புதன், 4 மார்ச், 2015

நீங்க தனுசு ராசியா..?sagittarius

தனுசு ராசி குருவின் ராசி..குருவுக்கு அதிக பலம் இந்த ராசியில்தான்...குருபகவானின் சொந்த வீட்டுக்குண்டான ராசிக்காரர்கள் என்றால் குருவின் அருள் பார்வை கிடைக்காமலா போகும்..? குருதான் ஊர்ல பெரிய மனுசன் அந்தஸ்து வாங்கி கொடுப்பவர்...நல்ல குழந்தைகளை தரக்கூடியவர்..கெளரவம் தருபவர்...ஊர்ல நடக்குற நல்லது கெட்டது எல்லாத்துக்கும் இந்த தனுசு ராசிக்காரங்க தயவு வேணும்..ஏன்னா அவங்கதான் பிரதிபலன் பார்க்காம எதார்த்தமா உழைக்க கூடியவங்க...பணம் கொடுத்தா கூட என்னப்பா ..நான் என்ன அந்நியனா..? பணம் கொடுத்து அசிங்கப்படுத்துறியேப்பா என கோவித்து கொள்வார்கள்..இதனாலேயே இந்த ராசிக்காரர்களை பிறர் ஏமாற்றிவிடுவதுண்டு...கடன் வாங்கி ஏமாற்றுவதுண்டு....

சீக்கிரம் பணக்காரன் ஆகனும் எனும் ஆசை இவர்களுக்கு அதிகம் உண்டென்பதால் ஷேர்மார்க்கெட்,ஃபைனான்ஸ்,கந்து வட்டி,ரியல் எஸ்டேட் துறைகளில் இவர்களை அதிகம் பார்க்கலாம்..நிறைய நஷ்டம் ஆகிவிட்டு வீட்டுக்குள் இருக்க முடியாமல் நண்பர்களிடம் புலம்பிக்கொண்டும்,பிறருக்கு அட்வைஸ் செய்து கொண்டும் இருப்பதை காணலாம்..இவர் அறிவுரை கேட்டால் யாராக இருந்தாலும் முன்னேறிவிடலாம்..ஆனா இவர்களில் பெரும்பாலும்  அப்படியே இருக்கிறார்கள்..

எல்லோரையும் நன்கு கவனிப்பார்...குடும்ப வாழ்க்கை எப்படி எனில்...ஸ்..அதை ஏன் சார் கேட்குறீங்க..நமக்கு அப்படியே ஆப்போசிட்டா கொடுத்துட்டான் ஆண்டவன் என கையை மேலே காட்டுவார்கள்....புத்தி மாறிக்கிட்டே இருக்கும் ஓரிடத்தில் இவர்களால் இருக்க முடியாது..மனைவி தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்கனும்...இல்லைன்னா எலியும் பூனையும்தான்..


இந்த  ராசி கால புருஷனுக்கு  ஒன்பதாவது  ராசி, நெருப்பு ராசி, ஆண் ராசி,  உபய ராசி,  பாதிப்பலனளிக்கும்,  சாத்வீகமான ராசி,  பாசமான ராசி, கடமையான ராசி,  ஆதிக்கமான ராசி,  உண்மையான ராசி,  சித்திக்கும் ராசி,  சீற்றமுள்ள ராசி,  சினம் கொண்ட ராசி, மனித தன்மை ராசி,  இரு  மடிப்புள்ள ராசி,  குறுகிய ராசி,  லட்சியமான ராசி,  உறுதியான ராசி,  பறப்பன ராசி,  உயரமான ராசி.

தொடையைக்  குறிக்கும்  ராசியாகும்.  இந்த  ராசியில்  பிறந்தவர்கள் நல்ல  உயரமும்  சற்று  பருமனான  உடலும்,  கூன்  முதுகும்,  அகன்ற நெற்றியும்,  பெரிய  பற்கள்  உடையவர்கள்.  இவர்களின்  கைகால்கள்  உடம்போடு  சம்பந்தம்  இல்லாது  போல் காட்சியளிக்கலாம்.  அழகிய   கண்கள்யுடையவர்கள்,  சிவந்த  முடியுடையவர்கள்,  எலும்பு,  நரம்பு  சம்பந்தப்பட்ட  வகையில்  சிறுசிறு  கோளாறுகள்  மூட்டுப் பிடிப்பு,  வாயுத்தொல்லை, ஜலதோஷம்,  மூல நோய்  போன்றவைகள்  ஏற்படலாம்.

மத நம்பிக்கையில்  அசைக்க  முடியாத  நம்பிக்கை  உடையவர்கள். மனத்தூய்மை யுடையவர்கள்.  கம்பீரமும்  பிரகாசமும்,  நளினமான  நடையுடையவர்கள்.  சுறுசுறுப்பு  மிக்கவர்,  உணவு  பானங்களில்  விஷயத்தில்  கண்டிப்பாக  கட்டுப்பாடு   உடையவர்கள்.  பெண்களிடம்  மனக்கட்டுப்பாடுடன்  பழக  கூடியவர்கள்.  மற்றவர்களுக்குக்  கெடுதல்  செய்ய  வேண்டிமென்று  கனவிலும்  விரும்ப  மாட்டார்கள்.  தெய்வ  பக்தியும்  தெய்வ  பயமும்  உடையவர்கள்.  எதையும்  எளிதில்  கிரகித்துக் கொள்ளும்  ஆற்றல்  உடையவர்.  முன்கோபக்காரர்,  அவசரக்காரர்,  கோபம்  தணிந்த பின்  உண்மையை  உணரும்  சுபாவம்  உண்டு.  வெளிப்படையாக  எதையும்  பேசக் கூடியவர்  என்பதால்  எந்த  இரகசயமும்  இவரிடம்  தக்காது.

தனக்கு  தெரிந்ததை  மற்றவர்களுக்கு  எடுத்து  சொல்லுவார்,  மற்றவர்களுக்கு  தெரிந்ததை  அறிந்து  கொள்ள  வேண்டும்  என்ற  எண்ணம்  உடையவர்.  இவர்கள்  அன்புக்கு  கட்டுப்பட்டவர்.  நீதி  கருத்துக்களைப்  போதிக்கும்  குணம்  ஆரம்பத்திலேயே  இருக்கும்.  இவர்  குருவை  நாடி  சென்று  அவர்  ஆலோசனைப்படி  செயல்படுவார்.  அதன்  மூலம்  வெற்றி  அடைவார்.   

பிறரைத் தட்டிக்  கொடுப்பதில்,  புகழ்ந்து  பெருமைப்படத்துவதில்  இவர்  திறமைசாலி.
இவர்கள்  வசதியான  குடும்பத்தில்  பிறந்தவர்களாக  இருப்பார்.  எளிமைக்கு  முக்கியத்துவம்  கொடுப்பார்.  தாய்  தந்தை  மீது  பாசம்  வைத்திருப்பார்.  சிறுவயது  முதல்  பணப்புழக்கம்  உடயவர்.  ஆனால்  கையில்   பணம்  நீண்ட  நாட்கள்  தங்காது.  பூர்வீக  சொத்துக்கள்  தங்குவது  அரிது.  பாதி  வயதிற்ககு  மேல்  பகட்டான  வாழ்க்கை  வாழ பிரியப்படுவர்.  பதவிகளும்   இவர்களுக்கு  வந்து  சேரும்.

உணவு பானங்கள்  விஷயத்தில்  கண்டிப்பாக  கட்டுப்பாடு  உடையவர்கள்.  பெண்களிடம்  மனக்கட்டுப்பாட்டுடன்   பழக்கூடியவர்கள்.  மற்றவர்களுக்கு  கெடுதல்  செய்ய  வேண்டுமென்று  கனவிலும்  விரும்பமாட்டார்கள்.  தெய்வ பக்தியும்  தெய்வ தெய்வ பயமும்  உடையவர்கள்.  பழைய  சடங்கு,  சம்பிரதயங்களில்  மிகுந்த  பற்று  வைத்திருப்பதை   வெளிக்காட்டி கொள்ள  மாட்டர்கள்.

தனது  சகோதரர்களில்  மூத்தவர்களிடம்  மிகவும்  பாசமுடையவர்.  இவரது  முன்னேற்றத்திற்கு  மூத்த சகோதரர்  வழி வகுத்துக்  கொடுப்பார்.  இளைய  சகோதரர்கள்  இவரை  எதிரியாக  பார்ப்பார்கள்.  புகழ்,  சுகம்  உடையவர்கள்  விரோதிகளை  வெல்லக்  கூடியவர்.  எதையும்   விரைவில்  கிரகித்துக்  கொள்ளக்  கூடியவர்.

அதிகமாக  உழைத்து  சம்பாதிப்பது  என்பது  பிடிக்காது.  குறைந்த   காலத்தில்  சுலபமான  முறையில்  அதிகம்  சாம்பாதிக்க  வேண்டும் என்ற  எண்ணம்  உடையவர்.  கடன்  வாங்க  நேரிடும்.  வாங்கிய  கடனுக்காக  வருமானத்தைப்  பெருக்கிக்  கொள்ள  முன் வருவர்.  உயர்  கல்வி  கற்பார்.  வெளி பிரதேசங்களில்  பிரயாணம்  செய்ய  விருப்பமுடையவர்.  செல்வத்தை   அனுபவிக்க   கூடியவர்.
இவர்கள் பிறருடைய  குற்றங்களை  எடுத்துக் காட்டி  குறை  சொல்லிக் கொண்டே  இருப்பர்.  அரசியல் ஈடுபாடு  அடிமனதில்  இருக்கும்.  ஆரம்பத்தில்  அடிப்படை  உறுப்பினராக  சேர்ந்து  அதன் பின்  அரசாளும்  யோகம்  வரை வந்து  சேரும்.

அறிவும்  ஆராய்ச்சியும்  மட்டுமே  இவர்களைக்  கவரக்  கூடிய  விஷயங்கள்.  தத்துவம்  விஞ்ஞானம்,  சாஸ்திர  ஆராய்ச்சி  இவற்றில்  ஈடுபட்டு  நிபுணத்துவம்  பெறுவார்கள்.  மிகவும்  சிந்தித்து  பேசுவார்கள்.  அனைவரிடமும்   மரியாதையாக  நடந்துக்  கொள்வார்.  மன ஒறுமைப்பாடு  உடையவர்,  உள்உணர்வு  உடையவராகவும்,  ஆன்மிக  நாட்டம்  உடையவராகவும்  இருப்பார்கள்.

இவர்கள்  தென்முகக்   கடவுள்  வழிபடலாம். நதிக்கரையோரம் இருக்கும் முருகனை வழிபடலாம்  

கருத்துகள் இல்லை: