால் பணம் பறந்துவரும் என்பார்கள்..தொழில் ஸ்தானத்தில் ஒரு அசுபராவது இருப்பது தொழிலுக்கு பிரச்சினை இல்லை எனலாம்..

பதினொன்றாம் இடத்தில் இருக்கும் ராகு லாபத்தையே கொடுப்பார்..நல்லது...பணம் பல வழிகளிலும் வந்து சேரும்..குறுக்கு வழியில் கூட சம்பாதித்து விடுவார்...

12 ஆம் இடத்தில் ராகு மறைவது கேது மறைவது நல்லதுதான்...12ல் கேது மறுபிறப்பு இல்லை என்பார்கள்..எல்லா கஷ்டத்தையும் கொடுத்துவிடுவாரா..என்றால் அப்படி இல்லை..பிறபகுதியில் ஆன்மீக யாத்திரை,கோயில் கட்டுதல் போன்ற புண்ணிய பலன்களை சேர்ப்பார்..

கிரக நாயகர்கள் எந்த இடத்தில் இருந்தால் என்ன பலனைக் கொடுப்பார்கள் என்பது பொதுவாக சொல்லக்கூடியதே தவிர இதை வைத்து பலனைக் கனிக்கக்கூடாது. மற்ற கிரகங்களின் பார்வை, சேர்ககை, தசைகள், புத்திகள் இவைகளின் பலன்களையும் கவனிக்கவேண்டும்.

செவ்வாய், 21 ஆகஸ்ட், 2012

ஜோதிடம்;நாகதோசம் இருந்தால் திருமணம் நடக்காதா?

ஜோதிடம்;ராகு-கேது ஏற்படுத்தும் திருமண தடை;


திருமணம் ஒருவருக்கு தாமதம் ஆகிக்கொண்டிருப்பதில் பல காரணங்கள் இருக்கலாம்..அதில் ஒன்று நாகதோசம் .ராகு கேது லக்னத்துக்கு 1,2,5ல் இருக்கும்போது நாகதோசம் உண்டாகும் இதில் 5 ஆம் இடத்தில் இருக்கும் ராகு கேது புத்திர ஸ்தானத்தை பாதிக்கிறார்..இதனாலும் பெண் வீட்டார் பெண் கொடுக்க முன்வருவதில்லை..குழந்தை பாக்யம் இல்லாமல் போய்விடுமோ என்ற பயம் தான் காரணம்..5ல் கேது இருந்தால் பிள்ளை இல்லை என சொல்லிவிட முடியாது குரு,சுக்கிரன் கெட்டுப்போகாமல் இருந்தால் 5 ஆம் இடத்துக்கு சுபர் பார்வை இருந்தால் நிச்சயம் குழந்தை பாக்யம் உண்டு..

7ல் கேது இருந்தால் திருமணம் நடக்காதா சார் என சிலர் கேட்கிறார்கள்...7ஆம் இடம் களத்திர ஸ்தானம்..மனைவியுடன் தாம்பத்யம்,இன்பம் பற்றி சொல்லும் இடம்..அங்கு கேதுவாகிய துறவி கிரகம் இருந்தால் திருமணம் தாமதம் என்பது சரிதான் ஆனால் நடக்காது என சொல்லமுடியாது

சுக்கிரன் 6,8,12 ல் மறைந்து,7 ஆம் அதிபதியும் 6,8,12ல் மறைந்து,ஸ்தான பலம் கெட்டுப்போயிருந்தால் மட்டுமே அப்படி சொல்ல முடியும்...சுக்கிரன் நல்ல நிலையில் இருந்தால் திருமணம் நடக்கும்..

7ல் கேது இருந்தால் திருமண விசயத்தில் குழப்பம்,சந்தேகம் அடைந்து தள்ளிப்போட்டுக்கொண்டே இருப்பார்கள் ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டிருப்பார்கள்...இதனால் திருமணத்தின் மீது அதிக விருப்பம் இருக்காது..

7ல் ராகு இருந்தால் பலருக்கு அவசர திருமனம்,காதல் திருமணம் ,பிரச்சினையில் திருமணம் நடந்திருக்கிறது..திசா புத்தி மோசமாக இருந்தால் இப்படி நடந்துவிடும்...சந்திரன்,சுக்கிரன் பார்வையும் ஒரு காரணம்..7ல் இன்னொரு கிரகம் ஏதாவது இருந்தால் அதற்கு ஏற்றவாறு பலன் மாறும் ..7ல் இருக்கும் கேதுவுடன் குருவோ,சுக்கிரனோ சேர்ந்திருந்தால் நல்லபடியாக திருமணம் நடப்பது அரிது....

குருபார்வை இருந்தால் இனிமையாக திருமணம் நடைபெறும்!!

செவ்வாய், 4 அக்டோபர், 2011

ராகு, கேதுவின் ரகசிய சிறப்புப் பரிகாரம்


ராகு, கேதுவின் ரகசிய சிறப்புப் பரிகாரம்

    ஜாதகத்தில் செவ்வாய் தோஷத்திற்கு அடுத்தபடியாகச் சொல்வது ராகு-கேது தோஷம் என்பதே இதில் சர்ப்பதோஷம், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் மேலும் புத்திர தோஷம், பழங்கால வீடாயின் மனைக்குற்றம், பலவித தோஷங்களைக் குறிப்பிடும் வகையில் நமது முன்னோர்கள் சாஸ்திர வழியில் எடுத்துச் சொல்லியுள்ளனர். மேலும் இதற்கான பரிகாரம் செய்ய ஆயிரக்கணக்காக பணம் செலவழித்து ராமேஸ்வரம், காளஹஸ்தி, கொடுமுடி, திருநாகேஸ்வரம் முதலிய இடங்கள் சென்றுவர இயலாத ஏழ்மை நிறைந்த மக்களுக்காகவே இதைச் சொல்லுகிறேன். பரிகாரத்தை முறைப்படி உபதேசம் செய்யம் குருமார்களும் உண்டு ஏமாற்றுப் பேர்வழிகளும் உண்டு, எளிய வழிமுறைகளை சொல்கிறேன். எமது முன்னோர்கள் கிராம வழிமுறைகளை செய்து வருவார்கள். யார் வேண்டுமானாலும் இதைச் செய்யலாம், இதற்காக குருமார்கள் தேவையோ அதிகப் பணம் செலவு செய்யவோ தேவையுமில்லை.

    அமாவாசைதினம் வீட்டை பசுஞ்சாணத்தினால்(மெழுகி) சுத்தமான தண்ணீர் 1 டம்ளரில் கொண்டு வந்து அதில் சிறிது மஞ்சள் தூள் கலந்து சிறிது பச்சைக் கற்பூரம் போட்டு 5 பிரிகளையுடைய வலது கையில் கட்டிக்கொள்ளும் அளவில், வீட்டில் எத்தனை பேர்களுக்குத் தேவைப்படுகிறதோ,அத்தனை கயிறையும் அந்த டம்ளரில் போட்டு பூஜை அறையில் வைக்க வேண்டும். அமாவாசை முதல் பஞ்சமி திதிவரை மேலும் பஞ்சமி திதி எந்த கிழமையில் வந்தாலும் சரி கிராமப்புற வயல்வெளிகளில் பாம்பு புற்று இருக்கும் இடம் செல்லும்முன், பொங்கல் வைக்கத் தேவையான அடுக்குச் செவ்வரளி, பூ, பழம், தே;காய், மஞ்சள், குங்குமம், பச்சரிசி, பத்தி, கற்பூரம் 9 செட் வெற்றிலையுடன், களிப்பாக்கு ஆகியவற்றை முதலில் வீட்டில் டம்ளரில் உள்ள மஞ்சள் நீரில் புற்றின்மீது மாலை போல் போட்டு, புற்றைச் சுற்றிலும் 9 இடங்களில் வெற்றிலை பாக்கு மஞ்சள், குங்குமம் வைத்து அதன் அருகில் 9 இடங்களில் கற்பூரம் வைத்து அதன் அருகில் 9 அகல் விளக்கில் நெய்தீபம் ஏற்றிவைத்து சர்க்கரைப் பொங்கல் அல்லது வெண் பொங்கலை வைத்து தீபம் ஏற்றி வழிபாடு செய்யவும்.

 ராகுவின் சுலோகம், 'ஓம்சர்வராஜாய வித்மஹே பத்ம ஹஸ்தாய தீமஹி தந்நோ – ராகுபிரசோதயாத்' என்று மனதில் தியானித்து, தேங்காயை உடைத்து, புற்றின்மீது தண்ணீர் தெளித்து, கங்கையைவிட புனிதமான பசுவின் கோமியத்தையும் தெளித்து புகைப்பிரசாதம், திருநீறு, குங்குமம், தெளித்து, ராகு, கேது தோஷம் உள்ள ஆண், பெண், ஆண் வலது கரம் பெண் இடது கரம் என்று உங்கள் மனதுப்படி கயிற்றை அணிந்து குங்குமம், திருநீறு அணிந்துவிட, சர்ப்ப தோஷம், தார தோஷம், களத்திர தோஷம், புத்திர தோஷம், மாங்கல்ய தோஷம், தடைபடும். திருமணம் இனிதே நடைபெறும். வளமான வாழ்வு அமையப்பெறும். இந்தப் பரிகாரம் அனைத்து இன மக்களும் அதிகச் சிரமமின்றி சுலபமாக தாங்களே செய்துகொண்டு சிறப்படைய மேன்மையான வழிமுறை இது என்றால் இதன் ஆச்சரியம் உங்களுக்கே உண்மை விளங்கும்.