கும்பம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கும்பம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 4 ஜூன், 2021

வாழ்வில் நிலையாக புகழ் செல்வம் பெறும் ராசியினர்

 நிலையாக நின்று கொண்டிருப்பது -

ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம்..
அரை ஷட்டர் திறந்து வெச்சிக்கிட்டு வியாபாரம் செய்றதெல்லாம் இந்த க்ரூப்தான்...என்னய்யா பத்து ரூபா அதிகம் சொல்றன்னு கேட்டா அதெல்லாம் அப்படித்தான் ..வாங்குனா வாங்கு இல்ல இடத்தை காலி செய்..கறார் டைப்....உலத்தை சுத்தி வந்து பழம் வாங்குற டைப் இல்ல.அம்மா அப்பாவை சுத்தி வந்து பழம் வாங்குற டைப்.கஷ்டம் இல்லாம அதே சமயம் மூளைக்கு அதிக வேலை கொடுத்து அதிகமா சம்பாதிக்கும் திறமை.
புகழ், செல்வாக்கு ஊருக்குள்ள நிறைய இருக்கும்.தொழில் பக்தி மிக அதிகம்.மளிகை கடையிலியே உன்னை புதைச்சு வெச்சிருக்கான்னு வீட்ல கோபபட்டாலும் கண்டுக்காம..அண்ணாச்சிக்கு பருப்பு கொடுன்னு பொட்டலம் கட்ட போயிடுவாரு.தொழில் பத்தி இரவும் பகலும் சிந்தனை.
சொன்னா சொன்னதுதான் மாற்றிக்கொள்ளும் குணம் இல்லை அனுசரிப்பது கடினம்.பிடிக்காத உறவுகளை நட்புகளை மதிக்காதவர்களை திரும்பி கூட பார்ப்பதில்லை
நிலையான சொத்துக்களை சம்பாதித்து விடுவார்கள் பேரன் பெருமைபடும்படி நல்ல பெயரையும் சம்பாதித்து நிலையாக நின்று விடுவார்கள்


வியாழன், 26 ஜூலை, 2018

ஸ்திர ராசியினர் ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் எப்படிப்பட்டவர்கள்?

ஸ்திரம் என்பது நிலையாக நிற்பது என்று அர்த்தம்...ஆணி அடிச்சா மாதிரி...முயலுக்கு மூணு கால் என்றால் மூணு கால்தான்..எந்த சுப்ரீம் கோர்ட் போனாலும் சரி.உன் கருத்தை நீ சொல்ல உரிமை இருக்கு...ஆனா என் கருத்தில் மாற்றம் இல்லை என நிலையாக இருப்பதுதான் ஸ்திர ராசிகள்..ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் ஆகியவை ஸ்திரம் எனப்படும்.

குடும்பத்துல மிலிட்ரி கண்டிசன் தான் எல்லாம்...இதை எப்படி தெளிவாக செய்வது என ஒரு வாரம் ப்ளான் செய்வது...யார்கிட்ட பேசினாலும் தெளிவா பிசிறு இல்லாம பேசுவது ..கொஞ்சம் பேச்சு சுத்தம் இல்லாத ஆள் எனில் அந்த ஆள் பக்கமே அண்டாம இருப்பதுதான் ஸ்திர ராசிகள்..இவன் ஆகாது என முடிவு செஞ்சிட்டா கதம்..கதம்..

.தான் உண்டு தன் வேலை உண்டு வருமானம் ,குடும்பம் உண்டு என ஒரு பாதையில் ஒரே மாதிரி போய்க்கொண்டிருக்கும் ராசிகள்....ராசிநாதன் நல்லா இருந்தா நான் சொன்னதில் துளியில் மாற்றம் இருக்காது.ராசிநாதன் என்றால் ரிசப ராசியினருக்கு சுக்கிரன் கெடாமல் இருக்கனும்...சுருக்கமா சொல்லனுமா ..இவங்க பிடிவாதக்காரங்க..தான் நினைத்த மாதிரிதான் எல்லாம் நடக்கனும் என நினைக்கிற க்ரூப்....

உபய ராசிகள் ,சர ராசிகள் எல்லாம் இவங்க பார்வையில் பிழைக்க தெரியாத க்ரூப்....எல்லாம் தெரிந்த ஆசாமிகள் சர ராசிகள் என்றால் எல்லாம் தெரிந்து அதை காசாக்கும் வித்தை தெரிந்தவர்கள் ஸ்திர ராசியினர்..இவங்க கிட்ட பேசும்போது நிதானமா பேசனும்..இவங்க உங்க பேச்சை மட்டும் கவனிப்பதில்லை...உங்களை ஸ்கேன் செய்து கொண்டிருக்கிறார்கள்...வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்...காசுனு வந்துட்டா கொள்ளைக்காரன்...பாசம்னு வந்துட்டா .....தோளில் சாய்ந்து கண்ணீர் விடுவாங்கன்னு நினைச்சீகளா....இரண்டு வார்த்தை பதமா பேசிட்டு கிளம்பிட்டே இருப்பாக...

சுயநலம் என சொல்லிட்டா கொஞ்சம் ஓவரா இருக்கும்...தன் பணியில் கவனமா இருப்பாங்கன்னு சொன்னா நல்லாருக்கும்..மைனஸ் ப்ளஸ் எல்லாம் கலந்து சொல்லிருக்கேன்...ராசிக்கு சொந்தக்காரக கோவிச்சுக்காதீக..வாட்சப்பில் பகிர்ந்தா ஈரோடு சதீஷ்குமார் ஜோசியர் சொன்னதுனு சேர்த்துக்குங்க..!!

வியாழன், 8 பிப்ரவரி, 2018

மகரம்,கும்பம் ராசியினரின் பலம்,பலவீனம் என்ன

மகரம் ,கும்பம் இரண்டுமே சனியின் ராசிகள்..சனி வறுமை கிரகம்.சுக்கிரன் செல்வ கிரகம்.சனியின் ராசிகளில் மகரம் பெண் ராசி..கும்பம் ஆண் ராசி..இரு சனி ராசிகளில் வலிமையானது எது எனக்கேட்டால் கும்பம்.ஆண் ராசி என்பது ஒரு காரணம்...இன்னொன்று மகர ராசியில் குரு நீசமாகி .....வம்பு சண்டை கிரகம் செவ்வாய் உச்சம் ஆவதும் மகரம் கொஞ்சம் பலவீனமாக காரணம்...இன்னொன்றும் இருக்கிறது மகர ராசி முதலைக்கண்னீர் என பல ஜோதிட நூல்களில் சொல்லி இருக்கு.
அதாவது மகர ராசியை நம்பாதே ..பொய் அதிகம் பேசுவாங்க புலம்பல் அதிகம் எனவும் ஊர் வம்பு பேசுவதில் அலாதி பிரியம் உடையவர்கள் என்றும் ஒரு கருத்து உண்டு இதை இன்னொரு சனி ராசியான கும்பத்துக்கு ஏன் சொல்லலைன்னு பார்த்தா கும்பத்துக்கு இரண்டாம் அதிபதி குருவா வரார்..அதாவது நாக்குல குரு..அவர் முழு சுபர்..ஆனா மகரத்துக்கு நாக்குல சனி..எனவே அப்படி சொல்லி இருப்பாங்கன்னு நினைக்கிறேன் லூஸ் டாக் தேவையில்லாத பேச்சுக்களை குறைச்சுக்கிறது பிறரை பற்றி விமர்சனம் செய்வதை நிறுத்திக்கொள்வது நலம் தரும்..
இது ஜாதக பலம் இருப்பவர்களுக்கு பெருசா பாதிக்காது..ஜாதக கிரக பலம் குறைவா இருப்பவருக்கு அப்படியே பொருந்தும்..சின்ன பிரச்சினை வந்தாலும் எல்லோரிடமும் சொல்லி புலம்புவது அதிகமா விரக்தி அடைவது கும்பத்தை விட மகரத்துக்கு அதிகம்...கும்பத்தை விட மகரம் செயல்திறன் அதிகம்.கடுமையான உழைப்பாளிகள் ..கும்பம் பேசியே சம்பாதித்து விடும் மகரம் கடுமையாக உழைத்துதான் சம்பாதிக்கும். மகரம் வேகமானவர்கள் ..கோபமும் தன்மானமும் மிக அதிகம்..கும்பம் சாந்தமானவர்கள் ..ஆன்மீக தொண்டில் அதிக விருப்பம் உடையவர்கள்..மகரம் மக்கள் தொண்டில் விருப்பம் உடையவர்கள்..

சனி, 23 ஏப்ரல், 2016

தமிழ் புத்தாண்டு ராசிபலன் துன்முகி 2016 ;கும்பம்

தமிழ் புத்தாண்டு ராசிபலன் துன்முகி 2016 ;கும்பம்


அவிட்டம் 3ஆம் பாதம்,சதயம்,பூரட்டாதி நட்சத்திரங்களை கொண்ட கும்பம் ராசி அன்பர்களே....கும்பத்துக்கு எப்போதும் சம்பத்து உண்டு அதாவது ஏதேனும் ஒரு வகையில் புகழ் பெற்று விடுவீர்கள்..உறவினர் பெருமையாக புகழும்படி ஒரு சிறப்பு உங்களிடம் இருக்கும்...நுணுக்கமான உங்கள் பேச்சும்,விடாத முயற்சிகலும் பாராட்டுக்குரியது....அழகான வீடு கட்டி வசிக்கும் உங்கள் கனவு நிறைவேறும்வரை ஓய மாட்டீர்கள்...தாயுடன் இந்த ராசிக்காரர்களுக்கு ஒத்து வருவதில்லை அல்லது பிரிந்து வாழ்கிறார்கள் ...அல்லது சிறு வயதில் தாயை இழந்து விடுகிறார்கள்...இந்த ராசியில் பலருக்கு தாயை கவனிக்க முடியவில்லை என்ற தாய்ப்பாசம் இருக்கும்.

கும்பம் ராசிக்காரர்களுக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு இருக்கும்..பணம் சம்பாதிப்பதில் கெட்டிக்காரர்கள்...பிறருக்கு புத்திமதி சொல்வதில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு அடுத்து இவர்கள் தான் திறமைசாலிகள் பலர் ஆன்மீக விசயங்களை விரல் நுனியில் வைத்திருப்பார்கள் சிலர் பொருளாதார விசயங்களை அலசி ஆராய்வார்கள்..குறிப்பாக சதயம் நட்சத்திரம் ஆய்வு செய்வதில் கில்லாடிகள் பெரிய, பெரிய தொழில்களில் ஆர்வம் இருக்கும் அவிட்டம் நிறைய அலைச்சல்களை சந்தித்தாலும் கடுமையாக உழைத்து முன்னேறுவார்கள் .பூரட்டாதி ஆன்மீகத்தில் சிறந்தவர்கள், பணம் சம்பாதிப்பதிலும், அதை தர்ம காரியங்களில் செல்வழிப்பதிலும் இவர்களுக்கு நிகர் இவர்கள்தான் பொது தொண்டு ,ஆன்மீக தொண்டு செய்தால் உங்கள் எண்னங்கள் பூர்த்தியாகும்..கும்பாபிஷேக அறக்கட்டளை குழுவில் நிச்சயம் இந்த ராசிக்காரர்களே பிரதான இடம் வகிப்பார்கள்.

சித்திரை மாதம் உங்கள் ராசியிலேயே கேது இருப்பதால் ,கணவன் அல்லது மனைவிக்கு உடல் ஆரோக்கிய பாதிப்பு அல்லது அடிக்கடி கருத்து வேறுபாட்டால் ஏற்படும் மன உளைச்சல்களால் தூக்கம் இழந்து தவிப்பீர்கள்...நான்காம் அதிபதி இரண்டில் இருப்பதால் சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும்...7ல் குருபலம் இருப்பதால் திருமணம் ஆகாதவர்களுக்கு இந்த வருடம் நல்லபடியாக திருமணம் நடந்தேறும்..வாழ்வில் வசந்தத்தை அனுபவிப்பீர்கள்..போன வருடத்தை விட இந்த வருடம் சிறப்பாகவே இருக்கும் ஆண்டின் பிறபகுதியில் மட்டும் குரு அஷ்டமத்துக்கு போவதால் சில சங்கடங்களை சந்திக்க நேரும் ஆனால் கனவன், மனைவிக்கு பொருளாதாரம் அப்போது சிறப்பாக இருப்பதால் பணக்கஷ்டம் வராது ..மருத்துவ செலவினங்கள் மட்டும் ஆகஸ்ட்க்கு மேல் உண்டாகும்.

பத்தாம் இடத்தில் சனி இருக்கிறார் இது கர்ம சனி..உறவினர்களில் வயதானவர்களுக்கு கர்மம் நடக்கும்...உறவினர்களில் நெருங்கியவர்களுக்கு மருத்துவ செலவு அறுவை சிகிச்சை நடக்கும்... அடிக்கடி கெட்ட செலவு உண்டாகும்...தொழிலில் சில இடையூறுகள்,தடங்கள் வந்து நீங்கும் வியாபாரம் மந்தமாக இருப்பினும் குருபலம் இருப்பதால் பாதிக்காது.

பரிகாரமாக ,ஸ்ரீரங்கம் அல்லது திருப்பதி ஒருமுறை சென்று வழிபட்டு வரவும்.


புதன், 8 ஜூலை, 2015

குரு பெயர்ச்சி ராசிபலன் 2015-2016 கும்பம்

குரு பெயர்ச்சி ராசிபலன் 2015-2016 கும்பம்

அவிட்டம் 3,4 பாதங்கள்,சதயம்,பூரட்டாதி,1,2,3 பாதங்கள் வரையில் உள்ள கும்ப ராசி நண்பர்களே..நீங்கள் எப்போதும் எதார்த்தமாய் பேசுவதாக நினைத்துக்கொண்டு உண்மைகளை அப்படியே போட்டுடைக்கும் ரகம்..எல்லாமெ பாயிண்ட், பாயிண்டாக பேசுவீர்கள்..ஆன்மீக விசயத்தில் கரைத்து குடித்தவர் போல் பிரசங்கம் செய்வீர்கள்...பைனான்ஸ்,ஷேர் மார்க்கெட் என உங்களுக்கு தெரியாத விசயமே இல்லை என்பதுபோல எல்லா விசயத்திலும் டச் செய்து பேசுவதில் வல்லவர்...கும்பத்தான் இல்லாமல் கும்பாபிஷேகம் இல்லை எனும் அளவு கோயில் காரியங்களிலும் ,பொது தொண்டிலும் உங்களை ஈடுபடுத்திக்கொள்வீர்கள்..ஆனால் உங்களை பிறர் பயன்படுத்தி ஆதாயம் அடைவதோடு முடிந்துவிடுகிறது உங்களுக்கு ஆதாயம் குறைவுதான்...திறமை இருக்கிறது ஆனால் அது பிறருக்குதான் பயன்படுகிறது...தனக்கு பயன்படுத்திக்கொள்ள தெரியவில்லை...

யாரிடமும் அளவோடு பேசுங்கள்..லூஸ்டாக் உங்கள் பலவீனம்...கடந்த வருடம் இதனால் பல அவமானம்,இழப்பு,அலைச்சல்களையும்,மருத்துவ செலவுகளையும் சந்தித்திருப்பீர்கள்..இதனால் சிலர் கடும் கடன் நெருக்கடியிலும் இருப்பீர்கள்...சிலர் சொத்துக்கள் விற்கும் நிலையும்,சிலர் வம்பு,வழக்கை சந்தித்த நிலையும் உண்டாகி இருக்கும்..இருக்குமிடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைந்த கதைதான் நடந்திருக்கும்...

வருகிற 14.7.2015 முதல் உங்கள் ராசிக்கு குருபகவான் 7ஆம் இடத்துக்கு மாறுகிறார்..குருபலம் தொட்ங்க இருக்கிறது..இனி இந்த பாதிப்புகள் எல்லாமே விலகும்..உங்கள் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்..பகை விலகும்..வருமானம் அதிகரிக்கும்...சப்தம ஸ்தானத்துக்கு குருபகவான் வருவது ராஜயோகத்தை கொடுக்கும்...புகழ்,செல்வம்,செல்வாக்கு வசதிகள் ஏற்பட்டு மகத்தான வாழ்வு உண்டாகும்..கடன் தீரும்...உத்தியோகத்தில் இருப்பவருக்கு விரும்பியபடி பதவி உயர்வு,சம்பள உயர்வு கிடைக்கும்...புதிய இடம்,வீடு,வாகனம் வாங்குவீர்கள்..வீடு கட்டும் யோகமும் ,நகைகள்,சொத்துக்கள் வாங்கும் நேரமும் நெருங்கியிருக்கிறது..வருமானம் அதிகமாகும்போது வசதி வாய்ப்புகள் அதிகரிக்கத்தானே செய்யும்.

10ல் சனி வந்ததிலிருந்து வியாபாரத்துக்கு ,தொழிலுக்கு ,வேலைக்கு நல்ல வய்ப்புகள் தேடி வந்துவிட்டது..ஒரு சிலருக்கு வந்து கொண்டிருக்கிறது..குருவின் பார்வை 11 ஆம் இடமாகிய லாபஸ்தானத்தில் பதிவது மிகுந்த யோகம்..அது குருவின் வீடாக இருப்பதால் சொந்த வீட்டை பார்க்கும் குரு இரட்டிப்பான லாபத்தையே கொடுப்பார்..பிள்ளைகள் உயர்கல்வியில் சேர்வர்...தந்தைக்கு அதிர்ஷ்ட வாய்ப்பு உண்டாகும்.....உடல்நிலை பாதிப்பில் இருந்தவர்கள் மீள்வார்கள்....நல்ல ஆரோக்கியம் உண்டாகும்...

9.5.2016 முதல் 10.8.2016 வரையிலான மூன்று மாத காலங்கள் குரு வக்ரகதியில் இயங்குவதால் ஆறாமிடத்தின் பலன்களை கொடுக்க ஆரம்பித்து விடும் நல்ல பலன்கள் நடக்காது இக்காலகட்டத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்...

பரிகாரம்;திருச்செந்தூர் அல்லது திருப்பதி சென்று ரொம்ப நாள் ஆகியிருந்தால் ஒருமுறை சென்று வாருங்கள்...

செல்வவளம் உண்டாக

ஸ்ரீதனவசிய எந்திரம்,மூலிகை சாம்பிராணி,மகாலட்சுமி கலசம்  போன்ற பிரச்சினைகளை தீர்க்க கூடிய செல்வவளம் தரும் ஆன்மீக பொருட்களை உருவாக்கி விற்பனை செய்து வருகிறோம்... பல நண்பர்கள் இதனை நம்மிடம் பெற்றனர்.. அதன் மூலம் பல நன்மைகளை அடைந்தனர்..பல பிரச்சினைகள் தீர்ந்தது..  ஒரு கவசம் போல் பாதுகாப்பு தருகிறது என போனிலும், நேரிலும் பாராட்டிய நண்பர்களுக்கு நன்றி.மேலும் இதனை பெறவும்,விபரங்களை அறியவும், இங்கு க்ளிக் செய்யவும்..நன்றி..!!

வியாழன், 5 மார்ச், 2015

கும்பம் ராசியினர் எப்படிப்பட்டவர்கள்..? aquarius

கும்பம் ராசி;
கும்பத்தான் சம்பத்தான் என்பார்கள்..ராசியில் கலசம் படம் இருக்கும்...கும்பம் ராசியினர் ஒருவரை அருகில் வைத்துக்கொண்டு சுபகரியம் செய்தால் சீரும் சிறப்பாக அமையும்...ஊர்ல கும்பாபிஷேகம் நடக்குதா..அதுல முக்கியஸ்தர்கள் பட்டியலில் முக்கிய இடம் பிடிப்பவர் கும்ப ராசிக்காரராகத்தான் இருப்பார்..கும்பம் ஸ்திர ராசி என்பதால் இவர் மூலம் செய்யப்படும் காரியம் நிலையான வெற்றி பெறும்..

இந்த ராசி  கால புருஷனுக்கு  பதினொன்றாவது  ராசி,  ஆண் ராசி, ஸ்திர ராசி,  காற்று ராசி,  சாந்தமான ராசி,  பண்பான ராசி,  வெறுமையான ராசி,  வீணான  விரையமான ராசி,  உண்மையான ராசி,  மாசற்ற ராசி,  குரலோசை ராசி,  குருட்டுத்தனமான ராசி,  குறுகிய ராசி,  மூன்றுகால் ராசி,  உயிரற்ற ராசி, குள்ளமான ராசி.

இந்த  ராசிக்காரர்கள்  கறுமை  கலந்த  நிறமுடையவர்கள்.  பருத்த  சாரீரம்   உடையவர்கள்.  சிவந்த  கண்கள்   உடையவர்கள்.  நல்ல  உயரமும்.  மெலிந்த  தேகமும்,  அழகும்  வசீகரமான  முகமும்  உடையவராக  விளங்குவார்கள்.  உயர்ந்த  நெற்றியும்  அகன்ற  கன்ன்ங்களும்,  பெரிய உதடுகளும்  உடையவர்கள்.  இடுப்பும்  பின் பாகமும்  பெரியதாக  இருக்கும்.

நளினமான  நடையுடை  பாவனைகள்  உடையவர்கள்.  நாசூக்காக  நடந்து  கொள்வார்கள்.  இந்த  ராசிக்காரர்கள்  மனோதிடம்  உடையவர்கள்.  எந்த விதமான  கஷ்டத்திற்கும்  அஞ்ச  மாட்டார்கள்.  தனக்கு  தெரிந்த வித்தையால்  மானத்துடனும்  புகழுடனும்  வாழ்வார்கள்.  ஒருவர் செய்த  உபகாரத்தை  மறக்காதவர்கள்.  மிகவும்  மதி நுட்ப  முடையவர்கள்.  வெகு  விரைவில்  நட்புச்  செய்து  கொள்வார்கள்.  சட்டென்று  கோபம்  கொண்டு  ஆக்ரோஷத்துடன்  பொங்கி  விடுவார்கள்.  ஆனால்  இவர்களுடைய  கோபம்  உடனே  தணிந்து  விடும்.  மனத்தூய்மை  உடையவர்கள்.  விஷயங்களை  நன்றாகத்  தெரிந்து  வைத்திருந்தால்  கூட  மற்றவர்கள்  எதிரில்  பேசுவதற்குத்  தயங்குவார்கள்.  இவர்களுடைய  பயந்த  சுபாவம்  கோழைத்தனமாகவும்  கருதப்படலாம். 

இலக்கியத்திறன்  மிக  சிறு வயது  முதலே  வெளிப்படத்  தொடங்கிவிடுகிறது.   ஆனால்  தங்களுடைய  திறமை  என்ன  என்பதை  இவர்களால்  அறிந்து  கொள்ள  முடிவதில்லை.  இவர்களுடைய  அறிவுத்திறன்  கண்டு  மற்றவர்கள்  எடுத்துச் சொன்னால்  ஆச்சிரியப்படுவார்கள்.   நம்பவும்  தயங்குவார்கள்.  நல்ல  கல்வியடையவர்கள்.   கல்வியார்வமுடையவர்.  ஆனால்  மற்றவகளை  ஒன்று  திரட்டும்  சக்தி இவர்களுக்கு   கிடையாது.  தங்களிடம்  நம்பிக்கை  வைத்த  எதிரியைக்  கூட  காட்டிக்  கொடுக்க  மாட்டார்கள்.  அவர்களுடைய  அரிய  குணங்களின்  காரணமாக  ஒரு முறை  தொடர்பு  கொள்பவர்கள்  பிறகு  மறக்கவே  முடியாது.  நல்ல  களத்திரமும்  அமையும்.

இவர்களுக்கு  ஞாபக  சக்தி  அதிகமாக  இருக்கும். பிறரை  எடைப்  போடுவதில்  கெட்டிக்காரர்கள்  வெளிப் புற  தோற்றத்தில்  ஏதும்  அறியதாவர்களை  போல  இருந்தாலும்  எல்லாவற்றையும்  நுட்பமாக  அறிந்து  வைத்துக்  கொண்டு  சமயம்   வரும்  போது  அடை  தயங்காமல்  வெளிப்படுத்துவார்கள்.  இவர்கள்  எதையும்   ஒரு முறைக்கு  இரு முறை  செய்த  பிறகு  தான்  வெற்றிக் கனியை  பிடிப்பார்கள்.  கேலியாகவும்,  கிண்டலாகவும்  பேசுவதில்  இவர்களுக்கு  இணையாரு  மில்லை  நண்பர்களை  உயிருக்கு  உயிராக  நேசிப்பர்.  எந்தவொரு  முக்கியமான  காரியமாக  இருந்தாலும்  அதில்  ஈடுபடுவதற்கு   முன்னால்  அனுபவசாலிகளிடம்  முன்யோசனை  கேட்பர்.

இவர்கள்  பனத்திற்காகவோ,  தரும்  பொருள்க்காகவோ  தங்கள்  கொள்கைகளை  சற்றும்  தளர்த்திக்  கொள்ள  மாட்டார்கள்.  எடுத்த முடிவுகளில்   தாமதம்  ஏற்பட்டாலும் தக்க  முடிவாக  இருக்கும்.  பணீயாளார்கள்  இவர்களிடம்  எவ்வளவு  நல்லபடியாக  நடந்து கொண்டாலும்  நல்ல  பெயர்  வாங்குவது  அரிது.  வீட்டுப்  பொறுப்பை  வாழ்க்கைத்  துணைவியிடம்  ஒப்படைத்துவிட்டு  மற்றவறையே  கவனிப்பர்.  எதிரிகளின்  தொல்லை  இவர்களுக்கு  அதிகமாகவே  இருக்கும்.  இவர்கள்  சுய  முயற்சியில்  குடும்பத்தினரை  பாதுகாக்க  வேண்டும்  என்ற  கொள்கையை  உடையவர்கள்.

இவர்கள்  ஆடம்பரமான  செலவு  செய்து  வாழ வேண்டுமென்று  குறிக்கோள்  கொண்டவர்கள்.  உறவினர்கள்  அதிசயிக்கும்  அளவிற்கு  வாழ்க்கைத்  தரம்  உயர  வேண்டுமென்று  விரும்பவர்.   வாழ்க்கையின்  மையப்  பகுதியில்  வாகன  வசதிகள்  அமையும்.  தாயின்  பாசம்  ஆரம்பரத்தில்  சிறப்பாக  அமையும்.  ஆனால்  பிற் பகுதியில்  எதிர்ப்பார்த்த  அளவுக்கு  இருக்காது.  உடன்  பிறப்பால்  ஒத்துழைபு  கிடைக்கும்.

இவர்களுக்கு  பூர்வீக  சொத்துக்கள்  இருந்தும்  அதை  உபயோகப்படுத்திக்  கொள்ள  இயலாமல்  திண்டாடுவர்.  இவர்கள் தான்  சம்பாதித்தை  தானே  விரயம்  செய்து  விடும்  சூழ்நிலை  உண்டாகும்.  ஆகவே   தான்  சம்பாதித்தை   குடும்பத்தினரின்  பெயரில்  வைத்துக்  கொள்ள  வேண்டும்.  தொழிலும்  குடும்ப  உறுப்பினர்களின்  பெயரில் தொழில்  செய்வது  நலம்.

ஜோதிடம்,  மாந்திரீகம்,  தத்துவம்  போன்றாவற்றிலும்  அவர்களுக்கு  ஆர்வம்   ஏற்படலாம்.  முழுமனதுடன்   ஈடுபட்டால்  நல்ல  திறமை  அடையவும்  முடியும்.  நேர்மையானவர்,  இரக்க  மனப்பான்மை யுடையவர்,  இலாபம்  கருதி  செயல்படுவர்,  சுய நலவாதியாகவும், காரியம்  இருந்தால்  மட்டும்  பேசக்  கூடியவராகவும்  இருப்பார்,
இவர்கள்  பொறியியல் துறை,  மருத்துவத் துறை,  ஆசிரியர் பணி,  வழக்கறிஞர்,  கட்டிட  இட விற்பனைத் துறை,  போன்றவற்றில் ஈடுபட்டால்  வெற்றி  காணலாம்.

இவர்கள்  விநாயகர்  பெருமானையும்,  அனுமனையும்  விடாது  வழிபட்டு  வந்தால்  சிறப்பாக  இருக்கும்.  சனீஸ்வர  சந்நிதியில்  சனி  கவசம்  பாடி  கோரிக்கையை  சொல்லாம்.  ராமர்  பட்டாபிஷேகப் படத்தை  வைத்து  வழிபாடு  செய்யாலாம்.

புதன், 15 அக்டோபர், 2014

சனி பெயர்ச்சி பலன்கள் 2014-2017 கும்பம்

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2014-2017 கும்பம்

அவிட்டம் 3,4 ,சதயம்,பூரட்டாதி 1,2,3 ஆம் பாதங்களை சேர்ந்த கும்பம் ராசி நண்பர்களே...சனி பகவான் உங்கள் ராசிக்கு லக்னாதிபதி மற்றும் விரயாதிபதி ஆவார்.அவர் நவம்பர் 2ஆம் தேதி முதல் உங்கள் ராசிக்கு ராஜ்ஜியஸ்தானம் எனும் பத்தாம் வீட்டில் தனது சஞ்சாரத்தை தொடங்குகிறார்..பத்தாம் வீடு தொழில் ஸ்தானம் ஆகும்.தொழில் காரகனாகிய சனி தொழில் ஸ்தானத்துக்கு வந்தால் தொழில் வலிமை அடையும்..இதுவரை தொழிலில் பிரச்சினை இருந்தவர்களுக்கு இனி நிம்மதி உண்டாகும்...தொழில் அபிவிருத்தி உண்டாகும் பணியில் இருப்பவர்களுக்கு நிரந்தரம் ஆகும்.வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

பத்தாம் வீட்டில் சஞ்சரிக்கும் சனிபகவான் உங்கள் ராசிக்கு நான்கு ,ஏழு மற்றும் பன்னிரெண்டாம் வீடுகளை பார்க்கிறார்....இதனால் சொத்துக்கள் ,வீடு போன்றவற்ரில் இருக்கும் பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.தியானம்,யோகா போன்ரவற்றில் ஆர்வம் அதிகரிக்கும்...சித்தர்களின் அருளாசி கிடைக்கும் சதுரகிரி,ரிசிகேஷ்,காசி ,ராமேஸ்வரம் போன்ற புண்ணியஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள்...பணம் பல வழிகளிலும் வந்து சேரும் இதனால் கடன்கள் அடைபடும்..நீண்ட கால பிரச்சினைகள்,கடன்கள் முடிவுக்கு வரும்...

பத்தாம் வீட்டில் சனி சஞ்சரிப்பதை அதிர்ஷ்ட்த்தின் சின்னம் என பழைய ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன...ராசிபலன் அடிப்படையில் பார்த்தால் லக்னாதிபதி பத்தில் இருப்பது நல்ல யோகம் என்றுதான் சொல்ல வேண்டும்.பன்னிரெண்டை பார்க்கும் சனி வீண் செலவுகளை குறைப்பார்...சனியின் விருச்சிக பெயர்ச்சிக்காலம் முடிவடையும் வரை குரு மகரம்,கும்பம் ஆகிய ராசிகளை மாறி மாறி பார்வையிடுகிறார்..எனவே சேமிப்பு உயரும்.தன குடும்ப ஸ்தானத்திற்கு அதிபதி குரு உங்கள் ராசிக்கு லாபஸ்தானத்தில் இருக்கிறார் விலை உயர்ந்த ஆடம்பரப்பொருட்கள்,ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள்..ராசிநாயகனே நான்காம் இட்த்தை பார்வை செய்வதால் சுகங்களும்,சந்தோசங்களும் பெருகும்.

சனி வக்ரம்;15.3.2015 முதல் 2.8.2015 வரையிலும் ,26.3.2016 முதல் 13.8.2016 வரையிலும் சனி இரண்டு முறை வக்ரகதி அடைகிறார்........இந்த காலங்களில் கவனம் தேவை
பரிகாரம்; சனிக்கிழமை அன்று திருநள்ளாரு சென்று அதிகாலையில் அங்குள்ள நள தீர்த்த குளத்தில் நல்லெண்ணெய் தேய்த்து நீராடி ,சனிபகவானை வழிபட்டுவிட்டு மரகத லிங்க தரிசனமும் பார்த்து வரவும்...

ச்னிக்கிழமை தோறும் காகத்துக்கு சாதம் வைத்த பின் மதியம் உணவு உண்ணவும்..சனிக்கிழமையில் அசைவம் வேண்டாம்...

சனிக்கிழமையில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலையில் கிராம்பு வைத்து அதை மடித்து உங்கள் கையால் 48 வெற்றிலையை  மாலையாக கட்டி அனுமனுக்கு நெய்தீபம் ஏற்றி வெற்றிலை மாலையை போட்டு வழிபடவும்..

வசதி இருப்பவர்கள் ஏழைகள் 50 பேருக்கு செருப்பு தானம் செய்யவும்....ஊனமுற்றவருக்கு உடைகள் வாங்கி தரவும்..

குழந்தைகளுக்கு சனிக்கிழமையில் எள்ளுருண்டைசாப்பிடக்கொடுக்கலாம்

சர்வ ஜன வசிய எந்திரம்;

இது இருபக்கமும் வசிய மந்திரம் எழுதப்பட்டது பாக்கெட்டில் வைத்துக்கொள்ளக்கூடியது மணிபர்ஸ்,.பணப்பெட்டியில் வைத்துக்கொள்ளலாம்...வருமானம் அதிகரிக்கவும்,நீங்கள் அதிர்ஷ்டசாலியாகவும் இது உருவாக்கப்பட்டது..

நீங்கள் எந்த காரியத்துக்காக முயற்சித்தாலும் அது வெற்றியாக இது உதவும்..முக்கிய மனிதர்களை சந்திக்கப்போகும்போது இதை பாக்கெட்டில் வைத்துக்கொண்டால் உங்கள் காரியம் தடங்கல் இல்லாமல் முடியும்.வருமானம் பல மடங்கு உயரவும் ,கடன் தீரவும்,கஷ்டங்கள் தீரவும்  இதை பயன்படுத்தலாம்..

இதனை என் குரு எனக்கு வரைந்து கொடுத்தார். இதனை உங்களுக்கு நான் வரைந்து பூஜித்து தருகிறேன்..இது வேறு யாரும் கொடுப்பதும் இல்லை...கிடைப்பதும் இல்லை...குரு வழியால் எனக்கு கிடைத்ததை உங்களுக்கு தருகிறேன்..காரியம் வெற்றி அடைய சகலரும் வசியம் ஆக,பணம் எப்போதும் கையில் தங்க ,கடன் பிரச்சினை தீர இது பெரிதும் உதவுகிறது...நான் பெற்ற அதிர்ஷ்டம் எல்லோரும் பெற வேண்டும்..தேவைப்பட்டால் தொடர்புகொள்ளவும்..9443499003 மெயில் ;sathishastro77@gmail.com..


தெய்வீக மூலிகை சாம்பிராணி;

கடன் பிரச்சினை தீர,வருமானம் பல மடங்கு அதிகரிக்க,லட்சுமி வசியம் உண்டாக,நோய்கள் நீங்க,வீட்டில் கெட்ட சக்திகள் விலக....செல்வவளம் தரும் மூலிகைகள் மொத்தம் 23 மூலிகைகளை கொண்டு நான் உருவாக்கியதுதான் தெய்வீக மூலிகை சாம்பிராணி..

இதில்சாம்பிராணி,குங்கிலியம்,மருதாணி,அகில்,தேவதாரு,வெண்கடுகு,அகில்,
அரசவிதை, கோஷ்டம்,கெடாமஞ்சள்,வெட்டிவேர்,விளாமிச்சை வேர்,புனுகு,சந்தனம்,கோராஜனம் என தெய்வீக வசியம் உண்டாக்கும் மூலிகைகள் அனைத்தும் அரைத்து கலக்கப்பட்டுள்ளன...தேவைப்படுபவர்கள் 9443499003 என்ற எண்ணுக்கு அழைத்து  வாங்கிக்கொள்ளலாம்.. வீடுகளில் ,அலுவலகங்களில் சாம்பிராணி புகை போடுவது போல உபயோகியுங்கள்... நல்ல பலனை அடைவீர்கள்..கணபதி ஹோமம்,லட்சுமி ஹோமம் வளர்ப்பதற்கு இணையானது..மெயில்;sathishastro77@gmail.com

வெள்ளி, 24 ஜனவரி, 2014

குரு சுக்கிரன் வக்ரம் எந்த ராசியினருக்கு பாதிப்பு..? ராசிபலன்


சுக்கிரன்,குரு இருவரும் இப்போது வக்ரத்தில் இருக்கிறார்கள்...மேசம்,சிம்மம்,கடகம்,விருச்சிகம்,தனுசு,மீனம் ராசியினருக்கு குரு யோகம் தருவார்...ரிசபம்,கன்னி,துலாம்,மகரம்,கும்பம் ராசியினருக்கு சுக்கிரன் யோகம் தருவார்..

இப்படி முக்கியமான கிரகங்களும் பலமிழந்து இருப்பது எல்லோருக்கும் பாதிப்புதான்..குரு மாசி 22 ஆம் தேதி வக்ர நிவர்த்தி ஆகிறார் சுக்கிரன் தை 18 ஆம் நாள் வக்ர நிவர்த்தி ஆகிறார் அதாவது இன்னும் 7நாள் ..அதன் பின் ரிசபம்,கன்னி, துலாம்,மகரம்,கும்பம் ராசியினருக்கு பிரச்சினைகள் தீரும் உடல் ஆரோக்கியம் உண்டாகும்,..வருமானம் அதிகரிக்கும்..!!

 மாசி 22 ஆம் தேதி குரு வக்ரம் முடிகிறது...அதுவரை பங்கு சந்தையில் முதலீடு செய்வோ கவனமுடன் இருப்பது நல்லது...ஜூன் மாஹம் குரு உச்சம் ஆகும்போது பங்கு சந்தை யும் இதுவரை இல்லாத வளர்ச்சியை அடையும் வாய்ப்பிருக்கிறது..இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பான வளர்ச்சியை தொடும் காலமாக இருக்கும்!!

 ஒருமுறை இறந்த ஒருவரை பார்த்து உறவினர்கள் கதறி அழுத காட்சி வடலூர் வள்ளலாரை உருக்கியது..தன் சக்தியால் இறந்தவரை உயிர்பித்தார்...ஆனந்த அதிர்ச்சியில் மக்கள் திளைத்தனர்...அடுத்த நாள் என்ன ஆனது தெரியுமா..விசயம் காட்டு தீயாக பரவியதில் சுத்து பட்டு 18 பட்டியிலும் இறந்த பிணங்களை கொண்டு வந்து வள்ளலார் ஆசிரமத்தை சுத்தி வைத்துவிட்டனர் சாமி மந்திரம் சொல்லி பிழைக்க வெச்சிடுவாரு.என காத்திருந்த மக்களை பார்த்து வள்ளலார் வேதனைப்பட்டார்

சகல சக்திகளையும் என்னை போலவேபெறும் வழிகளை நான் சொல்லி இருந்தும்.,அதை ஏறெடுத்தும் பார்க்காமல் எல்லாமெ சுலபமாக நடக்கனும்னு நினைக்கும் மக்களை பரிதாபமாக பார்த்தார்..உடனே தன் அறைக்குள் சென்று கதவை தாழிட்டுக்கொண்டு காற்றில் கரைந்தார்...காற்றில் கரையும் கலை உட்பட சகல சித்துக்களையும் அறிந்தவர் வள்ளலார்..தங்கம் செய்யும் நுட்பமும் அறிந்திருந்தார்..புத்தருக்கு நிகரான ஒரு மகான் நம் தமிழகத்தில் சமீப காலத்தில் வாழ்ந்தது நமக்கு பெருமை.

 சென்னிமலை முருகன் கோயில் கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மிக உகந்த ஸ்தலம்..ரத்த அழுத்தம்,நீரிழிவு நோயாளிகள் இங்கு வழிபட்டால் விரைவில் நோய் குறையும் ..உங்களுக்கு தகுந்த மருத்துவ சிகிச்சை கிடைத்து நோயின் தாக்கம் குறையும்..காங்கேயம் சிவன்மலை முருகன் குருவின் அம்சம்.,..கல்வியில் முன்னேற்றம் அடைய இந்த முருகனை வழிபட்டால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்..வெளிநாடு வேலைக்கு செல்ல முயற்சிப்பவர்கள் திருச்செந்தூர் முருகனை தரிசிக்க விரைவில் வெளிநாடு செல்ல வாய்ப்பு உண்டாகும்!!

 லக்னத்தில் சூரியன்,சனி,செவ்வாய்,ராகு,கேது போன்ற அசுப கிரகங்கள் இருந்தால், பெரும்பாலும் சிடுமூஞ்சியாகவும் முன்கோபியாகவும், எப்போதும் டென்சன் உடையவர்களாகவும் இருக்கிறார்கள்..

லக்னத்தில் குரு,சுக்கிரன்,சந்திரன்,புதன் போன்ற சுப கிரகங்கள் இருந்தால் மலர்ந்த முகமாகவும், பால் வடியும் முகமாகவும், சிரித்து பேசி,அன்பை கொட்டி மயக்ககூடியவர்களாக இருக்கிறார்கள்..!!

 ஜாதகத்தில் லக்னத்துக்கு 5ஆம் ராசியில் சனி,ராகு,கேது,செவ்வாய்,சூரியன் போன்ற பாவ கிரகங்கள் இருப்பின் முன் ஜென்மம் பாவங்களை குறிக்கிறது இதனால் இப்பிறவியில் போராட்டமும்,காரியதடையும்,அடுக்கடுக்கான சோதனைகளும் உண்டாகிறது.. அவர்கள் இந்த நேரத்தில் தான. தர்மங்கள் செய்யலாம்..கர்மவினை தீரும்.வரும் தை அமவாசையில் கண் பார்வையற்றோர் இல்லத்துக்கு அன்னதானம் வழங்க இருக்கிறேன்..முடிந்தால் நீங்களும் இணைந்துகொள்ளலாம்..தொடர்பு கொள்ள;sathishastro77@gmail.com

செவ்வாய், 31 டிசம்பர், 2013

ஆங்கில புத்தாண்டு ராசிபலன் 2014 மகரம்,கும்பம்,மீனம்

புத்தாண்டு ராசிபலன் 2014 மகரம்;
அன்பும்,பண்பும்,பாசம் நிறைந்த மகர ராசி அன்பர்களே...கடும் உழைப்பாளி.கடும் அன்பாளி நீங்கதான்..திருப்பதி பெருமாளே..உங்க ராசியில்தான் பிறந்திருக்கார்...போப் ஆண்டவர் நண்பரான ரஜினியே உங்க ராசியில்தான் பிறந்திருக்கார்!!! அப்புறம் என்னங்க கவலை..?அதனால இந்த வருசம் தைப்பொறந்தா உங்களுக்கு வழிபிறக்கும்...உங்க ராசிக்கு 7ல் குரு உச்சம் பெறுகிறார் குருபலம் தொடங்குகிறது...திருமனம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும் வருடம்...பணக்கஷ்டம் தீரும்..தொழிலில் இதுவரை இருந்த பிரச்சினைகள் அகலும்...கடன்கள் அடைபடும்...ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாக இருக்கு..சனியுடன் இருந்த ராகு விலகுவதால் உச்சம் பெற்ற உங்க ஹீரோ சனி முழு பலம் அடைகிறார் அதனால் இந்த வருடம் அபரிதமான லாபம் வந்து சேரும்!!

 புத்தாண்டு ராசிபலன் 2014 ;கும்பம்;

கும்பத்தோன் சம்பத்தோன் என சொல்வாங்க...தெய்வ காரியங்கள் உங்களால் முடிக்கப்படனும்னு விதி..அதனால் ஒரு ஊரில் கும்பாபிசேகம் நடக்குதுன்னா அதுல முக்கியஸ்தர்கள் சிலருக்கு கும்ப ராசி இருக்கும்...கும்ப ராசிக்காரர்களை தலைமையில் ஒரு நல்ல காரியம் நடந்தா அது நல்லபடியாய் முடியும்..அவ்வளவு சிறப்பு பெற்றவர் நீங்க...ராசிக்கு இப்போ 5ல் குரு பலம் இருக்கு அது ஜூன் மாதம் வரை இருக்கு அதுக்குள்ள திருமணம் போன்ற சுபகாரியங்களை நடத்திக்கொள்வது நல்லது குருபெயர்ச்சியாகும்போது அது 6ஆம் இடத்துக்கு மாறிடும்...சனி 9ஆம் இடத்துல இருக்கார் தந்தை வழி ஆதாயம் உண்டு...ராகு ராசிக்கு எட்டில் மாறுகிறார் கெட்டவன் மறைந்தால் நல்லதுதான்...6க்கு குரு போவதால் கடன் கொடுக்கவோ வாங்கவோ வேண்டாம் வீண் சிக்கல் வந்து சேரும் புதிய நபர்களை நம்பி எதிலும் இறங்க வேண்டாம்..

 புத்தாண்டு ராசிபலன் 2014 ; மீனம்;

2013ல் அதிகம் துவண்டு போன ராசிக்காரங்கன்னு பார்த்தா மீனம் ராசிக்காரங்கதான்...அஷ்டம சனியால் அவ்வளவு துன்பம் அடைந்த நீங்கள்,பிறக்கப்போகும் புத்தாண்டில் புத்துணர்ச்சி அடையப்போகிறீர்கள் ஆம்..அஷ்டம சனி உங்களுக்கு முடியப்போகிரது..இதெல்லாம் ஓவர் சார் இன்னும் 11 மாசம் இருக்கு..என அப்பவும் கண்ணை கசக்காதீங்க..புத்தாண்டுல சந்தோசமான விசயம் நான் சொல்லியே ஆகனும்..2014ல் ஜூன் மாத குருப்பெயர்ச்சியும் உங்களுக்கு சூப்பரா இருக்கு 5ல் குரு உச்சம் பெற போகிறார் இது புத்தி ஸ்தானம்,வெற்றி ஸ்தானம் அப்புறம் சந்தோசத்துக்கும் வருமானத்துக்கும் வெற்றிக்கும் கேட்கவா வேணும்...சும்மா தகதகன்னு புத்தாண்டுல மின்னப்போறது நீங்கதான்...ஜூன் மாசாமே குரு பலம் பெற்று சனியின் தொல்லைகளை குறைத்திடுவார்..பணம் தாராளமா வரும்போது,முட்டுக்கட்டைகள் எல்லாம் விலகும்போது ,நினைச்சதெல்லாம் மளமளன்னு நடக்கும்போது மனசில் சந்தோசம் தாண்டவமாடாதா..?திருமனம் ஆகாதவர்கலுக்கு திருமனம் நிச்சயம் நடக்கும் வீடு கட்ட ஆரம்பித்து பாதியில் தடையாகி நிற்போருக்கு தடைகள் விலகும்..கடன்கள் வேகமாக அடைபடும் நெருக்கடி தீரும்...உறவினர் நண்பர் பகை அகலும் கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் அன்பு அதிகமாகும்...தெய்வ அருள் பரிபூர்ணமாக உண்டாகும்..!!