thirumanam லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
thirumanam லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 17 ஆகஸ்ட், 2015

திருமண காலம் எப்போது வரும்..? ஜோதிட விளக்கம்

திருமணம் எப்போது நடக்கும் என ஜாதகத்தை எடுத்துக்கொண்டு ஜோசியரிடம் சென்றால், கன்னி ராசியா..? போன வருசம் எல்லாம் குரு பலம் இருந்தது இப்போ ராசிக்கு 12ல் மறைஞ்சிருச்சே ..குருபலம் இல்லியே இனி அடுத்த வருசம்தான் என சர்க்கரை இல்லை போங்கன்னு சொல்ற ரேசன் கடைக்காரர் மாதிரி சொல்லிவிடுவார்...இது பல ஜோசியர்கள் சொல்லும் குரு பலம் கணக்கு...கோட்சார குருவை மட்டும் வைத்துக்கொண்டு திருமண காலத்தை கணக்கிட முடியாது.இன்னும் சில கணக்குகள் இருக்கின்றன...

கோட்சாரத்தில் நகர்ந்து வரும் குரு,பிறந்த ஜாதகத்தில்  ஏதாவது சுபகிரகங்களுடன் சேர்ந்துவிட்டாரா..கோணம்,திரிகோனம் அந்தஸ்து பெறுகிறாரா..? என பார்க்கனும்.திசை என்ன புத்தி என்ன..? புத்திநாதன் திசாநாதனுக்கு எத்தனாம் இடம்..? களத்திர காரகன் யார்..? அவருக்கும், புத்திநாதனுக்கும் உள்ள சம்பந்தம் எல்லாம் பார்க்கனும்...

சுக்கிர புத்தி,ஏழுக்குடையவன் புத்தி,பாக்யாதிபதி புத்தி நடந்தா ..அவர்கள் திசாநாதனுக்கு கெடாமல் இருந்தால், அந்த புத்தி முடிவதற்குள் திருமனம் நடந்துவிடும்..குருபலம் இல்லாவிட்டாலும் இது நடக்கும்...குருபலம் இருப்பவர்கள் மட்டும்தான் திருமணம் செய்கிறார்களா என்ன..? திருப்பதி,திருச்செந்தூர்,திருத்தணி,திருப்பரங்குன்றம்  முகூர்த்த நாளில் போய் பார்த்தால் ஆயிரக்கணக்கான ஜோடிகள் திருமணம் செய்கின்றனர்...எல்லோருக்கும் குருபலம் இருக்கிறதா என்ன..? 

7க்குடையவன் புத்தி நடந்தால் ,உடலுறவுக்கான காலம் காதலுக்கான காலம் என அறியலாம்...அது தற்போதைய நம் சமூக பழக்கத்துக்கு ஏற்றவாறு திருமணம் எனும் பந்தம் உண்டாக்கி ,நடத்தி வைக்கிறது.

லக்னம்,லக்னாதிபதி 7ஆம் இடம்,7ஆம் அதிபதி இவர்களுக்கு கோட்சார குருவின் பார்வை அல்லது சேர்க்கை பெறுகிற காலமும் திருமணம் நடைபெறும்..சந்திரனுக்கு 2,5,7,9,11 ல் கோட்சார குருவின் சஞ்சாரம் திருமணத்தை ஏற்படுத்திக்கொடுக்கும்..

 பரணி நட்சத்திரம் வரும் நாளில் காஞ்சிக்கு சென்று காஞ்சி காமாட்சியை வழிபாடு செய்தால் திருமண தடைகள் நீங்கி திருமணம் நடைபெறும்...தொடர்ந்து 3 மாதம் பரணி நட்சத்திர நாளில் சென்று வழிபட்டு வரவும்..

திங்கள், 30 மார்ச், 2015

திருமண பொருத்தம் -இதை முதலில் கவனிங்க..!

திருமண பொருத்தம் ;

திருமண பொருத்தம் பார்க்கும் போது,அத்தை பொண்ணு ,மாமன் பையன் என உறவு முறையாக வந்தால் திருமண பொருத்தம் பார்க்க தேவையில்லை...இருவரும் காதலித்தால் ஜாதகம் எடுத்துக்கொண்டு ஜோசியரிடம் போக வேண்டாம்..பொருத்தம் பார்க்க வேண்டாம்..இவையெல்லாம் மனப்பொருத்தம் அடிப்படையில் ராசி வசியம் அடிப்படையில் ராசிப்பொருத்தம் என வந்துவிடும். அதற்கு பொருத்தம் பார்க்க வேண்டாம்...

அந்நியத்தில் பார்த்தால் மட்டும் திருமண பொருத்தம் பார்த்தால் போதுமானது...ரோகிணி ,திருவாதிரை,பூசம்,மகம்,அஸ்தம்,திருவோணம்,இவை ஆறும் ஆண்,பெண்களுக்கு ஒரே நட்சத்திரமாக வந்தால் திருமணம் செய்யலாம்....திருவாதிரை ஆணும் ரோகிணி பெண்ணும் வந்தால் பொருத்தம் வருமா என கேட்டால் வராது ..இருவரும் ரோகிணியாக இருந்தால் செய்யலாம்..

இருவரின் பிறந்த நட்சத்திரத்துக்குண்டான மிருகங்களை பாருங்கள் ..ரோகிணி நட்சத்திரம் ஆண்நாகம்..மகம் ஆண் எலி...எலியும் பாம்பும் பகை...எலியும், பாம்பும் ஒரு வீட்டில் இருக்க முடியுமா..? பாம்புக்கு எலி கட்டுப்பட்டது...

பொருத்தம் பார்க்கும்போது சந்திரனுக்கு 8ஆம் அதிபதி கெடக்கூடாது லக்னத்துக்கு 7ஆம் அதிபதி கெடக்கூடாது..இதுபோல சுக்கிரனுக்கும்,குருவுக்கும் பார்க்கலாம்..இருவரது ராசியும்,லக்னமும் ஒன்றுக்கொன்று மறையக்கூடாது...மறையாமல் இருந்தால் ஒற்றுமை,அன்பு நிலைத்திருக்கும்..ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் கெடக்கூடாது..கெட்டால் குழந்தை பாக்ய பிரச்சினை உண்டாகும் பெண் ஜாதகத்தில் குரு கெடாமல் இருக்க வேண்டாம் இருவருக்கும் கெட்டிருந்தால் பிரச்சினை இல்லை..ஒருவருக்கு நன்றாக இருந்து ஒருவருக்கு கெட்டிருந்தால் அங்கு சந்தோசம் இருக்காது..

7ஆம் இடம் தாம்பத்யம்..12ஆம் இடம் இரவில் உண்டாகும் சந்தோசம்..12 கெட்டுப்போனால் இரவும் இல்லை உறவும் இல்லை...ஆணுக்கு 3ஆம் இடம் கெட்டுப்போனால் வீரியம் இல்லை..3ஆம் இடம் வலுத்த பெண்ணுக்கு 3 கெட்ட பையனை திருமணம் செய்து வைத்தால் தப்பாகிவிடும்...உறவு மாறிவிடும்..7ஆம் இடத்தில் இருக்கும் கிரகம்,7ஆம் இடத்தை பார்த்த கிரகம்,7ஆம் அதிபதியுடன் சேர்ந்த கிரகங்கள் எல்லாம் கணித்து திருமண பொருத்தம் பார்க்கும் முறை கடினமானது ஆனால் நம்பகமானது...வெறுமனே நட்சத்திர பொருத்தம் மட்டும் பார்த்து 8 பொருத்தம் இருக்கு ஆஹா...அருமை என கிணற்றில் தள்ளிவிடாதீர்கள்..

ஒரு பையனை தேர்ந்தெடுக்கும்போது அவன் ஜாதகம் கொண்டு மனைவி ஸ்தானம் எப்படி,மாமனார் ஸ்தானம் எப்படி,மாமியார் ஸ்தானம் ,நங்கை ஸ்தானம் எல்லாம் கணிக்க ஜாதகத்தில் கிரக அமைப்புகள் ,கணக்குகள் உண்டு...ஏழரை சனி நடக்கும் பெண்ணையும் அஷ்டம சனி நடக்கும் பையனையும் கட்டி வைத்தால் ,இருவரும் ஒரே வண்டியில் சென்று விபத்தை சந்திப்பர்.

ஒரே திசை நடந்தால் அது இருவருக்கும் யோகமாக இருந்தால் பரவாயில்லை...அப்படி அமைவது கடினம்..இருவருக்கும் ஒரே திசை இல்லை என்று மட்டும் பார்க்காமல் அந்ததிசை என்ன காரகத்துவம் யார் யாருக்கு பாதிப்பு உண்டாக்கும்..யாருக்கு நன்மை தரும்..மனைவிக்கு யோகம் தருமா என ஆராய்வது சிறப்பு.

சனி, 14 பிப்ரவரி, 2015

திருமணம் நடைபெற பரிகாரங்கள்,விரதம்,வழிபாடு

விரத  பலன்;
ஒரு  வீட்டில்   கணவன்  விரதமிருந்து   வழிபட்டால்  கணவனுக்கு  மட்டுமே   பலன்  கிடைக்கும்.  ஆனால்   மனைவி   விரதமிருந்து  வழிபட்டால்   மனைவிக்கு  மட்டுமல்லாமல்   கணவனுக்கும்,  குழந்தைக்கும்  கூட  நற்பலன்கள்  கிடைக்கிறது.

குடும்ப  பாதிப்பு,  கஷ்டங்கள்;  தினமும்  வீட்டில்  [அல்லது]   உள்ளூர்  பெருமாள்  கோவிலில்  உள்ள   ஸ்ரீ லட்சுமி  நரசிம்மருக்கு  சனிக்கிழமைகளில்  நெய்தீபம்  ஏற்றி  வழிபட  பாதிப்பு   நீங்கும்.

. மாணவர்களைப்  பள்ளியில்   சேர்க்க;   அஷ்டமி,  நவமி,  கரிநாள்,  ராகு  காலம்,  எமகண்டம்   தவிர்த்து,  புதன்,   வியாழக்கிழமைகளில்   அமிர்த  யோகம்,  சித்தயோகக்  காலத்தில்   மாணவர்களை  பள்ளியில்   சேர்ப்பது  எதிர்காலக்  கல்விக்கு  நல்லது.


வீட்டில்  குடும்பத்திலுள்ளவர்களில்   யாருக்காவது  அறுவை   சிகிச்சை  நடைபெற்றால்  வீட்டின்  பூஜை   அறையில்   நெய்  தீபம்  விளகேற்றி  வெள்ளை   சிகப்பு    அரளிப்பூ  போட்டு   மஞ்சள்  குங்குமம்  பொட்டு  வைத்து   தம்பதியரின்  பெயர்,  ஜெனம   நட்சத்திரத்திற்கு  அர்ச்சனை   செய்தால்   தம்பதியர்  இருவரும்  ஒற்றுமையாக  அன்னியோன்னிய    நேசத்துடன்  விளங்குவார்கள்   என்று  சொல்லப்படுகிறது.

  நிரந்தர  நல்ல   வேலை  கிடைக்க   செவ்வாய்க்கு   அதிபதி   முருகனை   நம்பிக்கையுடன்  தினமும்  வழிபட்டு   வந்தால்  3  மாதத்திற்குள்    வேலை   கிடைக்கும்.

  திருமணம்   தாமதமாகி  களத்திர தோசத்திற்குள்ளான   பெணகள்  செவ்வாய்க்கிழமை  மாலை  3.00  மணி  முதல்   4.30.  மணி  ராகு   காலத்தில்  துர்க்கை   அம்மன்  சன்னதியில்  எலுமிச்சம்  பழ  விளக்கு  ஏற்றுவதோடு   நவகிரகங்களை  ஒனபது  முறை  சுற்றினால்  திருமணம்  விரைவில்   நடைபெறும்.

     வியாபாரிகள்  தங்களது   கடைக்கு   நல்லவர்,  கெட்டவர்  வந்து  போவதால்  திருஷ்டியைப்  போக்க  இரவில்   கடையை  மூடும்   பொழுது சூடம்  ஏற்ற  வேண்டும்.  எலுமிச்சம்  பழம்   வெட்டி  குங்கும்ம்   தோய்த்து    கடையச்சுற்றி  கடையின்   நான்கு   திசைகளிலும்  போட்டால்  வியாபாரம்  நன்கு   விருத்தியாகும்.

  ஆறு   தேய்பிறை   அஷ்டமிகளில்  சிவன்  கோவிலில்  உள்ள  பைரவருக்கு   சிவப்பு  அரளி  மலர்களால்  அர்ச்சனை  செய்து    வந்தால்   குழந்தை  பாக்கியம்   கைகூடும்.

ஞாயிற்றுக்கிழமை  மாலை  ராகு  காலத்தில்   [4.30  மணி  முதல்   6 மணி வரை]  உள்ளூர்  ஆலயத்திலுள்ள   கால  பைரவருக்கு  செவ்வரளி  மாலை,  நெய் தீபம்  27   வாரம்   ஏற்றி    வர  திருமணம்   நடக்கும்.  48  வது  வாரம்  நெய் தீபம்   ஏற்ற  எதிரி  தவிடுபொடி,  பில்லி,  சூன்யம், சனி,  நாக தோசம்  மரண  பயம்  நீங்கும்.  காயத்ரி  சொல்லி  வழிபடுவது  சிறப்பு   தேய்பிறை  அஷ்டமியில்   வழிபாடு   மிகச்சிறப்பு.

   திரிசூலத்தில்  குங்குமம்  இட்டு  எலுமிச்சையை   சொருகினால்   திருஷ்டி  செய்வினை  நீங்கும்.

   விநாயகருக்கும்,  சனிபகவானுக்கும்  மிகவும்   பிரியமான  மரம்  வன்னி மரம்.  வன்னிமரத்தின்  கீழ்   உள்ள   விநாயகரை   வழிபடுவதால்  சனி,  ராகு,  கேது,  தெசாபுத்தி  பாதிப்பு,   ஆயுள்  விருத்தி,  நினைத்த  காரியம்   நிறைவேறல்,   பொன்பொருள்  சேர்க்கை  ஏற்றமான   வாழ்வு   அமையும்.

  ஸ்ரீ  மந்நாராயண்னின்   அம்சமாகப்  போற்றபடுவது   அரச  மரம்.   அரச  மரத்தின்   வேரில்   பிரம்மாவும்  மத்தியில்   விஷ்ணுவும்,   மேல்பகுதியில்  சிவனும்   குடி கொண்டிருப்பதாகச்   சொல்லப்படுகிறது.   மற்ற  அனைத்து    தெய்வங்களும்,  உப  தேவதைகளும்   அரச  மரத்தின்   பழங்களில்   வாழ்வுதாயும்   புராணங்களில்   கூறப்படுகிறது.
திங்கடகிழமையும்,  அமாவாசயும்   சேர்ந்து   வரும்   நாட்களில்  அரச  மரத்தை    108   முறை  பிரதட்சணம்  செய்வது   மகா  புண்ணியம்  தரும்.  நீண்ட   ஆயுள்,  பிள்ளைப்பேறு,   நோயிலிருந்து  நிவாரணம்,  வைகுண்ட   பிராப்தி  இவை  கண்டிப்பாகக்  கிட்டும்  என்று  சாஸ்திரங்களில்     கூறப்பட்டுள்ளது.

  புத்ர  தோசத்திற்கு   சக்தியுள்ள   பரிகாரம்;   வியாழக்கிழமைகளில்  ஒரு  வேளை  உபவாசமும்  மாலையில்   திருக்கோவிலிலுள்ள  தட்சணாமூர்த்திக்கு  நெய்   தீபமும்  தொடர்ந்து   ஏற்றிவர   விரதம்  ஏற்ற   192   நாட்களில்   கருத்தரிப்பு   ஏற்படும்.    மாதவிடாய்    சமயத்தில்  இந்த    விரதத்தை  அனுஷ்டிக்காமல்  வேறு   யார்  மூலமாவது  நெய்  தீபம்   ஏற்றி  வர  வேண்டும்,  நம்பிக்கை  அவசியம்.

   தடைப்பட்ட   திருமணம்   நடைபெற
  
ஒவ்வொரு தமிழ் மாதம் துவங்கும்போதும் உத்திரம் நட்சத்திரம் வரும் வளர்பிறை நாளில் சிவன் கோயில் சென்று சிவபெருமானுக்கு வில்வ மாலை சார்த்தி அபிசேகம் செய்து வழிபட வேண்டும்..பிரதோச நாளில் நந்திபகவானுக்கு பால்,தயிர் வாங்கி அபிசேகத்துக்கு கொடுக்க வேண்டும்.விரைவில் திருமணம் நடைபெறும்..!!