நாளை ஆடி அமாவாசை..நாளை மறுதினம் 15.8.2015 ஞாயிறு ஆடிப்பூரம்...அம்மன் தோன்றியது ஆடிப்பூரம் அன்றுதான் என்பார்கள்...பார்வதி தேவி கருவுற்றிருந்தபோது ஆடிப்பூரம் அன்று தேவர்கள் வளைகாப்பு அம்பாளுக்கு செய்வித்ததும் ஆடிப்பூரம் தினத்தில்தான் என சொல்வர்...அதனால் ஆடிப்பூரம் அன்று அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்து வழிபட்டால் மங்களம் பெருகும்..நினைத்தது நடக்கும்..ஆடிப்பூரம் அன்று ஆண்டாள் பிறந்ததால் ஸ்ரீவில்லிப்புத்தூர் சென்று ஆண்டாளை தரிசனம் செய்தால் அவ்வருடம் முழுக்க,சிறப்பாக இருக்கும்...
அம்மன் கோயில் செல்ல முடியாதவர்கள், வேப்பிலையை அம்மனாக பாவித்து ,செம்பு குடத்தில் நீர் நிரப்பி வேப்பிலையை கொத்தாக சொருகி ,குடத்தை சுற்றி மஞ்சள் துணியை சுற்றி,(வெள்ளைக்காடா துணியை மஞ்சளில் முக்கி எடுத்தது)வாழை இலை விரித்து பச்சரிசி பரப்பி,அதன் மேல் இக்குடத்தை வைத்து ,பூ மாலைகள் சூடி,வண்ண வளையல்கள் கோர்த்து மாலையாக சூடலாம்...அம்மன் படம் வைத்து,நெய் தீபம் அருகில் இருபக்கமும் ஏற்றவும்..108 அம்மன் போற்றிகளை படித்து ,நைவேத்தியம் ஒன்று தேங்காய்,பழம் வைத்து கற்பூர தீபம் காட்டி ,12 வயதுகுட்பட்ட குழந்தைகள், பெண்களை வைத்து வழிபட்டு ,பால் பாயசம் போன்ற நிவேதனத்தை வந்தவர்களுக்கு கொடுக்கலாம் ..பூஜித்த வளையல்கள் இரண்டை எடுத்து அணிந்துகொண்டால் ,கஷ்டங்கள் தீர்ந்து மங்களம் பெருகும்...
1 கருத்து:
Bro u mentioned tomorrow (Friday) as aadi ammavasai..then day after tomorrow aadipuram ..that means Saturday..u sad 15.8.15( Sunday ) as aadi puram...? When is aadi puram?? Saturday or Sunday ??
கருத்துரையிடுக