new year pridictions லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
new year pridictions லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 5 ஜனவரி, 2016

2016 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்

2016 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்

மேசம் முதல் கன்னி வரை இந்த பதிவில் கொடுத்திருக்கிறேன்.. மீதி பலன்கள் அடுத்த பதிவில் விரைவில் வெளியாகும்.

1.1.2016 ஆங்கில புத்தாண்டு விடிந்தால் வெள்ளிக்கிழமை அன்று பிறந்திருக்கிறது...மகாலட்சுமிக்கு உண்டான வெள்ளிக்கிழமை என்பதால்  திருப்பதி லட்சுமி நாராயணன் அருள் அனைவருக்கும் உண்டாகட்டும்..அன்றைய யோகமும், சொபாக்யம் யோகம்தான்..உத்திரம் நட்சத்திரம் உடையாத முகூர்த்த நட்சத்திர நாளில் சிறப்புடன் பிறந்தது ஆங்கில புத்தாண்டு...

2016 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு 12 ராசியினருக்கும் பொதுவான பலன்களை சுருக்கமாக பார்ப்போம்...

மேசம் ;புத்தாண்டு அன்று உங்கள் ராசிநாதன் செவ்வாய் தொழில் ஸ்தானத்துக்கு வந்து ராசியை பார்ப்பதால் இதுவரை இருந்து வந்த கஷ்டங்கள் சங்கடங்கள் விலகி நன்மை உண்டாகும்...குரு பார்வையும் உங்க ராசிக்கு இருப்பதால் அஷ்டம சனி பாதிப்பு குறையும்..பூர்வபுண்ணியாபதி சூரியன் பாக்யஸ்தானத்தில் இருப்பதால் பூர்வீக சொத்து பிரச்சினைகள் தீரும் நீங்கள் நினைதது நிறைவேறும் 

உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும்.பயணங்கள் தடையின்றி நடைபெறும் குலதெய்வ ஆசி கிடைக்கும்..வரவேண்டிய பணம் வந்து சேரும் கடன் பிரச்சினை நெருக்கடி குறையும்..கணவன் மனைவிக்குள் ஒற்றுமை உண்டாகும்...தொழில் முன்னேற்றம் உண்டாகும்..

தொழிலை விரிவுபடுத்துதல்,அதிக கடன் வாங்கி முதலீடு செய்தல் வேண்டாம். அஷ்டம சனி இருப்பதை மறந்துவிட வேண்டாம்..கடன் இருப்பது குறித்து அதிக கவலை வேண்டாம்.. கடன் இருப்பது அஷ்டம சனிக்கு பரிகாரமாக இருக்கட்டும்.. யாருக்கும் சிபாரிசு செய்வதோ ஜாமீன் கையெழுத்து போடுவதோ பிறருக்காக அதிக சிரம்படுவதோ உங்களை சிக்கலில் ஆழ்த்திவிடும் என்பதையும் கவனத்தில் வைக்க வேண்டும்...ஜூன் மாதத்துக்கு பின் குரு உங்க ராசிக்கு சாதகமற்ற நிலைக்கு செல்வதால் அதிக அலைச்சல் ஏற்படும்படி வருவதால் முன்கூட்டியே எதையும் திட்டமிட்டு செயல்படுத்திக்கொல்ள வேண்டும் சுபகாரியங்களை தடங்கலின்றி செய்து விடும்.நீண்ட நாளாக யோசித்து வைத்திருக்கும் மருத்துவ செலவினங்களை ஜூன் மாதத்துக்கு பின் வைத்துக்கொள்ளலாம்...இந்த ஆண்டு சிறப்புடன் அமையும் ...

 வாகனங்களில் செல்கையில் கவனம் தேவை ஒருமுறை திருச்செந்தூர் சென்று வரவும்..

ரிசபம்; உங்க ராசிக்கு அதிபதி சுக்கிரன் களத்திர ஸ்தானத்தில் பாக்யதிபதியுடன் இருப்பது ராஜயோகமாகும்...பெரும்பணம் ஒன்று உங்களுக்கு ஜனவரி மாதத்தில் கிடைக்கும்.பாக்யஸ்தானத்தில் பவர்ஃபுல்லாக புதன் ,பூர்வபுண்ணியாதிபதி அமர்ந்திருப்பதால் குடும்பத்தில் சந்தோசம் மிகுந்திருக்கும். 

இரட்டிப்பு வருமானம் நல்ல லாபம் கிடைக்கும் பல வழிகளிலும் பனம் வந்து சேரும் பழைய பாக்கிகள் வசூலாகும்..கடன் தீரும் தொழிலில் இதுவரை இருந்து வந்த மந்த நிலை விலகி பரபரப்பாக செயல்படும். கல்யாண விசயத்தில் தடங்கலாக காணப்பட்டவர்களுக்கு சந்தோசமான செய்திகள் வந்து சேரும்...

அர்த்தாஷ்டம சனி குறித்து கவலை கொள்ள தேவையில்லை ..ரிசப ராசிக்கு சனி அவ்வளவு தொந்தரவு செய்வதில்லை ...குரு உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் இருக்கிறார் சிலர் இடம்,வீடு வாங்கியிருப்பீர்கள் ..அதற்கு முய்ற்சிப்பவர்கள் விரைவில் வாங்கிவிடுவீர்கள் இந்த ஆண்டு உங்க ராசிக்கு குருபலமும் வரப்போகிரது இரட்டிப்பு பலன்களையும் அள்ளித்தரப்போகிறது.இந்த புத்தாண்டு உங்களுக்கு முன்னேற்றத்தையும் மகிழ்ச்சியையும் வாரி வழங்கும்.

மிதுனம் ;உங்க ராசிக்கு குரு 3ல் அமர்ந்து சில சங்கடங்களை 2015 ல் உண்டாக்கி இருந்தாலும் பிறக்கும் புத்தாண்டு சிறப்பாகவே அமையும் காரணம் உங்க ராசிக்கு கெட்டவங்க எல்லாம் கெட்டு போயிட்டாங்க கெட்டவன் கெட்டால் கிட்டிடும் ராஜ யோகம் என்ற அமைப்புபடி 3,8 க்குடைய சனி ஆறாம் ராசியில் மறைந்து இருக்கார்.உங்கள் லாபாதிபதி செவ்வாய் பூர்வபுண்ணியத்தில் இருப்பதால் இதுவரை தடங்கலாவே இருந்த தொழில் சம்பந்தமான பிரச்சினைகள் முடிவுக்கு வரும்...தொழில் சம்பந்தமான டென்சன் குறையும்.வேலை பார்க்கும் இடத்தில் இருந்த நெருக்கடிகள் தீரும்..

உயரதிகாரிகள் தொல்லைகள் நீங்கும்...கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும் வரவேண்டிய பணம் வசூலாகும்..தொட்ட காரியங்கள் தடங்கலின்றி நடைபெறும்..குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் இருந்து வரும் பூசல்களுக்கு முடிவு கட்ட நீங்கள் அனுசரித்து போவதுதான் நல்லது நாந்தான் பாதாளம் வரைக்கும் அனுசரிச்சு போறானே என்கிறீர்களா.என்ன செய்றது உங்க ராசிக்கு ஏழாம் அதிபதி குரு மூன்றாவது ராசியில் இருப்பதால் ,வாழ்க்கை துணை கை இப்ப ஓங்கிதான் இருக்கும்..சிறிய தவறுகளும் பெரிதாக பார்க்கப்படும்...வாழ்க்கை துணை உடல்நிலை பாதிப்பு மருத்துவ செலவினம் கவலை தந்தாலும் ஜூன் மாதத்துக்கு பின் எல்லா பிரச்சினைகளும் தீரும்...குலதெய்வ கோயிலுக்கு போய் ரொம்ப நாள் ஆச்சு எனில் போய் நல்லா அபிசேகம் செய்து பொங்கல் வைத்து வழிபட்டு வாருங்கள்

கடகம் ; உங்க ராசிதான் இப்போ டாப்பு உங்க ராசிக்கு இரண்டில் குருச்சந்திர யோகத்தோட புத்தாண்டு பிறக்குதுங்க.. இந்த வருசம் நீங்கதான் ராஜா.ராணி எல்லாம்.ராசிக்கு இரண்டில் குருச்சந்திர யோகம் வருவதால் இந்த வருடம் உங்க பேச்சுக்கு பெரு மதிப்பு உண்டாகும்...சேமிப்பு பல மடங்கு உயரும் பணம் பல வழிகளிலும் வந்து சேரும் கடன் அடைபடும்...தொட்டதெல்லாம் பொன்னாகும்..குடும்பத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடும்..

கடக ராசிக்கு பூர்வபுண்ணியாதிபதியும்,பாக்யாதிபதியும் மறையாம சுகஸ்தானத்திலும் தனஸ்தானத்திலும் இருப்பது மிக சிறப்பான வருடம் என்பதற்கு அத்தாட்சியா அமைஞ்சிருக்கு...5,9 ஆம் அதிபதிபதிகள் மறையாமல் இருந்தால் அதிர்ஷ்டத்துக்கு குறைவில்லை வெற்றி,புகழ்,செல்வம் உண்டாகும் வருடமாக அமையப்போகிறது.திருமனம் ஆகாதவர்களுக்கு திருமனம் ஆகும் ..முக்கிய கல்வி படிச்சிட்டிருக்குறவங்களுக்கு நல்ல மதிப்பெண் கிடைக்கும்..வீடு,இடம் வாங்க நினைப்போருக்கு இந்த வருடம் கண்டிப்பா அமைஞ்சிடும்..

சிம்மம்; உங்க ராசியில்தான் புத்தாண்டே பிறக்குதுங்க...உங்க ஆண்டுன்னே சொல்லலாம் நீங்க சாதிக்கப்போற ஆண்டு இது.ராசியில் சந்திரன் அமர்ந்து விரயங்கள் எல்லாம் லாபங்களா மாறும்...கோபம்,பிடிவாதம்,டென்சன் என கடந்த ஆண்டு இருந்தாலும் இந்த ஆண்டு அன்பு,அமைதி ,சந்தோசம் என தொடங்கியிருக்கு..ராசிக்கு நான்கில் சனி அமர்ந்து அதிக அலைச்சல் உடல் ஆரொக்கியம் பாதிப்பு ,பன முடக்கம் என பல மன சங்கடங்களை கடந்த 2015 ஆம் வருடம் கொடுத்தது ஆனா பிறந்த புது ஆண்டில் குருப்பெயர்ச்சி 2016 உங்களுக்கு புது தெம்பையே கொடுக்கப்போகுதே..அதனால் இந்த வருடம் உங்களுக்கு எண்ணிய காரியங்களை ஈடேற்றி தரும் வருடமாக அமையும்.

ராசி அதிபதி சூரியன் மறையாமல் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்து தன்னம்பிக்கையை பலப்படுத்தி ,தன வரவு ஸ்தானத்தை வலுப்படுத்துகிறார் பணவரவு,சேமிப்பு மேம்படும் கடன்கள் அடைபடும் பழைய பாக்கிகள் வசூலாகும்..ஜனவரி 8ஆம் தேதி ராகு உங்க தன ஸ்தானத்தை விட்டு அகல்வதால் இனி பண நெருக்கடிகள் இருக்காது.குடும்பத்தில் குழப்பமும் இருக்காது..மகிழ்ச்சி உண்டாகும் சுபகாரியங்கள் தடங்கலின்றி நடைபெறும்..

கன்னி;
கன்னி ராசியினருக்கு ஏழரை சனி இல்லாத புத்தாண்டு...இதுவரை ராகு ஜென்ம ராசியில் இருந்தது இதனால் அதிக மனக்குழப்பத்தில் இருந்தீங்க...தொட்ட காரியம் எல்லாம் தடங்கலாகவே இருந்தது ஏழரை சனி முடிஞ்சப்பிறகும் இன்னும் சோதனையா..? சனி நம்மை விட்டு போகலையோ என  பயத்தில் இருந்தீங்க...ராகு தான் சனிக்கு நிகரான பலன்களை கொடுப்பவராச்சே அதனால் வந்த பாதிப்புதான் இது.ராகு உங்க ராசிக்கு 12ல் மறைந்துவிடுவதால் இந்த புத்தாண்டு உங்களுக்கு சனி பாதிப்பு இல்லாத ராகு பாதிப்பு இல்லாத சிறப்பான ஆண்டாக இருக்கும்.குரு 12ல் இருப்பதால் வருமானம் சீராக இல்லையே என கவலை வேண்டாம் ஆண்டின் மத்தியில் வரும் குருப்பெயர்ச்சி உங்கள் கவலைகளை போக்கும்...ராசிக்கு 3ல் மறைந்த சனி உங்களுக்கு இந்தாண்டு தொழிலில் பெரும் திருப்பத்தையும் முன்னேற்றத்தையும் தரப்போகிறார்...

இந்த ஆண்டு முழுவதுமே உங்களுக்கு மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும் பணவரவு சரளமாக இருக்கும் நீண்ட நாள் கனவுகள் ஆசைகள் நிறைவேறும் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்...திருமண முயற்சிகளில் இருப்பவருக்கு நல்ல இடத்தில் வரன் அமையும்...தங்கநகைகள் வாங்குவீர்கள்..சிலர் மனைவாங்குவர்.புதிய தொழிலை தொடங்கலாம்..விருப்பமான இடத்திற்கு இடமாறுதல் உண்டாகும்..மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண் பெறுவர்...

துலாம் முதல் மீனம் வரை ராசிபலன்கள் படிக்க இங்கு க்ளிக் செய்யவும்




ஞாயிறு, 25 டிசம்பர், 2011

2012 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் -கும்பம்

2012 புத்தாண்டு பலன்கள் -கும்பம்


கும்பம்..ராசியின் அதிபதி சனி .ஆண் ராசி.ஸ்திர ராசி.மனித உடலில் கணுக்காலை குறிக்கும்.இது குட்டை ராசி.இதன் நிறம் பழுப்பு.பகலில் அதிக வலிமை உள்ள ராசி.இந்த ராசியில் எந்த கிரகமும் உச்சமோ நீசமோ அடைவதில்லை.கோவில் கோபுரம் போலவும் ,கும்ப கலசம் போன்றும் தோற்றம் உடையது.

 இவர்கள் கடுமையான உழைப்பாளிகள்.நல்ல அறிவாற்றல் உடையவர்கள்.ஜாதகம் வலு இல்லாமல் இருந்தால் தாழ்வு மனப்பான்மை அதிகம் உண்டு.சனிக்குண்டான தடங்கல்களும் அதிகம் உண்டு.குமப்த்துக்கு பூரண கும்பம் படம் போடப்பட்டிருக்கும்.இவர்கள் மங்களகரமானவர்கள் என்பதாலோ என்னவோ பல கோவில் விசேஷங்களிலும் இவர்கள் பங்களிப்பு அதிகம் இருக்கும்.உற்சாகம் வந்தால் எதையும் மின்னல் வேகத்தில் செய்து முடிப்பார்கள்.பயன்கருதா தொண்டுள்ளம் கொண்டவர்கள்.

சனி இதுவரை அஷ்டம சனியாக இரண்டரை வருடம் பல கஷ்டங்களை கொடுத்து வந்தது.இனி துன்பமில்லை.தோல்வி இல்லை.தடங்கலும் இல்லை.மர்த்துவ செலவுகள் நீங்கும்.புதிய உற்சாகத்தை தொழிலில் அடைவீர்கள்.வருமானம் கூடும்.தொழில் சுறுசுறுப்படையும்.

இன்று முதல் குரு வக்ரமும் நிவர்த்தியாவதால் இனி பணப்பிரச்சினைகள் அனைத்தும் தீரும்.உறவினர் பகை அகலும்.குழந்தைகளால் உண்டான கவலைகள் தீரும்.பெண்களுக்கு உற்சாகம் பிறக்கும்.புதிய சொத்து சேர்க்கைகள்,தொழிலில் புதிய நல்ல மாற்றம் உண்டாகும்.

குரு வக்ர நிவர்த்தியானால் ராசிக்கு மூன்றில் தான் பலனை கொடுப்பார் என்றாலும் உங்கள் ராசிக்கு தனக்காரகன் வக்ர நிவர்த்தியாவது நல்லதுதான்.

2012 சனி பகவான் அருளால் சிறப்பான பலன்களை அடைவீர்கள்.

 உங்கள் ஜாதகத்தில் கிரகங்களின் வலிமை,தற்போது நடக்கும் திசை இவை பொறுத்தும் பலன்கள் மாறுபடும்


வெள்ளி, 4 நவம்பர், 2011

ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் 2012 மகரம் future

ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் 2012 மகரம்

(உத்திராடாம் 2 ஆம்பாதம் முதல் திருவோணம்,அவிட்டம் 2 ஆம் பாதம் முடிய)

மகரம் பெண் ராசி.இதன் அதிபதியான சனி ஆணும் இல்லாத பெண்ணும் இல்லாத அலித்தன்மை கொண்ட கிரகம்.திசைகளில் தெற்கை குறிக்கும் ராசி.மனித உடலில் முழங்காலை குறிக்கும் ராசி.மண் தத்துவம் கொண்ட ராசி.இந்த ராசியில் உச்சம் பெறும் கிரகம் செவ்வாய்.நீசம் பெறும் கிரகம் குரு.

பொதுவாக இந்த ராசியில் பிறப்பவர்கள் வில்லங்கம் வீராச்சாமிகள்.எடக்கு மடக்கான செயல்பாடுகளை கொண்டவர்கள்.ஆயக்கலைகள் 64 கற்றிருந்தாலும் சுயநலம் அதிகம் காணப்படும்.(நான் யதார்த்தமா பொதுவான கருத்தை சொல்றேன்.மெதுவா சிந்திச்சு பாருங்க..அருவாளை என் பக்கம் திருப்பிடாதீங்க சாமிகளா) சகோதரர்களால் நன்மை இல்லை.தாயை பிரிந்து இருப்பது இந்த ராசியின் அடிப்படை விதி.கடன் கொடுப்பதும் வாங்குவதும் பல பிரச்சினைகளை தரும்.புகழ்ச்சிக்கு மயங்குவீர்கள்.

தன்னலவாதிகள் என ஜோதிடம் சொல்கிறது.ஆன்மீகத்தில் உயர்ந்தவர்கள்.தியானம்,யோகா,பொது தொண்டு,அன்னதானம்,கோயில் கமிட்டி இதில் இந்த ராசியினர் அதிகம் காணப்படுவர்.பொது நலம் செய்ய வசதி இருப்பினும் தன் காசை கெட்டியாக பிடித்துக்கொள்வார்கள்.இதனாலேயே உறவினர்,நண்பர்கள் வெறுப்புக்கு ஆளாவர்.. இவர்கள் அறிவாற்றலில் வல்லவர்கள்.எதையும் எளிதில் கற்றுகொள்ளும் நுண்ணறிவு படைத்தவர்கள்.நடக்குதோ நடக்கலையோ ஆசைப்படுவதில் சமர்த்தர்கள்.மலையளவு ஆசை மனதுக்குள் இருக்கும்.ஒருவனை வீழ்த்திதான் மேலே வரவேண்டும்..என்றால் வீழ்த்திட்டா போச்சு என்பது இதில் சிலருக்கு கொள்கையாக இருக்கும்.தாழ்வு மனப்பான்மை அதிகம்...எவ்வளவு வசதியிருப்பினும்...ஏழை ஆகிடுவோமோ என்ற பயமும் த்ருடன் வந்துடுவானோ என்ற பயமும் இருக்கும்.தேவையில்லா குழப்பங்கள்...தான் ஒரு ராசியில்லாத ஆளோ என நினைக்க வைக்கும்படி காரிய தடைகள் காணப்படும்.மனதை திடமாக வைத்துக்கொண்டு செயல்பட்டால் நீங்களும் ரஜினிதான்.

குரு உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் உலவுவதால் சொத்துக்கள்,உடல் ஆரோக்கியம் சம்பந்தமான பிரச்சினைகள் காணப்படும் காலமாக இது இருக்கிறது.சிலருக்கு சொத்துக்கள் விரயமும் ஆகியிருக்கலாம்...விரயம் ஆனோர்க்கு அது பரிகாரமாக நினைத்துக்கொள்ளுங்கள்.இல்லையேல் பெரிய கெட்ட செலவு வந்திருக்கும்.உங்கள் ராசிக்கு உச்ச கிரகமான செவ்வாய் கடகத்தில் இருந்து சிம்மத்துக்கு பெயர்ச்சியாகிவிட்டதால் இதுவரை இருந்து வந்த அனைத்து பயமும் உங்களை விட்டு அகலும்.தைரியமாக நீங்கள் செயல்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது.தொழிலில் இனி புதிய முடிவு எடுப்பீர்கள்.2012 மத்திமம் வரை சிம்ம செவ்வாய் உங்களுக்கு நற்பலன்களை வாரி வழங்க போகிறது.

உங்கள் ராசிக்கு பத்தில் சஞ்சரிக்கும் சனிபகவான் தொழிலில் ஸ்திர தன்மையை உண்டாக்குவார்.தொழில் ஸ்தானத்தில் உச்சம் பெறும் சனியால் பல நன்மைகள் உண்டாகும்.இதுவரை இருந்துவந்த அலைச்சல்,காரிய தடை நீங்கி வேகமான நடை போட வைக்கும்.பாவகிரகமான சனி கேந்திரம் பெறுவது பல நல்ல பலன்களை தருவது மட்டுமில்லாமல் உங்கள் ராசி நாதன் சனி துலாத்தில் உச்சம் பெறுவதால் உங்களுக்கு பல நன்மைகளை அள்ளிதரப்போகிறது.வருமானம் அதிகரிக்கும்.மொத்தத்தில் 2012 ஆம் வருடம் உங்களுக்கு இனிமையாகவே அமையும்.வாழ்க வளமுடன்!!

வியாழன், 20 அக்டோபர், 2011

ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் 2012 ;விருச்சிகம் future

ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் 2012 ;விருச்சிகம்

விசாகம் 4 ஆம் பாதம் முதல்,அனுசம்,கேட்டை முடிய

விருச்சிக ராசி.இது பெண்ராசி.இதன் அதிபதியாக வருகிற செவ்வாய் ஆண்கிரகம்.விடியற்காலையிலும் அந்தி பொழுதிலும் அதிக வலிமை உடைய ராசி.மனித உடலில் பிறப்பு உறுப்புகளை குறிக்கும் ராசி.திசைகளில் வடக்கை குறிக்கும்.நிறம் பொன்னிறம்.இதன் உருவகம் தேள்.இந்த ராசியில் நீசம் பெறும் கிரகம்.சந்திரன்.அதனாலோ என்னவோ இந்த ராசிக்காரர்கள் தாயின் அன்பை பெற துடிப்பர்.ஆனால் அது கிடைக்காத சூழல்.தாயை பிரிந்து வாழும் வாழ்க்கை.அல்லது தாயே எதிரி ஆகிவிடுவார்.இருப்பினும் தாயை பிரிந்து வாழ்வதே அதிகம் நடக்கிறது.

புதன், 5 அக்டோபர், 2011

ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் 2012 ; மேசம் new year horoscope 2012

ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் 2012 ; மேசம்;

அஸ்வினி ,பரணி,கார்த்திகை 1 ஆம் பாதம் வரை;

அன்பான குணமும்,மனிதநேயமும்,அனைவருக்கும் உதவும் குணம் கொண்ட ,கால புருச லக்னத்துக்கு முதல் ராசியாக பெற்ற ’’தல’’ ராசி கொண்டோரே...நீங்கள் தான் எப்போதும் முதல்வன்.அனைவரையும் அடக்கியாளும் குணமும்,உங்களுக்கு என அதிரடி ஸ்டைலில் தூள் பறத்தும் மன்னன் நீங்கள்.