வியாழன், 5 மார்ச், 2015

கும்பம் ராசியினர் எப்படிப்பட்டவர்கள்..? aquarius

கும்பம் ராசி;
கும்பத்தான் சம்பத்தான் என்பார்கள்..ராசியில் கலசம் படம் இருக்கும்...கும்பம் ராசியினர் ஒருவரை அருகில் வைத்துக்கொண்டு சுபகரியம் செய்தால் சீரும் சிறப்பாக அமையும்...ஊர்ல கும்பாபிஷேகம் நடக்குதா..அதுல முக்கியஸ்தர்கள் பட்டியலில் முக்கிய இடம் பிடிப்பவர் கும்ப ராசிக்காரராகத்தான் இருப்பார்..கும்பம் ஸ்திர ராசி என்பதால் இவர் மூலம் செய்யப்படும் காரியம் நிலையான வெற்றி பெறும்..

இந்த ராசி  கால புருஷனுக்கு  பதினொன்றாவது  ராசி,  ஆண் ராசி, ஸ்திர ராசி,  காற்று ராசி,  சாந்தமான ராசி,  பண்பான ராசி,  வெறுமையான ராசி,  வீணான  விரையமான ராசி,  உண்மையான ராசி,  மாசற்ற ராசி,  குரலோசை ராசி,  குருட்டுத்தனமான ராசி,  குறுகிய ராசி,  மூன்றுகால் ராசி,  உயிரற்ற ராசி, குள்ளமான ராசி.

இந்த  ராசிக்காரர்கள்  கறுமை  கலந்த  நிறமுடையவர்கள்.  பருத்த  சாரீரம்   உடையவர்கள்.  சிவந்த  கண்கள்   உடையவர்கள்.  நல்ல  உயரமும்.  மெலிந்த  தேகமும்,  அழகும்  வசீகரமான  முகமும்  உடையவராக  விளங்குவார்கள்.  உயர்ந்த  நெற்றியும்  அகன்ற  கன்ன்ங்களும்,  பெரிய உதடுகளும்  உடையவர்கள்.  இடுப்பும்  பின் பாகமும்  பெரியதாக  இருக்கும்.

நளினமான  நடையுடை  பாவனைகள்  உடையவர்கள்.  நாசூக்காக  நடந்து  கொள்வார்கள்.  இந்த  ராசிக்காரர்கள்  மனோதிடம்  உடையவர்கள்.  எந்த விதமான  கஷ்டத்திற்கும்  அஞ்ச  மாட்டார்கள்.  தனக்கு  தெரிந்த வித்தையால்  மானத்துடனும்  புகழுடனும்  வாழ்வார்கள்.  ஒருவர் செய்த  உபகாரத்தை  மறக்காதவர்கள்.  மிகவும்  மதி நுட்ப  முடையவர்கள்.  வெகு  விரைவில்  நட்புச்  செய்து  கொள்வார்கள்.  சட்டென்று  கோபம்  கொண்டு  ஆக்ரோஷத்துடன்  பொங்கி  விடுவார்கள்.  ஆனால்  இவர்களுடைய  கோபம்  உடனே  தணிந்து  விடும்.  மனத்தூய்மை  உடையவர்கள்.  விஷயங்களை  நன்றாகத்  தெரிந்து  வைத்திருந்தால்  கூட  மற்றவர்கள்  எதிரில்  பேசுவதற்குத்  தயங்குவார்கள்.  இவர்களுடைய  பயந்த  சுபாவம்  கோழைத்தனமாகவும்  கருதப்படலாம். 

இலக்கியத்திறன்  மிக  சிறு வயது  முதலே  வெளிப்படத்  தொடங்கிவிடுகிறது.   ஆனால்  தங்களுடைய  திறமை  என்ன  என்பதை  இவர்களால்  அறிந்து  கொள்ள  முடிவதில்லை.  இவர்களுடைய  அறிவுத்திறன்  கண்டு  மற்றவர்கள்  எடுத்துச் சொன்னால்  ஆச்சிரியப்படுவார்கள்.   நம்பவும்  தயங்குவார்கள்.  நல்ல  கல்வியடையவர்கள்.   கல்வியார்வமுடையவர்.  ஆனால்  மற்றவகளை  ஒன்று  திரட்டும்  சக்தி இவர்களுக்கு   கிடையாது.  தங்களிடம்  நம்பிக்கை  வைத்த  எதிரியைக்  கூட  காட்டிக்  கொடுக்க  மாட்டார்கள்.  அவர்களுடைய  அரிய  குணங்களின்  காரணமாக  ஒரு முறை  தொடர்பு  கொள்பவர்கள்  பிறகு  மறக்கவே  முடியாது.  நல்ல  களத்திரமும்  அமையும்.

இவர்களுக்கு  ஞாபக  சக்தி  அதிகமாக  இருக்கும். பிறரை  எடைப்  போடுவதில்  கெட்டிக்காரர்கள்  வெளிப் புற  தோற்றத்தில்  ஏதும்  அறியதாவர்களை  போல  இருந்தாலும்  எல்லாவற்றையும்  நுட்பமாக  அறிந்து  வைத்துக்  கொண்டு  சமயம்   வரும்  போது  அடை  தயங்காமல்  வெளிப்படுத்துவார்கள்.  இவர்கள்  எதையும்   ஒரு முறைக்கு  இரு முறை  செய்த  பிறகு  தான்  வெற்றிக் கனியை  பிடிப்பார்கள்.  கேலியாகவும்,  கிண்டலாகவும்  பேசுவதில்  இவர்களுக்கு  இணையாரு  மில்லை  நண்பர்களை  உயிருக்கு  உயிராக  நேசிப்பர்.  எந்தவொரு  முக்கியமான  காரியமாக  இருந்தாலும்  அதில்  ஈடுபடுவதற்கு   முன்னால்  அனுபவசாலிகளிடம்  முன்யோசனை  கேட்பர்.

இவர்கள்  பனத்திற்காகவோ,  தரும்  பொருள்க்காகவோ  தங்கள்  கொள்கைகளை  சற்றும்  தளர்த்திக்  கொள்ள  மாட்டார்கள்.  எடுத்த முடிவுகளில்   தாமதம்  ஏற்பட்டாலும் தக்க  முடிவாக  இருக்கும்.  பணீயாளார்கள்  இவர்களிடம்  எவ்வளவு  நல்லபடியாக  நடந்து கொண்டாலும்  நல்ல  பெயர்  வாங்குவது  அரிது.  வீட்டுப்  பொறுப்பை  வாழ்க்கைத்  துணைவியிடம்  ஒப்படைத்துவிட்டு  மற்றவறையே  கவனிப்பர்.  எதிரிகளின்  தொல்லை  இவர்களுக்கு  அதிகமாகவே  இருக்கும்.  இவர்கள்  சுய  முயற்சியில்  குடும்பத்தினரை  பாதுகாக்க  வேண்டும்  என்ற  கொள்கையை  உடையவர்கள்.

இவர்கள்  ஆடம்பரமான  செலவு  செய்து  வாழ வேண்டுமென்று  குறிக்கோள்  கொண்டவர்கள்.  உறவினர்கள்  அதிசயிக்கும்  அளவிற்கு  வாழ்க்கைத்  தரம்  உயர  வேண்டுமென்று  விரும்பவர்.   வாழ்க்கையின்  மையப்  பகுதியில்  வாகன  வசதிகள்  அமையும்.  தாயின்  பாசம்  ஆரம்பரத்தில்  சிறப்பாக  அமையும்.  ஆனால்  பிற் பகுதியில்  எதிர்ப்பார்த்த  அளவுக்கு  இருக்காது.  உடன்  பிறப்பால்  ஒத்துழைபு  கிடைக்கும்.

இவர்களுக்கு  பூர்வீக  சொத்துக்கள்  இருந்தும்  அதை  உபயோகப்படுத்திக்  கொள்ள  இயலாமல்  திண்டாடுவர்.  இவர்கள் தான்  சம்பாதித்தை  தானே  விரயம்  செய்து  விடும்  சூழ்நிலை  உண்டாகும்.  ஆகவே   தான்  சம்பாதித்தை   குடும்பத்தினரின்  பெயரில்  வைத்துக்  கொள்ள  வேண்டும்.  தொழிலும்  குடும்ப  உறுப்பினர்களின்  பெயரில் தொழில்  செய்வது  நலம்.

ஜோதிடம்,  மாந்திரீகம்,  தத்துவம்  போன்றாவற்றிலும்  அவர்களுக்கு  ஆர்வம்   ஏற்படலாம்.  முழுமனதுடன்   ஈடுபட்டால்  நல்ல  திறமை  அடையவும்  முடியும்.  நேர்மையானவர்,  இரக்க  மனப்பான்மை யுடையவர்,  இலாபம்  கருதி  செயல்படுவர்,  சுய நலவாதியாகவும், காரியம்  இருந்தால்  மட்டும்  பேசக்  கூடியவராகவும்  இருப்பார்,
இவர்கள்  பொறியியல் துறை,  மருத்துவத் துறை,  ஆசிரியர் பணி,  வழக்கறிஞர்,  கட்டிட  இட விற்பனைத் துறை,  போன்றவற்றில் ஈடுபட்டால்  வெற்றி  காணலாம்.

இவர்கள்  விநாயகர்  பெருமானையும்,  அனுமனையும்  விடாது  வழிபட்டு  வந்தால்  சிறப்பாக  இருக்கும்.  சனீஸ்வர  சந்நிதியில்  சனி  கவசம்  பாடி  கோரிக்கையை  சொல்லாம்.  ராமர்  பட்டாபிஷேகப் படத்தை  வைத்து  வழிபாடு  செய்யாலாம்.

கருத்துகள் இல்லை: