சூரியன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சூரியன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2015

செவ்வாய் சூரியன் இணைவு ஏற்படுத்தும் பூகம்பம்

 வட மாநிலங்களில் பூகம்பம் என்ற செய்தியை படித்தவுடன் கவலையாக இருந்தது..இத்துடன் போய்விட்டால் பிரச்சினை இல்லை..பெரிய பாதிப்பு வருமா என பார்த்தபோது,இதற்கு காரணம் கோட்சாரத்தில் உக்ரமான கிரகங்களின் இணைவுதான்  என புரிந்தது..

செவ்வாய் ,சூரியன் இணைந்து கோட்சாரத்தில் கடக ராசியில் இருக்கிறது..இது உலகிற்கு நல்லதா என கேட்டால் அவ்வளவு நல்லதில்லை..கடக ராசியில் பிறந்தவர்களும் இந்த காலகட்டத்தில் கூடுதல் டென்சனுடன்தான் இருப்பார்கள்.வாகனங்களில் செல்கையில் கவனமாக இருங்கள்
.
செவ்வாய் சூரியன் ஒரு ஜாதகத்தில் இணைந்து இருந்தாலே அவர்கள் வாழ்க்கையில் அடிக்கடி பூகம்பம் வந்து கொண்டே இருக்கும்..பெண்கள் ஜாதகம் என்ரால் சொல்லவே தேவையில்லை..செவ்வாய் அவர்களை பொறுத்தவரை மங்களகாரகன் அல்லவா...குடும்ப வாழ்வில் பல சோதனைகளை உண்டாக்கிவிடும்...

கடக ராசி லக்ன தலைவர்களுக்கும் நல்லது அல்ல..இப்போது பிறக்கும் குழந்தைகள் ஜாதகத்தில் செவ்வாய் சூரியன் இணைவு இருக்கும்..குறிப்பாக செவ்வாய் நீசம் ஆகி இருக்கிறது..செவ்வாய் பூமிகாரகன் அவர் நீசமாகி அதனுடன் சூரியன் சேர்ந்திருப்பது பூமியில் விபத்து ,அதாவது பூகம்பம்,பெரிய தீவிபத்து இவற்றை குறிக்கும்..
 
குறிப்பாக நீர் ராசியில் இவர்கள் சேர்ந்திருக்கின்றனர்..நீரால் கண்டமும் உண்டு.பெரிய கப்பல் விபத்து,அல்லது கடலில் விழும் விமானத்தையும்,ரயில் தீவிபத்தையும் குறிக்கும்...இன்னும் ஒரு மாதம் வரை இந்த சூழல் இருக்கலாம் ..செவ்வாய் சிம்ம ராசிக்கு போனாலும் செவ்வாய், சனி பார்வை வந்துவிடும்...அதுவும் இதே பிரச்சினைதான்...பொதுவாக இந்த காலகட்டத்தில் பூமி,மனை வாங்குதல், விற்றல் சிறப்பில்லை..முருகன் அருளால் பெரிய பாதிப்பு எதுவும் இன்றி இருந்தால் போதும்..

வியாழன், 9 ஏப்ரல், 2015

ஜாதகத்தில் சூரியனின் காரகத்துவங்கள்

  சூரியனின்   காரகத்துவங்கள்; 
        
சூரியன்   ;  ஆண் கிரகம்  - ஜாதகரின்   தந்தை   - மாமனார் -  ஜாதகரின்  மகன்  - சிவன்  - அரசு -  அரசு  பணி  -  அரசியல்  -   அமைச்சர்   -  அரசியல்   தலைவர்   - அரசியல்வாதி-  நிர்வாகம்   -  நிர்வாக   திறமை   - அஞ்சா   நெஞ்சம்    -  மதிப்பு   -  மரியாதை -  தியாக   மனப்பான்மை   - அந்தஸ்து   - சமுதாய   உயர்நிலை  - இரக்கம்   -கருணை  பேரும்  புகழும்  -  தாராள    தன்மை   -  மனித  நேயம்     தன்னம்பிக்கை   -  வெளிச்சம்   -  ஆத்மா    -  [ஆன்மா]    - கடவுள்  - சிவன்   -  

பித்ரு  -  பிரதமர்   ஜனாதிபதி   -   அமைச்சர்    நிர்வாகி  -  ஒரு     துறையின்   தலைவர்    தலைமை    பொறுப்பு  -  உயர்ந்த    மனிதர்   - அரசுக்   காரியங்கள்   - அரசு  மரியாதை    சக்தி    - வெற்றி   - கீர்த்தி   -சம்பத்து   - தைரியம்   செளரியம்   -எளிமை   -பருத்த    சிரசு   -  புலி   நகம்   -  குட்டை    முடி  உற்சாகம் -  இராஜ   சேவை    இராஜ    சேவையில்    பிரஸித்தி   -  சைவம்     சூரிய    நமஸ்காரம்  -    

கடவுள்   நம்பிக்கை   -  வேதாந்தம்   பூஜை   செய்தல்   -   ஞானோதயம்   -   தபசு    - ஜீவ   விசாரணை   -  சக்தி  -  ஆத்மலயம்   -   வைசானுஷ்டானம்   காரியம்    -  வனம்   -  வன   துர்க்கைகளில்   சஞ்சாரம்   -  பஞ்சலோகம்-  ஹோம    காரியப் பிரவர்த்தி     தேவஸ்தானம்   -  கட்டை    -   தரகு   -  மரம் -   சரமரம்   - மரப்பட்டைகள்  -  மரத்தோல்கள்  -       வைக்கோல்  -   உலர்ந்த    புல்    -  கொம்பு    -  கோயில்   -  அரண்மனை    -  தலை    நகரம்   


 -மலை   மலைகுகை    வயல்   படையராண்   -    மதம்   -  வேதம்   -  மருந்து   -   க்ற்பித்தல்   -   கடினம்  -   கனல்  -   இரக்கம்   -ஈகை    தீஷண்ணியம்   - உஷ்ணம்   அஜீர்ணம்   -   வைத்தியஞ்செய்தல்  -    தாமரை   மணி   -  வஞ்சனை    சித்தபலம்   - பூமி    இழக்கப்படல்   -   இதிகாஸ     புராணம்   -கிருஷ்ணா    ஜீவம்   -  சத்திரிய       ஜாதி    தன்னலம்   கருதாமை   -  உறுதியான    நிலைப்பாடு     -  நம்பிக்கை     துரோகம்   செய்யாமை   -  உயர்வு    அபிவிருத்தி    -  பாகுபாடு   இல்லாமை    -  தியாக   மனப்பான்மை -  

செல்வாக்கு    வளர்ச்சி   அடைதல்    செம்பு   தாமிரம்   தங்கம்   மாணிக்கம்  -  பவழம்   -தந்தம்   -  புலித்தோல்   -  யானைத்தந்தம்      சிவப்பு  வஸ்திரம்    -  வர்ண    ஆடை  -  கண்ணாடி   -மருந்து    பிராயணத்தில்   விருப்பம்    -   தகப்பனது    சுக   துக்கம்   -  சுவை  -   விவாசயப்  பொருட்கள்      -  சில    மூலிகைகள்     -  சித்த   சுவாதிமில்லாத   ஸ்தீரி    போகம்     பிரதாபம்   -   தானியம்   கோதுமை    -   புஷ்பம்   செந்தாமரை  -  சந்தனம்   வாகனம்   -  மயில்   -  தேர்   பஞ்ச     பூத     அமைப்பில்   நெருப்பு   -  சமித்து   எருக்கன் -  

ஸ்திர   இராசி   -  விபூதி   -  குங்குமம்பூ   -  கற்பூரம்    கப்பல்   -கன்னடிய   ஜாதி    -வீரசைவர் வெள்ளைக்காரன்  -   வியாதி   நிவர்த்தி    -  யானைப்பாகன்    ரசவாதம்   -சுமையெடுத்தல்   - மாந்திரீகம்  -வெளுத்துப்பழுத்த  சரீரம்  -ருத்திராஷம்   -  இலக்கன்   வித்தை   -  தர்க்க    சாஸ்திரம்  - நூல்  நெசவு  -  கோமேதகம்   -  பாஷாண   வர்க்ககல்   -  பாஷாண    உயர்   மணியில்    சூரிய    காந்தம்.
 
நிறம்  ;  சிவப்பு   -  தாமிரம்  - பாடலிபுஷ்பவர்ணம்
மொழி  ;   சமஸ்கிருதம்   -  தெலுங்கு   ராஜ   பாஷை   -  ஐரோப்பிய    பாஷை
திசை   ;   கிழக்கு   -  நடு
பருவ  காலம்   ;   கோடை   காலம்
வடிவம்  ;  வட்டம்
சுவை   ;    காரம்  -  சூடான    பானம்.
குணம்  ;    சத்வ   குணம்.   சுடசுடபுசிப்பார்.
உறவு   முறை ;   தந்தை     -  மூத்த    மகன்   -  பேரன்   -பெண்களுக்கு   மாமானார்.
 

சொரூபம்  ;   சிறிய   மஞ்சள்   நிறமுள்ள       கண்   -  சிவப்பு   நிறம்    வாய்ந்த    மேனி   -  பித்தக்   கூறுள்ள   தேகம்   அதி   உயரம்   குட்டையுமில்லாத    சம    சரீரத்   தோற்றம்   -  சிரசில்    சொற்ப     ரோமம்   - நல்ல    பராக்கிரமசாலி   -  கணக்கான   பேச்சு.
இடங்கள் ; சிவன்  கோயில்   காடுகள்   மலைகள்   திறந்த  வெளி   அதிக   வெளிச்சம்   உள்ள இடம்  ;  விளையாடும்   இடம்;  அரண்மனை  தலை    நகரம் – புனிதமான   இடங்கள்  -  அரசு  அலுவகம்  -  தட்டார்   தெரு.
கல்வி ; பொலிடிக்கல்   சயின்ஸ்  -  சோசியல்   சயின்ஸ்     - மெடிக்கல்   சயின்ஸ்   -ஐ .ஏ.   எஸ்.   அதிகாரி    அரசியல்   -   எலட்ரானிக்கல்  துறை  -    டாக்டர்     -  மருத்துவம்.
 
தொழில் ; அரசு   பணி   -  அரசியல்வாதி    - நகை    வைர    வியாபாரம்   -எலெட்ரானிக்    துறை    -  சமூக    சேவை     - அறுவை   சிகிச்சை     நிபுணர்    -  ஐ.ஏ.எஸ்   அதிகாரி    -ரூபி   ஸ்டோன்   விற்பனையாளர்     நகை     தொழிலாளி    -  முதல்   அமைச்சர்    பதவி      -தந்தை   செய்யும்   தொழில்   -அரசு    சம்பந்தப்பட்ட    நிறுவன  மூலம்   தொழில்    -  கெளரவ    பதவி    பொது  சேவை   செய்தல்   -  மருந்து   தயாரிப்பாலர்     - மருந்து     கடைக்காரர்   முன்னோர்கள்    தொழில்    -ஸி.  ஐ. டி.
 
உடல்   பாகங்கள்  ;    வலது   கன்   -   மோதிர   விரல்  - எலும்பு   -தலை   சிரசு   -  ஹிருதயம்     முதுகெலும்பில்    ஊடுருவிச்   செல்லும்    நரம்புகள்     -  தலையில்   உள்ள   ரோமம்   -  பல்.
வியாதி  ;   மூல    நோய்   -   வயிற்றுப்   போக்கு    -  காய்ச்சல்   -  ஒரு   தலை  வலி   -  இருதய    நோய்   பக்க   வாதம்    கண்   நோய்    -பசி   மயக்கம்   -  சோகை      -அடிக்கடி    தாகம்  ஏற்படுதல்  -எலும்பு  -  வெட்டை  சூடு   -  பித்தம்    மயக்கம்   -  இரத்தக்  கொதிப்பு   -    பெளத்திர   நோய்  -  இருமல்    நோய்     -  மாரக   நோய்   ;    அதிக   காய்ச்சல்    -  மூலம்    -  ஆயுதம்.
விலங்கு   மற்றும்    பறவைகள்   ;    காளை  மாடு    -  மான்   -யானை   -   சிங்கம்   -  புலி  -  குதிரை   வெள்ளாடு   பெண்  மயில்    -  வாத்து     -  தீக்கோழி.
 

தாவரங்கள்   ;    மலை   மரங்கள்   -ஓக்    மரம்   -  வில்வா   மரம்   ருத்திராட்சை  மரம்  - சந்தன   மரம்     கோதுமை    பயிர்   -மூங்கில்   -  மிளகு   -  எருக்கு  -  ஆரஞ்சு    மரம்      சூரியகாந்தி     -   மருத்துவச்   செடிகள்     கிழங்கு    வகைகள்  -   வெங்காயம்     -  பச்சை    மிளகாய்  கத்திரிக்காய்   -  புகையிலை   -  தனியா   -சுக்கு   பூண்டு  -   கேரட்    -   வேர்க்கடலை   -   ஏலம்   பெருங்காயம்   -   பாதாம்   பருப்பு   -   ஜாதிக்காய்    மசாலாப்   பட்டை    
வீட்டு   உபயோகப்   பொருட்கள் ;   விளக்கு    -  ஜன்னல்கள்    -  முகம்   பார்க்கும்     கண்ணாடி.
 

தெய்வம்  ;   சிவன்    -  பிரம்மா  -  ருத்திரன்   -  விஷ்ணு   -காயத்ரி    -   தியானம்   -  ஜெபம்     அதிதேவதை   அக்கினி.
வாஸ்து  ;    கிழக்கு  -   வலது   பக்க  ஜன்னல்  -   வீட்டின்   முன்  வலது  புற    அறை    -  குடும்பத்தில்     உள்ள   ஆண்   உறுப்பினர்கள்   -  பல்பு     -  லைட்     -  விளக்கு   -  சிவப்பு    ரோஜா   -  பூஜை    அரை    சந்தனம்   -  ருத்திராட்சை   -  வில்வ   மரம்   -  கோதுமை  பயிர்   -   சிவ பெருமான்.
சாந்தி ;   கஜமதம்   -  குங்குமம்,   சிவப்பு    சந்தனம்,   ஜல      பூர்ணமான     தாம்பர      பாத்திரத்தில்    கலந்து   ஸ்நானம்    செய்ய    வேண்டும்.   கோதுமை,   சிவப்பு    வஸ்திரம்,    வெல்லம்,    வெங்காயம்,    தாமிரை,    சந்தனம்    இவைகளை   ஞாயிற்றுக்கிழமைகளில்     தானம்    செய்தால்    சூரியனால்   ஏற்பட்ட   தோஷம்    போகும்.    சிவந்த    புஷ்பங்கள் ,   சந்தனங்கள்,    சுவர்ணம் ,  காளை,   மொகிழம்பூ    இவைகளால்   பக்தியுடன்   பூஜிக்கதக்கது

வியாழன், 19 மார்ச், 2015

ஜாதகத்தில் சூரியன் தரும் பலன்கள்

சூரியன்

கிரகங்களில்   முதன்மையானவர்   சூரியன்.   சூரியனை  மையமாக   வைத்துக்  கொண்டு              அனைத்துக்   கிரங்களும்   சுற்றுகிறது.   சூரியன்   தலைமை    தாங்கும்          தகுதியைத்   தருகிறார்.  ஆண்மையைத்     தருகிறார்.  நிர்வாகத்    திறமை   அளிக்கிறார்.   சூரிய  ஒளி  அனைவருக்கும்   பாகுபாடு    இன்றி   அளிப்பது   போல்   எல்லோரையும்   சமமாக   நினைப்பவர்,    தயாள   தன்மை   உடையவர்.      பேதம்   கிடையாது,   சாதி  பாகுபாடு   கிடையாது.   எல்லோரையும்   சரி சமமாக     நடத்துவர்.     இரகசியம்   கிடையாது.   வெளிப்படையாக   பேசுவர்.   வள்ளல்  தன்மை  உடையவர்.   இல்லை  என்று   சொல்லாத   தன்மை   பேரும்  புகழும்  உடையவர்.

சூரியனின்    கதிர்களால்   தழுவாத   உயிர்   இனங்கள்    இல்லை.   சூரியன்   ஒளிக்கு   அதிபதி,    சூரியனிடமிருந்து   வெளிப்படும்  கிரணங்களும்,  குருவிடமிருந்து   வெளிப்படும்  மீத்தேன் என்ற   ஒளியும்  கலந்து   உலகில்   ஜீவ   ராசிகளின்   உற்பத்திக்குக்    காரணமாகின்றன.
சூரிய  ஒளியின்றி  எந்த  கரு [ உயிர்] தோன்ற   முடியாது,    உயிர்   வாழ   முடியாது.   அதனால்  சூரியனை  பித்ரு காரகன் என்று   பெயர் பெறுகிறார்.

சூரியன்   தனது   ஈர்ப்பு   சக்தியால்  மற்ற  கிரகங்கள்  ஒன்றோடு  ஒன்று  மோதிக்  கொள்ளாமல்   காப்பாற்றுகிறது.   சூரியன்   உஷ்ணத்திற்கு   அதிபதி,   உஷ்ணம்   இல்லையேல்   உயிர்   தத்துவம்  இல்லை.   சூரியன்   பிராணனைக்   கொடுக்கக்    கூடியவன்.     அதனால் தான்  சூரியன்  ஆத்மாகரகன்  என்று  அழைக்கப்படுகிறார்.

சூரியனின்   உஷ்ண    கதிர்களால்   தழுவாத    எந்த   உயிர்  இனங்களும் இல்லை.    வெளிச்சம்   [சூரியன்]   இருந்தால்தான்   கண்களால்   பார்க்க   முடியும் . ஆகவே   சூரியன்   வலது  கண்.    மனித  உடலை    தாங்கி    பிடிப்பது  எலும்பு,   சூரியன்   எலும்புக்கு  அதிபதி   சூரியனின்  ஆதிக்கம்  உடையவருக்கு    முகஸ்துதி   பிடிக்காது.  எளிமையான    தோற்றம்  உடையவ்ர்.   நம்பிக்கைக்குரியவர்.    வாக்கு   தவறாதவர்.     தந்தை    மகனுக்கு   உதவி   செய்வது   போல்   வாக்கு   கொடுத்தவருக்கு   உதவி   செய்பவர்.

அரசன்   [சூரியன்]    தன்  தளபதியான    செவ்வாயின்   வீட்டில்   உச்சம்   பெறுகிறார்.   சூரியன்   ஒருவர்     ஜெனன   ஜாதகத்தில்     நீசம்  பெற்றிருந்தால்,     அந்த    ஜாதகர்  எவ்வளவு      பாரம்பரிய   செல்வம்,   செல்வாக்கு,  அதிகார   பலம்   பெற்று    இருந்தாலும்   கால போக்கில்   குறைந்து   விடும்.

ஒருவரின்   ஜெனன  ஜாதகத்தில்   மேசத்தில்   முதல்  10   பாகைக்குள் சூரியன்  உச்சம்   பெற்று   இருந்து       ,குரு ,செவ்வாய் பார்வை பெற்றிருந்தால் அந்த  ஜாதகர்  ஒரு  நிறுவனத்தில்   அல்லது  ஒரு  இயக்கத்தில்   தலைவராக இருப்பார்.  மேலும்  அவருக்கு  பேரும்  புகழும்  கிட்டும்.  ஜாதகருக்கு  ஆன்மீக   ஞானம்   உண்டாகும்.  
ஜாதகர்   தனி   சிறப்புடையவராக   திகழ்வார்.   ஜாதகரிடம்   துணிச்சல்  அதிகமாக  இருக்கும்   கண்டிப்புடன்    நடந்துக்  கொள்வார்.   அடித்துப்   பேசுவார்.   ஏராளமான   செல்வம்   இருக்கும்.   சுகமான   பிராயணம்,   இராஜ  வாழ்வு  அமையும்.  வியாபார    வெற்றி,  வேலையில்   அதிக   ஈடுபாடு,   மலைப்பகுதி   மற்றும்   காட்டுப்பகுதியில்    சுற்ற   நேரிடும்.   
சூரியன்   உஷ்ணமயமானவர்.   ஆகவே       ஜாதகருக்கு     உஷ்ணாதிக்கத்தால்   பல  உபாதைகள்   வரும்.   ஆகவே   இதில்   எச்சரிக்கையாக   இருப்பது   நல்லது.   ஒருவருக்கு  ஆன்ம   பலம்  அளிப்பவர்   இவர்.      ஒரு  ஆணின்    ஜெனன   ஜாதகத்தில்    சூரியன்   பலம்    பெற்று   இருந்தால்  அந்த   ஜாதருக்கு        ஆண்மை   ஆற்றலில்    அவர்  சிறந்து   விளங்குவார். ஒரு  பெண்   ஜாதகத்தில்   சூரியன்   பலம்  பெற்றிருந்தால்      அந்த   ஜாதகியிடம்   ஆகர்ஷன   சக்தி    ஓங்கி  இருக்கும்.   அவள்   சிறந்த   கற்பு டையவளாகத்   திகழ்வாள்.

மேசத்தில்   10  பாகை   முதல் 30   பாகைக்குள்  சூரியன்  இருந்தால்  முதல்   10  பாகைக்குள்    அளிக்கக்   கூடிய    அளவுக்கு    நற்பலன்கள்    அளிக்கமாட்டார்.

சூரியன்   முக்குணம்  உடையவர்.  அதாவது  பிரம்மா,  விஷ்ணு,  மகேஸ்வரன்  ஆவார்.   சூரியனின்    ஆட்சி  வீடான   சிம்மத்திற்கு   7வது  ராசியான     கும்பம்.  இந்த   ராசி   சூரியனின்    மனைவியான  சாயா  தேவி  வீடு.  இந்த  ராசியில்   தான்    சூரியனின்   மகன்  சனி  பிறந்தார்.    [இந்த   ராசியின்  சின்னம்  குடமாகும்.  குட்த்தின்   உள்ளே    நிழல்  [சாயா தேவி]   உள்ளது.  பகல்  பொழுது   சூரிய  ஓளி   குடத்தில் விழுவதால்     சாயா  தேவி   வலு  பெற்றதால்   சனி  பிறந்தார்.   சனிக்கு   இந்த   ராசியில்   பலம்  அதிகம்   சனிக்கு   மூலதிரிகோன   ராசியாகும்]

அரசுக்குரிய    கிரகமான   சூரியன்   எப்போதும்   தன்னுடன்   அறிவுக்காரன்   புதனையும்,   செல்வத்திற்கு   காரகனான  சுக்ரனை  அருகில்  வைத்திருக்கிறார்.   மாசி,  பங்குனி,   சித்திரை,  வைகாசி,   ஆகிய  மாதங்களில்    சூரியனுடன்   புதன்  கூடி  இருப்பார். ஆனி,  ஆடி,  ஆவணி,  பூராட்டாசி  ஆகிய    நான்கு   மாதங்களில்    சூரியனுக்கு    முன்  ராசியில்    புதன்   செல்வார்.  ஐப்பசி,  மார்கழி,  கார்த்திகை,  தை  ஆகிய   நான்கு   மாதங்களில் சூரியனுக்கு பின்   செல்வார்.

சூரியன்   ஒரு  நாளில்  செல்லும்   தூரம்  58  கலை, 8 விகலை  ஆகும்.  சூரியன்  ஒரு  நட்சதிர  பாகத்தைக்   கடக்கும்   காலம்  3  நாள்   22  நாளிகை   55  விநாடி   ஆகும்.  புதிதாக    பிரவேசித்த   ராசியில்   சூரியன்  பூரண   பலன்  தர  எடுத்துக்  கொள்ளும்    கால  அளவு     5  நாட்கள்.

சூரியனைக்  கொண்டு  ஒருவரின்   தந்தையைப்  பற்றியும்,   ஜாதருடைய     செயல்   திறன்   தொழில்  அல்லது   வியாபாரம்   அல்லது   உத்தியோகம்   இவைகளை  அறிய  முடிகிறது.  அரசு   வழியில் நல்ல  பொருளீட்டும்  யோகமும்.  தலைமை   பதவி   வகிக்கும்   தகுதி   அமையும்.   நல்ல  நோக்கு  உடையவர்.   ஆழந்த   கருத்துடையவராகவும்,  எவருக்கும்  அடங்கிப்  போகும்   இயல்பு இல்லாதவராகவும்   இருப்பார்கள். 

சூரியன்  அக்கினிக்குரியவர்,   சூரியனின்   நிறம்  இளம்     சிவப்பு  அதாவது    ஆரஞ்சு    நிறம்,  கிழக்கு   திசைக்குரியவர்.  பகல்   நேரத்தை  ஆள்பவர்,  கோதுமைப்  பிரியர்.  எருக்கு   சமித்து  மூலம்   திருப்பதிப்படுபவர்,   செந்தாமரையை  மலர  வைப்பவர்,     மாணிக்க    கல்லுக்குரியவர்,  செம்பு   உலோகத்தைப்  பிரதிப்பலிப்பவர்.   செம்பட்டு  உடையால்  அலங்கரிக்  கப்படுகிறார்.  சிவப்பு   நீலப்  பொருட்களால்  நலம்   அளிப்பவர்.  சத்தியர்,  வீர   புருஷர்,   ஞாயிற்றுக்  கிழமைக்குரியவர்.    
இத்தனைக்கும்   சிறப்பு      முத்திரையாக  ருத்ரனை  அதிதேவதையாக்  கொண்டவர்.   சூரியனின்  அனுகிரகத்தைப்  பெற   வேண்டுமானால்   அவருக்குரிய    மேலே   குறிப்பிட்ட   பொருட்களைக்   கொண்டு     சிரத்தையுடனும்,  முழு   ஈடுபாடும்,   நம்பிக்கையும்     கொண்டு  ஆராதிக்க  வேண்டும்.   மேலும்   அதிதேவதையான   ருத்ரனையும்    வழிபட   வேண்டும்.  இவ்வாறு    செய்தால்   சூரிய  பலனை  பெறலாம்.  சூரியனுடைய    அதிகாரத்துக்குட்பட்டவை  அனைத்திலும்  அனுகூலம்  கிடைக்கும்.

வியாழன், 4 செப்டம்பர், 2014

வேண்டியது வேண்டியபடி கிடைக்கச்செய்யும் கோயில்கள்

சூரிய ஒளி சுவாமி சிலை மீது வருடத்தின் குறிப்பிட்ட நாளில் நேரத்தில் விழுவது போன்ற நுணுக்கமான கட்டிடக்கலை அமைப்பு உலகில் வேறு எங்கும் இல்லை..நம் தமிழகத்தில் முன்னோர்கள் அப்படி பல கோவில்களில் வடிவமைத்துள்ளனர்..அப்படிப்பட்ட கோயில்களில் சூரியன் கர்ப்பகிரகத்தில் ஒளிப்பாய்ச்சும் மாதத்தில் அந்த ஆலயம் சென்று வழிபட்டால் வேண்டியது வேண்டியபடி நடக்கும்....கிருஷ்ணகிரி புதுப் பேட்டை வடக்கு மாடவீதியில் ஸ்ரீ ஞானராஜராஜேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது.
இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் 1ம் தேதி முதல் ஒரு வார காலத்துக்கு அம்மன் மீது சூரிய ஒளி படும் அதிசயம் நடந்து வருகிறது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த பின்னத்தூர் கிராமத்தில் ராமநாத ஈஸ்வரன் கோவில் உள்ளது. மிக பழமையான இக்கோவிலில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் மூலவர் மீது சூரிய ஒளி நேரடியாக படும் நிகழ்வு நடைபெறும்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த செல்லபிராட்டியில் பார்வதி, லட்சுமி, சரஸ்வதி தேவியர் ஒரே உருவமாய், லலிதா செல்வாம்பிகையாக அருள்பாலிக்கின்றனர். கருவறையில் உள்ள அம்மன் சிலை மீது, ஒவ்வொரு ஆண்டும், தட்சணாயண காலத்தில், மூன்று நாட்களும், உத்ராயண நாட்களில் மூன்று நாட்களும், சூரியஒளி நேரடியாக பாயும்.உத்ராயண காலத்தில் சூரியஒளி, காலை, 6:35 மணி முதல், 6:39 மணி வரை, ராஜகோபுர வாசல் வழியாக, சூரியஒளி அம்மன் மீது விழுகிறது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் மீதும் வருடத்தில் குறிப்பிட்ட நாளில் மூலவர் மீது சூரிய ஒளி படுகிறது...

விழுப்புரம் மாவட்டம் திருநாவலூரில் வரலாற்று சிறப்புமிக்க பக்த ஜனேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. சுந்தரர் கயிலையில் பெற்ற சாபம் நீங்க அரூரராக அவதரித்த இத்தலத்தில் சிவன் சுயம்புவாக காட்சியளிக்கிறார். நவக் கிரகங்களில் ஒன்றான சூரியன் இத்தலத்தில் ஈசனை நோக்கி (மேற்கு திசை நோக்கி) பங்குனி மாதம் 23 முதல் 27-ம் தேதி வரை வழிபட்டுள்ளார். அதனால் இந்த தேதிகளில் பக்த ஜனேஸ்வரர் (சிவன்), மனோன்மணி அம்பாள் (பார்வதி) ஆகியோர் மீது காலை சூரிய உதயம் படுவது ஒர் அற்புதமான நிகழ்வாகும்.

திருக்கண்டியூர் பிரமசிரக்கண்டீசுவரர் கோயில் சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றான இது தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு வட்டத்தில் அமைந்துள்ளது. சூரியன் வழிபட்டதலமாதலின், மாசிமாதம் 13, 14, 15-ஆம் நாள்களில் மாலையில் 5 . 45 மணிமுதல் 6 . 10 மணிவரை சூரிய ஒளி சுவாமிமீது படுகிறது..

கொடுமுடி மகுடேஸ்வரர் சன்னதியில் ஆவணி மாத கடைசியிலும்,பங்குனி மாத கடைசியிலும் சூரிய ஒளி மூலவரை தரிசனம் செய்யும்...

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த பின்னத்தூர் கிராமத்தில் ராமநாத ஈஸ்வரன் கோவில் உள்ளது. மிக பழமையான இக்கோவிலில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் மூலவர் மீது சூரிய ஒளி நேரடியாக படும் நிகழ்வு நடைபெறும்.

அருள்மிகு பாலசுப்ரமணியர் திருக்கோவில், ஆயக்குடி ,திருநெல்வேலி மாவட்டம்.
இது மிகவும் பழமையானதும் சக்தி வாய்ந்ததும் ஆன கோவில் ஆகும். இது 1900 வருடம் பழமை வாய்ந்தது. இந்த கோவிலின் சிறப்பு அம்சம் என்னவென்றால், சித்திரை மாதம் பிறந்தவுடன் ஒரு வாரத்திற்கு மூலவரின் மீது சூரியனின் ஒளி பாய்ந்து வெளிச்சம் தருவது அதிசயமாக கருதப்படுகிறது. மற்ற நாட்களில் இங்கு சூரிய ஒளி வருவதில்லை.

 தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி பிப்ரவரி 21, 22, 23 ஆகிய மூன்று நாட்களில் சூரியன் மறைவதற்கு முன் 5..45 முதல் 6.10 வரை விழும்

 மலையப்பாளையம் உதயகிரி முத்துவேலாயுதசுவாமி சித்திரை 15,16,17 தேதிகளில் விழும் அதனாலேயே அவருக்கு உதயகிரி என பெயர் வந்ததாக திருக்கோவில் வரலாறு

 கடத்தூர் அர்ச்சுனேஸ்வரர் கோவிலில் சூரியனின் ஒளிக்கதிர்கள் மகாமண்டபம், அர்த்த மண்டபத்தை கடந்து கருவறையில் இருக்கும் சிவலிங்கத்தின் மீது படுவதையும், விளக்குகள் ஏதுமில்லாத நிலையில் சூரிய ஒளியில் ஒளிரும் சிவலிங்கத்தையும் படத்தில் காணலாம்.

 விழுப்புரம் மாவட்டம்,பனையபுரம் சத்யாம்பிகை(புறவாம்பிகை,மெய்யாம்பிகை)உடனுறை பனங்காட்டீஸ்வரர் ஆலயம். சித்திரை மாதம் முதல் தேதி-யில் இருந்து ஒரு வாரம் காலை வேளையில் சூரியனின் ஒளிக்கதிர்கள் மகாமண்டபம், அர்த்த மண்டபத்தை கடந்து கருவறையில் இருக்கும் சிவலிங்கத்தின் மீது படுவதும், இங்குள்ள சிவசூரியனாரை வழிபட்டால் கண் சம்பந்தமானா பிரச்சனைகள் தீருவது திண்ணம். இவ்விரண்டும் இக்கோவிலின் சிறப்பு விழுப்புரம் to திருக்கனுர்-புதுச்சேரி-------விக்கரவாண்டி to பண்ருட்டி ----- இந்த இரண்டு சாலைகள் சந்திக்கும் கூட்டுரோடுதான் இந்த பனையபுரம் இக்கோவிலை அனைவரும் தரிசனம் செய்யுங்கள்