கன்னிராசி;
கன்னி ராசி..புதன் ராசி..அறிவுக்கு அதிபதி
புதன்...நகைச்சுவை,குறும்பு,வியாபார தந்திரம் என சகலகலாவல்லவனாக
இருப்பார்கள்..பத்து பேருக்கு நடுவில் இவர்கள் இருந்தால் எல்லோரையும்
வசியம் செய்யும்படி இவர்கள் பேச்சும் நடவடிக்கையும் இருக்கும்..எதற்கும்
கலங்காதவர்கள்..தந்திரசாலி..எல்லோரிடம் அன்பு காட்டுவதில்
தாராளமானவர்கள்..ராசி அதிபதி புதன் கெடாமல் இருந்தால் மிக யோகசாலிகள்தான்..
இந்தராசி காலபுருஷனுக்கு ஆறாவதுராசி.உபயராசி,பெண்ராசி. நிலத்துவமானராசி,சந்தமானராசி,விவேகமானராசி,இறுக்கமானராசி,பண்பான ராசி,கடமையானராசி,உண்மையானராசி,வறண்டராசி,மலட்டுராசி,மனித தன்மைராசி,நீண்டராசி,உறுதியானராசி,வீட்டில்வாழ்வனராசி, உயரமானராசி.
இந்தராசி காலபுருஷனுக்கு ஆறாவதுராசி.உபயராசி,பெண்ராசி. நிலத்துவமானராசி,சந்தமானராசி,விவேகமானராசி,இறுக்கமானராசி,பண்பான ராசி,கடமையானராசி,உண்மையானராசி,வறண்டராசி,மலட்டுராசி,மனித தன்மைராசி,நீண்டராசி,உறுதியானராசி,வீட்டில்வாழ்வனராசி, உயரமானராசி.
இந்தராசிக்காரர்கள்
நாணம் கலந்த பார்வை உடைவர்கள்.நீண்ட,தொங்கிய
புஜங்களைஉடையவர்கள்.கவர்ச்சியானமுகமும்.நல்லதோற்றமும்
உடையவர்கள்.மென்மையானவர்கள்,கண்கள் மற்றும் காதுகள் அழகாக
அமைந்திருக்கும்.கூர்மையான மூக்கு உடையவர்.பற்கள் வரிசையாக
இருக்கும்.மெதுவாகபேசுவார்கள்.இனிமையானபேச்சு உடையவர்.கனிந்த பார்வை
உடையவர்கள்.இரத்தக்கொதிப்பு,கண் உபாதை,கை,கால்வழிகள் அடிக்கடி வரலாம்.
கலைகளில் குறிப்பாக
இன்னிசை,சித்திரம்,நாட்டியம்போன்ற கலைகளில் ஆர்வம் உடைவர்கள்.தெய்வபக்தி
உடையவர்கள்.அடிக்கடி தெய்வதிருஸ்தலங்களூக்கு சென்று வழிபாடு செய்வார்கள்.மத
நிறுவனங்க ளோடும், ஸ்தாபங்களோடும் தொடர்பு உடையவர்.
சுபிட்சமாகவும்சந்தோஷமான
வாழ்க்கை அமையும்.வீடு,நிலம்,வாகனம் உற்றார் உறவினர் சேர்க்கைஆகிய அனைத்தும்
இவர்களுக்குக் கிட்டும். மற்றவர்களுடைய செல்வம் இவருக்கு கிடைக்க்கூடிய வாய்ப்பு
இண்டு. சொந்த ஊரில் வாழமாட்டார்,மற்றவர்களுடைய இல்லத்தில் வாழ வாய்ப்பு
உண்டு.ராசிக்குரிய திசையான வடக்கு திசையிலிருந்து வருவாய் பெறுவார்.
படிப்பில் ஆர்வம்
உண்டாகும்.கல்வி நல்ல முறையில் அமையும்.படிப்பின் மூலம் தேர்ந்த அறிவைப்
பெறுவார்கள்.அறிவைக்கொண்டு சிறப்பான சாதனைகள் செய்வார்.பொதுவாக விஷயங்களை நன்கு
ஆராய்ந்து உண்மை நிலையை அறிந்து பகுத்தறிவுடன் செயல்படுவார். ஒருவரை எடை போடுவதில்
திறமைசாலி.புத்திசாலிமற்ரும் நல்ல ஞாபக சக்தி உடையவர்.சுறுசுறுப்பு
உடையவர்.கலகலப்பானவர்.
பேச்சிலும் செயலிலும்
பிறர் மனதை புண்படுத்தமாட்டார்கள்.மதிநுட்பத்தால் மற்றவர்களின் கருத்துகளைப்
புரிந்துகொள்வர்.இவரை எவராலும் ஏமாற்றமுடியாது.சூழ்நிலைக்கு தக்கவாறு இவர்கள்
மனோநிலை மாற்றிக் கொண்டுசெயல்படுவர்.ஏதேனும் ஒரு லட்சியம் இவர்கள் மனதில் குடி
கொண்டிருக்கும்.சாப்பாடு முதல் சகல துறைகளையும் அறிந்து கொள்ள வேண்டுமென்று ஆசை அதிகம்
இருக்கும்.
வசீகரத் தோற்றம்.எல்லோரிடத்திலும்
எளிதில் பழகிவிடுவார்கள். ஆசைபடுவதை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார்கள்.தனக்கு ஒரு
புதிய தகவல் தெரிந்ததென்றால் அதை உடனிருப்பவர்களிடம் சொல்லி அதன் பயனை விளக்குவதில்
கெட்டிக்காரர்கள்.எதிரிகள் இல்லாத வாழ்க்கைதான் இனிமை தரும் என்பதை
அறிந்தவர்கள்.
அடுத்தவர்களுக்கு கோபம் வராத முறையில் நடந்து கொள்வார்கள். நாசூக்கான
வார்த்தைகளை மற்றவர்கள் மத்தியில் இருக்கும்போது சொல்லி அனைவர்களின் மனதில் இடம்
பிடிப்பார்கள். சந்தர்ப்பத்திற்கு தக்கவாறு தன்னை மாற்றிக்கொள்வார்கள்.
கல்வி,கணித அறிவு,ஜோதிட
அறிவு,தர்க்க அறிவு இவைகளில் திறமை ஏற்படும்.பேச்சில் இனிமை தரும். நடு நிலை
வகிகும் தன்மையும் உண்டாக்கும்.எழுத்தாற்றல்,வர்த்தகம்,அரசியல் இத்துறைகளில்
ஆர்வம் உண்டாகும்.பலமொழி புலமை
ஏற்படும்.
பெரியசொற்பொழிவாளராகவும், பிரச்சனைகளைதீர்த்துவைக்கும் மத்தியஸ்தரகவும் இருப்பார்.எதையும் யோசித்தே செய்வார்கள்.எல்லாவற்றையும் அறிந்துகொள்ளவேண்டும் என்ற ஆர்வம் உடையவராக இருப்பார்கள். நேரடியாக கல்வி கற்பதைவிட அஞ்சல் வழி கல்வி ப்யில்வதையே ஆர்வம் காட்டுவார்கள். பெரிய நூல் வெளியிட்டளாரகவும் விளம்பர ஸ்தாபனத்தை நிர்வாகிப்பவராகவும் இருப்பார்கள்.
பெரியசொற்பொழிவாளராகவும், பிரச்சனைகளைதீர்த்துவைக்கும் மத்தியஸ்தரகவும் இருப்பார்.எதையும் யோசித்தே செய்வார்கள்.எல்லாவற்றையும் அறிந்துகொள்ளவேண்டும் என்ற ஆர்வம் உடையவராக இருப்பார்கள். நேரடியாக கல்வி கற்பதைவிட அஞ்சல் வழி கல்வி ப்யில்வதையே ஆர்வம் காட்டுவார்கள். பெரிய நூல் வெளியிட்டளாரகவும் விளம்பர ஸ்தாபனத்தை நிர்வாகிப்பவராகவும் இருப்பார்கள்.
சுகபோகமான வாழ்க்கையையே
விரும்புவார்.கஷ்டபடும்போது கூட வெளியே காட்டிக்கொள்ளமாட்டார்கள். மன
அமைதிக்கு ஆலயத்தை நோக்கி அடிக்கடி செல்வார்கள்.அன்னையின் அன்பும் ஆதரவும்
இவர்களுக்கு என்றும் இருக்கும். போதும் என்ற மனமே பொன்செய்யும் என்ற வார்த்தையை
மதித்து நடப்பவர். சுயமாக
வீடுகட்டிக்கொள்ளவேண்டும்,சிறியவீடாக இருந்தாலும் அதில் எல்லா வசதியும்
இருக்கவேண்டும் என்ற நோக்கம் உடையவராக இருப்பார்.
உடன் பிறந்தவர்கள்
இவர்களுக்கு செய்யும் ஒத்துழைப்பைக்காட்டிலும் அவர்களுக்கு இவர் செய்யும் ஒத்துழைப்பு
அதிகமாக இருக்கும்.இருந்தாலும் உடன் பிறந்தவர்க ளிடம்
நன்றி இருக்காது.இவர்கள் பிறருக்கு கடன் கொடுக்க தயங்குவார்கள்.பிறர் கடன் கொடுக்க முன் வந்தாலும் கடன் வாங்க தயங்குவார்கள்.
புதன் வழிபாட்டையும்
செய்தால் கல்வி சிறப்பாக அமையும்..மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சென்று சொக்கநாதரை வழிபடவும்..அழகர் கோயிலில் வழிபடலாம்..புதன் அம்சம் கிரிஷ்ணர் என்பதால் குருவாயூர் சென்று வருவது நல்ல பலன் தரும்..இந்த ராசிக்காரர்கள் பெரும்பாலும் சபரிமலை சென்று வருவார்கள் அங்கு போய் வந்தால்தான் இவர்களுக்கு திருப்தியாக இருக்கும் .. . .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக