சுக்ரன் :
ஒருவருக்கு பொன், பொருள், அழகமைந்த மனைவி, சுகமான வாழ்க்கை, உயர் பதவி, கலை, வாகன் யோகம் போன்றவைகளை சிறப்புடன் வழங்கி வாழ வைப்பதில் சுப கிரகங்களின் வரிசையில் குருவிற்கு அடுத்து சுக்ரன் அமைகிறார்.
அசுர குரு சுக்ரன் ஆவார். இவர் இகலோக ஆசையை அளிப்பவர். சுக்ரன் விடி வெள்ளி பிரகாஷமாக தெரியும் - இளமையாக இருப்பவர்கள் ஜொலிப்பார்கள் ஆக இளமையும், ரஸனையையும் அளிப்பவர். ஆடல் பாடல் முதலான நளின கலைகளுக்கு நாயகன், மனைவியைக் கொடுத்து மகிழ்ச்சிகாரமான இல்லற வாழ்க்கையைத் துவக்கி வைத்துப் பரிபாலனம் செய்வர்.
வேஷக்காரன், நடிகர்கள், கலைத்துறைக்காரன்கன், ஒப்பனைப் பொருட்கள், அலங்கார வஸ்த்துக்கள், ஆடம்பர வஸ்துகள், சுக்ரன் என்றால் வெள்ளை என்று பொருள், வெண்மை பொருள்கள் அனைத்துக்கும் காரகன், சுக்கில பட்சம் , வைரம் மிக பிரகாஷம் ஜொலிப்பது போல் எல்லாம் சுக்கிரன் , இளம் பெண் குறிப்பது சுக்ரன், விடியற் காலை பொழுத்தைக் குறிப்பவர் இவர், வான் மண்டலத்தில் விடியல் காலை பொழுதில் சுக்ரன் தெரிகிறார். அதிகாலையில் மனிதனுக்கு காமக் கிளர்ச்சியை ஏற்படுத்துவதும் இவர் தான். காமத்துக் காரன் சுக்ரன்.
சுக்ரன் இல்லற் வாழ்வுக்குறியவர், ஆணுக்கு மனைவியைப்பற்றியும், பெண்ணுக்கு மண வாழ்க்கையைப் பற்றியும் சொல்லுகின்றவர். உலக வாழ்கையில் இன்பமும் செளபாக்கியங்களையும் சுக போக செளரியங்களையும் தருபவன் சுக்ரன். வாகன வசதிகளை அளிப்பவர் இவர், மிக உயர்ந்த வாகனமா, நடுத்தரமான வாகனமா, கடைசி நிலை வாகனமா, ஒன்றுக்கு மேற்பட்ட வாகனமா என குறிப்பவர் இவர்தான்.
ஒருவரின் தேவைகளை பூர்த்தி செய்யக் கூடியவர் இவர்.
கையில் காசுடையவர்களாய் வைப்பரும், சொந்த வீடு அளிப்பவரும் இவர்தான், கலை உலகில் சிறப்பான நிலையை அளிப்பவர். பெண்களிடம் மோகத்தை அளிப்பவரும், வாழ்நாள் முழுவதும் அதே நினைப்பில் இருக்க வைப்பவர் இவர்தான்.
வலுப் பெற்ற சுக்ரன் கலாரசனை என்கின்ற அற்புத உணர்வு அளிப்பவர், அழகு, அழகின் படைப்பான ஆரணங்கு, அந்த ஆரணங்கத்தின் மீது காதல் கொண்டு சுகமடையும் தகுதி, சிற்றின்பம், திருமணம் முதலான ஆணுக்கு அளிப்பவர். அதே போல் பெண்களுக்கு நளினத் தன்மையையும் அழகான தோற்றம், கவர்ச்சி, வீரியசக்தி, அறிவாற்றல், மனத்துக்கிசைந்த கணவனை அடையும் தகுதியையும், சுக போகங்களில் திளைத்து மகிழும் ஆற்றலையும் வழங்குவார். மாட மாளிகையில் வாழ்க்கை நடத்தும் பாக்கியத்தை இரு பாலருக்கும் அளிப்பவர்.
சுக்ரன் என்றால் இன்பம் என்று பொருள் கொள்ளலாம். அன்பு, பாசம், காதல் ஆகிய மூன்று இன்பங்களை அளிக்கக் கூடியவர். இன்பம் என்கிற ஆனந்தத்தை அடைவதற்குரிய மனநிலையை உருவாக்குகிறவர் சுக்ரன். இவர் கலை உணர்வால் இன்பம் உண்டாக்குவார். அழகு, ஆராதனையால் இன்பம் ஏற்படுத்துவார்.
கலையம்சமுள்ள பொருட் சேர்க்கையால் இன்பம் தருவார். அழகு வனிதையால் ஆடவருக்கு சுகம் ,வாசனைத் திரவியங்களால் உற்சாகம் ஊட்டுவார். இசையால், இசையுணர்வால் இன்பம் தருவார், கற்பனை வளத்தால் மாபெரும் இன்பம் தருவார்
வாசனை திரவியங்களால் சுகானுபவம் அளிப்பவார். கவியின்பம் தருவார். காவிய இன்பம் தருவார். கற்பனை வளத்தால் மா பெரும் இன்பம் தருவார். நடன நாகரீக மணிகளை உருவாக்குவார். நாடகக் கலைஞர்களைத் தோற்றுவிப்பார். வெண் திரைச் சலனப்படத்திற்கு ஆதாரம் அவர். கண்களைப் பிரதிபலிப்பவர், ஜனன உறுப்புகளைக் காப்போன்.
மேலே குறிப்பிட்ட இன்பத்தை யாருக்கு தருவார் என்றால் மீனத்தில் சுக்கிரன் உச்சம் பெற்று இருக்க, அவருக்கு நட்பு கிரகங்களின் தொடர்பும், பகை கிரக தொடர்பு இன்றி இருத்தால் கண்டிப்பாக கிடைக்கும். அதே போல் சுக்ரன் ஆட்சி வீடான ரிஷபம் மற்றும் துலாமில் இருந்தாலும் சுக வாழ்வு உண்டு. [சுக்ரனுக்கு புதன் நட்பு கிரகம். புதனின் வீடான கன்னியில் சுக்ரன் நீசம் அடைகிறார். அங்கு நீச பங்கம் பெறாமல் இருந்தால் சுக வாழ்வு எதிர்பார்க்க முடியாது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக