சிம்மம் ராசி;leo
இந்த ராசி நெருப்புராசி,மகம், பூரம்,உத்திரம்,1-ம் பாதம் ஆகிய நக்ஷத்திரங்களில் பிறந்த சிம்ம ராசிக்காரர்கள், சூரியனைப் போன்று பிரகாசமாக விளங்குவார்கள் .ராசி அதிபதி சூரியன்...எல்லா உயிர்களுக்கும் ஜீவாத்மாவாக இருக்கும் சூரியனின் ராசிக்காரர்கள் என்பதால் உலகில் புதிய விசயங்களை கண்டறிவதிலும் ,பெரிய அரசியல் தலைவர்களாகவும்,பெரிய அதிகாரத்தில் இருப்பவர்களாகவும் இந்த ராசிக்காரர்கள் தான் அதிகம் இருக்கும்..சிம்ம லக்னமோ சிம்ம ராசியோ நல்ல நிர்வாகதிறன் படைத்தவர் எல்லோரையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதில் சாமர்த்தியம் உடையவர்கள்.நீண்ட ஆயுள் உடையவர்கள்..
.தளபதி,ராணுவ வீரர்கள் ராசி..காவல்துறையினர் ராசி சிம்மம்தான்...உலகில் பெரும் சதனை செய்ய முடிந்த இவர்களால்,நிறைய மக்கள் கூட்டத்துக்கு அதிபதி ஆகும் அளவு திறம் படைத்த இவர்களால் தன் குடும்பத்தாரோடு ஒத்து போக முடிவதில்லை..அடிக்கடி ஈகோ மோதல் வந்துவிடும்..இவர்கள் நினைத்தது நடக்கவில்லையே என வருத்தப்படுவர்.
மகம் ஜகம் ஆளும் என்றாலும் குடும்ப வாழ்வில் அதிக சோதனைகளை சந்திப்பது இவர்கள்தான்...நிறைய தடைகளையும்,தோல்விகளையும் சந்தித்து பக்குவமாக இருப்பார்கள்...பூரம் அதிர்ஷ்டக்காரர்கள் என சொல்லப்பட்டாலும்...ஆரம்பத்தில் துன்ப்பட்டு,துயரப்பட்டுத்தான் அதிர்ஷ்டத்தை அடைவார்கள்..
பரந்த உருண்டையான முகம்,கண்ணின்விழிமஞ்சள் நிறமாகவும், மேவாய்க்கட்டையாகவும்,தலைமுடி மெல்லியதாகவும்,சிவந்த நிறமுடைவராகவும் இருப்பார்.துரிதபார்வை,எலும்புகள்பெரியவையாகவும், தோள்கள் அகன்றிருக்கும்.வாயுத்தொல்லைகளும்,வயிற்றுத்தொல்லைகளும் இவர்களுக்குவரும்.சருமவியாதியும் வரலாம்.
துணிவும்பிடிவாதமும்உறுதியானநிலைப்பாடு,முன்கோபம் உடையவர். வாழ்வில் ஆசையுடையவர்.மரியாதைகொடுப்பார்,உபசாரமும்செய்வார், முணுமுணுக்கும் சுபாவம் உடையவர்.சிடுசிடுக்கும் தன்மை,தியாக மனப்பான்மை,எதையும் உறுதியாக தீர்மானிப்பார்.இவர் எடுத்த முடிவை மற்றவர்களால் மாற்றமுடியாது.கொள்கைபிடிப்புடையவர்.கொடைக் குணம் உடையவர்.அஞ்சா நெஞ்சம் படைத்தவர்.பிறர் அஞ்சும்படியான குணத்தைக் கொண்டவர்கள். எப்படி தந்திரதைக் கையாண்டாலும் இவர்களை வெல்ல முடியாது.
நியாயம் தவறாதவர்கள்.இனம்,மதம் பார்க்காமல் எல்லோருக்கும் உதவிசெய்ய முன்வருவர்.மற்றவர்கள் கண்களுக்கு இவர்கள் அதிகார குணம் கொண்டவர்களைப்போல தோற்றமளித்தாலும் மனதின் அடித்தளத்தில் பாசத்தையும் பதுக்கி வைத்துருப்பார்கள்.
தனக்கு ஏதேனும் பாதிப்பு வருமானால் வெகுண்டு எழுவர்கள்.பின் விளைவுகளாப் பற்றி சிந்திக்காமல் பேசி தீர்ப்பார்கள்.அரசு மற்றும் பெரிய மனிதர்களின் தொடர்புக்ள் இவர்களுக்கு இருக்கும்.அவர்கள் மூலம் பிரச்சனைகளுக்கு வெகு எளிதில் தீர்வு காண்பர்கள்.
உயர்ந்த கொள்கைகளை பெற்ற இவர்கள்.வம்பு,வழக்குகளுக்கு இடையில் வாழ்க்கையை நடத்துவார்கள். கையை ஓங்கி பேசுவதும் என்ன நடக்கும் என்று எனக்கே தெரியாது என்று சொல்வதும் இவர்களைப் பொறுத்தவரை சகஜமானதாக இருக்கும்.மற்றவர்களுடைய சட்ட்திட்டங்களுக்கு உட்படாமல் வாழவேண்டும் என்று விருபுவார்கள்.
குடும்பத்தில் இவர் சிறியவராக இருந்தாலும்,பெரியவர் ஸ்தானத்தில் வைத்து மற்றவர்கள் இவரோடு பேசுவார்கள்.குடும்ப உறுப்பினர்களிடம் இவர்கள் விட்டுக் கொடுத்துச் செல்ல மாட்டார்கள்.மற்றவர்கள் தன் கருத்துக்கு ஒத்துவர வேண்டுமென்றே விரும்புவார்கள்.உடன் பிறந்தவர்களால் இவர்களுக்கு ஒத்துழைப்பு கிடைப்பது அரிது.ஆனால் இவர்களால் உடன் பிறந்தவர்களுக்கு ஒத்துழைப்பு அதிகம் கிடைக்கும்.மற்றவர்கள் பயன்பெறும் வகையில் வாழ்க்கை நடத்துவார்கள்.
அரசு பதவி,அரசியல் ஆதாயம்,அதிகார பலத்தோடு விளங்குவார்கள்,இவர்கள் குடும்பத்தை யாரும் பகைத்துக்கொள்ளமாட்டார்கள்.செலவு செய்ய அஞ்ச மாட்டார்கள்.தேவைப்பட்ட நேரத்தில் தேவைப்பட்ட பணம் இவர்கள் கைக்கு வந்து சேரும்.புத்தி சாதுரியத்தைக்கொண்டு விரைவாக பெரிய தொகையைச் சேர்த்து விடுவார்கள்.கடன் வாங்க தயங்கமாட்டார்கள்.இவர்களுக்கு புத்தி கூர்மை அதிகம் உண்டு.எதையும் நுட்பமாக ஆராய்ந்து தெரிந்துகொள்வார்கள்.
பெண்களிடம் சுமுகமாக இருப்பதுகடினம்.புத்திரபாக்கியம் குறைவாக இருக்கும்.காடுமலைகளில் சுற்ற பிரியப்படுவார்.தாயிடம் பாசத்தோடு இருப்பார்.தாயிடம் பணிவோடுஇருப்பார்.ஆதிக்க்குணம் உடையவர்.ஆட்சியாளர் போல்நடந்துகொள்வார்.
கர்வம் உடையவர்.அவசியமாகபேசி காரியத்தை மட்டும் செய்பவர்.தானாக சண்டைக்கு போகமாட்டார்.பெண்களாக இருந்தால் தியாக குணமுடையவர்,சச்சரவு செய்வதில் விருப்பம் உடையவர்.தலைமைதாங்கும் தகுதி உடையவர்.மாமிசபிரியர், ஆடை சேர்ப்பார்.மணவாழ்வுதிருப்தியாகவும் உடற்கட்டு அழகாகவும், நேர்த்தியாகவும் இருக்கும்.நியாயத்தையும்துணிந்துபேசுவார்.அது மட்டும் அல்ல துணிந்துசெயல்படுத்துவார். நன்றியுணர்வு உடையவர்.
இவர்கள் சட்டக்கல்வி,பொறியியல்துறை,மருத்துவத்துறைபோன்ற கல்வி கற்கலாம்.அரசுத்துறை மற்றும் சட்டத்துறை பிறர்தரும் மூலதனத்தைக்கொண்டு தொடங்கும் தொழிலில். டிரேடிங் மற்றும் பல்பொருள் விற்பனை நிலையம். தானியவியாபாரம்,எலக்ட்ரிக்கல் மற்றும் நூதன கருவிகள்.கணிப்பொறி துறை ஆகியவற்றில் ஈடுப்பட்டால் வெற்றிபெறலாம்.
இவர்கள்சிவன் வழிபாட்டில் ஆர்வம் காட்டினால் சிறப்பாக இருக்கும்.பிரதோச வழிபாடு மேற்க்கொள்ளலாம்..முருகன் வழிபாடும் உத்தமம்..
1 கருத்து:
நமக்கு ஏறக்குறைய ஒத்துவருது....
இங்கு வந்தது முதல் பிரதோஷ விரதம் இருப்பதில்லை...
கருத்துரையிடுக