குரு ;
அதிர்ஷ்டத்தைக் கொடுப்பவர் குரு. இவர் பார்வை பட்ட இடம், பார்வை பட்ட கிரகங்கள் நன்மையையே செய்கிறார். மனித உணர்ச்சிகளையும் எண்ணங்களையும் ஒழுங்கப்படுத்தி சீராக இயங்க செய்பவர். குரு ஆவார். சுப கிரக வரிசையில் முதலிடம் பெறுபவர்.
உள்ளத்தைப் பொறுத்தவரையில் மனித உணர்ச்சிகளையும் எண்ணங்களையும் ஒழுங்குபடுத்தி சீராக இயங்கச் செய்யும் திறன் குருக்கு உண்டு. எதையும் சீர்தூக்கி பார்க்கும் மன நிலையும் அளிப்பவர் குரு ஆவார். நியாதிபதியாவர், ஆகவே தான் குரு நீதி, சட்டம் ஒழுக்கம் பூஜைகள், ஹோமங்கள், தியானம், ஆதம் விசாரனை இவற்றுக்கு அதிபதியாகிறார்.
கிரகங்களில் சுப கிரக வரிசையில் முதலில் இருக்கும் குரு பகவான் விவேகத்திற்கும், வித்தைக்கும், விழிப்புணர்ச்சிக்கும் உரியவர். புத்திர காரகன் என பெற்றவர். நல்லியல்புடைய குழந்தைகளை பெற்றெடுத்து ஊரார் போற்றுகின்றவராக திகழச் செய்பவர் குரு பகவான் ஆவார்.
ஒருவரின் திருமணத்திற்கும், ஒன்றில் வெற்றி பெறுவதற்கும் இவர் தயவு தேவையாகும். சாஸ்திர சம்பிரதாயங்களில் மிகவும் ஈடுபாடும் தன்மையும், புனித தன்மையை ஆதரிக்கும் குணமும், தியாகம்,. விட்டுக் கொடுக்கும் தன்மையும் இருக்கும்.
சமுதாயத்தில் நல்ல ஒழுக்கத்தோடு வாழ்வார். பிறருக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும் நம்மை பார்த்து மற்றவர்கள் குறை சொல்லக் கூடாது என வாழ்பவர். கற்புக்கு இவர் காரகன். பெண்கள் ஜாதகத்தில் குரு கெடக்கூடாது.
குரு உச்சம் பெற்று இருந்தால் அந்த ஜாதகர் எல்லா இன்பங்களையும் அவரின் விருப்பத்திற்கேற்றவாறு பெற முடியும். வேத மார்க்கங்களில் ஈடுபடுவதில் இன்பம் தருவார். பலமுள்ள குரு, தெய்வ வழிபாட்டிலும் இன்பம் தருவார். நற்பணிகளைச் செய்வதன் மூலம் இன்பம் தருவார்., செல்வம் தருவார். சேமிக்கவும் வைப்பார். எதிர்காலத்தைப் பற்றி கவலைப் போக்குவார். நல்ல கணவன் அல்லது மனைவியை அளித்து வாழ்க்கைச் சுகத்தைப் பெற வைப்பார்.
கடகத்தில் 5 ம் பாகையில் பிறந்தவர்கள் புனிதாத்மாக்கள், பூர்வ புண்ணியம் பெற்றவர்கள் ஆவார்கள். பூவுலக இன்பங்களை முற்றிலும் பெறக் கூடியவர்கள். பொதுவாக கடக குருவால் நன்மை உண்டாக உத்திரவாதம் உண்டு
குரு இருளை நீக்குபவர் என்று பொருள். மெய்யுணர்வுக்கும் ஆத்ம் சிந்தனைக்கு அதிபதி குரு ஆவார். முழுமையான உடல், மன ரீதியான வளர்ச்சியடைந்த மனிதர், வழிகாட்டி, மூளைக்கு அதிபதி,இருதயத்துக்கு அதிபதி. தன்னறிவு, தீப வெளிச்சம், குரு மஞ்சள், குருக்கு கவர்ச்சி உண்டு-பெண்கள் மஞ்சள் பூசி கவர்ச்சியை தக்க வைத்துக் கொள்கிறார்கள்.
ஜீவ காரகன் – மஞ்சள் நிறம் எல்லாம் குரு . மஞ்சள் நிற பூக்கள் -மார்கழி மாதம் -குருவை குறிக்கும்..குருவுடன் புதன் சேர்க்கை சின்ன வீடு உண்டு.குரு லக்னத்துக்கு 12ல் மறைந்தால் காதல் திருமணம்...குரு கெட்டவன் கூறு கெட்டவன்...குருதான் ஊரார் மத்தியில் செல்வாக்கு, கெளரவம் பெற்று தருகிறது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக