சனி, 1 ஆகஸ்ட், 2015

மனிதரில் புனிதர் அப்துல்கலாம்

கலாம் இந்தியாவின் அடையாளம்...சுயநலமில்லாத ஒரு தலைவருக்கான முகவரி..இளைய தலைமுறைக்கு அக்னி சிறகுகள் மூலம் பறக்க கற்று தந்தவர்..அவர் ஆத்மா இந்தியா வல்லரசானால் சாந்தி அடையும்... அவர் ஆத்மா சாந்தியடையட்டும்!!!!


தமிழகத்தில் சின்ன சின்ன ஊர்களில் கூட அப்துல்கலாம் போஸ்டர்களில் சிரிக்கிறார்..அதை ஒட்டியவர்கள் கண்னீர் அஞ்சலி செலுத்தியிருக்கின்றனர்....இவர் சினிமா நடிகரும் அல்ல..மக்களுக்கு பணத்தை அள்ளிக்கொடுத்த வள்ளலும் அல்ல...அப்புறம் ஏன் மக்களுக்கு இவர் மீது இவ்வளவு பாசம்..? அவர் மீன் பிடித்து தானம் செய்யவில்லை..மீன் பிடிக்க கற்று தந்திருக்கிறார்...

தன்னம்பிக்கை விதைத்திருக்கிறார்..
உறவையும்,பணத்தையும்,சுகத்தையும் துச்சமாக தூக்கி எறிந்து ,நாட்டுக்காக உழைத்த நமக்கு தன்னம்பிக்கை ஊட்டுவதற்காகவே வாழ்ந்த மாபெரும் மகான்...

ஆசைகளை வெறுத்து,தனக்கு என்று உறவுகள் இல்லாமல் நாட்டுக்காக ஒரு மனிதன் சுய்நலமில்லாமல் இக்காலத்தில் வாழ முடியாது ...போராட முடியாது என்ற பொய்யை உடைத்த உண்மை அப்துல்கலாம்..!! என்றும் வாழ்க உங்கள் புகழ்..!

 விஷ்ணுவின் அடுத்த கல்கி அவதாரமே அறிவின் அவதாரம்தான் என சொல்வார்கள்....அவர் வாழ்ந்த எளிமை வாழ்க்கையும்,நாட்டின் மீதான பற்றும்,ஆசைகளை துறந்த வாழ்க்கை முறையும்,அவரது அறிவியல் சாதனைகளையும்,மாணவர்கள் மனதில் அவர் விதைத்த தன்னம்பிக்கைகளையும் பார்க்கும்போது அப்துல்கலாம் என்பவர்தான் விஷ்ணுவின் கல்கி அவதாரமோ என யோசிக்கிறேன்!! ‪#‎APJAbdulKalam‬

 இந்திய மக்களில் சிலர் மட்டுமே செழிப்பாக இருக்கின்றனர்..மீதி மக்கள் பெரும்பாலும் மன உளைச்சலில்தான் சிக்கி தவிக்கின்றனர்...அவர்களுக்கு தேவை பணமல்ல..தன்னம்பிக்கை டானிக் தான்...தன்னம்பிக்கை கொடுத்தால் அவர்களே வாழ்வில் வெற்றி பெறுவார்கள் ..இப்போ நாட்டுக்கு இது போன்ற தலைவர்கள்தான் தேவை..அந்த உந்து சக்தியை கொடுத்தவர் ,ஒரு தலைவன் எப்படி இருக்கவேண்டும் என வாழ்ந்து காட்டியவர் ,கலாம்..அவருக்கு ஒரு சலாம்... ‪#‎APJAbdulKalam‬


தேச தந்தை ,தாத்தா,மாமா,தலைவர்,மேதை,வழிகாட்டி,என்ற அடைமொழிகளுக்கெல்லாம் பொருத்தமானவர் அப்துல்கலாம்...

இந்திய மக்கள் இவ்வளவு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தும் காட்சி இனி எதிர்காலத்தில் எந்த தலைவருக்கு காணப்போகிறோம் என நினைக்கும்போது வெறுமைதான் மிஞ்சுகிறது..

தமிழகத்தில் எந்த நெருக்கடியும் இல்லாமல் வேலை நிறுத்தம்,கடையடைப்புகள் நடக்க இருக்கின்றன.அவர் எந்த கட்சியிலும் இல்லை..எந்த இயக்கத்தையும் தோற்றுவித்து பலன் அடையவும் இல்லை..எந்த மதத்துக்கும் சொந்தமில்லை...மக்களோடு வாழ்ந்தார்...மக்களோடு கரைந்தார்..

 அப்துல்கலாம்...அறையில் குரானும் உண்டு..பிள்ளையார்ப்பட்டி வினாயகர் படமும் உண்டு..புத்தர் சிலையும் இருக்கும்....அவர் மசூதியில் தொழுகையும் நடத்தி இருக்கிறார்..திருப்பதி பெருமாளை வணங்கியும் இருக்கிறார்..பைபிள் கதைகளை படித்து தன் பேச்சில் உரை நிகழ்த்தியும் இருக்கிறார்...மத சார்பின்மை என்பது இதுதானோ...அல்லது இறைசக்தி எங்கு இருப்பினும் அதை மதிப்பது அவர் பண்பா...நல்ல மனிதரின் அடையாளம் A.P.J.Abdulkalam

 எத்தனையோ தலைவர்கள் மறைந்தார்கள்.ஆனால் எல்லோருக்கும் இந்தியாவின் புனிதபூமியான ராமேஸ்வரத்தில் அடக்கம் செய்யப்படும் பெரும் புண்ணியம் அமையவில்லை....அந்த மண்ணும் இடம் கொடுத்ததில்லை....கலாம் .கோடி .மனிதரில் புனிதர்...

1 கருத்து:

'பரிவை' சே.குமார் சொன்னது…

மாமேதையின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்போம்...