வட மாநிலங்களில் பூகம்பம் என்ற செய்தியை படித்தவுடன் கவலையாக இருந்தது..இத்துடன் போய்விட்டால் பிரச்சினை இல்லை..பெரிய பாதிப்பு வருமா என பார்த்தபோது,இதற்கு காரணம் கோட்சாரத்தில் உக்ரமான கிரகங்களின் இணைவுதான் என புரிந்தது..
செவ்வாய் ,சூரியன் இணைந்து கோட்சாரத்தில் கடக ராசியில் இருக்கிறது..இது
உலகிற்கு நல்லதா என கேட்டால் அவ்வளவு நல்லதில்லை..கடக ராசியில்
பிறந்தவர்களும் இந்த காலகட்டத்தில் கூடுதல் டென்சனுடன்தான்
இருப்பார்கள்.வாகனங்களில் செல்கையில் கவனமாக இருங்கள்
.
செவ்வாய் சூரியன் ஒரு ஜாதகத்தில் இணைந்து இருந்தாலே அவர்கள் வாழ்க்கையில் அடிக்கடி பூகம்பம் வந்து கொண்டே இருக்கும்..பெண்கள் ஜாதகம் என்ரால் சொல்லவே தேவையில்லை..செவ்வாய் அவர்களை பொறுத்தவரை மங்களகாரகன் அல்லவா...குடும்ப வாழ்வில் பல சோதனைகளை உண்டாக்கிவிடும்...
கடக ராசி
லக்ன தலைவர்களுக்கும் நல்லது அல்ல..இப்போது பிறக்கும் குழந்தைகள்
ஜாதகத்தில் செவ்வாய் சூரியன் இணைவு இருக்கும்..குறிப்பாக செவ்வாய் நீசம்
ஆகி இருக்கிறது..செவ்வாய் பூமிகாரகன் அவர் நீசமாகி அதனுடன் சூரியன்
சேர்ந்திருப்பது பூமியில் விபத்து ,அதாவது பூகம்பம்,பெரிய தீவிபத்து இவற்றை குறிக்கும்..
குறிப்பாக நீர் ராசியில் இவர்கள் சேர்ந்திருக்கின்றனர்..நீரால் கண்டமும்
உண்டு.பெரிய கப்பல் விபத்து,அல்லது கடலில் விழும் விமானத்தையும்,ரயில்
தீவிபத்தையும் குறிக்கும்...இன்னும் ஒரு மாதம் வரை இந்த சூழல் இருக்கலாம்
..செவ்வாய் சிம்ம ராசிக்கு போனாலும் செவ்வாய், சனி பார்வை
வந்துவிடும்...அதுவும் இதே பிரச்சினைதான்...பொதுவாக இந்த காலகட்டத்தில்
பூமி,மனை வாங்குதல், விற்றல் சிறப்பில்லை..முருகன் அருளால் பெரிய பாதிப்பு
எதுவும் இன்றி இருந்தால் போதும்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக