செவ்வாய், 5 ஜனவரி, 2016

2016 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்

2016 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்

மேசம் முதல் கன்னி வரை இந்த பதிவில் கொடுத்திருக்கிறேன்.. மீதி பலன்கள் அடுத்த பதிவில் விரைவில் வெளியாகும்.

1.1.2016 ஆங்கில புத்தாண்டு விடிந்தால் வெள்ளிக்கிழமை அன்று பிறந்திருக்கிறது...மகாலட்சுமிக்கு உண்டான வெள்ளிக்கிழமை என்பதால்  திருப்பதி லட்சுமி நாராயணன் அருள் அனைவருக்கும் உண்டாகட்டும்..அன்றைய யோகமும், சொபாக்யம் யோகம்தான்..உத்திரம் நட்சத்திரம் உடையாத முகூர்த்த நட்சத்திர நாளில் சிறப்புடன் பிறந்தது ஆங்கில புத்தாண்டு...

2016 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு 12 ராசியினருக்கும் பொதுவான பலன்களை சுருக்கமாக பார்ப்போம்...

மேசம் ;புத்தாண்டு அன்று உங்கள் ராசிநாதன் செவ்வாய் தொழில் ஸ்தானத்துக்கு வந்து ராசியை பார்ப்பதால் இதுவரை இருந்து வந்த கஷ்டங்கள் சங்கடங்கள் விலகி நன்மை உண்டாகும்...குரு பார்வையும் உங்க ராசிக்கு இருப்பதால் அஷ்டம சனி பாதிப்பு குறையும்..பூர்வபுண்ணியாபதி சூரியன் பாக்யஸ்தானத்தில் இருப்பதால் பூர்வீக சொத்து பிரச்சினைகள் தீரும் நீங்கள் நினைதது நிறைவேறும் 

உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும்.பயணங்கள் தடையின்றி நடைபெறும் குலதெய்வ ஆசி கிடைக்கும்..வரவேண்டிய பணம் வந்து சேரும் கடன் பிரச்சினை நெருக்கடி குறையும்..கணவன் மனைவிக்குள் ஒற்றுமை உண்டாகும்...தொழில் முன்னேற்றம் உண்டாகும்..

தொழிலை விரிவுபடுத்துதல்,அதிக கடன் வாங்கி முதலீடு செய்தல் வேண்டாம். அஷ்டம சனி இருப்பதை மறந்துவிட வேண்டாம்..கடன் இருப்பது குறித்து அதிக கவலை வேண்டாம்.. கடன் இருப்பது அஷ்டம சனிக்கு பரிகாரமாக இருக்கட்டும்.. யாருக்கும் சிபாரிசு செய்வதோ ஜாமீன் கையெழுத்து போடுவதோ பிறருக்காக அதிக சிரம்படுவதோ உங்களை சிக்கலில் ஆழ்த்திவிடும் என்பதையும் கவனத்தில் வைக்க வேண்டும்...ஜூன் மாதத்துக்கு பின் குரு உங்க ராசிக்கு சாதகமற்ற நிலைக்கு செல்வதால் அதிக அலைச்சல் ஏற்படும்படி வருவதால் முன்கூட்டியே எதையும் திட்டமிட்டு செயல்படுத்திக்கொல்ள வேண்டும் சுபகாரியங்களை தடங்கலின்றி செய்து விடும்.நீண்ட நாளாக யோசித்து வைத்திருக்கும் மருத்துவ செலவினங்களை ஜூன் மாதத்துக்கு பின் வைத்துக்கொள்ளலாம்...இந்த ஆண்டு சிறப்புடன் அமையும் ...

 வாகனங்களில் செல்கையில் கவனம் தேவை ஒருமுறை திருச்செந்தூர் சென்று வரவும்..

ரிசபம்; உங்க ராசிக்கு அதிபதி சுக்கிரன் களத்திர ஸ்தானத்தில் பாக்யதிபதியுடன் இருப்பது ராஜயோகமாகும்...பெரும்பணம் ஒன்று உங்களுக்கு ஜனவரி மாதத்தில் கிடைக்கும்.பாக்யஸ்தானத்தில் பவர்ஃபுல்லாக புதன் ,பூர்வபுண்ணியாதிபதி அமர்ந்திருப்பதால் குடும்பத்தில் சந்தோசம் மிகுந்திருக்கும். 

இரட்டிப்பு வருமானம் நல்ல லாபம் கிடைக்கும் பல வழிகளிலும் பனம் வந்து சேரும் பழைய பாக்கிகள் வசூலாகும்..கடன் தீரும் தொழிலில் இதுவரை இருந்து வந்த மந்த நிலை விலகி பரபரப்பாக செயல்படும். கல்யாண விசயத்தில் தடங்கலாக காணப்பட்டவர்களுக்கு சந்தோசமான செய்திகள் வந்து சேரும்...

அர்த்தாஷ்டம சனி குறித்து கவலை கொள்ள தேவையில்லை ..ரிசப ராசிக்கு சனி அவ்வளவு தொந்தரவு செய்வதில்லை ...குரு உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் இருக்கிறார் சிலர் இடம்,வீடு வாங்கியிருப்பீர்கள் ..அதற்கு முய்ற்சிப்பவர்கள் விரைவில் வாங்கிவிடுவீர்கள் இந்த ஆண்டு உங்க ராசிக்கு குருபலமும் வரப்போகிரது இரட்டிப்பு பலன்களையும் அள்ளித்தரப்போகிறது.இந்த புத்தாண்டு உங்களுக்கு முன்னேற்றத்தையும் மகிழ்ச்சியையும் வாரி வழங்கும்.

மிதுனம் ;உங்க ராசிக்கு குரு 3ல் அமர்ந்து சில சங்கடங்களை 2015 ல் உண்டாக்கி இருந்தாலும் பிறக்கும் புத்தாண்டு சிறப்பாகவே அமையும் காரணம் உங்க ராசிக்கு கெட்டவங்க எல்லாம் கெட்டு போயிட்டாங்க கெட்டவன் கெட்டால் கிட்டிடும் ராஜ யோகம் என்ற அமைப்புபடி 3,8 க்குடைய சனி ஆறாம் ராசியில் மறைந்து இருக்கார்.உங்கள் லாபாதிபதி செவ்வாய் பூர்வபுண்ணியத்தில் இருப்பதால் இதுவரை தடங்கலாவே இருந்த தொழில் சம்பந்தமான பிரச்சினைகள் முடிவுக்கு வரும்...தொழில் சம்பந்தமான டென்சன் குறையும்.வேலை பார்க்கும் இடத்தில் இருந்த நெருக்கடிகள் தீரும்..

உயரதிகாரிகள் தொல்லைகள் நீங்கும்...கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும் வரவேண்டிய பணம் வசூலாகும்..தொட்ட காரியங்கள் தடங்கலின்றி நடைபெறும்..குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் இருந்து வரும் பூசல்களுக்கு முடிவு கட்ட நீங்கள் அனுசரித்து போவதுதான் நல்லது நாந்தான் பாதாளம் வரைக்கும் அனுசரிச்சு போறானே என்கிறீர்களா.என்ன செய்றது உங்க ராசிக்கு ஏழாம் அதிபதி குரு மூன்றாவது ராசியில் இருப்பதால் ,வாழ்க்கை துணை கை இப்ப ஓங்கிதான் இருக்கும்..சிறிய தவறுகளும் பெரிதாக பார்க்கப்படும்...வாழ்க்கை துணை உடல்நிலை பாதிப்பு மருத்துவ செலவினம் கவலை தந்தாலும் ஜூன் மாதத்துக்கு பின் எல்லா பிரச்சினைகளும் தீரும்...குலதெய்வ கோயிலுக்கு போய் ரொம்ப நாள் ஆச்சு எனில் போய் நல்லா அபிசேகம் செய்து பொங்கல் வைத்து வழிபட்டு வாருங்கள்

கடகம் ; உங்க ராசிதான் இப்போ டாப்பு உங்க ராசிக்கு இரண்டில் குருச்சந்திர யோகத்தோட புத்தாண்டு பிறக்குதுங்க.. இந்த வருசம் நீங்கதான் ராஜா.ராணி எல்லாம்.ராசிக்கு இரண்டில் குருச்சந்திர யோகம் வருவதால் இந்த வருடம் உங்க பேச்சுக்கு பெரு மதிப்பு உண்டாகும்...சேமிப்பு பல மடங்கு உயரும் பணம் பல வழிகளிலும் வந்து சேரும் கடன் அடைபடும்...தொட்டதெல்லாம் பொன்னாகும்..குடும்பத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடும்..

கடக ராசிக்கு பூர்வபுண்ணியாதிபதியும்,பாக்யாதிபதியும் மறையாம சுகஸ்தானத்திலும் தனஸ்தானத்திலும் இருப்பது மிக சிறப்பான வருடம் என்பதற்கு அத்தாட்சியா அமைஞ்சிருக்கு...5,9 ஆம் அதிபதிபதிகள் மறையாமல் இருந்தால் அதிர்ஷ்டத்துக்கு குறைவில்லை வெற்றி,புகழ்,செல்வம் உண்டாகும் வருடமாக அமையப்போகிறது.திருமனம் ஆகாதவர்களுக்கு திருமனம் ஆகும் ..முக்கிய கல்வி படிச்சிட்டிருக்குறவங்களுக்கு நல்ல மதிப்பெண் கிடைக்கும்..வீடு,இடம் வாங்க நினைப்போருக்கு இந்த வருடம் கண்டிப்பா அமைஞ்சிடும்..

சிம்மம்; உங்க ராசியில்தான் புத்தாண்டே பிறக்குதுங்க...உங்க ஆண்டுன்னே சொல்லலாம் நீங்க சாதிக்கப்போற ஆண்டு இது.ராசியில் சந்திரன் அமர்ந்து விரயங்கள் எல்லாம் லாபங்களா மாறும்...கோபம்,பிடிவாதம்,டென்சன் என கடந்த ஆண்டு இருந்தாலும் இந்த ஆண்டு அன்பு,அமைதி ,சந்தோசம் என தொடங்கியிருக்கு..ராசிக்கு நான்கில் சனி அமர்ந்து அதிக அலைச்சல் உடல் ஆரொக்கியம் பாதிப்பு ,பன முடக்கம் என பல மன சங்கடங்களை கடந்த 2015 ஆம் வருடம் கொடுத்தது ஆனா பிறந்த புது ஆண்டில் குருப்பெயர்ச்சி 2016 உங்களுக்கு புது தெம்பையே கொடுக்கப்போகுதே..அதனால் இந்த வருடம் உங்களுக்கு எண்ணிய காரியங்களை ஈடேற்றி தரும் வருடமாக அமையும்.

ராசி அதிபதி சூரியன் மறையாமல் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்து தன்னம்பிக்கையை பலப்படுத்தி ,தன வரவு ஸ்தானத்தை வலுப்படுத்துகிறார் பணவரவு,சேமிப்பு மேம்படும் கடன்கள் அடைபடும் பழைய பாக்கிகள் வசூலாகும்..ஜனவரி 8ஆம் தேதி ராகு உங்க தன ஸ்தானத்தை விட்டு அகல்வதால் இனி பண நெருக்கடிகள் இருக்காது.குடும்பத்தில் குழப்பமும் இருக்காது..மகிழ்ச்சி உண்டாகும் சுபகாரியங்கள் தடங்கலின்றி நடைபெறும்..

கன்னி;
கன்னி ராசியினருக்கு ஏழரை சனி இல்லாத புத்தாண்டு...இதுவரை ராகு ஜென்ம ராசியில் இருந்தது இதனால் அதிக மனக்குழப்பத்தில் இருந்தீங்க...தொட்ட காரியம் எல்லாம் தடங்கலாகவே இருந்தது ஏழரை சனி முடிஞ்சப்பிறகும் இன்னும் சோதனையா..? சனி நம்மை விட்டு போகலையோ என  பயத்தில் இருந்தீங்க...ராகு தான் சனிக்கு நிகரான பலன்களை கொடுப்பவராச்சே அதனால் வந்த பாதிப்புதான் இது.ராகு உங்க ராசிக்கு 12ல் மறைந்துவிடுவதால் இந்த புத்தாண்டு உங்களுக்கு சனி பாதிப்பு இல்லாத ராகு பாதிப்பு இல்லாத சிறப்பான ஆண்டாக இருக்கும்.குரு 12ல் இருப்பதால் வருமானம் சீராக இல்லையே என கவலை வேண்டாம் ஆண்டின் மத்தியில் வரும் குருப்பெயர்ச்சி உங்கள் கவலைகளை போக்கும்...ராசிக்கு 3ல் மறைந்த சனி உங்களுக்கு இந்தாண்டு தொழிலில் பெரும் திருப்பத்தையும் முன்னேற்றத்தையும் தரப்போகிறார்...

இந்த ஆண்டு முழுவதுமே உங்களுக்கு மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும் பணவரவு சரளமாக இருக்கும் நீண்ட நாள் கனவுகள் ஆசைகள் நிறைவேறும் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்...திருமண முயற்சிகளில் இருப்பவருக்கு நல்ல இடத்தில் வரன் அமையும்...தங்கநகைகள் வாங்குவீர்கள்..சிலர் மனைவாங்குவர்.புதிய தொழிலை தொடங்கலாம்..விருப்பமான இடத்திற்கு இடமாறுதல் உண்டாகும்..மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண் பெறுவர்...

துலாம் முதல் மீனம் வரை ராசிபலன்கள் படிக்க இங்கு க்ளிக் செய்யவும்




கருத்துகள் இல்லை: