thirumana porutham லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
thirumana porutham லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 9 டிசம்பர், 2018

திருமணத்தடை நீக்கும் கிரகதோஷப் பரிகாரங்கள்


 திருமணத்தடை நீக்கும் கிரகதோஷப் பரிகாரங்கள்
     ஆண், பெண் இருபாலருக்கும் ஜாதங்களில் தோஷம் இருப்பின் திருமணம் தள்ளிப் போகிறது.  தடைபடுகிறது. இது குரு தோஷம், சுக்கிர தோஷம்,  செவ்வாய் தோஷம் கால சர்ப்ப தோஷம் ஆகியவைகளால் ஏற்படுகிறது.

     குரு தோஷம்
   மகரத்தில் செவ்வாய் _ கடக  குரு வக்ரம் பெற தோஷம், ஆலங்குடி சென்று குரு பகவானுக்கு மஞ்சள் துணி சாற்றி அர்ச்சனை செய்து 24 நெய் விளக்கேற்றி 24 முறை வலம் வந்து வணங்க வேண்டும்.

சுக்கிர தோஷம்

Image result for manamagal
    
சுக்கிரன் சூரியன் சேர்க்கைப் பெற்று கேந்திரங்களில் நிற்க 8, 12 ல் நிற்க தோஷம். 3, 6 லும் சிறிதளவு தோஷம். இவர்கள் பரணி, பூசம், பூராடம் நட்சத்திரம் வரும் நாட்களில் ஸ்ரீ ரங்கம் சென்று, ஸ்ரீ ரங்கநாதரைத் தரிசித்து சுக்கிர தோச நிவர்த்தி சீட்டு வாங்கி  உண்டியலில் போட நிவர்த்தியாகும்.
  செவ்வாய் தோஷம்
   ஜாதகத்தில் 2 ,4,7,8, 12 ல் செவ்வாய் நிற்க தோஷமாகும். பாவர் சேர்க்கை பார்வை பெற்ற செவ்வாய் இவ்விடங்களில் நிற்க தோஷம் . இத்தோஷம் நீங்க, செவ்வாய்க் கிழமை இராகு கால வழிபாடு செய்தல் நன்று. செவ்வாய் திசையும் கூடுமானால் தசா காலம் முழுவதும் அம்மனுக்கு விளக்கேற்றி வழிபட குறை தீர்ந்து நிறை சேரும். நிம்மதி கூடும்.
கால சர்ப்ப தோஷம்
   அனைத்துக் கிரகங்களும் ராகு கேதுவின் பிடிக்குள் கட்டுண்டு செயலற்றிருப்பர். இத்துடன் நாக தோஷமும் சேர 33 வயதுக்கு மேல் நிலைத்த செளபாக்கியம் கிட்டும். இவர்கள் காளஹஸ்தி சென்று சர்ப்ப சாந்தி செய்வது நலம். சங்கரன் கோவிலுக்குச் சென்று சர்ப்ப சாந்தி செய்தல் அவசியம். வெள்ளியினால் செய்த ஒரு தலை நாகத்தை அர்ச்சனைத் தட்டில் வைத்து சங்கரர்  நாரயணார் நாகர் கோமதி அம்மனுக்கு அர்ச்சனை செய்து உண்டியலில் சேர்க்க வேண்டும். மணமான பின், வெள்ளியில் செய்த ஐந்து தலை நாகத்தை அர்ச்சனைத் தட்டில் வைத்து முன் போல் அர்ச்சனை  செய்து, கோமதி அம்மனுக்கு திருமாங்கல்யம் சூட்டி தான் முறையான பரிகாரம். எப்பிறவிகளிலும் நாக தோஷம், கால சர்ப்ப தோஷம் தொடராது என்பது திண்ணம். சூரியனார் கோயில் திங்களூர், வைத்தீஸ்வரன் கோயில் திருவெண்காடு, ஆலங்குடி, கஞ்சனூர், திருநள்ளாறு, திருநாகேஸ்வரம், கீழ் பெருபள்ளம், சென்று வர நவகிரகப் ப்ரீதி உண்டாகும். சேது ஸ்நானம் சாலச் சிறந்தது. பிரதோச காலங்களில் சிவன் கோயிலுக்குச் சென்று விளக்கேற்றி வழிபட, முன் ஜென்ம _ தீவினைப் பயன் அகன்று நல்வினை சூழும்.
44 . ருது தோஷம் நீங்க
  ஒரு சில பெண்கள் மட்டும் ருதுவாகமல் அப்படியே இருந்து விடுவார்கள்.  வயதுக்கு வராத பெண்ணும் வெறுப்புடன் வாழ்வாள்.
16 வயதுக்கு மேல் பெண் ருதுவாகமல் இருந்தால் அந்த நிலையை அகற்ற கருணை காடும் தெய்வங்கள் அன்னை துர்க்கை, அங்காள பரமேஸ்வரி ஆவார்கள். வளர்பிறை ஏகாதசி திதியில் உங்கள் பகுதியில் அமைந்துள்ள துர்க்கை அம்மன் அல்லது அங்காள பரமேஸ்வரி ஆலயத்திற்கு குரு ஹோரையில் ஒன்பது விளக்குகள் போட வேண்டும். இதே போல ஒன்பது வளர்பிறை ஏகாதசி திதிகளில் விளக்குப் போட்டு வர, ருது தடையை தெய்வம் நீக்கி அருளும்.
   பரிகாரம்
   ஆலயம் சென்று வேண்டுதல் செய்ய முடியாதவர்கள், அவர்கள் பகுதியில் உள்ள ஒரு திருநங்கைக்கு வெற்றிலை பாக்கு உடன் 101 ரூபாய் கொடுத்து ஆசிர்வாதம் பெற்றால் 90 நாட்களுக்குள் பூப்பெய்தி விடுவார்கள்.
  

வெள்ளி, 4 மே, 2018

யோனி பொருத்தம் பார்க்காம கல்யாணம் செஞ்சுடாதீங்க!!

யோனி பொருத்தம் thirumana porutham திருமண பொருத்தம் 
திருமண பொருத்தத்தில் இது முக்கியமானது இது தாம்பத்ய சுகம் எப்படி இருக்கும் என ஒவ்வொரு நட்சத்திரத்தாருக்கும் ஒரு மிருகம் அடையாளமாக கொடுத்து மறைமுகமாக உதாரணமாக ஜோதிடத்தில் சொல்லி இருக்கிறார்கள் இந்த பொருத்தம் இல்லை என்றால் ஜோதிடர் யாரும் பொருத்தம் இல்லை என்றுதான் சொல்வார்கள்..பூரம் நட்சத்திரம் எலி என கொடுக்கப்பட்டுள்ளது ரோகிணிக்கு பாம்பு என கொடுக்கப்பட்டுள்ளது இவை ஒன்றுக்கொன்று பகை என்பது தெரிந்ததுதான் எலியை கண்டால் பாம்பு விழுங்கி விடும்..எலியின் வாழ்க்கை முறை சிறியது.தன் வீட்டை விட்டு வேறு எங்கும் போக விரும்பாது.அப்படித்தான் இந்த நட்சத்திரக்காரர்களின் குணமும் இருக்கும் ..அஸ்தம் எருமை கொடுக்கப்பட்டிருக்கும் எப்போதும் எரும சேத்துல கிடக்குற மாதிரி கடுமையான உழைப்பு குறைவு..அதிக தூக்கம் ..எருமைக்கு புலியை சேர்க்க முடியாது அடிச்சு தின்னுடும்.அது வேகம் அதிகம் இது வேகமே இல்லை.

Image result for தேவ கணம்


பாம்பு ரோகிணி...பழிக்கு பழி..வாங்கும் உயிரினம் இதுவும் தன் வளையை விட்டு எங்கும் போகாது.யாராவது குறிக்கிட்டால் ஆபத்து.இதன் உறவு முறை வித்தியாசமானது..எனவே யாரும் திருப்தி படுத்த முடியாது அதனால் சுகம் எப்போதும் முழுமை அடையாது.பாம்பை கண்டால் நாய் சும்மா விடாது அதனால் நாய் நட்சத்திரங்கள் எதிரி..அதாவது திருவாதிரை.இதே நாய் நட்சத்திறத்துக்கு பூனை நட்சத்திரங்கள் எதிரி..ஆயில்யம்..நாயும் பூனையுமா அடிச்சுக்குவாங்க...உடலுறவு சந்தோசம் தராது வாழ்க்கை போர்க்களம் .வேறு துணையையே விரும்புவாங்க.எலிக்கு எலி அமைஞ்சா நல்லதுதான் அதைதான் மகத்து புருசம் பூரத்து பொண்டாட்டி மாதிரினு சொல்வாங்க..
இதையே கூட்டாளிகளுக்கும் நண்பர்களுக்கும் பொருத்திபார்க்கலாம்...புலி விசாகம் ..இதுக்கு கூட்டாளி எலி வந்தாலும் சரி வாழ்க்கை துணை அமைஞ்சாலும் சரி...ஒத்து வருமா...ஒரே நாளில் பிச்சுக்கிட்டு போயிடும்...ஒவ்வொரு மிருகத்தையும் அதன் உடலுறவு முறை உடலுறவு காலம் அதன் மர்ம உறுப்பின் நீளம் ஆழம் என மறைமுகமாக இதில் சொல்லப்பட்ட விசயங்கள் ஏராளம்..தாம்பத்யம் நன்றாக அமைந்தால்தான் குடும்ப வண்டி ஓடும்.எனவே யோனி பொருத்தம் மிக முக்கியமானது

புதன், 4 ஏப்ரல், 2018

திருமண பொருத்தம் பார்க்கும் போது மறக்க கூடாத ஜோதிட குறிப்புகள்


திருமண பொருத்தம் உங்க பையனுக்கோ பொண்ணுக்கோ பார்க்கும்போது ஒன்றுக்கு இரண்டு ஜோதிடர்களை கலந்து ஆலோசிப்பது நலம்..எனக்கு ஈமெயிலும் வாட்சப்பிலும் கூட பொருத்தம் பார்க்க ஜாதகங்கள் அனுப்புகிறார்கள் ..நான் நட்சத்திர பொருத்தம் மட்டும் பார்க்காமல் ஜாதக கிரக பலத்தையும் ஆராய்ந்து நடக்கும் திசை பெண்னுக்கும் வரனுக்கும் மாமனார் மாமியாருக்கும் எப்படி என்பதுவரை பார்ப்பது உண்டு...திருமணத்துக்கு பின் அதிர்ஷ்டமா தரித்திரமா என்பது ஜாதகம் பார்த்தவுடன் தெரிந்து விடும்..

திருமண பொருத்தம் சம்பந்தமாக நிறைய கட்டுரைகள் எழுதி இருக்கிறேன் அதை எல்லாம் தேடி படித்த பின் இதயும் படியுங்கள் தெளிவு பிறக்கும்..


           murugar_valli_thirumanam.jpg

ஜாதகத்தில்  10  மிடம்  மாமியார்  ஸ்தானமாகும்.  10  மிடத்தில்  ராகு  கேது  இருந்தால்,  பூரண ஆயுள் உண்டு.

 7  ல் சுபர்  இருந்து  7 ம் அதிபதி  சுக்கிரனுடன்  சேர்ந்தால்  இளமை திருமணம் .

 7 ம் அதிபதி  2 ல்  பலம்  பெற்று  7 ல்  குரு  இருந்தால்  வாலிப  வயதில்  கெட்டி  மேளம்  முழங்க  திருமணம்.

 லக்கின  கேந்திரத்தில்  சுக்கிரனும்  , சுக்கிரனுக்கு  கேந்திரத்தில்  சனியும்  இருந்தால்  இளமை  திருமணம்.

 1 ம் அதிபதி  இருவரும்  5, 7 , 9 , 11 , ல்  இருந்தால் வாலிப  வயதில்   திருமணம்  நடைபெறும்.

 லக்கினதிபதி  சுக்கிரன்  ஆகி  அவர்   1 , 4 , 7 , 10 , ல் இருந்தால்  இளமை  திருமணம்.

 7 ல்  குரு  (அ) சுக்கிரன் இருந்து அசுபர்  சேர்க்கையோ , பார்வையோ இல்லாமல்   இருந்தால்   இளமையில்    திருமணம்   நடைபெறும்.

 சந்திரனுக்கு  கேந்திரத்தில்  குரு  “  கஜ கேசரி  யோகம்”   சந்திரனுக்கு   1 , 5 , 9 , ல்  குரு  இருந்தால்   “  சந்திர  யோகம்”   ஏற்படும் .    உயர்ந்த   பதவி ,  புகழ் , நீண்ட   ஆயுள்   போன்றவை  ஏற்படும்.

1  4 , 7 , 8 ,  ல் கருதிய  சனி    சேய்  நிற்க   தெண்டங்கள்  மிக  உண்டாகும் , திரவிய  நாசமாகும் , கொண்டதோர்  மனைவி  வேறாகும்.

 7 ல்  கேது  அடைய பெற்றவர்களுக்கு    தார தோஷம், கணவன்  , மனைவி  பிரிவு ,  இரு  தார  யோகம் , ஜல  கண்டம் ,  போன்றவை  ஏற்படும்.

 அதிபதி   ராகுவுடன் சேர்க்கை  பெற்று  6  ல்  இருந்தால்  இரண்டுக்கும்  மேற்பட்ட  மனைவிகள்  அமையும்.

 7 ம் அதிபதியும்  சுக்கிரனும்  இணைந்து  இராசி  அம்சத்தில்   காணப்பட்டால்  இரு  தார  யோகம்  ஏற்படும் .
101 . 7 ல்  சுக்கிரன்,  சனி  இணைவு  இருந்தால்  இருதார  யோகம் 31 வயதில் ஏற்படும்

 கானு  லக்கினம்  நாலேழ்  பத்தினில்   கோணு  சுக்கிரன்   புத்தி இருந்தால்   தோணு  மற்றைய   தோஷங்கள்  யாவுமே   பானு  கண்ட   பனியென   அகலுமே.( 1,4,7,10 ல் புதன் ,சுக்கிரன் இருந்தால் தோசங்கள் யாவும் விலகி அதிர்ஷ்டம் உண்டாகும் )

. 7 ம்  வீட்டில்   அசுபர்கள்   அமையப் பெற்று   (அ)   பார்வை   செய்தால்  நல்ல  முறையில்   திருமணம் ஆகாது. உறவில்  திருமணம்  ஆக  தடை  கொடுக்கும்.

. 7 ல்  புதன்    இருந்தால் மாமான்  வழியில்  திருமண ஏற்படும் . 7 ம் அதிபதியும்  புதனும்   சேர்ந்து  குடும்பாதிபதியுடன்   இணைந்தால்  மாமான்   மகளை   மணம்  செய்யும்  அமைப்பு.

. 7 ம் அதிபதி  செவ்வாயுடன்    சேர்ந்து  (அ) செவ்வாய்  பார்வை  பெற்றால்  சகோதிரியின்  பெண்ணை  மணக்கும்   அமைப்பு.

. 7 ம்  அதிபதி  4 ம்  அதிபதியுடன்   இணைந்து  இருந்தால்  (அ) பார்வை பெற்றால்  தாய்  வழி   உறவில்  திருமணம்  ஏற்படும்.

 7  ம் வீட்டிற்கு  சந்திரன்  தொடர்பு  ஏற்பட்டாலும்  தாய்  வழி  உறவில்  திருமண  அமைப்பு    உண்டாகும்.

  7 ம்  அதிபதி  9 ம்  அதிபதியுடன்  சேர்ந்தாலும்  (அ)  பார்த்தாலும் (அ ) சூரியன்   தொடர்பு    இருந்தாலும்   தந்தை  வழியில்   திருமண  அமைப்பு  ஏற்படும்.

 (ஏக)   நட்சத்திரம்   ரோகிணி  , திருவாதிரை  , மகம் , அஸ்தம் , விசாகம் , திருவோணம் ,  உத்திராட்டாதி  ரேவதி  , ஆகிய   நட்சத்திரம்  ஒன்றாக   வந்தால் சிறப்பு  திசா  சந்திப்பு   கூட  தோஷம்  தாராது.

 பரணி , ஆயில்யம்  , சுவாதி  , கேட்டை , மூலம்  , சதயம் , அவிட்டம்  , பூரட்டாதி  இவை   ஏக  நட்சத்திரமாக  வந்தால்  திருமணம்  செய்யக்  கூடாது.

   ஆண் , பெண் இருவருக்கும்  27  ஆவது  ஆக  வந்தால்  இருவரும்  ஒரோ  ராசியாக வந்தால்    திருமணம்   செய்யலாம் . ஆனால்  வேறு  ராரியாக  வந்தால்   திருமணம்  கூடாது.   தினப் பொருத்தம் வராது  . சுக்கிரன்    1 , 5 , 9 ல்  அமைந்து   2 , 7 , 10 க்கு  உடையவர்  இணைந்து   10 ல்  பலம்  பெற்று  அமைந்தால்  காம  வெறி   இருக்கும். 60 வயது  ஆனாலும்   பெண் தேடுவார்.

 சுக்கிரன்  2 ல் இருந்து    7 ம்  அதிபதி 11 ல்  இருந்தால்  இளமையில்  திருமனம் ஏற்படும் . 7 ம் அதிபதி  சுபர்    ராசியில்   இருந்து   சுக்கிரன்   ஆட்சி  , உச்சம் , பெற்றாலும்  இளமையில்  திருமணம்  ஏற்படும்.    
      
. பெண்  நட்சத்திரத்திலிருந்து  ஆண்  நட்சத்திரம்  7  வது  ஆக  வந்தால்  திருமணம்  செய்யக்கூடாது. சில நட்சத்திரத்திற்கு  விதி விளக்கு   (உ . ம்)   திருவாதிரை ,  உத்திரம் . பூரம்  -  அனுசம் , சித்திரை  - அஸ்தம்  ஆகும்.

வியாழன், 22 ஜூன், 2017

திருமண பொருத்தம் -அதிர்ஷ்டமான கணவன் மனைவி- ஜோதிடம்


திருமண பொருத்தம் -அதிர்ஷ்டமான கணவன் மனைவி- ஜோதிடம்



திருமண பொருத்தம் பார்க்கும்போது பெண்ணின் தகப்பனார், பையனின் தகப்பனார் எல்லாம் ஒரே மாதிரிதான் இருக்கிறார்கள்..பையனும் டாக்டர் பொண்ணும் டாக்டர் ...பொருத்தம் லேசா வந்தா போதும் ஜோசியரே...எங்க எல்லோருக்கும் பிடிச்சிருக்கு.பொண்ணும் பையனும் விரும்புறாங்க..நீங்க எதுக்கும் ஜாதகத்தை ஒரு பார்வை பார்த்துடுங்க என்று ஆரம்பிப்பவர்கள் தான் அதிகம்.இதுக்கு என்ன அர்த்தம்னா ஜாதகம் இரண்டும் சூப்பர்...முதல் தரமான பொருத்தம்னு நான் சொல்லிட்டா போதும் என்பதுதான் அவங்க விருப்பம்.அப்புறம் எதுக்கு ஜாதக கட்டத்தில் கிரகங்கள்,நட்சத்திரம்,திசாபுத்தி ரஜ்ஜு யோனி பொருத்தமெல்லாம் இருக்கோ தெரியல.

3ஆம் அதிபதியும் கெட்டு 3ல் சூரியனும் அமைந்த வசதியான அழகான பையனுக்கு தேற்வதை மாதிரி அழகான பொண்ணை கட்டிக்கொடுத்தாங்க...பெண் வீடு கோடீஸ்வர குடும்பம்...கல்யாணம் ஆகி பத்து நாள் கூட ஆகலை..பொண்ணு டைவர்ஸ் கேட்டுச்சு.காரணம் பையனுக்கு ஆண்மையே இல்லை...முதலிரவில் குறட்டை விட்டு தூங்கினா எந்த பொண்ணுதான் சகிப்பா..? இரவில் நல்ல  உறவு இல்லையேல் கள்ளக்காதல் அல்லது டைவர்ஸ்தான் முடிவு இன்றைய காலம் அப்படித்தான் இருக்கிறது.

ஜாதகத்தை நன்கு அலசுங்கள்....கிரக அமைப்பை நன்கு பாருங்கள்...பொறுமையா பார்த்து சொல்லுங்கள் என்று ஜாதகங்களை கொடுத்தால் ஜோதிடருக்கும் ஒரு ஆர்வம் வரும் தான் கற்ற ஜோதிட அறிவை வைத்து நன்குபலன் பார்த்து சேர்க்க உதவுவார்....டநட்சத்திர பொருத்தம் ஒன்பது இருக்கு ..ஜோசியரும் ஆஹா ஓஹோன்னுதான் சொன்னார் அப்புறம் எப்படி பிரிஞ்சாங்க..? திசாபுத்தி சரியில்லை...அஷ்டமாதிபதி திசை ,மாரகாதிபதி ,பாதகாதிபதி திசை ,நடக்கும் ஜாதகத்தை சேர்த்தால் பிரியத்தான் செய்வார்கள்...

பொண்ணுக்கு ஆயில்ய நட்சத்திரமாக இருந்தாலும் பத்தாம் அதிபதி வலிமையாக இருப்பின் மாமியாருக்கு ஒன்றும் ஆகாது ஆயுள் கெட்டி.

மூலம் நட்சத்திரமாக இருப்பினும் மூன்றாம் இடம் மாமனார் ஸ்தானம் வலிமையாக அமைந்தால் மாமனார் செல்வாக்காக இருப்பார் தீர்க்காயுளுடன் வாழ்வார்....மருமகள் வந்த பின் புகழும் செல்வாக்கும் அவருக்கு கூடும்.

நல்ல நட்சத்திரமாக இருந்தும் மாமனார் மாமியார் ஸ்தானம் கெட்டு ,கர்மாதிபதி திசை நடந்தால் குடும்பத்தோடு விபத்தை சந்திப்பார்கள் நிறைய ஜாதகங்களில் இதை பார்த்திருக்கிறோம்...

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் யோனி பொருத்தம் கொடுத்திருக்காங்க...அதை நன்கு கவனித்து சேர்த்தனும்....புலியோடு (விசாகம்)  ஆட்டை சேர்க்க முடியாது...(பூசம்)..அடித்து சாப்பிட்டு விடும்.

எருமையோடு (சுவாதி) எருமையை (அஸ்தம்)சேர்க்க கூடாது..இரண்டும் குட்டையில் கிடக்கும் எருமை போல கிடந்து வீடு குட்டி சுவராகிவிடும்.

யோனி என்பது தாம்பத்யம் எப்படி இரவில் உறவு எப்படி திருப்தியான தாம்பத்யமா என சொல்லக்கூடிய முக்கியமான பொருத்தம் அதை நன்கு கவனித்து சேர்க்க வேண்டும்..


அசுவினி - ஆண் குதிரை
பரணி - ஆண் யானை
கார்த்திகை - பெண் ஆடு
ரோகிணி - ஆண் நாகம்
மிருகசீரிஷம் - பெண் சாரை
திருவாதிரை - ஆண் நாய்
புனர்பூசம் - பெண் பூனை
பூசம் - ஆண் ஆடு
ஆயில்யம் - ஆண் பூனை
மகம் - ஆண் எலி
பூரம் - பெண் எலி
உத்தரம் - எருது
அஸ்தம் - பெண் எருமை
சித்திரை - ஆண் புலி
சுவாதி - ஆண் எருமை
விசாகம் - பெண் புலி
அனுஷம் - பெண் மான்
கேட்டை - கலைமான்
மூலம் - பெண் நாய்
பூராடம் - ஆண் குரங்கு
உத்திராடம் - மலட்டு பசு (சில பஞ்சாங்கங்களில் கீரி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.)
திருவோணம் - பெண் குரங்கு
அவிட்டம் - பெண் சிங்கம்
சதயம் - பெண் குதிரை
பூரட்டாதி - ஆண் சிங்கம்
உத்திரட்டாதி - பசு
ரேவதி - பெண் யானை


ஆண்,பெண் இருவருடைய யோனி வித்தியாசங்களை அவர்களுடைய ஜென்ம நட்சத்திரம் மூலமாக கண்டறிந்து அவை பரஸ்பரம் இணைவதற்கு ஏற்றவைதானா என்பதை கண்டறிவது யோனிப்பொருத்தம் பார்ப்பதின் நோக்கமாகும்.

மிருகங்கள் புணர்ச்சியில் ஈடுபடும்போது குண பேதங்கள் காணப்படும். உதாரணமாக ஆடுகள் அடிக்கடி புணர்ச்சியில் ஈடுபடும். ஆனால் புணர்ச்சி நேரம் மிகவும் குறைவுதான். நாய்கள் அடிக்கடி புணர்ச்ச்சியில் ஈடுபடுவதில்லை, ஆனால் புணர்ச்சி நேரம் அதிகமாகும்.


பூனை, புலி,சிங்கம் போன்ற மிருகங்கள் புணர்ச்சியின்போது மிகவும் ஆக்ரோஷமாக செயல்படும்.
யானை,நாகம் போன்றவை மறைவான இடத்தில் மட்டுமே புணர்ச்சியில் ஈடுபடுபவை.
அவரவர் ஜென்ம நட்சத்திரத்தை தெரிந்துகொண்டால் அவரின் எண்ணம் மற்றும் செயல்பாடுகள் செக்ஸ் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துகொள்ளலாம்.


நாயும் குரங்கும் சேர்த்தால் என்னாகும்..? 

குரங்கினை கண்டால் நாய் எப்படி துரத்தும் என பார்த்திருப்போம்..பூனையும் அப்படித்தான் நாய்க்கு ஆகாது...

எலியை கண்டால் பூனை விடாது ..பாம்பும் விடாது..இவை எல்லாம் இயற்கையில் பகை.

இப்படி இயற்கையான பகை விலங்குகளை சேர்ப்பது நிஜ வாழ்வில் அவர்களை ஒற்றுமையில்லாமல் ஆக்கிவிடும்.

ஒரே நட்சத்திரக்காரர்களை சேர்க்க கூடாது என்ன காரணம்..? இருவருக்கும் ஒரே திசை கடைசி வரை தொடரும் அவை வாழ்வில் கடும் சோதனைகளை தரும் 

எனவே ஒரே நட்சத்திரங்கள் வாழ்வில் முன்னேற்றம் தருவதில்லை திடுக்கிடும் திருப்பங்களை வாழ்வில் தந்துவிடும் அல்லது கிணற்றில் போட்ட கல்லாக வாழ்க்கை மிக மந்தமாக நகரும்.இதுவே ரஜ்ஜு பொருத்தம் எனப்படும்..

ஜாதகத்தில் இருவருக்கும் என்ன திசை நடக்கிறது என்பதை கவனித்து சேர்க்க வேண்டும்...

.கணவருக்கு இந்த திசை என்ன செய்யும் மாமனார்க்கு என்ன செய்யும் மாமியாருக்கு என்ன செய்யும் என்பதை கவனிக்க வேண்டும்.

இருவருக்கும் குடும்ப ஸ்தானம் கெட்டிருக்கிறதா இருவருக்கும் கணவன் மனைவி ஸ்தானம் நன்றாக இருக்கிறதா என்பதை ஆராய்வது முக்கியம்.

7ஆம் இடத்தில் ஒருவருக்கு பல கிரகங்கள் இருந்து இன்னொருவருக்கு 7 சுத்தமாக இருப்பின் ஒத்து வராது...தாம்பத்யம் சிறக்காது ..ஒருவர் செக்ஸ் ஆசை அதிகமுடையவர் இன்னொருவர் ஆசையே இல்லாதவர்....ஒருநாள் தாம்பத்யம் வைத்துக்கொண்டதும் என்னால முடியல 15 நாளைக்கு கிட்டயே வராதீங்க என்று சொன்னால் கணவன் என்ன செய்வான்..? 

ஆண்பெண் இருவருக்கும் யாரையும் பாதிக்காத நல்ல திசை நடப்பது முக்கியம்..எதிரெதிர் திசைகள் நடப்பதும் ஆகாது..ஒருவருக்கு சந்திர திசை இன்னொருவருக்கு ராகு திசை இது கிரகணம் போன்றதாகும். இவை வாழ்வை இருளாக்கிவிடும்.

ஜாதகத்தில் ஒருவருக்கு சுக்கிரன் இருக்கும் ராசியில் இன்னொருவருக்கு கேது இருந்தால் ஒருநாளும் சந்தோசம் இருக்காது.

சுக்கிரன் குரு சந்திரன் இருவருக்கும் எப்படி என்பதையும் பார்க்க வேண்டி இருக்கிறது..

திருமண பொருத்தம் பற்றி நிரைய கட்டுரைகள் எழுதி இருக்கிறேன்...தேடி அதையும் படித்து பாருங்கள்..நிதானமாக நன்கு ஆராய்ந்து பொருத்தம் பாருங்கள் அவசரப்பட்டால் காலம் முழுக்க கண்ணீர் சிந்த வேண்டி வரும்.








திங்கள், 6 மார்ச், 2017

திருமண பொருத்தம் பார்க்குறீங்களா..இதப் படிங்க முதல்ல

திருமண பொருத்தம் ஜோதிட விதிமுறைப்படி பார்க்கும் ஜோதிடர்கள் மிக குறைவாகிவிட்டனர்.நட்சத்திர பொருத்தம் மட்டும் பார்ப்பதோடு சரி.பையன் வீட்டார்,பெண் வீட்டார் மனநிலை புரிந்து ,பொருத்தம் சொல்லிடுறாங்க.ஜாதக கட்டம் கூட பார்ப்பதில்லை.ஒருவருக்கு நாகதோசம் இருந்தால் இன்னொருத்தருக்கும் நாகதோசம் இருக்கனும்..செவ்வாய் ஒருவருக்கு இருந்தால் இன்னொருத்தருக்கும் செவ்வாய் தோசம் இருக்கனும்.இவை சாதாரணம் அல்ல.இருவரது உடல் தாம்பத்யம்,மனப்பொருத்தம் சார்ந்த முக்கிய பொருத்தங்கள்...
இரவு வாழ்க்கை முக்கியம் ..இரவும் இல்லை..உறவும் இல்லை என ஒருவருக்கு ஜாதகத்தில் இருந்துவிட்டாலும் பிரிவை தடுக்க முடியாது.ராசி பொருத்தம்,லக்ன பொருத்தம்,அதன் பின் தான் நட்சத்திர பொருத்தம்,ஜாதக பொருத்தம்,பார்க்கனும்.இருவருக்கும் நடக்கும் திசை இருவர் குடும்பத்தையும் முன்னேற்றுமா குப்புற தள்ளுமா என்பதையும்,பையன் ஜாதகத்தில் மனைவியை மதிப்பானா ,மிதிப்பானா,பொறுப்பாக குடும்பம் நடத்தும் தகுதி இருக்கா என்பதையும் ,அவன் ஒழுக்கம்,தாம்பத்ய நிலை,சம்பாத்யம்,தொழில் ஸ்தானம்,மாமனார் மாமியார் ஸ்தானம் உட்பட கவனிக்க இயலும்...
3ஆம் இடம் காம ஸ்தானம்..அது மிகப்பலமாக இருந்துவிட்டாலும் சிக்கல்....ரொம்ப பலவீனமாக இருந்துவிட்டாலும் சிக்கல்...12ஆம் இடம் இரவில் நடக்கும் உறவை சொல்லுமிடம்...அது பலமாக இருந்துவிட்டால் இரவு தாண்டி பகலும் படுக்கை சுகம்.12ஆம் இடம் கெட்டால் இரவு நரகமாகிவிடும்..இப்படி நிறைய இருக்கு.பொருத்தம் பார்ப்பதில் அதிக அக்கறை தேவை என்பதற்காக இதை எழுதுகிறேன்.

----------------------------------------------------
சுக்கிரன் உச்சமாக இருக்கிறார்.ஒரு துறையில் சர்ச்சை வருகிறது அதன் அதிபதி கிரகம் கோட்சாரப்படி பலமோ பலவீனமோ அடைந்திருக்கும். சர்ச்சை வந்ததால் இதனால்தான் என யோசித்தேன்.எழுதுகிறேன் அவ்வளவுதான்.
..சினிமாவுக்கு சுக்கிரன் தான் அதிபதி.சுக்கிர பலம் இல்லையேல் கலைத்துறைக்கு வர முடியாது.ஆட்டம்,பாட்டம்,கொண்டாட்டம்தான் சுக்கிரனின் குணமே..சுக்கிரன் என்றாலே ஆடம்பரம்,எல்லாவித சுகம் அனுபவித்தல் தான்.சுக்கிரன் கெட்டவர்களுக்கு சுகம் கிடைக்காது.கஷ்டப்பட்டு சுகம் அனுபவிக்கனும்.சுக்கிரன் பலமா இருந்தா சுகம் தேடி வரும்.சுக்கிரன் பணத்துக்கு அதிபதி என்பதால்தான் சிறிது தகுதி இருந்தாலும் சினிமா துறையில் பெரும் பணம் கிடைக்கிறது.
.துலாம் ராசியின் குணமும் அதுதான்.சுக்கிரனின் ராசியல்லவா.எல்லோரிடமும் கூடி கொண்டாடவே விரும்புவர்.தனிமை இவர்களுக்கு பிடிக்காது.சுக்கிரன் உச்சமாக தற்போது இருப்பதால் உல்லாசம் சார்ந்த சர்ச்சைகள் வருகின்றன..புதன் விரைவில் நீச வீடு மீனத்துக்கு செல்வார்.அப்போது புதனுக்குண்டான கணக்குகள் துறை சார்ந்தவை,கல்வி துறை சார்ந்த சர்ச்சைகள் வெளியாகும்..
=================
கடந்த 7 வருடமாக குழந்தைகளுக்கு நியூமராலஜிபடி பெயர் வைத்துக்கொண்டிருக்கிறேன்.அதிர்ஷ்ட ஜோதிடம் நியூமராலஜி புக் எழுதிய சமயத்தில் அதிகம் தபால் வரும்...குழந்தைக்கு ஜாதகம் கணித்து பிடிச்சதை வெச்சிக்கலாம்னு ஏழு விதமான பெயர்கள் எழுதி ஜாதக பலனும் எழுதி தபாலில் அனுப்புவேன்.இப்ப வாட்சப்,மெயில் பிரபலம் ஆகிட்டதால இதில்தான் அதிகம்.இப்போதெல்லாம் நட்சத்திரப்படி மட்டும் அல்ல,நியூமராலஜிபடி பெயர் வைப்பதும் ஒரு கட்டாய சம்பிரதாயம் ஆகிவிட்டது...!!!
============================
மேசம்,கடகம்,துலாம்,மகரம் இவை எல்லாம் சர ராசிகள்.வேகம் அதிகம்.,எதுவா இருந்தாலும் இப்பவே நடக்கனும் என்பார்கள்...ராசி,லக்னம் இரண்டுமே மேலே இருக்கும் நான்கு ராசிகளில் இருந்தால் ஜெட் வேகம்தான்.எதையும் அவசரமா செஞ்சுட்டு அப்புறம் கலங்கி நிற்பார்கள்..
நிறைய பயணம் இவர்கள் தான் செய்வார்கள்..காலில் சக்கரம் என்பது இவர்களுக்குதான்.எதையாவது முயற்சி செய்து கொண்டே இருப்பது,யாரிடமாவது பேசிக்கொண்டே இருப்பது,தனக்கு செய்ய வேலை இல்லைன்னா அடுத்தவங்க வேலையை தன்னுடையது போல இழுத்துப்போட்டுக்கொண்டு செய்வார்கள்..!!
நல்ல மனசு,தங்க குணம்...சொந்த வாழ்வில் நிறைய போராட்டம் இருந்தாலும், மனதில் அழுதாலும், வெளியே சிரிக்கும் அன்புள்ளம் கொண்டவர்கள்..!! கடவுள் துணை நிற்க்கட்டும்.

திங்கள், 25 ஜனவரி, 2016

திருமண பொருத்தம் ;வீட்டோடு மாப்பிள்ளை யார்?


1. ஆண் ஜாதகத்தில் குருவும், சுக்கிரனும் இணைந்து சுக்கிரனின் வீடுகளான ரிசபம் அல்லது துலாத்தில் இருந்தால் நிச்சயம் ஜாதகன் வீட்டோடு மாப்பிள்ளையாய் மனைவி வீட்டில் தங்கிவிடுவான்.

2. ஆண் ஜாதகத்தில் சுக்கிரனின் வீடுகளான ரிசபம் அல்லது துலாத்தில் குரு தனித்து இருந்தாலும் ஜாதகன் மனைவி வழி ஆட்களுடன் மட்டும் அதிகம் தொடர்பில் இருப்பான்.

3. ஆண் ஜாதகத்தில் சுக்கிரனின் வீடுகளான ரிசபம் அல்லது துலாத்தில் சுக்கிரன் தனித்து ஆட்சி பெற்று இருந்தால் ஜாதகரின் மனைவி தன் தாய் வீட்டில் இருப்பதையே பெரிதும் விரும்புவாள். பெரும்பாலும் தாய் வீட்டிலேயே காலத்தை கழிப்பாள்.

4. பெண் ஜாதகத்தில் செவ்வாயும், சுக்கிரனும் இணைந்து சுக்கிரனின் வீடுகளான ரிசபம் அல்லது துலாத்தில் இருந்தால் ஜாதகியின் கணவன் வீட்டோடு மாப்பிள்ளையாய் ஜாதகி வீட்டில் தங்கிவிடுவான்.

5. பெண் ஜாதகத்தில் சுக்கிரனின் வீடுகளான ரிசபம் அல்லது துலாத்தில் செவ்வாய் தனித்து இருந்தாலும் ஜாதகியின் கணவன் ஜாதகி வழி ஆட்களுடன் மட்டும் அதிகம் தொடர்பில் இருப்பான்.

6. பெண் ஜாதகத்தில் சுக்கிரனின் வீடுகளான ரிசபம் அல்லது துலாத்தில் சுக்கிரன் தனித்து ஆட்சி பெற்று இருந்தால் ஜாதகி திருமணத்திற்கு பின்னும் தன் தாய் வீட்டில் இருப்பதையே பெரிதும் விரும்புவாள். பெரும்பாலும் தாய் வீட்டிலேயே காலத்தை கழிப்பாள்.


 7-ஆம் அதிபதி 7-ல் இருந்தால் வீட்டோடு மாப்பிள்ளை ஆவார்கள்.மனைவிக்கு அடிபணிவார் கள். மனைவி வசதியுள்ளவார்.சுபகிரகமாக இருந்தால் மதிப்பு மரியாதையுடன் இருக்கலாம்..பாவ கிரக சம்பந்தம் இருந்தால் மதிப்பில்லாமல்தான் அங்கும் இருக்க முடியும்..

லக்னத்துக்கு மூன்றாம் வீடு மாமனாரை குறிக்கும்.. அங்கு சுபர் இருந்தாலோ 3ஆம் அதிபதி கேந்திர திரிகோணங்களில் இருந்தாலோ மாமனார் மதிப்பார்...மாமனார் மீது இவருக்கும் பாசம்,அன்பு உண்டாகும்...3க்குடையவன் 7ல் இருந்தால் மாமனாரால் தொல்லைகள் தான் உண்டாகும்..சந்திரன் 7ல் இருந்தால் அம்மாவால் குடும்ப வாழ்வில் தொல்லைகள் உண்டாகும்..




ஞாயிறு, 24 ஜனவரி, 2016

திருமண பொருத்தம் ;கணவன் /மனைவி அமையும் இடம் பக்கமா, தூரமா?


திருமண பொருத்தம் ;ஆண் ஜாதகத்தில் ஜாதகரைக் குறிக்கும் குருவுக்கும், ஜாதகரின் மனைவியைக் குறிக்கும் சுக்கிரனுக்கும் இடப்பட்ட தூரத்தைக் கொண்டு மனைவி அமையும் இடம் பக்கமா? அல்லது தூரமா? என்பதை அறியலாம்.


1. ஆண் ஜாதகத்தில் குரு நின்ற ராசிக்கு 1-2-3-11-12ல் சுக்கிரன் நின்றால் மனைவியின் இருப்பிடம் பக்கத்தில் அமைந்திருக்கும்.
2. ஆண் ஜாதகத்தில் குரு நின்ற ராசிக்கு 5-7-9ல் சுக்கிரன் நின்றால் மனைவியின் இருப்பிடம் தூரத்தில் அமைந்திருக்கும். இதே போல் பெண் ஜாதகத்தில் ஜாதகியைக் குறிக்கும் சுக்கிரனுக்கும், ஜாதகியின் கணவனைக் குறிக்கும் செவ்வாய்க்கும் இடைப்பட்ட தூரத்தைக்கொண்டு கணவன் அமையும் இடம் பக்கமா?தூரமா? என்பதை அறியலாம்.

பெண் ஜாதகத்தில் சுக்கிரன் நின்ற ராசிக்கு 1-2-3-11-12ல் செவ்வாய் நின்றால் கணவனின் இருப்பிடம் பக்கத்தில் அமைந்திருக்கும்.
2. பெண் ஜாதகத்தில் சுக்கிரன் நின்ற ராசிக்கு 5-7-9ல் செவ்வாய் நின்றால் கணவனின் இருப்பிடம் தூரத்தில் அமைந்திருக்கும்.    

7ஆம் அதிபதி என்ன நட்சத்திரத்தில் இருக்கிறார்..? அந்த நட்சத்திர அதிபதி எங்கு இருக்கிறார் என்பதையும் கவனிக்க வேண்டும்...4ஆம் பாவம் இதில் சம்பந்தப்பட்டால் அம்மா ஊரில் அல்லது அம்மா வழி தூரத்து உறவில் அமையும் 9ஆம் பாவத்திலோ சூரியனுடனோ சம்பந்தப்பட்டால் தந்தை வழி தூரத்து உறவு தந்தை ஊரில் அமையலாம்...

5ஆம் அதிபதி பாக்யாதிபதி ஏழாம் அதிபதி மூவரும் சம்பந்தம் ஆனால் காதல் திருமணம் என எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை பூர்வீக ஊரிலும் கணவனோ மனைவியோ அமைந்து விடும்...


சனி, 22 ஆகஸ்ட், 2015

நட்சத்திர பொருத்தம் பார்ப்பது எப்படி?திருமண பொருத்தம்

 ஆண், பெண் இருவருடைய நட்சத்திரப்படி இருவருக்கும் எத்தனை பொருத்தம் இருக்கிறது என பார்ப்பது எப்படி..? 10 பொருத்தங்களில் எத்தனை பொருத்தம் வருகிறது என பார்க்கும் சூத்திரம் இங்கு சொல்லப்பட்டிருக்கிறது.இது தவிர ஜாதக பொருத்தமும் பார்க்க வேண்டும் அது சம்பந்தமாக 10 கட்டுரைகளுக்கு மேல் எழுதி இருக்கிறேன் .அதையும் ஒருமுறை படிக்கவும்...


1) தினம்:- பெண் நட்சத்திரம் முதல் பிள்ளை நட்சத்திரம் வரை எண்ணி அதை 9 ஆல் வகுத்து மிச்சம் 2, 4, 6, 8, 9 என வந்தால் தினப்பொருத்தம் உண்டு. மற்றவை வந்தால் பொருத்தம் இல்லை.

2) கணம்:- ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் என்ன கணம் என பஞ்சாங்கத்தில் அறியலாம். ஆண், பெண் இருவருக்கும் ஒரே கணம் ஆனாலும், தேவ கணம், மனுஷ கணமானாலும் கணப் பொருத்தம் உண்டு. பெண் மனுஷ கணமும் பிள்ளை ராட்சஷ கணமானாலும் பொருத்தம் உண்டு.

3) மகேந்திரம்:- பெண் நட்சத்திரம் முதல் பிள்ளை நட்சத்திரம் வரை எண்ணும்பொழுது 4, 7, 10, 13, 14, 19, 22, 25 என வந்தால் மகேந்திரப் பொருத்தம் உண்டு.

4) ஸ்திரீ தீர்க்கம்:- பெண் நட்சத்திலிருந்து பிள்ளை நட்சத்திரம் 7க்கு மேல் இருந்தால் ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம் உண்டு.

5) யோனி:- நட்சத்திரங்களுக்குரிய விலங்குகள் பஞ்சாங்கத்தில் உள்ளன. பகை விலங்குகளின் விளக்கம் கீழே உள்ளது.

குதிரை - எருமை, யானை - சிங்கம், ஆடு - குரங்கு, பாம்பு - எலி, பசு - புலி, எலி - பூனை, கீரி - பாம்பு, மான் - நாய், ஆண் - பெண் நட்சத்திரங்களின் விலங்குகள் பகையாக இல்லாமல் இருந்தால் யோனிப் பொருத்தம் உண்டு.

6) ராசி:- பெண் பிள்ளை இருவருக்கும் ஒரே ராசியாக இருந்தாலும் பெண்ணிற்கு பிள்ளை ராசி 7, 9, 10, 11. 12 இருந்தாலும் ராசிப் பொருத்தம் உண்டு.

7) ராசி அதிபதி:- பெண் ராசிக்கு அதிபதி பிள்ளை ராசி அதிபதிக்கு நட்பு அல்லது சமமாக இருந்தால் ராசி அதிபதி பொருத்தம் உண்டு.

வசியம்:- பெண் ராசிக்கு பிள்ளை ராசி வசியமாக இருந்தால் வசியப் பொருத்தம் உண்டு. வசிய ராசிகளில் விளக்கம் பஞ்சாங்கத்தில் காணலாம்.

9) ரஜ்ஜு (மாங்கல்யம்):- நட்சத்திரங்களுக்கு உண்டான ரஜ்ஜுக்கள் பஞ்சாங்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. பெண் ரஜ்ஜுவும் பிள்ளை ரஜ்ஜுவும் ஒன்றாக இல்லாமல் இருந்தால் ரஜ்ஜு அல்லது மாங்கல்யப் பொருத்தமுண்டு.

10) நாடி:- 27 நட்சத்திரங்களும் மூன்று பிரிவுகளாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

அ) அஸ்வினி, திருவாதிரை புனர்பூசம், உத்திரம், அஸ்தம், கேட்டை, மூலம், சதயம், பூரட்டாதி.

ஆ) பரணி, மிருகசிரிடம், பூசம், பூரம், சித்திரை, அனுஷம், பூராடம், அவிட்டம், உத்திரட்டாதி.

இ) கிர்த்திகை, ரோகிணி, ஆயில்யம், மகம், சுவாதி, விசாகம், உத்திராடம், திருவோணம், ரேவதி.

பெண், ஆண் நட்சத்திரங்கள் ஒரே பிரிவில் இல்லாமல் வெவ்வேறு பிரிவில் இருந்தால் நாடிப் பொருத்தம் உண்டு.

எனவே மொத்தம் 10 பொருத்தங்களில் 6-க்கு மேல் இருந்தால் திருமணப் பொருத்தம் உண்டு. எனினும் கீழே கொடுத்துள்ள பொது விதிகளையும் கவனிக்க வேண்டும்.

அ) ரஜ்ஜு அல்லது மாங்கல்யப் பொருத்தம் இல்லை என்றால் திருமணம் செய்யக்கூடாது.

ஆ) தினம்,கணம், யோனி, ராசி, ரஜ்ஜு - இந்த ஐந்தும் முக்கியமானப் பொருத்தங்கள்.

இ) பெண், பிள்ளை இருவரும் ஒரே ராசியாக இருந்தால் 10 பொருத்தங்களும் உண்டு.

ஈ) பெண், பிள்ளை இருவருக்கும் ஒரே நட்சத்திரமாக இருந்து பரணி, ஆயில்யம்,சுவாதி, கேட்டை,மூலம், அவிட்டம், சதயம், பூரட்டாதி ஆக இல்லாமல் இருந்தால் 10 பொருத்தங்களும் உண்டு.

இவற்றுடன் செவ்வாய் தோஷம் சமமாக இருப்பின் திருமணம் செய்யலாம்.

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

திருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள்ள‍ வேண்டிய ஜோதிட விதிகள்




திருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள்ள‍ வேண்டிய ஜோதிட விதிகள்

1. முதல் விதி

திருமணம் செய்யும் மணமக்களின் நட்சத்திர பொருத்தம் மட்டுமல்ல..இருவருக்கும் ஜாதக பொருத்தமும் பார்க்க வேண்டும்..ரெண்டு பேருக்கும் ஒன்பது பொருத்தம் இருந்தாலும் ஜாதக பொருத்தம்,லக்னபொருத்தம்,ராசி பொருத்தம் இல்லாவிட்டால்,8 மாதம் கூட குடும்ப வாழ்க்கை நீடிக்காது..ஒன்பது பொருத்தம் இருந்தாலும் ஒத்து வராது....ஒன்போது பொருத்தம் இருக்குன்னு அந்த ஜோசியன் சொன்னானே என புலம்பி பிரயோஜனம் இல்லை.நட்சத்திர பொருத்தம் வேறு..ஜாதகத்தில் கிரகங்களின் வலிமை வேறு.

இருவரது ராசியும் ஒருவருக்கொருவர் 6,8,12ல் மறைய கூடாது..இருவரது லக்னமும் ஒருவருக்கொருவர் 6,8,12ல் மறைய கூடாது..இருவரது குருவும்,சுக்கிரனும் மறைய கூடாது கெடக்கூடாது....அப்போதுதான் இருவருக்கும் ஒற்றுமையும்,அன்பும்,பாசமும் பலமாகும்..இருவருக்கும் குடும்ப ஸ்தானம் எனும் லக்னத்துக்கு இரண்டாம் இடம் கெடாமல் இருந்தால் குடும்பம் எப்போதும் கெடாது.இருவருக்கும் ஒரே திசை நடக்க கூடாது.இருவருக்கும் ஏழரை சனி நடக்க கூடாது...இருவருக்கும் குருபலம் இருந்தால் நல்லது.அல்லது மணப்பெண்ணுக்காவது குருபலம் இருக்க வெண்டும்.


திருமணம் மல மாதத்தில் இடம்பெறக்கூடாது. மலமாதம் என்பது இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமி ஒரே மாதத்தில் வருவது.

2. இரண்டாவது விதி
வைகாசி,  ஆவணி, ஐப்பசி,கார்த்திகை,தை, மாசி,மாதங்களில் திருமணம் செய்யலாம்..

3. மூன்றாவது விதி
இயன்றவரை வளர்பிறை  காலத்திலேயே திருமணம் செய்வது நல்லது

4. நான்காவது விதி

தமிழகத்தில் செவ்வாய்,சனி திருமணம் செய்வதில்லை..திருமணம் செய்ய வேண்டிய லக்னங்கள் -
ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு,கும்பம்,திருமனம் செய்ய வேண்டிய நட்சத்திரங்கள்-ரோகிணி,மிருகசிரீடம்,மகம்,உத்திரம்,அஸ்தம்,சுவாதி,அனுஷம்,மூலம்,உத்திராடம்,
திருவோணம்,சதயம்,உத்திரட்டாதி,ரேவதி,அசுவினி,புனர்பூசம்,பூசம்,
சித்திரை,அவிட்டம்,சதயம்

5. ஐந்தாவது விதி

துவிதியை, திரிதியை, பஞ்சமி, ஸப்தமி, தசமி, திரயோதசி ஆகிய சுப திதிகள்நல்லது.

6. ஆறாவது விதி
முகூர்த்த லக்கினத்துக்கு 7ம் இடம். முகூர்த்த நாளன்று சுத்தமாக இருக்க வேண்டும்.முகூர்த்த லக்னத்துக்கு 3,6,11 பாபர் நல்லது.8ல் குரு ஆகாது,6,8ல் சுக்கிரன்,புதன் கெடுதல்,2,3ல் சந்திரன் மிக நல்லது.7ஆம் இடத்தில் பாவர் இருந்தால் கெடுதல்

7. ஏழாவது விதி

அக்கினி நட்சத்திரம் காலகட்டத்தில் திருமணம் நடத்தக்கூடாது.வைகாசியில் எவ்வளவு காலம் அக்னி நட்சத்திரம் இருக்கிறது..அதில் முகூர்த்தம் வந்தால் தவிர்த்துவிடவும்.தனிய நாள்,கரிநாள் ,மரணயோகம்,இவைகள் ஆகாது

8. எட்டாவது விதி
திருமணத்தின் போது குரு, சுக்கிரன் போன்ற சுபகிரகங்கள் திருமண லக்கினத்துக்கும் மணமக்களின் ஜனன ராசிக்கும் எட்டாம் வீட்டில் இடம் பெற்றிருக்க கூடாது.

9. ஒன்பதாவது விதி

திருமணநாள் மணமக்களின் சந்திராஷ்டம தினமாக இல்லாமல் இருப்பது மிகமிக முக்கியமான விதி.தாரா பலன் பார்த்துதான் முகூர்த்த நாளை குறிக்க வேண்டும் எல்லா முகூர்த்தமும் எல்லோருக்கும் ஏற்றது அல்ல..

10. பத்தாம் விதி.

மணமக்களின் ஜனன நட்சத்திர நாளிலும்,.பிறந்த கிழமை,மணப்பெண் பிறந்த தமிழ் மாதம் ஆகாது..மணப்பெண்ணின் 10,19 ம் நட்சத்திரங்களிலும் ஆணின் 10 வது நட்சத்திரத்திலும் திருமணம் செய்யலாம்..

11. பதினொன்றாம் விதி

கடைசியாக மணமக்களின் பிறந்த தேதி அல்லது கிழமைகளிலும் கல்யாணம் பண்ணக்கூடாது.சாந்தி முகூர்த்தம் நேரம் மிக முக்கியம்..திருமணம் நடக்கும் நாள் முகூர்த்த நாளாக இருப்பதால் அன்றே வைப்பதும் நல்லதுதான்..வேறு நாளில் வைப்பதாக இருப்பின் ஒரு லக்னம் குறித்துதான் நேரம் வைப்பார்கள் அந்த லக்னத்துக்கு 1,7,8ஆம் இடம் சுத்தம்..ஜென்ம நட்சத்திரம் அன்று ஆகாது...எமகண்டம்,ராகுகாலம் ஆகாது,,இரவிலும் எமகண்டம் உண்டு..அதை கவனித்து நேரம் குறிக்க வேண்டும்...முதல்முறை நல்ல நேரத்தில் தாம்பத்யம் கொள்வதே நல்லது...

. அவரவர் குலதெய்வத்தை மனதில் வேண்டிக்கொண்டு உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆசியுடன் நல்லதொரு நாளை
குறியுங்கள்...காலண்டரில் பார்த்து வளர்பிறை முகூர்த்தம் அருமை என குறிக்க கூடாது..மணமக்களின் இருவர் ஜாதகத்தையும் தகுந்த ஜோதிடரிடம் கட்டி அவர் ஆலோசனையின் பேரில் நள் குறிப்பதே சிறப்பு.

திங்கள், 30 மார்ச், 2015

திருமண பொருத்தம் -இதை முதலில் கவனிங்க..!

திருமண பொருத்தம் ;

திருமண பொருத்தம் பார்க்கும் போது,அத்தை பொண்ணு ,மாமன் பையன் என உறவு முறையாக வந்தால் திருமண பொருத்தம் பார்க்க தேவையில்லை...இருவரும் காதலித்தால் ஜாதகம் எடுத்துக்கொண்டு ஜோசியரிடம் போக வேண்டாம்..பொருத்தம் பார்க்க வேண்டாம்..இவையெல்லாம் மனப்பொருத்தம் அடிப்படையில் ராசி வசியம் அடிப்படையில் ராசிப்பொருத்தம் என வந்துவிடும். அதற்கு பொருத்தம் பார்க்க வேண்டாம்...

அந்நியத்தில் பார்த்தால் மட்டும் திருமண பொருத்தம் பார்த்தால் போதுமானது...ரோகிணி ,திருவாதிரை,பூசம்,மகம்,அஸ்தம்,திருவோணம்,இவை ஆறும் ஆண்,பெண்களுக்கு ஒரே நட்சத்திரமாக வந்தால் திருமணம் செய்யலாம்....திருவாதிரை ஆணும் ரோகிணி பெண்ணும் வந்தால் பொருத்தம் வருமா என கேட்டால் வராது ..இருவரும் ரோகிணியாக இருந்தால் செய்யலாம்..

இருவரின் பிறந்த நட்சத்திரத்துக்குண்டான மிருகங்களை பாருங்கள் ..ரோகிணி நட்சத்திரம் ஆண்நாகம்..மகம் ஆண் எலி...எலியும் பாம்பும் பகை...எலியும், பாம்பும் ஒரு வீட்டில் இருக்க முடியுமா..? பாம்புக்கு எலி கட்டுப்பட்டது...

பொருத்தம் பார்க்கும்போது சந்திரனுக்கு 8ஆம் அதிபதி கெடக்கூடாது லக்னத்துக்கு 7ஆம் அதிபதி கெடக்கூடாது..இதுபோல சுக்கிரனுக்கும்,குருவுக்கும் பார்க்கலாம்..இருவரது ராசியும்,லக்னமும் ஒன்றுக்கொன்று மறையக்கூடாது...மறையாமல் இருந்தால் ஒற்றுமை,அன்பு நிலைத்திருக்கும்..ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் கெடக்கூடாது..கெட்டால் குழந்தை பாக்ய பிரச்சினை உண்டாகும் பெண் ஜாதகத்தில் குரு கெடாமல் இருக்க வேண்டாம் இருவருக்கும் கெட்டிருந்தால் பிரச்சினை இல்லை..ஒருவருக்கு நன்றாக இருந்து ஒருவருக்கு கெட்டிருந்தால் அங்கு சந்தோசம் இருக்காது..

7ஆம் இடம் தாம்பத்யம்..12ஆம் இடம் இரவில் உண்டாகும் சந்தோசம்..12 கெட்டுப்போனால் இரவும் இல்லை உறவும் இல்லை...ஆணுக்கு 3ஆம் இடம் கெட்டுப்போனால் வீரியம் இல்லை..3ஆம் இடம் வலுத்த பெண்ணுக்கு 3 கெட்ட பையனை திருமணம் செய்து வைத்தால் தப்பாகிவிடும்...உறவு மாறிவிடும்..7ஆம் இடத்தில் இருக்கும் கிரகம்,7ஆம் இடத்தை பார்த்த கிரகம்,7ஆம் அதிபதியுடன் சேர்ந்த கிரகங்கள் எல்லாம் கணித்து திருமண பொருத்தம் பார்க்கும் முறை கடினமானது ஆனால் நம்பகமானது...வெறுமனே நட்சத்திர பொருத்தம் மட்டும் பார்த்து 8 பொருத்தம் இருக்கு ஆஹா...அருமை என கிணற்றில் தள்ளிவிடாதீர்கள்..

ஒரு பையனை தேர்ந்தெடுக்கும்போது அவன் ஜாதகம் கொண்டு மனைவி ஸ்தானம் எப்படி,மாமனார் ஸ்தானம் எப்படி,மாமியார் ஸ்தானம் ,நங்கை ஸ்தானம் எல்லாம் கணிக்க ஜாதகத்தில் கிரக அமைப்புகள் ,கணக்குகள் உண்டு...ஏழரை சனி நடக்கும் பெண்ணையும் அஷ்டம சனி நடக்கும் பையனையும் கட்டி வைத்தால் ,இருவரும் ஒரே வண்டியில் சென்று விபத்தை சந்திப்பர்.

ஒரே திசை நடந்தால் அது இருவருக்கும் யோகமாக இருந்தால் பரவாயில்லை...அப்படி அமைவது கடினம்..இருவருக்கும் ஒரே திசை இல்லை என்று மட்டும் பார்க்காமல் அந்ததிசை என்ன காரகத்துவம் யார் யாருக்கு பாதிப்பு உண்டாக்கும்..யாருக்கு நன்மை தரும்..மனைவிக்கு யோகம் தருமா என ஆராய்வது சிறப்பு.

புதன், 21 நவம்பர், 2012

குடும்ப வாழ்க்கையை கெடுப்பது கிரகமா..? ஜோசியரா..?

ஜோசியம் பார்த்து திருமண பொருத்தம் பார்த்துதான் கல்யாணம் பண்ணி வெச்சோம்...இப்படி கல்யாணம் முடிஞ்சு அடுத்த மாசமே டைவர்ஸ் கேட்டு இரண்டு பேரும் கோர்ட்ல நிற்கிறாங்களே என பொண்ணு வீட்டுக்காரங்க புலம்புவது வழக்கம்...


கிரகங்கள் செய்யும் சதியில் ஜோசியரும் மாட்டிக்கொள்வார்..அவர்தானே பொருத்தம் பார்த்தார்..ஆமாம் ஆனா ஜோசியர்கிட்ட ஜாதகம் கொடுத்ததும்,எங்களுக்கெல்லாம் ரொம்ப பிடிச்சு போச்சுங்க..பொண்ணுக்கும்,மாப்பிள்ளைக்கும் அதை விட புடிச்சு போச்சி..உங்கக்கிட்ட எதுக்கும் ஒரு வார்த்தை கேட்ட்ட்டு போலாம்னுதான் வந்தோம் என நெருக்கடி கொடுத்தா அந்த அப்பாவி ஜோசியரும் என்ன செய்வார்..? ஓரளவுக்கு பொருத்தம் வந்தா சரி.அதான் நட்சத்திர பொருத்தம் இருக்கே..செவ்வாய் தோசமும் பொருந்துது..நாகதோசமும் பொருந்துது என்றுதான் சப்பைக்கட்டு கட்டுவார்...

பொண்ணும் பையனும் பெரிய வேலையில இருக்காங்க..இரண்டு பக்கமும் கோடிக்கணக்குல சொத்து இருக்கு...நட்சத்திர பொருத்தமும் 7 பொருத்தம் இருக்கு..அதைவிட என்ன வேணும்..? இன்னும் இருக்குங்க...பையன் ஜாதகத்துல 7 ஆம் அதிபதி கிரகம் எந்த கிரகத்துடன் சேர்ந்து இருக்கு..பொண்ணு ஜாதகத்துலியும் 7 ஆம் அதிபதி என்ன ஆனார்ன்னு பார்க்கணும்..பொண்ணு ஜாதகத்துல 7 ஆம் அதிபதி கேதுவுடன் சேர்ந்தாலோ,6,8,12 ல் மறைந்தாலோ,6,8,12க்குடையவன் 7ல் இருந்தாலோ பிரிவு நிச்சயம்...இவனுக்கும் எனக்கும் ஒத்தே வராதுன்னு பொண்ணு சொல்லிடும்..இவ மூஞ்சியில இனி முழிக்கவே மாட்டேன்னு பையன் சொல்லிடுவான்..அதையும் மீறி சேர்ந்து இருந்தா சிவாஜி படத்துல ரஜினி ஜாதகத்தை பார்த்துட்டு ஜோசியர் சொல்வாரே அதான் பலன்...பொருள் அழிவு..உயிருக்கு கண்டம்,தீரா வியாதி...

அதான் 7 பொருத்தம் இருக்கே அதையும் மீறியா வரும்..? வரும்..அது நட்சத்திர பொருத்தம் மட்டும் தான் அதையும் மீறி உங்கள் ஜாதக பலன் இருக்கு..நட்சத்திரத்தை விட ஜாதகத்தில் இருக்கும் கிரகங்களின் வலிமை பெரிது.

தொடரும்------------------