marriage matching லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
marriage matching லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 22 ஆகஸ்ட், 2015

நட்சத்திர பொருத்தம் பார்ப்பது எப்படி?திருமண பொருத்தம்

 ஆண், பெண் இருவருடைய நட்சத்திரப்படி இருவருக்கும் எத்தனை பொருத்தம் இருக்கிறது என பார்ப்பது எப்படி..? 10 பொருத்தங்களில் எத்தனை பொருத்தம் வருகிறது என பார்க்கும் சூத்திரம் இங்கு சொல்லப்பட்டிருக்கிறது.இது தவிர ஜாதக பொருத்தமும் பார்க்க வேண்டும் அது சம்பந்தமாக 10 கட்டுரைகளுக்கு மேல் எழுதி இருக்கிறேன் .அதையும் ஒருமுறை படிக்கவும்...


1) தினம்:- பெண் நட்சத்திரம் முதல் பிள்ளை நட்சத்திரம் வரை எண்ணி அதை 9 ஆல் வகுத்து மிச்சம் 2, 4, 6, 8, 9 என வந்தால் தினப்பொருத்தம் உண்டு. மற்றவை வந்தால் பொருத்தம் இல்லை.

2) கணம்:- ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் என்ன கணம் என பஞ்சாங்கத்தில் அறியலாம். ஆண், பெண் இருவருக்கும் ஒரே கணம் ஆனாலும், தேவ கணம், மனுஷ கணமானாலும் கணப் பொருத்தம் உண்டு. பெண் மனுஷ கணமும் பிள்ளை ராட்சஷ கணமானாலும் பொருத்தம் உண்டு.

3) மகேந்திரம்:- பெண் நட்சத்திரம் முதல் பிள்ளை நட்சத்திரம் வரை எண்ணும்பொழுது 4, 7, 10, 13, 14, 19, 22, 25 என வந்தால் மகேந்திரப் பொருத்தம் உண்டு.

4) ஸ்திரீ தீர்க்கம்:- பெண் நட்சத்திலிருந்து பிள்ளை நட்சத்திரம் 7க்கு மேல் இருந்தால் ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம் உண்டு.

5) யோனி:- நட்சத்திரங்களுக்குரிய விலங்குகள் பஞ்சாங்கத்தில் உள்ளன. பகை விலங்குகளின் விளக்கம் கீழே உள்ளது.

குதிரை - எருமை, யானை - சிங்கம், ஆடு - குரங்கு, பாம்பு - எலி, பசு - புலி, எலி - பூனை, கீரி - பாம்பு, மான் - நாய், ஆண் - பெண் நட்சத்திரங்களின் விலங்குகள் பகையாக இல்லாமல் இருந்தால் யோனிப் பொருத்தம் உண்டு.

6) ராசி:- பெண் பிள்ளை இருவருக்கும் ஒரே ராசியாக இருந்தாலும் பெண்ணிற்கு பிள்ளை ராசி 7, 9, 10, 11. 12 இருந்தாலும் ராசிப் பொருத்தம் உண்டு.

7) ராசி அதிபதி:- பெண் ராசிக்கு அதிபதி பிள்ளை ராசி அதிபதிக்கு நட்பு அல்லது சமமாக இருந்தால் ராசி அதிபதி பொருத்தம் உண்டு.

வசியம்:- பெண் ராசிக்கு பிள்ளை ராசி வசியமாக இருந்தால் வசியப் பொருத்தம் உண்டு. வசிய ராசிகளில் விளக்கம் பஞ்சாங்கத்தில் காணலாம்.

9) ரஜ்ஜு (மாங்கல்யம்):- நட்சத்திரங்களுக்கு உண்டான ரஜ்ஜுக்கள் பஞ்சாங்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. பெண் ரஜ்ஜுவும் பிள்ளை ரஜ்ஜுவும் ஒன்றாக இல்லாமல் இருந்தால் ரஜ்ஜு அல்லது மாங்கல்யப் பொருத்தமுண்டு.

10) நாடி:- 27 நட்சத்திரங்களும் மூன்று பிரிவுகளாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

அ) அஸ்வினி, திருவாதிரை புனர்பூசம், உத்திரம், அஸ்தம், கேட்டை, மூலம், சதயம், பூரட்டாதி.

ஆ) பரணி, மிருகசிரிடம், பூசம், பூரம், சித்திரை, அனுஷம், பூராடம், அவிட்டம், உத்திரட்டாதி.

இ) கிர்த்திகை, ரோகிணி, ஆயில்யம், மகம், சுவாதி, விசாகம், உத்திராடம், திருவோணம், ரேவதி.

பெண், ஆண் நட்சத்திரங்கள் ஒரே பிரிவில் இல்லாமல் வெவ்வேறு பிரிவில் இருந்தால் நாடிப் பொருத்தம் உண்டு.

எனவே மொத்தம் 10 பொருத்தங்களில் 6-க்கு மேல் இருந்தால் திருமணப் பொருத்தம் உண்டு. எனினும் கீழே கொடுத்துள்ள பொது விதிகளையும் கவனிக்க வேண்டும்.

அ) ரஜ்ஜு அல்லது மாங்கல்யப் பொருத்தம் இல்லை என்றால் திருமணம் செய்யக்கூடாது.

ஆ) தினம்,கணம், யோனி, ராசி, ரஜ்ஜு - இந்த ஐந்தும் முக்கியமானப் பொருத்தங்கள்.

இ) பெண், பிள்ளை இருவரும் ஒரே ராசியாக இருந்தால் 10 பொருத்தங்களும் உண்டு.

ஈ) பெண், பிள்ளை இருவருக்கும் ஒரே நட்சத்திரமாக இருந்து பரணி, ஆயில்யம்,சுவாதி, கேட்டை,மூலம், அவிட்டம், சதயம், பூரட்டாதி ஆக இல்லாமல் இருந்தால் 10 பொருத்தங்களும் உண்டு.

இவற்றுடன் செவ்வாய் தோஷம் சமமாக இருப்பின் திருமணம் செய்யலாம்.

திங்கள், 17 ஆகஸ்ட், 2015

திருமண காலம் எப்போது வரும்..? ஜோதிட விளக்கம்

திருமணம் எப்போது நடக்கும் என ஜாதகத்தை எடுத்துக்கொண்டு ஜோசியரிடம் சென்றால், கன்னி ராசியா..? போன வருசம் எல்லாம் குரு பலம் இருந்தது இப்போ ராசிக்கு 12ல் மறைஞ்சிருச்சே ..குருபலம் இல்லியே இனி அடுத்த வருசம்தான் என சர்க்கரை இல்லை போங்கன்னு சொல்ற ரேசன் கடைக்காரர் மாதிரி சொல்லிவிடுவார்...இது பல ஜோசியர்கள் சொல்லும் குரு பலம் கணக்கு...கோட்சார குருவை மட்டும் வைத்துக்கொண்டு திருமண காலத்தை கணக்கிட முடியாது.இன்னும் சில கணக்குகள் இருக்கின்றன...

கோட்சாரத்தில் நகர்ந்து வரும் குரு,பிறந்த ஜாதகத்தில்  ஏதாவது சுபகிரகங்களுடன் சேர்ந்துவிட்டாரா..கோணம்,திரிகோனம் அந்தஸ்து பெறுகிறாரா..? என பார்க்கனும்.திசை என்ன புத்தி என்ன..? புத்திநாதன் திசாநாதனுக்கு எத்தனாம் இடம்..? களத்திர காரகன் யார்..? அவருக்கும், புத்திநாதனுக்கும் உள்ள சம்பந்தம் எல்லாம் பார்க்கனும்...

சுக்கிர புத்தி,ஏழுக்குடையவன் புத்தி,பாக்யாதிபதி புத்தி நடந்தா ..அவர்கள் திசாநாதனுக்கு கெடாமல் இருந்தால், அந்த புத்தி முடிவதற்குள் திருமனம் நடந்துவிடும்..குருபலம் இல்லாவிட்டாலும் இது நடக்கும்...குருபலம் இருப்பவர்கள் மட்டும்தான் திருமணம் செய்கிறார்களா என்ன..? திருப்பதி,திருச்செந்தூர்,திருத்தணி,திருப்பரங்குன்றம்  முகூர்த்த நாளில் போய் பார்த்தால் ஆயிரக்கணக்கான ஜோடிகள் திருமணம் செய்கின்றனர்...எல்லோருக்கும் குருபலம் இருக்கிறதா என்ன..? 

7க்குடையவன் புத்தி நடந்தால் ,உடலுறவுக்கான காலம் காதலுக்கான காலம் என அறியலாம்...அது தற்போதைய நம் சமூக பழக்கத்துக்கு ஏற்றவாறு திருமணம் எனும் பந்தம் உண்டாக்கி ,நடத்தி வைக்கிறது.

லக்னம்,லக்னாதிபதி 7ஆம் இடம்,7ஆம் அதிபதி இவர்களுக்கு கோட்சார குருவின் பார்வை அல்லது சேர்க்கை பெறுகிற காலமும் திருமணம் நடைபெறும்..சந்திரனுக்கு 2,5,7,9,11 ல் கோட்சார குருவின் சஞ்சாரம் திருமணத்தை ஏற்படுத்திக்கொடுக்கும்..

 பரணி நட்சத்திரம் வரும் நாளில் காஞ்சிக்கு சென்று காஞ்சி காமாட்சியை வழிபாடு செய்தால் திருமண தடைகள் நீங்கி திருமணம் நடைபெறும்...தொடர்ந்து 3 மாதம் பரணி நட்சத்திர நாளில் சென்று வழிபட்டு வரவும்..

வியாழன், 5 ஜூன், 2014

திருமண பொருத்தம் ஏமாறும் பெற்றோர்;astrology

பொண்ணுக்கு கல்யாணம் என்றவுடன் இப்போது எல்லாம் பெண் வீட்டார் அதிகம் யோசிப்பது பையன் அழகா இருக்கனும் நல்லா படிச்சிருக்கனும் சொந்த வீடு சொத்து வசதி நல்லாருக்கனும் பெரிய கம்பெனியில பெரிய ஜாப் ல இருக்கனும் என்பதுதான் இதுக்கு அடுத்ததுதான் ஜாதகம் திருமண பொருத்தம் என்பது வருகிறது.

எல்லாம் முடிவானதும் மாப்பிள்ளை வீடு பெரிய இடமாக அமைந்ததும் நம்ம ஜோசியர்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிடுவோம் எனும் மனநிலைக்கு வருகிறார்கள்...ஜோசியரே நல்ல வரனா வந்திருக்கு ..அருமையான இடம்..பொண்ணுக்கு இந்த ராசிப்பையன் இருந்தா நல்லதுன்னு நீங்க சொன்ன மாதிரியே இருக்கு என அவரை முதலில் ப்ரைன் வாஷ் பண்ணிவிடுகிறார்கள் எங்கே பொருத்தம் இல்லைன்னு சொல்லிடுவாரொ என்ற பதட்டம்தான் காரணம் அப்புறம் நீங்க ஒரு பார்வை பார்த்துடுங்க என ஜோசியரிடம் கொடுக்கிறார்கள் இன்னும் சிலர் பொருத்தம் பார்ப்பது எப்படி என புத்தகம் படிச்சு பொருத்தம் பார்த்துவிட்டு கல்யாண நாள் குறிக்க மட்டும் ஜோசியரிடம் செல்வோரும் உண்டு.

அப்படி அழுத்தி சொல்லப்பட்டு அப்புறம் ஜோசியரிடம் கொடுத்தால் சிலர் நட்சத்திர பொருத்தம் ஓகே என சொல்லி விடுவதும் உண்டு...பொருத்தம் நட்சத்திரப்படி பார்க்கும்போது ரஜ்ஜு பொருத்தம் ,யோனி பொருத்தம் மிக முக்கியம்.இதில் அனுசரித்து போக வழியே இல்லை இவை இரண்டும் வராவிட்டால் அந்த ஜாதகத்தை ஒதுக்கிவிடுவது நல்லது.இருவருக்கும் ஒரே திசை நடப்பிலோ எதிர்காலத்திலோ வந்தால் அதையும் ஒதுக்கிவிடவேண்டும்.இருவரில் ஒருவருக்கு நாகதோசம் இருந்து இன்னொருவருக்கு இல்லையென்றாலும் அதுவும் ஆகாது.பரிகார செவ்வாய் என்றால் அடுத்தவருக்கும் அது இருக்கனும் இவை எல்லாம் இருவரின் உயிர் சார்ந்த விசயங்கள் ஆயுளுக்கே பாதிப்பு கொடுக்கும் அல்லது டைவர்ஸ் கேட்டு கோர்ட் படியேற வேண்டும் என்பது போன்ற தோசங்கள்.

இப்போது இருக்கும் தலைமுறையினருக்கு தோசம் என சொன்னால் பணம் வாங்க ஜோசியர் ஏதோ பரிகாரம் சொல்லப்போகிறார் என்றுதான் நினைக்கிறார்கள்...உண்மையில் தோசம் என்பதே மோசம் என்றுதான் பொருள்..அதாவது நாகதோசம் எனில் பிடிவாதம்,ஈகோ,அழுத்தமான குனமுடையவர்கள்  என எடுத்துக்கொள்வோம் அந்த தோசம் இருப்பவருக்கு மென்மையான குணமுடையோரை திருமணம் செய்தால் நிலைக்குமா தாங்குவாரா...வலிமையானவருக்கு வலிமையானவரைதான் திருமணம் செய்ய வேண்டும்.செவ்வாய் தோசம் இருப்பவர் அதிக மோகம் கொண்டவர் என எடுத்துக்கொண்டால் தோசம் இல்லாதவர் அதில் விருப்பமே இல்லாதவர் என எடுத்துக்கொண்டால் இந்த ஜோடி ஒத்து வருமா...கள்ளக்காதல் ஏன் பிறக்காது..?இப்படி மறைமுகமாக எவ்வளவோ விசயங்கள் இந்த தோசங்களின் பிண்ணனியில் இருக்கின்றன...

இவற்றை எல்லாம் கவனிக்காமல் பல பெற்றோர்கள் நட்சத்திர பொருத்தம் மட்டும் பார்த்துவிட்டு திருமணம் செய்துவைக்கிறார்கள்..பிரச்சினை ஆனதும் ஜோசியத்தின் மீதும் பொருத்தம் பார்த்த ஜோசியரின் மீதும் பழியை போடுவது வழக்கமாக இருக்கிறது...

திங்கள், 3 டிசம்பர், 2012

ராகு கேது பெயர்ச்சி எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம்..? ராசிபலன்

ராகு கேது பெயர்ச்சி எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம்..? ராசிபலன்;

ராகு கேது என்பவை நிழல் கிரகங்கள்..இவை கோள்கள் அல்ல..ஆனாலும் இவை நம் ஜாதகத்தில் அதிக வீரியமானவை..அதிக பாதிப்புக்ளை தரவல்லவை...கெட்ட எண்ணங்கள்,குறுக்கு வழி,வக்கிர உணர்ச்சிகள்,தாழ்வு மனப்பான்மை,எந்த சுகமும்,சந்தோசமும் கிடைக்காமை,தீயவர்களுடன் நட்பு,பாலியல் நோய் என நம் வாழ்வில் இவர்கள் செய்யும் விளைவுகள் அதிக பாதிப்புகளை தரவல்லவை...அத்தயக ராகு கேது பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கப்படி  2.12.2012 காலை 10.53 க்கு பெயர்ச்சியானது...மத்த ராசிபலன்களில் நான் குறிப்பிருப்பவை எல்லாம் திருக்கணித பஞ்சாங்கப்படி 23.12.2012 ராகு கேது பெயர்ச்சி ஆகும்...

 ரிசபத்தில் இருந்த கேது மேசத்திற்கும்,விருச்சிகத்தில் இருந்து வந்த ராகு துலாம் வீட்டிற்கும் பெயர்ச்சி ஆகிறார்கள்...

மேசம்,மேசம்,கடகம்,கன்னி,மகரம்,கும்பம்,மீனம் ராசிக்காரர்கள் பரிகாரம் வழிபாடு செய்து கொள்வது அவசியம்.,,,,உங்கள் பேச்சிலும்,செயலிலும்,உடல் ஆரோக்கியத்திலும் அதிக கவனமுடன் இருப்பது அவசியம்..நிழல் கிரகங்கள் உங்கள் மனதில்,உடலில் நிழலாக படியும் ..அதாவது உண்மை,மனசாட்சியை நிழல் மறைக்கும்..மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் நடந்துகொள்ளுங்கள்...

ரிசபம் ராசியினருக்கு இதுவரை தன் ராசியில் கேது இருந்ததால் நிறைய மன உல்ளைச்சல்கள்,கெட்ட பெயர்,அவமானம்,தொழில் மந்தம் என சிரமப்பட்டு வந்தார்கள்..அவர்கள் ராசியில் இருந்த கேது அவர்கள் குணத்தை கெடுத்து வந்தது...மனசை நிம்மதியில்லாமல் செய்து வந்தது..கேது விலகியது இனி அதிர்ஷ்டத்தை தரும்..கேட்டது கிடைக்கும்...

மிதுனத்துக்கு 4ல் வரும் ராகு ,11ல் வரும் கேது அதிக நன்மையும் இல்லை..கெடுதலும் இல்லை..உடல்நிலையில் கவனமுடன் இருக்கனும்...கல்வியில் அதிக கவனம் தேவை..மந்த தன்மையை கொடுக்கும்..மாணவர்கள் இந்த ராசியாய் இருந்தால் ஒழுங்கீனத்தை கொடுக்கும்..பெண்களுக்கு வீண் அவமானம் உண்டாகலாம்..சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் வரலாம்...வயிறு வலி உபாதைகள் உண்டாகும்..

சிம்மம் ராசிக்கு 3ல் ராகு சிறப்பான யோகம்..வருமானம் பெருகும்...தைரியம்,துணிச்சலுடன் பல வெற்றிகளை பெறுவீர்கள்..பணி புரியும் இடத்தில் நல்ல பெயர் உண்டாகும்..சொத்துக்கள் சேர்க்கை உண்டகும்..கடன் தீரும்

விருச்சிகத்துக்கு ராசியில் இருந்து ராகு விலகுவது பெரும் நன்மையை தரும்...பகையாய் போன உறவுகள் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்...பலரும் உங்களை பாரட்டுவர் வருமானம் பெருகும்..

 தனுசு ராசியினருக்கு 6ல் குரு இருந்து படுத்தி வந்தாலும்,இதனால் வருமானம் குறைந்து,செலவுகள் அதிகமாகி தடுமாறி வந்தாலும் ராகு லாப ஸ்தானமான 11ல் மாறியது நல்லதுதான்...விரயத்தில் இருந்த ராகு லாபத்துக்கு போவதால் வருமானம் அதிகரிக்கும்...புதிய நட்புக்கள் உண்டாகும்..


மகரத்துக்கு 4ல் கேது வருவதால் உடல்நலனில் கவனம் தேவை...சொத்துக்கள் சம்பந்தமான பிரச்சினைகளை சந்திக்க நேரலாம்..தாயாருக்கு பாதிப்பு வரலாம்.. தொழிலில்,வருமானத்தில் பிரச்சினை இல்லை...




வியாழன், 22 நவம்பர், 2012

ராகுகேது பெயர்ச்சி ராசிபலன் ;துலாம்;விருச்சிகம் 23.12.2012

ஜோதிடம்;ராகு கேது பெயர்ச்சி ராசிபலன்;துலாம்,விருச்சிகம்

திருக்கணித பஞ்சாங்கம் அடிப்படையில் வரும் 23.12.2012 அன்று மாலை 6.21 க்கு ரகு கேது பெயர்ச்சி ஆகிறார்கள் ராகு விருச்சிகத்தில் இருந்து துலாம் ராசிக்கு கேது ரிசபத்தில் இருந்து மேசம் ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள்...இதன் பலன்களை ஒவ்வொரு ராசிக்கும் எழுதி வருகிறேன் அதன் அடிப்படையில் இன்று துலாம் ,விருச்சிகம்..

துலாம்;

உங்கள் ஜென்ம ராசிக்கு ராகு வருகிறார்...ஜென்ம சனி நடக்கும் காலத்தில் ஜென்ம ராகுவும் உடன் இணைந்து கொள்கிறார்...

ராசிக்கு 5க்குடையவன் தானே சனி..அவர் நல்லதுதான் செய்வார் என வைத்துக்கொண்டாலும் ராகுவுடன் இணையும் போது கெடுதலையும் செய்கிறார்..வீண் அலைச்சல்,அவமானம்,நஷ்டம் போன்றவை காணப்படுகின்றன..அதிகபடியான மன உளைச்சல்,செய்யலாமா வேண்டாமா என தடுமாற்றம் எதிலும் முடிவு எடுக்க முடியாத தன்மை இருக்கும்..

ஜென்ம ராகு திடீர் யோக பலன்களையும் ஏற்படுத்துவார் என பழம் பாடல்கள் சொல்கின்றன...அந்த நம்பிக்கையில் ஆறுதல் படலாம்..குரு பெயர்ச்சி வரை காத்திருக்கலாம்..குரு இக்கட்டான சூழலில் இருந்து காப்பார்..கேது 8ல் இருந்து 7ஆம் இடத்துக்கு மாருகிறார் இதுவும் சுமாரான பலந்தான்..நண்பர்களிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம்..கணவன் மனைவியரிடையே புது பிரச்சினைகள் உருவாகலாம்..எச்சரிக்கையுடன் எதையும் தீர ஆராய்ந்து முடிவு செய்வது நல்லது..

விருச்சிகம்;

 இதுவரை உங்கள் ஜென்ம ராசியில் இருந்து படாத பாடு படுத்தி வந்த ராகு அதிலிருந்து விலகி விடுவது சந்தோசமான தகவல்தான்...7 ஆம் இடத்தில் இருந்து கேதுவும் விலகிவிடுவதால் குரு உங்கள் ராசியை பார்த்து அதன் மூலம் தெளிவான மன நிலையும்,குடும்பத்தில் மகிழ்ச்சியான திருப்பங்களும் உண்டாகும்..நீண்ட நாட்களாக மனதை அலைக்கழித்த துயரங்கள் விலகும் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்...பண வரவு திர்டுப்தி தரும்..நண்பர்கள் உதவி கிடைக்கும்..

12ல் ராகு இருந்தாலும் விரய செலவுகள் குறைந்த பாடில்லை..செலவுகள் அதிகம் காணப்படும் அதை சுப செலவுகளாக மாற்றிக்கொண்டால் நல்லது


புதன், 21 நவம்பர், 2012

குடும்ப வாழ்க்கையை கெடுப்பது கிரகமா..? ஜோசியரா..?

ஜோசியம் பார்த்து திருமண பொருத்தம் பார்த்துதான் கல்யாணம் பண்ணி வெச்சோம்...இப்படி கல்யாணம் முடிஞ்சு அடுத்த மாசமே டைவர்ஸ் கேட்டு இரண்டு பேரும் கோர்ட்ல நிற்கிறாங்களே என பொண்ணு வீட்டுக்காரங்க புலம்புவது வழக்கம்...


கிரகங்கள் செய்யும் சதியில் ஜோசியரும் மாட்டிக்கொள்வார்..அவர்தானே பொருத்தம் பார்த்தார்..ஆமாம் ஆனா ஜோசியர்கிட்ட ஜாதகம் கொடுத்ததும்,எங்களுக்கெல்லாம் ரொம்ப பிடிச்சு போச்சுங்க..பொண்ணுக்கும்,மாப்பிள்ளைக்கும் அதை விட புடிச்சு போச்சி..உங்கக்கிட்ட எதுக்கும் ஒரு வார்த்தை கேட்ட்ட்டு போலாம்னுதான் வந்தோம் என நெருக்கடி கொடுத்தா அந்த அப்பாவி ஜோசியரும் என்ன செய்வார்..? ஓரளவுக்கு பொருத்தம் வந்தா சரி.அதான் நட்சத்திர பொருத்தம் இருக்கே..செவ்வாய் தோசமும் பொருந்துது..நாகதோசமும் பொருந்துது என்றுதான் சப்பைக்கட்டு கட்டுவார்...

பொண்ணும் பையனும் பெரிய வேலையில இருக்காங்க..இரண்டு பக்கமும் கோடிக்கணக்குல சொத்து இருக்கு...நட்சத்திர பொருத்தமும் 7 பொருத்தம் இருக்கு..அதைவிட என்ன வேணும்..? இன்னும் இருக்குங்க...பையன் ஜாதகத்துல 7 ஆம் அதிபதி கிரகம் எந்த கிரகத்துடன் சேர்ந்து இருக்கு..பொண்ணு ஜாதகத்துலியும் 7 ஆம் அதிபதி என்ன ஆனார்ன்னு பார்க்கணும்..பொண்ணு ஜாதகத்துல 7 ஆம் அதிபதி கேதுவுடன் சேர்ந்தாலோ,6,8,12 ல் மறைந்தாலோ,6,8,12க்குடையவன் 7ல் இருந்தாலோ பிரிவு நிச்சயம்...இவனுக்கும் எனக்கும் ஒத்தே வராதுன்னு பொண்ணு சொல்லிடும்..இவ மூஞ்சியில இனி முழிக்கவே மாட்டேன்னு பையன் சொல்லிடுவான்..அதையும் மீறி சேர்ந்து இருந்தா சிவாஜி படத்துல ரஜினி ஜாதகத்தை பார்த்துட்டு ஜோசியர் சொல்வாரே அதான் பலன்...பொருள் அழிவு..உயிருக்கு கண்டம்,தீரா வியாதி...

அதான் 7 பொருத்தம் இருக்கே அதையும் மீறியா வரும்..? வரும்..அது நட்சத்திர பொருத்தம் மட்டும் தான் அதையும் மீறி உங்கள் ஜாதக பலன் இருக்கு..நட்சத்திரத்தை விட ஜாதகத்தில் இருக்கும் கிரகங்களின் வலிமை பெரிது.

தொடரும்------------------

செவ்வாய், 21 ஆகஸ்ட், 2012

ஜோதிடம்;நாகதோசம் இருந்தால் திருமணம் நடக்காதா?

ஜோதிடம்;ராகு-கேது ஏற்படுத்தும் திருமண தடை;


திருமணம் ஒருவருக்கு தாமதம் ஆகிக்கொண்டிருப்பதில் பல காரணங்கள் இருக்கலாம்..அதில் ஒன்று நாகதோசம் .ராகு கேது லக்னத்துக்கு 1,2,5ல் இருக்கும்போது நாகதோசம் உண்டாகும் இதில் 5 ஆம் இடத்தில் இருக்கும் ராகு கேது புத்திர ஸ்தானத்தை பாதிக்கிறார்..இதனாலும் பெண் வீட்டார் பெண் கொடுக்க முன்வருவதில்லை..குழந்தை பாக்யம் இல்லாமல் போய்விடுமோ என்ற பயம் தான் காரணம்..5ல் கேது இருந்தால் பிள்ளை இல்லை என சொல்லிவிட முடியாது குரு,சுக்கிரன் கெட்டுப்போகாமல் இருந்தால் 5 ஆம் இடத்துக்கு சுபர் பார்வை இருந்தால் நிச்சயம் குழந்தை பாக்யம் உண்டு..

7ல் கேது இருந்தால் திருமணம் நடக்காதா சார் என சிலர் கேட்கிறார்கள்...7ஆம் இடம் களத்திர ஸ்தானம்..மனைவியுடன் தாம்பத்யம்,இன்பம் பற்றி சொல்லும் இடம்..அங்கு கேதுவாகிய துறவி கிரகம் இருந்தால் திருமணம் தாமதம் என்பது சரிதான் ஆனால் நடக்காது என சொல்லமுடியாது

சுக்கிரன் 6,8,12 ல் மறைந்து,7 ஆம் அதிபதியும் 6,8,12ல் மறைந்து,ஸ்தான பலம் கெட்டுப்போயிருந்தால் மட்டுமே அப்படி சொல்ல முடியும்...சுக்கிரன் நல்ல நிலையில் இருந்தால் திருமணம் நடக்கும்..

7ல் கேது இருந்தால் திருமண விசயத்தில் குழப்பம்,சந்தேகம் அடைந்து தள்ளிப்போட்டுக்கொண்டே இருப்பார்கள் ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டிருப்பார்கள்...இதனால் திருமணத்தின் மீது அதிக விருப்பம் இருக்காது..

7ல் ராகு இருந்தால் பலருக்கு அவசர திருமனம்,காதல் திருமணம் ,பிரச்சினையில் திருமணம் நடந்திருக்கிறது..திசா புத்தி மோசமாக இருந்தால் இப்படி நடந்துவிடும்...சந்திரன்,சுக்கிரன் பார்வையும் ஒரு காரணம்..7ல் இன்னொரு கிரகம் ஏதாவது இருந்தால் அதற்கு ஏற்றவாறு பலன் மாறும் ..7ல் இருக்கும் கேதுவுடன் குருவோ,சுக்கிரனோ சேர்ந்திருந்தால் நல்லபடியாக திருமணம் நடப்பது அரிது....

குருபார்வை இருந்தால் இனிமையாக திருமணம் நடைபெறும்!!

வெள்ளி, 7 அக்டோபர், 2011

ஒரே நொடியில் திருமண நட்சத்திர பொருத்தம்


திருமண நட்சத்திர பொருத்தம் 
வ.எண்
பெண் நட்சத்திரத்திற்கு
பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்
1.
அஸ்வனி
பரணி, 
திருவாதிரை,
பூசம்,
பூராடம்,
திருவோணம்,
சதயம்
2.
பரணி
புனர்பூசம், 
உத்திராடம்,
ரேவதி,
அஸ்வனி
3.
கார்த்திகை 
1 
ம் பாதம்
சதயம்
4.
கார்த்திகை 
2, 3, 4 
ம் பாதங்கள்
சதயம்
5.
ரோகிணி
மிருகசீரிஷம் 
1, 2, 
புனர்பூசம் 

4, 

உத்திரம்
1, 
பூரட்டாதி, 
பரணி
6.
மிருகசீரிஷம் 
1, 2 
ம் பாதங்கள்
உத்திரம் 
1, 
உத்திராடம் 

2, 3, 4, 

திருவோணம், 
சதயம், 
அஸ்வனி, 
ரோகிணி
7.
மிருகசீரிஷம் 
3, 4 
ம் பாதங்கள்
திருவாதிரை, 
உத்திரம்,
அஸ்தம்,
மூலம்,

உத்திராடம் 

2, 3, 4, 
சதயம், 
பரணி
8.
திருவாதிரை
பூரம், 
பூராடம்,
பரணி,

மிருகசீரிஷம் 

3, 4
9.
புனர்பூசம் 
1, 2, 3 
ம் பாதங்கள்
அவிட்டம் 
3, 4, 
உத்திரட்டாதி,

மிருகசீரிஷம் 

3, 4
10.
புனர்பூசம் 
4 
ம் பாதம்
பூசம், 
சுவாதி,
அவிட்டம்
1, 2, 
உத்திரட்டாதி, 
மிருகசீரிஷம்
11.
பூசம்
ஆயில்யம், 
அஸ்தம்,
சுவாதி,
விசாகம்
1-2-3, 
பூரட்டாதி 
4, 
ரேவதி,

திருவாதிரை
,

புனர்பூசம்
12.
ஆயில்யம்
சித்திரை, 
அவிட்டம் 

1, 2
13.
மகம்
சதயம்
14.
பூரம்
உத்திரம் 
1, 
பூரட்டாதி 

1, 2, 3, 

அஸ்வனி
15.
உத்திரம் 
1 
ம் பாதம்
சுவாதி, 
அனுஷம்,
பரணி,
ரோகிணி,
பூசம்,
பூரம்
16.
உத்திரம் 
2, 3, 4 
ம் பாதங்கள்
அனுஷம், 
பூராடம்,
ரோகிணி,
பூசம்,
பூரம்
17.
அஸ்தம்
பூராடம், 
உத்திராடம் 

1, 

ரேவதி,

மிருகசீரிஷம்
,
பூரம்,
ஆயில்யம்,

கார்த்திகை 

2, 3, 4
18.
சித்திரை 
1, 2 
ம் பாதங்கள்
கார்த்திகை 
2, 3, 4, 
மகம்
19.
சித்திரை 
3, 4 
ம் பாதங்கள்
கார்த்திகை 
1, 
மகம்
20.
சுவாதி
பூராடம், 
அவிட்டம் 

1, 2, 

பரணி,

மிருகசீரிஷம் 

3, 4, 
பூரம், 
புனர்பூசம்
21.
விசாகம் 
1, 2, 3 
ம் பாதங்கள்
அவிட்டம் 
1, 2, 
சித்திரை 

3, 4
22.
விசாகம் 
4 
ம் பாதம்
அவிட்டம், 
சதயம்,
சித்திரை
23.
அனுஷம்
கேட்டை, 
சதயம்,
பூரட்டாதி
1, 2, 3, 
ரோகிணி, 
புனர்பூசம்,
ஆயில்யம்,
அஸ்தம்,
சுவாதி
24.
கேட்டை
கார்த்திகை 
2, 3, 4
25.
மூலம்
உத்திரட்டாதி, 
பூரம்,
சுவாதி,
பூராடம்
26.
பூராடம்
பூரட்டாதி, 
புனர்பூசம் 

1, 2, 3, 

உத்திரம், 
ரேவதி
27.
உத்திராடம் 
1 
ம் பாதம்
உத்திரட்டாதி, 
திருவாதிரை,
பூரம்,
பூராடம்,
அஸ்தம்,
சுவாதி
28.
உத்திராடம் 
2, 3, 4 
ம் பாதங்கள்
உத்திரட்டாதி, 
பரணி,
பூசம்,
அஸ்தம்,
அனுஷம்,
பூராடம்
29.
திருவோணம்
அவிட்டம் 
1, 2, 
பூரட்டாதி 

4, 

பரணி,

புனர்பூசம் 

4, 
உத்திரம் 
2, 3, 4, 
சித்திரை, 
கேட்டை,
பூராடம்
30.
அவிட்டம் 
1, 2 
ம் பாதங்கள்
கார்த்திகை 
1, 
மூலம்
31.
அவிட்டம் 
3, 4 
ம் பாதங்கள்
கார்த்திகை, 
சதயம்,
மகம்,
மூலம்
32.
சதயம்
சித்திரை 
3, 4, 
விசாகம்,
அவிட்டம்
3, 4
33.
பூரட்டாதி 
1, 2, 3 
ம் பாதங்கள்
மிருகசீரிஷம் 
1, 2, 
சுவாதி,
அனுஷம்
34.
பூரட்டாதி 
4 
ம் பாதம்
உத்திரட்டாதி, 
மிருகசீரிஷம்,
அனுஷம்
35.
உத்திரட்டாதி
ரேவதி, 
திருவாதிரை,
ரோகிணி,

புனர்பூசம் 

1, 2, 3, 
அஸ்தம், 
திருவோணம்,
பூரட்டாதி
36.
ரேவதி
மிருகசீரிஷம், 
புனர்பூசம் 

1, 2, 3, 

உத்திரம் 
2, 3, 4, 
அனுஷம், 
உத்திரட்டாதி