திருமணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருமணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 11 மார்ச், 2019

திருமணம் உடனே நடக்க சிறப்பான பரிகாரம்

திருமண தடை நீக்கும் பரிகாரம் 

தனிசூழ் மதியை சனி சேய் பாவர்கள்
நோக்க மனமே சலிக்க சதை தலை
நரைத்தும் வாழ்க்கை படாள்
இந்த மாநிலத்தே பெண்ணே..!!



பெண்கள் ஜாதகத்தில் சந்திரனும் சனியும் பார்த்தாலும் சேர்ந்தாலும் அல்லது சனி செவ்வாய் பார்க்க சேர திருமண தடை,தாமதம் உண்டாகும் அல்லது பார்க்கும் வரனுக்கு பெண்ணை பிடிக்காது.இந்த பெண்ணை பார்க்கும் வரனுக்கு வேறு இடத்தில் சீக்கிரம் திருமணம் நடந்து விடும்.
இந்த தோசத்துக்கு பரிகாரமாக சிவனுக்கும் பார்வதிக்கும் பிரம்மா திருமணம் செய்து வைத்த இடமான திருவேள்விக்குடியையும்,இருவரும் கல்யாண கோலத்தில் தரிசனம் கொடுத்த இடமான திருமணஞ்சேரியையும் செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமையில் ஒரே நாளில் தரிசனம் செய்ய வேண்டும்.திருமண தாமத பிரச்சினை உள்ளவர்கள் அனைவரும் இந்த வழிபாட்டை செய்யலாம் ..

வசதியற்ற சுமங்கலி பெண்கள் 11 பேருக்கு புடவை,ரவிக்கை,வளையல்,மஞ்சள்,குங்குமம்,வெற்றிலை பாக்கில் பணம் வைத்து மஞ்சள் கயிறுடன் கொடுத்து ஆசி வாங்க வேண்டும் வாரம் ஒரு சுமங்கலி வெள்ளிக்கிழமையில் என கணக்கிட்டு கொடுக்கலாம் அவர்களுக்கு சாப்பாடு போட்டு இதனை கொடுக்க வேண்டும்

நிச்சயித்த திருமணம் நின்று விட்டால் அதுவும் இரண்டு முறை ஊரெல்லாம் பத்திரிக்கை வைத்த பின் நின்றுவிட்டால் ஒரு மனுசனுக்கு எப்படியிருக்கும்..? அப்படியொருவரை சந்தித்தேன்.எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது..என் ஜாதகத்தில் என்னதான் பிரச்சினை என நொந்து போய் கேட்டார்

.(அவர் எழுத சொன்னதால் பேஸ்புக்கில் குறிப்பிடுகிறேன் என்னிடம் ஜாதகம் பார்த்த நண்பர்கள் யாரும் கவலையுற வேண்டாம்)

அவருக்கு பரிகாரமாக சொன்ன விசயம்.அப்படி யாரும் இருந்தால் உங்கள் நட்பில் உறவில் யாரும் இருப்பின் இதை சொல்லவும்.

ஏற்கனவே நிச்சயம் செய்தோ,பத்திரிக்கை அடித்த பின்போ திருமணம் நின்று போயிருந்தால் அதன் பிறகு அடுத்த முறை திருமண நிச்சயதார்த்தம் செய்யக்கூடாது.பத்திரிக்கை அச்சான பிறகு முதல் பத்திரிக்கையை திருவேடகம் ஏடகநாதேஸ்வரருக்கு வைத்து மணமக்கள் பெயருக்கு அர்ச்சனை அபிசேகம் செய்ய வேண்டும்.திருமணத்தை ஒரு கோயிலில் நெருங்கிய உறவினர் சிலரை மட்டும் வைத்து செய்து கொள்ளவும்.அதன் பின் மாலையில் ரிசப்சன் வைத்து எல்லோருக்கும் விருந்து வைக்கலாம்.திருமணத்தின் போது விருந்து வைக்க கூடாது

கோயில் மதுரை சோழ வந்தான் அருகில் இருக்கிறது.

ஞாயிறு, 9 டிசம்பர், 2018

ஜாதகத்தில் இரண்டு திருமண தோசம் பரிகாரம்


  ஜென்ம பாவம் , செய்த பாவம் நீங்க பாபநாசம்
    நெல்லை மாவட்டம் பாபநாசம் பொதிகை மலையில் இன்னும் சித்தர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் மலையாகும். அகத்திய முனிவருக்கு இறைவன் திருமண கோலத்துடன் காட்சி கொடுத்த புன்ணிய மலை தலம். அகத்திய மாமுனியின் பூரண அருள் இங்கு உண்டு. இடைக்காட்டு சித்தருக்கு ஞானம் கிடைத்த மலை. புலத்தியர் என்ற சித்தரின் அருளைப் பெறலாம். இங்கு அகத்திய அருவியில் நீராடு, கல்யாண ஈஸ்வரரை வணங்கி, பின் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் சிவ சித்தர் அம்பாளை வணங்கி, கீழே பாபநாசம் வந்த சிவன் கோவில் சென்று அர்ச்சனை செய்து வர வேண்டும். 21 ஜென்ம பாவம் நீங்கும். தோஷம் விலகும், செய்வினை விலகும். சிறப்பான கணவர் அமைவார். மகிழ்ச்சி உண்டாகும் இறையருள் கிடைக்கும். பெளர்ணமி தோறும் இன்றும் இங்கு சந்தன மழை பொழிகிறது.

 மனைவியை இழக்கும் தோஷம் மாற பரிகாரம்
    ஒரு சிலருக்கு மாடும் தார தோஷம் வந்து விடுகிறது தார தோஷம் உள்ளவர் இளம் வயதிலேயே மனைவியை இழக்கும் நிலை அமைந்து விடுகிறது. பெண்ணின் ஜாதகத்தில் கிரகங்கள் நல்ல முறையில் அமைந்திருந்தாலும், கணவன் தோஷத்தால் அந்தப் பெண் காலமாகும் நிலை ஏற்படுகிறது.
    ஒரு ஆணின் ஜாதகத்தில் லக்னத்துக்கு ஏழாம் இடம் சனி வீடாக அமைந்து அதில் சனி இருந்தாலும், அல்லது சனி பகவான் லக்னத்துக்கு 6,8, 12 ஆம் இடங்களில் இருந்தாலும் அந்த ஜாதகருக்கு  வரும்  மனைவி இளம் வயதிலேயே காலமாகிவிட நேரும். அதே போல கணவரின் லக்னத்துக்கு 2 ல் சூரியன் இருந்தால் அவர் மனைவி விஷத்தால் இறப்பார். லக்னத்துக்கு 2 ல் சந்திரன் இருந்தால் தண்ணீர் கண்டத்தினால் இறப்பார். இப்படிப்பட்ட ஜாதக அமையப் பெற்ற மணமகனைத் தேர்வு  செய்யும் பெற்றோர்கள் சில பரிகாரங்களைச் செய்து கொண்டால் தங்களது மகள் நீண்ட நாட்கள் வாழ்வார். ( மேலும் மனைவியை இழக்கும் தோஷமும் ஆண் ஜாதகருக்கு மாறும்) இது போன்ற ஜாதகர்களைத் திருமணம் செய்து கொண்டவர்களும் இந்த பரிகாரத்தைச் செய்து கொண்டால் பயன் கிடைக்கும்.
பரிகாரம்_1
   7 ம் இடம் சனி வீட்டாக அமைந்து அந்த இடத்தில் சனி இருக்கப் பெற்றவர்களும் லக்னத்துக்கு 6, 8, 12 ல் சனி இருக்கப் பெற்றவர்களும் சனி பகவானுக்குப் ப்ரீதி செய்து கொள்ள வேண்டும். திருநள்ளாறு, குச்சனூர், சிவ கங்கை சோழ வந்தான், குருவித்துறை போன்ற தலங்களுக்குச் சென்று ப்ரீதி செய்ய வேண்டும். தம்பதி சகிதம் சென்று வர வேண்டும். சனி பகவானை நேரில் சென்று ப்ரீதி செய்து வருபவர்களுக்கு மனைவியை இழக்கும் நிலைமை வராது

 இரு மனைவி  தோஷம் விலக எளிய பரிகாரம்

    Image result for முருகன் வள்ளி தெய்வானை
ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்துக்கு 7, 8 ம் வீட்டிற்குரிய கிரகம் பாவியானாலும் அல்லது  பாவ கிரகங்களின் பார்வை பெற்றிருந்தாலும் அவர் இரு தார தோஷம் உள்ளவர். 12ம் வீட்டில் குரு பகவான் செவ்வாயுடன் கூடினாலும் 2 , 7 க்குடைய கிரகம் ஏதேனும் ஒன்று பாப கிரகமாக இருந்தாலும், அந்த ராசியில் பாவ கிரகம் இருந்தாலும் 7 ம் வீட்டிற்குரியவர்  பாவ கிரகத்துடன் கூடி இரண்டாம் வீட்டிலிருக்க அந்த கிரகத்தைச் செவ்வாய் பகவான் பார்த்தாலும் அந்த ஜாதகர் இரு தார தோஷம் உள்ளவர் என்பதை அறிந்து கொள்ளலாம்.
பரிகாரம்
  இரு தார தோஷம் உள்ளவர்கள் வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு அமாவாசை அன்றும் ஆஞ்சனேயரை வணங்கி வந்தால் , இரு தார தோஷம் தலை எடுக்காமல் மறைந்து போகும்.
பரிகாரம்
   முருகப் பொருமாள் ஸ்ரீ பால தண்டாயுதபாணி என்ற பெயரில் எழுந்தளியுள்ள ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்தால் கணவர் இரண்டாம் திருமணம் செய்யும் மனநிலையில் இருந்தாலும் தடுத்து நிறுத்துவார், இது போன்ற ஆலயம் உங்கள் பகுதியில் இருந்தால் மூன்று பெளர்ணமிக்கு ஆலயம் சென்று முருகனை வணங்கி வந்தால் கணவருக்குள்ள இரு தார தோஷம் மாறிவிடும்.
   இதே போன்ற நிலையில் உள்ள ஜாதகரை மணந்து கொண்ட ஒரு பெண்ணுக்கு கணவரால் பாதிப்பு வர இருந்தது. சிவகங்கையில் உள்ள முருகப்பெருமானை  மூன்று பெளர்ணமி நாட்கள் வணங்கினால் இரு தார தோஷம் விலகும்.

செவ்வாய், 5 ஏப்ரல், 2016

வசதியான கணவர் அமையும் யோகம்;திருமண பொருத்தம்


வசதியான கணவர் அமையும் யோகம்

    
பெண்கள் ஜாதகத்தில் ஏழாமிடம் களத்திர ஸதானம் என்றும் எட்டாமிடம் மாங்கல்யஸ்தானம் என்றும் நம் ஆன்றோர்கள் நிர்ணயித்துள்ளார்கள். அது போல் இரண்டாம் வீடு குடும்ப ஸ்தானத்தை வலியுறுத்துகிறது. ஒரு பெண் ஜாதகத்தில் 2,7 ஆகிய இடங்களை வைத்து எப்படிப் பட்ட கணவர் வருவார் என்பதை எளிதாக நிர்ணயம் செய்ய முடியும். திருமணத்துக்கு குருபலம் மிகவும் முக்கியமாகும். 

ஒருபெண்ணின் ஜாதகத்தில் 2,5,7,9,11 ஆகிய வீடுகளில் குரு கோசார ரீதியாக வரும்போது திருமணம் நடைபெறுகிறது. திருமணம் ஆகாமல் திருமண வயதை அடைகிறது. பெண்களுக்கே இந்த அமைப்பு உண்டாகிறது. எல்லோருக்கும் ஏற்படுவதில்லை. ஒரு பெண் ஜாதகத்தில் 2,7-ல் சுபகிரகம் வீற்றிருந்து 7ம் அதிபதி உச்சம் பெற்று காணப்பட்டால், அந்தப் பெண்ணின் கணவன் நல்ல வசதி படைத்தவனாக இருப்பான். கணவர் வந்த பிறகு அந்தப் பெண்ணின் வாழ்க்கை உயர்ந்தபடி இருக்கும் ஏழாம் அதிபதி லாபம் பெற்று 11ம் வீட்டில் காணப்பட்டால் கணவன் செல்வந்தராகவும், உயர்ந்த பதவி வகிப்பவராகவும் திகழ்வார். ஏழாம் அதிபதி ஏழாம் வீட்டைபார்வை செய்தாலும் அழகான, வசதியான நல்ல குணம் வாய்ந்த கணவர் அமையும் யோகம் உண்டாகும்.

     ஏழாம் அதிபதி 6,8,12ல் அமையப் பெற்றால் தாமத திருமணமும் ஒற்றுமையில்லாத கணவன் அமையும் யோகமும் உண்டாகும்;. அது போல ஏழாம் வீட்டில் சனி, செவ்வாய், ராகு, கேது போன்ற பாவிகள் இருந்தால் வசதி வாய்ப்பில் குறைந்து கணவராகவும் மiனிவயுடன் அடிக்;கடி சண்டைபோடும் கணவராகவும் வருவார்.

     ஏழில் புதன் அமையப்பெற்றால் அத்தை மகனை கைப்பிடிக்கும் யோகம் உண்டாகும். ஏழில் சூரியன் இருந்தால் மனைவியுடன் ஒத்துப் போகாத கணவர் கிடைப்பார்.

     ஏழாம் அதிபதி நான்கில் காணப்பட்டால் தாய் வழி உறவில் கணவர் அமைவார். திருமணத்திற்கு பிறகு பூமி, வீடு, வாகனம் யாவும் அமையப்பெறும்.

     ஏழாம் அதிபதி ஐந்தில் இருந்தால் உறவினர் வழியில் கணவன் அமைய வாய்ப்பில்லை இவர்களுக்கு காதல் திருமணமோ அல்லது கலப்புத் திருமணமோ நடக்க வாய்ப்பு உள்ளது.

     ஏழாம் அதிபதி ஆறில் அமையப்பெற்றால் மாமன் வழி உறவில் மணாளன் அமையும் யோகம் உண்டாகிறது.

     ஏழாம் அதிபதி ஏழில் அமையப்பெற்றால் அத்தையின் மகனையோ அல்லது உறவினர் ஒருவரையோ மணக்கும் யோகம் வாய்க்கும்.

     ஏழாம் அதிபதி வீட்டில் காணப்பட்டால், உறவினர் வழியில் வரன் அமையாது. திருமணத்திற்கு பிறகு கணவன் மனைவியிடயே கருத்து வேறுபாடு உண்டாக வாய்ப்பிருக்கிறது.

     ஏழாம் அதிபதி ஒன்பதில் காணப்பட்டால் அயல்நாடு, வெளிமாநிலம், வெளியூர் போன்ற இடங்களிலிருந்து கணவர் வருவார். திருமணத்துக்குப் பிறகு செல்வம் செல்வாக்கு மேலும் மேலும் அதிகரிக்கும் ஏழாம் அதிபதி பத்தில் ;இருந்தால் தந்தை வழி உறவில் கணவர் அமைவார். திருமணத்துக்குப் பிறகு தொழில் பொருளாதார நிலையாவும் சிறப்பாக இருக்கும்.

     ஏழாம் அதிபதி பதினொன்றில் இருந்தால் அறிமுகமான குடும்பத்தில் இருந்து கணவன் அமைவார். அவர் உயர்ந்த உத்தியோகத்தில் பணியாற்றுவார்.

     திருமணத்துக்கு பிறகு லாபமும் வெற்றியும் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.

     ஏழாம் அதிபதி பனிரெண்டில் இருந்தால் உறவினர் வழியில் கணவர் அமையாது.            

திங்கள், 17 ஆகஸ்ட், 2015

திருமண காலம் எப்போது வரும்..? ஜோதிட விளக்கம்

திருமணம் எப்போது நடக்கும் என ஜாதகத்தை எடுத்துக்கொண்டு ஜோசியரிடம் சென்றால், கன்னி ராசியா..? போன வருசம் எல்லாம் குரு பலம் இருந்தது இப்போ ராசிக்கு 12ல் மறைஞ்சிருச்சே ..குருபலம் இல்லியே இனி அடுத்த வருசம்தான் என சர்க்கரை இல்லை போங்கன்னு சொல்ற ரேசன் கடைக்காரர் மாதிரி சொல்லிவிடுவார்...இது பல ஜோசியர்கள் சொல்லும் குரு பலம் கணக்கு...கோட்சார குருவை மட்டும் வைத்துக்கொண்டு திருமண காலத்தை கணக்கிட முடியாது.இன்னும் சில கணக்குகள் இருக்கின்றன...

கோட்சாரத்தில் நகர்ந்து வரும் குரு,பிறந்த ஜாதகத்தில்  ஏதாவது சுபகிரகங்களுடன் சேர்ந்துவிட்டாரா..கோணம்,திரிகோனம் அந்தஸ்து பெறுகிறாரா..? என பார்க்கனும்.திசை என்ன புத்தி என்ன..? புத்திநாதன் திசாநாதனுக்கு எத்தனாம் இடம்..? களத்திர காரகன் யார்..? அவருக்கும், புத்திநாதனுக்கும் உள்ள சம்பந்தம் எல்லாம் பார்க்கனும்...

சுக்கிர புத்தி,ஏழுக்குடையவன் புத்தி,பாக்யாதிபதி புத்தி நடந்தா ..அவர்கள் திசாநாதனுக்கு கெடாமல் இருந்தால், அந்த புத்தி முடிவதற்குள் திருமனம் நடந்துவிடும்..குருபலம் இல்லாவிட்டாலும் இது நடக்கும்...குருபலம் இருப்பவர்கள் மட்டும்தான் திருமணம் செய்கிறார்களா என்ன..? திருப்பதி,திருச்செந்தூர்,திருத்தணி,திருப்பரங்குன்றம்  முகூர்த்த நாளில் போய் பார்த்தால் ஆயிரக்கணக்கான ஜோடிகள் திருமணம் செய்கின்றனர்...எல்லோருக்கும் குருபலம் இருக்கிறதா என்ன..? 

7க்குடையவன் புத்தி நடந்தால் ,உடலுறவுக்கான காலம் காதலுக்கான காலம் என அறியலாம்...அது தற்போதைய நம் சமூக பழக்கத்துக்கு ஏற்றவாறு திருமணம் எனும் பந்தம் உண்டாக்கி ,நடத்தி வைக்கிறது.

லக்னம்,லக்னாதிபதி 7ஆம் இடம்,7ஆம் அதிபதி இவர்களுக்கு கோட்சார குருவின் பார்வை அல்லது சேர்க்கை பெறுகிற காலமும் திருமணம் நடைபெறும்..சந்திரனுக்கு 2,5,7,9,11 ல் கோட்சார குருவின் சஞ்சாரம் திருமணத்தை ஏற்படுத்திக்கொடுக்கும்..

 பரணி நட்சத்திரம் வரும் நாளில் காஞ்சிக்கு சென்று காஞ்சி காமாட்சியை வழிபாடு செய்தால் திருமண தடைகள் நீங்கி திருமணம் நடைபெறும்...தொடர்ந்து 3 மாதம் பரணி நட்சத்திர நாளில் சென்று வழிபட்டு வரவும்..

திங்கள், 16 மார்ச், 2015

ராகு கேது தோசம் மறைந்திருக்கும் உண்மைகள்

 ராகு கேது தோசம் மறைந்திருக்கும் உண்மைகள்
 
கும்பத்தில்   ராகுவும்   சிம்மத்தில்   கேதுவும்  இருக்க    இறைவழிபாடும்,   கிரகங்களின்   வழிபாடும்   மிகுந்த    நன்மைத்   தரும்.

கும்பத்தில்   ராகுவும்     சிம்மத்தில்  கேதுவும்   இருக்கப்   பிறந்தவர்கள்   ஒரு  அதீதமான   சக்தியைப்   பெறுகின்றார்கள்.   பெரும்பாலும்     நாளை  நடப்பதை   முன் கூட்டியே   சொல்லக்கூடிய   ஆற்றலைப்  பெற்றிருப்பார்கள்.

ஆனால்  குடும்ப   பிரிவினையை அதிகம்   சந்திக்கக்   கூடிய  சூழ்நிலை  ஏற்படும்.   அண்ணன்   தம்பி   உறவு  சரியில்லை,    தகப்பனார்  உறவுகளை   சரி  செய்ய  இயலாது.   தாம்பத்ய   சுகம்  கானல்   நீர்  போல்  ஆகும்.   எடுப்பார்   கைப்பிள்ளை  போல்   ஆவார்கள்.   தேவையற்ற   பயம்,   மனதில்    சஞ்சலம்      முதலியவைகள்   ராகு,   கேதுக்கள்  ஏற்படுத்தும்.

சில   வீடுகளில்  புள்ளி  வைத்துக்   கோலம்  போடுவார்கள்.  அது   இருபாம்புகள்  இணைந்த்து  போல்   காணப்படும்.   இந்த  மாதிரி  கோலமிடும்   வீடுகளில்  கால சர்ப்ப தோசம்   பெற்றவர்கள்   இருக்கிறார்கள்  என்பதை  நாம்  அறியலாம்.

ஒரு  பெண்ணுக்கு   அடி   வயிற்றில்   பாம்பு  போல்  மச்சம்  இருந்தால்,   அவளது   கணவன்  இடி  விழுந்து    மரணம்  அடைகிறார். அது  போல   பாம்பு  போன்ற  மச்சம்   தொடையிலிருந்தால்,   அவர்களுக்கு   குழந்தைகள்   இறந்தே  பிறக்கிறது.     

முக்கிய   விஷயமாக  வெளியூர்  அல்லது   வெளி  இடங்களுக்கு  நாம்  செல்கின்ற   போது,   ராகு,  கேதுகளான   சர்ப்பங்கள்,   கிழக்கிலிருந்து   மேற்கில்   சென்றாலும்,   தெற்கிலிருந்து   வடக்கு   நோக்கிச்  சென்றாலும்   காரியம்   பலிதமும்,   பிரச்சனைக்களுக்கு   தீர்வு  ஏற்படும்   எனவும்,  மேற்கிலிருந்து   கிழக்கு   நோக்கியும்   வடக்கிலிருந்து  தெற்கு   சென்றால்   உயிர்  கண்டங்களும் ,  தேவையற்ர  பிரச்சனைகளால்    பாதிப்புகள்   ஏற்படும்   என்ற   நம்பிக்கையும்   மக்களிடையே   உள்ளது.


யாத்திரை   அல்லது   வெளியூர்   பயணங்கள்  செல்லும்   போது   மாறுபட்ட   நிலைகளில்  சர்ப்பங்களை   கண்டால்  மக்கள்  வீடுகளுக்கு   திரும்பி  வந்து   கற்றாலை  செடியின்  மூலம்   செய்யப்பட்ட   கரிவலம்  என்னும்    பொருளை  சாம்பிராணியில்  கலந்து   வீடு  முழுக்க    தூபம்   காட்டிய  பின்னரே   பயணத்தை  தொடர்ந்தனர்.

ஒரு   சிலருக்கு   முதுகில்  பிடிப்பு  அடிக்கடி  ஏற்படும்.  இவர்களுக்கு   மட்டும்   ஏன்   இப்படி   நிகழ்கிறது  என பார்த்தால்,   இவர்கள்  எப்பொழுதாவது   பாம்புகளை  அடிக்கும்  ட்த்தில்  இருந்திருப்பார்கள்.   அடிபட்ட   பாம்பு    தன்  உயிரை   விடும்   கடைசி   நேரத்தில்   அதன்  மூச்சுக்காற்று   காற்றில்   கலக்கும்  போது,   யார்,  யார்   அதை   சுவாசிக்கிறார்களோ   அவர்களுக்குத்   தான்   மேற்படி    பிடிப்பு    உடலில்   ஏற்படுகிறது   என்பது   அதிசயத்திலும்  அதிசயமாகும்.

ராகு கூட பலருக்கு யோகத்தை கொடுத்திருக்கிறது ஆனால் கேது சில முக்கியமான இடங்களில் அமர்ந்துவிட்டால் அந்த ச்தானத்தை கெடுத்து விடுகிறது சுபர் இருந்தால் தப்பிக்கலாம்...4ல் கேது இருப்பின் ஒழுக்கம் இருக்கும்,சுகம் இருக்காது சுகபோகமாக வாழ முடியாது ..கார்,பங்களா,என இருந்தாலும் தீராத நோயுடையவர்களாகவும் இருதய கோளாறு உடையவர்களாகவும் இருப்பர்..5ல் கேது இருந்தால் குழந்தை இல்லை என்பார்கள் ஆனால் பலருக்கு குழந்தை இருக்கிறது ஆனால் அக்குழந்தையால் பல தொல்லைகள் நிம்மதியை கெடுக்கிறது..

இவ்வாறு 2ல் கேது இருப்பின் வருமான தடை,11ல் கேது இருப்பின் பணம் தங்காமை,7ல் இருப்பின் மனைவியுடன் வாக்குவாதம்,9ல் இருந்தால் தந்தையுடன் ஒத்து போகாமை,ஊராருடன் ஒத்துப்போகாமை ,3ல் இருப்பின் சகோதரருடன்,மாமனாருடன்  கருத்து வேறுபாடு என இருக்கும். 6ல் இருந்தால் நல்லது எதிரி,கடன் இருக்காது..12ல் இருந்தாலும் பாதிப்பில்லை..

சனி, 14 பிப்ரவரி, 2015

திருமணம் நடைபெற பரிகாரங்கள்,விரதம்,வழிபாடு

விரத  பலன்;
ஒரு  வீட்டில்   கணவன்  விரதமிருந்து   வழிபட்டால்  கணவனுக்கு  மட்டுமே   பலன்  கிடைக்கும்.  ஆனால்   மனைவி   விரதமிருந்து  வழிபட்டால்   மனைவிக்கு  மட்டுமல்லாமல்   கணவனுக்கும்,  குழந்தைக்கும்  கூட  நற்பலன்கள்  கிடைக்கிறது.

குடும்ப  பாதிப்பு,  கஷ்டங்கள்;  தினமும்  வீட்டில்  [அல்லது]   உள்ளூர்  பெருமாள்  கோவிலில்  உள்ள   ஸ்ரீ லட்சுமி  நரசிம்மருக்கு  சனிக்கிழமைகளில்  நெய்தீபம்  ஏற்றி  வழிபட  பாதிப்பு   நீங்கும்.

. மாணவர்களைப்  பள்ளியில்   சேர்க்க;   அஷ்டமி,  நவமி,  கரிநாள்,  ராகு  காலம்,  எமகண்டம்   தவிர்த்து,  புதன்,   வியாழக்கிழமைகளில்   அமிர்த  யோகம்,  சித்தயோகக்  காலத்தில்   மாணவர்களை  பள்ளியில்   சேர்ப்பது  எதிர்காலக்  கல்விக்கு  நல்லது.


வீட்டில்  குடும்பத்திலுள்ளவர்களில்   யாருக்காவது  அறுவை   சிகிச்சை  நடைபெற்றால்  வீட்டின்  பூஜை   அறையில்   நெய்  தீபம்  விளகேற்றி  வெள்ளை   சிகப்பு    அரளிப்பூ  போட்டு   மஞ்சள்  குங்குமம்  பொட்டு  வைத்து   தம்பதியரின்  பெயர்,  ஜெனம   நட்சத்திரத்திற்கு  அர்ச்சனை   செய்தால்   தம்பதியர்  இருவரும்  ஒற்றுமையாக  அன்னியோன்னிய    நேசத்துடன்  விளங்குவார்கள்   என்று  சொல்லப்படுகிறது.

  நிரந்தர  நல்ல   வேலை  கிடைக்க   செவ்வாய்க்கு   அதிபதி   முருகனை   நம்பிக்கையுடன்  தினமும்  வழிபட்டு   வந்தால்  3  மாதத்திற்குள்    வேலை   கிடைக்கும்.

  திருமணம்   தாமதமாகி  களத்திர தோசத்திற்குள்ளான   பெணகள்  செவ்வாய்க்கிழமை  மாலை  3.00  மணி  முதல்   4.30.  மணி  ராகு   காலத்தில்  துர்க்கை   அம்மன்  சன்னதியில்  எலுமிச்சம்  பழ  விளக்கு  ஏற்றுவதோடு   நவகிரகங்களை  ஒனபது  முறை  சுற்றினால்  திருமணம்  விரைவில்   நடைபெறும்.

     வியாபாரிகள்  தங்களது   கடைக்கு   நல்லவர்,  கெட்டவர்  வந்து  போவதால்  திருஷ்டியைப்  போக்க  இரவில்   கடையை  மூடும்   பொழுது சூடம்  ஏற்ற  வேண்டும்.  எலுமிச்சம்  பழம்   வெட்டி  குங்கும்ம்   தோய்த்து    கடையச்சுற்றி  கடையின்   நான்கு   திசைகளிலும்  போட்டால்  வியாபாரம்  நன்கு   விருத்தியாகும்.

  ஆறு   தேய்பிறை   அஷ்டமிகளில்  சிவன்  கோவிலில்  உள்ள  பைரவருக்கு   சிவப்பு  அரளி  மலர்களால்  அர்ச்சனை  செய்து    வந்தால்   குழந்தை  பாக்கியம்   கைகூடும்.

ஞாயிற்றுக்கிழமை  மாலை  ராகு  காலத்தில்   [4.30  மணி  முதல்   6 மணி வரை]  உள்ளூர்  ஆலயத்திலுள்ள   கால  பைரவருக்கு  செவ்வரளி  மாலை,  நெய் தீபம்  27   வாரம்   ஏற்றி    வர  திருமணம்   நடக்கும்.  48  வது  வாரம்  நெய் தீபம்   ஏற்ற  எதிரி  தவிடுபொடி,  பில்லி,  சூன்யம், சனி,  நாக தோசம்  மரண  பயம்  நீங்கும்.  காயத்ரி  சொல்லி  வழிபடுவது  சிறப்பு   தேய்பிறை  அஷ்டமியில்   வழிபாடு   மிகச்சிறப்பு.

   திரிசூலத்தில்  குங்குமம்  இட்டு  எலுமிச்சையை   சொருகினால்   திருஷ்டி  செய்வினை  நீங்கும்.

   விநாயகருக்கும்,  சனிபகவானுக்கும்  மிகவும்   பிரியமான  மரம்  வன்னி மரம்.  வன்னிமரத்தின்  கீழ்   உள்ள   விநாயகரை   வழிபடுவதால்  சனி,  ராகு,  கேது,  தெசாபுத்தி  பாதிப்பு,   ஆயுள்  விருத்தி,  நினைத்த  காரியம்   நிறைவேறல்,   பொன்பொருள்  சேர்க்கை  ஏற்றமான   வாழ்வு   அமையும்.

  ஸ்ரீ  மந்நாராயண்னின்   அம்சமாகப்  போற்றபடுவது   அரச  மரம்.   அரச  மரத்தின்   வேரில்   பிரம்மாவும்  மத்தியில்   விஷ்ணுவும்,   மேல்பகுதியில்  சிவனும்   குடி கொண்டிருப்பதாகச்   சொல்லப்படுகிறது.   மற்ற  அனைத்து    தெய்வங்களும்,  உப  தேவதைகளும்   அரச  மரத்தின்   பழங்களில்   வாழ்வுதாயும்   புராணங்களில்   கூறப்படுகிறது.
திங்கடகிழமையும்,  அமாவாசயும்   சேர்ந்து   வரும்   நாட்களில்  அரச  மரத்தை    108   முறை  பிரதட்சணம்  செய்வது   மகா  புண்ணியம்  தரும்.  நீண்ட   ஆயுள்,  பிள்ளைப்பேறு,   நோயிலிருந்து  நிவாரணம்,  வைகுண்ட   பிராப்தி  இவை  கண்டிப்பாகக்  கிட்டும்  என்று  சாஸ்திரங்களில்     கூறப்பட்டுள்ளது.

  புத்ர  தோசத்திற்கு   சக்தியுள்ள   பரிகாரம்;   வியாழக்கிழமைகளில்  ஒரு  வேளை  உபவாசமும்  மாலையில்   திருக்கோவிலிலுள்ள  தட்சணாமூர்த்திக்கு  நெய்   தீபமும்  தொடர்ந்து   ஏற்றிவர   விரதம்  ஏற்ற   192   நாட்களில்   கருத்தரிப்பு   ஏற்படும்.    மாதவிடாய்    சமயத்தில்  இந்த    விரதத்தை  அனுஷ்டிக்காமல்  வேறு   யார்  மூலமாவது  நெய்  தீபம்   ஏற்றி  வர  வேண்டும்,  நம்பிக்கை  அவசியம்.

   தடைப்பட்ட   திருமணம்   நடைபெற
  
ஒவ்வொரு தமிழ் மாதம் துவங்கும்போதும் உத்திரம் நட்சத்திரம் வரும் வளர்பிறை நாளில் சிவன் கோயில் சென்று சிவபெருமானுக்கு வில்வ மாலை சார்த்தி அபிசேகம் செய்து வழிபட வேண்டும்..பிரதோச நாளில் நந்திபகவானுக்கு பால்,தயிர் வாங்கி அபிசேகத்துக்கு கொடுக்க வேண்டும்.விரைவில் திருமணம் நடைபெறும்..!!

புதன், 18 டிசம்பர், 2013

கல்யாணம் சீக்கிரம் நடக்க எந்த கோயில் போகலாம்..? ஜோதிட பரிகாரம்

கல்யாணம் ஆகலையா...உடனே திருமனஞ்சேரி போயிட்டு வராங்க..நாக தோசம் இருக்குன்னா காளஹஸ்தி போறாங்க..அதெல்லாம் சரி....ஆனா இன்னும் நுணுக்கமான திருமண தடை நீக்கும் பரிகாரம் இருக்கு...முருகன் மனைவியுடன் இருக்கும் பழைய கோயிலில் வழிபடுங்க...அப்புறம் அகத்தியர் சிவபெருமானை கல்யாண கோலத்தில் தரிசனம் செய்த பழமையான கோயில்கள் மாவட்டம் தோறும் இருக்கு அங்க போயிட்டு வாங்க...குறிப்பா ஈரோடு மாவட்டம் கொடுமுடி மகுடேஸ்வரர்..ரொம்ப விசேஷம்..காவிரி கரையில் தீர்த்த கிணருகள் சூழ மும்மூர்த்திகளும் அருளும் ஸ்தலம்..அப்பர்,சுந்தரர்,திருஞான சம்பந்தர் பாடிய ஸ்தலம்..பல மன்னர்கள் கோயிலை புதுப்பிச்சிருக்காங்க..காசிக்கு நிகரானது...

சனீஸ்வரர் காகம் மேல் உட்கார்ந்திருப்பது இந்தியாவில் இங்கு மட்டும்தான்..!! மகுடேஸ்வரர் என்பதால் இந்த சிவனிடம் நிறைய சூட்சுமங்கல் இருக்கின்றன..வேலை பறிபோனவர்கலும் இங்கு வழிபட்டால் மகுடம் மீண்டும் சூடப்படுவார்கள்...3000 வருடம் பழமையன வன்னி மரத்தின் கீழ் பிரம்மா இருக்கிறார் ரோகிணி நட்சத்திரம் ரிசப ராசியினர் வழிபட எல்லா பிரச்சினையும் தீரும் வெள்ளைத்தாமரை வைத்து 27 நெய் தீபம் ஏற்றி வணங்க வேண்டும்...ஸ்ரீரெங்கம் பெருமாள் போல சயன கோலத்தில் இருக்கும் பெருமாளை வழிபட சம்சார வாழ்வின் சோதனைகள் விலகும் கணவன் மனைவி ஒற்றுமை உண்டாகும்..

ஜாதகத்தில் 7ஆம் இடத்தில் சனி அல்லது சூரியன் என கடுமையான தோசம் இருப்பவர்கள் பவானி கூடுதுறையில் சிறப்பு பரிகாரம் செய்த பின் கொடுமுடி செல்வதே நல்லது...பரிகாரம் செய்தாலும் செய்பவர் ராசியான அய்யராக இருக்கனும் உங்க நட்சத்திரத்துக்கு தாரபலன் இருக்கும் நாளாக இருக்கனும்...பரிகாரம் செய்தவர் பல கல்யாணங்களை நடத்தி வைத்தவராக இருக்கனும்..உங்க ஜாதகப்படி இப்போ திசாபுத்தி தடையில்லாம இருக்கனும்...அதுக்கு விளக்கமாக தெரிஞ்சிக்க என் மெயிலுக்கு எழுதுங்க..விரிவா சொல்றேன்...பரிகாரம் செய்வதாக இருந்தா மட்டும் எழுதவும் sathishastro77@gmail.com


செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

திருமணம் உடனே நடைபெற ஒரு சக்திவாய்ந்த மந்திரம்



நம் வீட்டில் திருமணம் ஏதாவது பிரச்சினை காரணமாக தடைபட்டுகொண்டே செல்கிறதே இதற்கு தீர்வு ஏதும் உண்டா என்று கேட்கும்நமக்கு கலியுக்கடவுளான முருகனின் திருப்புகழில் ஒரு பகுதியைநமக்கு எடுத்துத் தருகிறார் நம் கிருபானந்த வாரியார் சுவாமிகள்.வெறும் வார்த்தையாக இல்லாமல் உறுதியாகவும் நிச்சயமாகவும்கூறுகிறார். 
1 மண்டலம் அதாவது 48 நாட்களுக்குள் திருமணம் நடக்கும் இதற்கு அருணகிரி நாதர் முருகனைப் பற்றிப் பாடி அருளியமந்திர திருப்புகழை திருமணம் ஆகாதவர்கள் தினமும் காலை அல்லதுமாலை வேளையில் ஒரு நாளைக்கு 6 முறை வீதம் , 48 நாட்கள்தொடர்ந்து பாராயணம் செய்தால் கண்டிப்பாக எந்த விதமான திருமணதோசங்கள் இருந்தாலும் அத்தனையையும் நீக்கி 48 நாள் முடிவதற்குள்நல்ல பதில் கிடைக்கும்.
திருமணம் ஆனவர்கள் இந்தத்திருப்புகழை படித்தால் குடும்பத்தில்விட்டு சென்ற உறவுகள் சேரும் என்பதும் நிதர்சனமான உண்மை.
விறல்மார னைந்து மலர்வாளி சிந்த 
மிகவானி லிந்து வெயில்காய 
மிதவாடை வந்து தழல்போல வொன்ற 
வினைமாதர் தந்தம் வசைகூற


குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட
கொடிதான துன்ப மயில் தீர 
குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து 
குறைதீர வந்து குறுகாயோ


மறிமா னுகந்த இறையோன் மகிழ்ந்த
வழிபாடு தந்த மதியாளா 
மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச 
வடிவே லெறிந்த அதிதீரா


அறிவா லறிந்த னிருதா ளிறைஞ்சு
மடியா ரிடைஞ்சல் களைவோனே 
அழகான செம்பொன் மயில்மே லமர்ந்து
அலைவா யுகந்த பெருமாளே.