திருமணம் எப்போது நடக்கும் என ஜாதகத்தை எடுத்துக்கொண்டு ஜோசியரிடம் சென்றால், கன்னி ராசியா..? போன வருசம் எல்லாம் குரு பலம் இருந்தது இப்போ ராசிக்கு 12ல் மறைஞ்சிருச்சே ..குருபலம் இல்லியே இனி அடுத்த வருசம்தான் என சர்க்கரை இல்லை போங்கன்னு சொல்ற ரேசன் கடைக்காரர் மாதிரி சொல்லிவிடுவார்...இது பல ஜோசியர்கள் சொல்லும் குரு பலம் கணக்கு...கோட்சார குருவை மட்டும் வைத்துக்கொண்டு திருமண காலத்தை கணக்கிட முடியாது.இன்னும் சில கணக்குகள் இருக்கின்றன...
கோட்சாரத்தில் நகர்ந்து வரும் குரு,பிறந்த ஜாதகத்தில் ஏதாவது சுபகிரகங்களுடன் சேர்ந்துவிட்டாரா..கோணம்,திரிகோனம் அந்தஸ்து பெறுகிறாரா..? என பார்க்கனும்.திசை என்ன புத்தி என்ன..? புத்திநாதன் திசாநாதனுக்கு எத்தனாம் இடம்..? களத்திர காரகன் யார்..? அவருக்கும், புத்திநாதனுக்கும் உள்ள சம்பந்தம் எல்லாம் பார்க்கனும்...
சுக்கிர புத்தி,ஏழுக்குடையவன் புத்தி,பாக்யாதிபதி புத்தி நடந்தா ..அவர்கள் திசாநாதனுக்கு கெடாமல் இருந்தால், அந்த புத்தி முடிவதற்குள் திருமனம் நடந்துவிடும்..குருபலம் இல்லாவிட்டாலும் இது நடக்கும்...குருபலம் இருப்பவர்கள் மட்டும்தான் திருமணம் செய்கிறார்களா என்ன..? திருப்பதி,திருச்செந்தூர்,திருத்தணி,திருப்பரங்குன்றம் முகூர்த்த நாளில் போய் பார்த்தால் ஆயிரக்கணக்கான ஜோடிகள் திருமணம் செய்கின்றனர்...எல்லோருக்கும் குருபலம் இருக்கிறதா என்ன..?
7க்குடையவன் புத்தி நடந்தால் ,உடலுறவுக்கான காலம் காதலுக்கான காலம் என அறியலாம்...அது தற்போதைய நம் சமூக பழக்கத்துக்கு ஏற்றவாறு திருமணம் எனும் பந்தம் உண்டாக்கி ,நடத்தி வைக்கிறது.
லக்னம்,லக்னாதிபதி 7ஆம் இடம்,7ஆம் அதிபதி இவர்களுக்கு கோட்சார குருவின் பார்வை அல்லது சேர்க்கை பெறுகிற காலமும் திருமணம் நடைபெறும்..சந்திரனுக்கு 2,5,7,9,11 ல் கோட்சார குருவின் சஞ்சாரம் திருமணத்தை ஏற்படுத்திக்கொடுக்கும்..
பரணி நட்சத்திரம் வரும் நாளில் காஞ்சிக்கு சென்று காஞ்சி காமாட்சியை வழிபாடு செய்தால் திருமண தடைகள் நீங்கி திருமணம் நடைபெறும்...தொடர்ந்து 3 மாதம் பரணி நட்சத்திர நாளில் சென்று வழிபட்டு வரவும்..
பரணி நட்சத்திரம் வரும் நாளில் காஞ்சிக்கு சென்று காஞ்சி காமாட்சியை வழிபாடு செய்தால் திருமண தடைகள் நீங்கி திருமணம் நடைபெறும்...தொடர்ந்து 3 மாதம் பரணி நட்சத்திர நாளில் சென்று வழிபட்டு வரவும்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக