ஜென்ம பாவம் , செய்த பாவம் நீங்க பாபநாசம்
நெல்லை மாவட்டம் பாபநாசம் பொதிகை
மலையில் இன்னும் சித்தர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் மலையாகும். அகத்திய முனிவருக்கு இறைவன் திருமண கோலத்துடன் காட்சி கொடுத்த புன்ணிய மலை
தலம். அகத்திய மாமுனியின் பூரண அருள் இங்கு உண்டு. இடைக்காட்டு சித்தருக்கு ஞானம் கிடைத்த மலை. புலத்தியர்
என்ற சித்தரின் அருளைப் பெறலாம். இங்கு அகத்திய அருவியில் நீராடு,
கல்யாண ஈஸ்வரரை வணங்கி, பின் இன்றும் வாழ்ந்து
கொண்டிருக்கும் சிவ சித்தர் அம்பாளை வணங்கி, கீழே பாபநாசம் வந்த
சிவன் கோவில் சென்று அர்ச்சனை செய்து வர வேண்டும். 21 ஜென்ம பாவம்
நீங்கும். தோஷம் விலகும், செய்வினை விலகும்.
சிறப்பான கணவர் அமைவார். மகிழ்ச்சி உண்டாகும் இறையருள்
கிடைக்கும். பெளர்ணமி தோறும் இன்றும் இங்கு சந்தன மழை பொழிகிறது.
மனைவியை இழக்கும்
தோஷம் மாற பரிகாரம்
ஒரு சிலருக்கு மாடும் தார தோஷம்
வந்து விடுகிறது தார தோஷம் உள்ளவர் இளம் வயதிலேயே மனைவியை இழக்கும் நிலை அமைந்து விடுகிறது.
பெண்ணின் ஜாதகத்தில் கிரகங்கள் நல்ல முறையில் அமைந்திருந்தாலும்,
கணவன் தோஷத்தால் அந்தப் பெண் காலமாகும் நிலை ஏற்படுகிறது.
ஒரு ஆணின் ஜாதகத்தில் லக்னத்துக்கு
ஏழாம் இடம் சனி வீடாக அமைந்து அதில் சனி இருந்தாலும், அல்லது
சனி பகவான் லக்னத்துக்கு 6,8, 12 ஆம் இடங்களில் இருந்தாலும் அந்த
ஜாதகருக்கு வரும் மனைவி இளம் வயதிலேயே காலமாகிவிட நேரும்.
அதே போல கணவரின் லக்னத்துக்கு 2 ல் சூரியன் இருந்தால்
அவர் மனைவி விஷத்தால் இறப்பார். லக்னத்துக்கு 2 ல் சந்திரன் இருந்தால் தண்ணீர் கண்டத்தினால் இறப்பார். இப்படிப்பட்ட ஜாதக அமையப் பெற்ற மணமகனைத் தேர்வு செய்யும் பெற்றோர்கள் சில பரிகாரங்களைச்
செய்து கொண்டால் தங்களது மகள் நீண்ட நாட்கள் வாழ்வார். ( மேலும்
மனைவியை இழக்கும் தோஷமும் ஆண் ஜாதகருக்கு மாறும்) இது போன்ற ஜாதகர்களைத்
திருமணம் செய்து கொண்டவர்களும் இந்த பரிகாரத்தைச் செய்து கொண்டால் பயன் கிடைக்கும்.
பரிகாரம்_1
7 ம் இடம் சனி வீட்டாக அமைந்து அந்த
இடத்தில் சனி இருக்கப் பெற்றவர்களும் லக்னத்துக்கு 6, 8, 12 ல்
சனி இருக்கப் பெற்றவர்களும் சனி பகவானுக்குப் ப்ரீதி செய்து கொள்ள வேண்டும்.
திருநள்ளாறு, குச்சனூர், சிவ கங்கை சோழ வந்தான், குருவித்துறை போன்ற தலங்களுக்குச்
சென்று ப்ரீதி செய்ய வேண்டும். தம்பதி சகிதம் சென்று வர வேண்டும்.
சனி பகவானை நேரில் சென்று ப்ரீதி செய்து வருபவர்களுக்கு மனைவியை இழக்கும்
நிலைமை வராது
இரு மனைவி தோஷம் விலக எளிய பரிகாரம்

ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்துக்கு
7, 8 ம் வீட்டிற்குரிய கிரகம் பாவியானாலும் அல்லது பாவ கிரகங்களின் பார்வை பெற்றிருந்தாலும்
அவர் இரு தார தோஷம் உள்ளவர். 12ம் வீட்டில் குரு பகவான் செவ்வாயுடன்
கூடினாலும் 2 , 7 க்குடைய கிரகம் ஏதேனும் ஒன்று பாப கிரகமாக இருந்தாலும்,
அந்த ராசியில் பாவ கிரகம் இருந்தாலும் 7 ம் வீட்டிற்குரியவர் பாவ கிரகத்துடன் கூடி இரண்டாம் வீட்டிலிருக்க
அந்த கிரகத்தைச் செவ்வாய் பகவான் பார்த்தாலும் அந்த ஜாதகர் இரு தார தோஷம் உள்ளவர் என்பதை
அறிந்து கொள்ளலாம்.
பரிகாரம்
இரு தார தோஷம் உள்ளவர்கள் வாழ்நாள்
முழுவதும் ஒவ்வொரு அமாவாசை அன்றும் ஆஞ்சனேயரை வணங்கி வந்தால் , இரு தார தோஷம் தலை எடுக்காமல் மறைந்து போகும்.
பரிகாரம்
முருகப் பொருமாள் ஸ்ரீ பால தண்டாயுதபாணி
என்ற பெயரில் எழுந்தளியுள்ள ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்தால் கணவர் இரண்டாம்
திருமணம் செய்யும் மனநிலையில் இருந்தாலும் தடுத்து நிறுத்துவார், இது போன்ற ஆலயம் உங்கள் பகுதியில் இருந்தால் மூன்று பெளர்ணமிக்கு ஆலயம் சென்று
முருகனை வணங்கி வந்தால் கணவருக்குள்ள இரு தார தோஷம் மாறிவிடும்.
இதே போன்ற நிலையில் உள்ள ஜாதகரை
மணந்து கொண்ட ஒரு பெண்ணுக்கு கணவரால் பாதிப்பு வர இருந்தது. சிவகங்கையில்
உள்ள முருகப்பெருமானை மூன்று பெளர்ணமி நாட்கள் வணங்கினால் இரு தார தோஷம் விலகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக