1. ஆண் ஜாதகத்தில் குருவும், சுக்கிரனும் இணைந்து சுக்கிரனின் வீடுகளான ரிசபம் அல்லது துலாத்தில் இருந்தால் நிச்சயம் ஜாதகன் வீட்டோடு மாப்பிள்ளையாய் மனைவி வீட்டில் தங்கிவிடுவான்.
2. ஆண் ஜாதகத்தில் சுக்கிரனின் வீடுகளான ரிசபம் அல்லது துலாத்தில் குரு தனித்து இருந்தாலும் ஜாதகன் மனைவி வழி ஆட்களுடன் மட்டும் அதிகம் தொடர்பில் இருப்பான்.
3. ஆண் ஜாதகத்தில் சுக்கிரனின் வீடுகளான ரிசபம் அல்லது துலாத்தில் சுக்கிரன் தனித்து ஆட்சி பெற்று இருந்தால் ஜாதகரின் மனைவி தன் தாய் வீட்டில் இருப்பதையே பெரிதும் விரும்புவாள். பெரும்பாலும் தாய் வீட்டிலேயே காலத்தை கழிப்பாள்.
4. பெண் ஜாதகத்தில் செவ்வாயும், சுக்கிரனும் இணைந்து சுக்கிரனின் வீடுகளான ரிசபம் அல்லது துலாத்தில் இருந்தால் ஜாதகியின் கணவன் வீட்டோடு மாப்பிள்ளையாய் ஜாதகி வீட்டில் தங்கிவிடுவான்.
5. பெண் ஜாதகத்தில் சுக்கிரனின் வீடுகளான ரிசபம் அல்லது துலாத்தில் செவ்வாய் தனித்து இருந்தாலும் ஜாதகியின் கணவன் ஜாதகி வழி ஆட்களுடன் மட்டும் அதிகம் தொடர்பில் இருப்பான்.
6. பெண் ஜாதகத்தில் சுக்கிரனின் வீடுகளான ரிசபம் அல்லது துலாத்தில் சுக்கிரன் தனித்து ஆட்சி பெற்று இருந்தால் ஜாதகி திருமணத்திற்கு பின்னும் தன் தாய் வீட்டில் இருப்பதையே பெரிதும் விரும்புவாள். பெரும்பாலும் தாய் வீட்டிலேயே காலத்தை கழிப்பாள்.
7-ஆம் அதிபதி 7-ல் இருந்தால் வீட்டோடு மாப்பிள்ளை ஆவார்கள்.மனைவிக்கு
அடிபணிவார் கள். மனைவி வசதியுள்ளவார்.சுபகிரகமாக இருந்தால் மதிப்பு மரியாதையுடன் இருக்கலாம்..பாவ கிரக சம்பந்தம் இருந்தால் மதிப்பில்லாமல்தான் அங்கும் இருக்க முடியும்..
லக்னத்துக்கு மூன்றாம் வீடு மாமனாரை குறிக்கும்.. அங்கு சுபர் இருந்தாலோ 3ஆம் அதிபதி கேந்திர திரிகோணங்களில் இருந்தாலோ மாமனார் மதிப்பார்...மாமனார் மீது இவருக்கும் பாசம்,அன்பு உண்டாகும்...3க்குடையவன் 7ல் இருந்தால் மாமனாரால் தொல்லைகள் தான் உண்டாகும்..சந்திரன் 7ல் இருந்தால் அம்மாவால் குடும்ப வாழ்வில் தொல்லைகள் உண்டாகும்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக