திங்கள், 23 மார்ச், 2015

ஜாதகத்தில் சந்திரன் தரும் பலன்கள்

சந்திரன் ;

சூரியனின்   ஒளி   கிரணங்களை  பெற்று   பிரகாசிப்பவர்   சந்திரன்  ஆவார்.  இவர்  இரவுக்கு  அதிபதியாகிறார்.  உயிர்  சக்தியாக  இயங்க   சூரியன்  எவ்வளவு   முக்கியமோ   அது  போல்   உடலுக்கு   சந்திரன்   அவசியம்  ஆகிறார்.   இவர்   மதிகாரகன்   ஆகிறார்.   ஞானம்   பெறவும்   இவர்  தேவை,   சந்திரன்    மாத்ருகாரன்.   சந்திரன்   சலன  புத்தி.  சந்திரனுக்கு  மூன்று  விதமான     சலனம்  உண்டு.  ஒன்று    தன்னைத்தானே    சுற்றிக்  கொள்கிறது.   இரண்டாவது    சுற்றுவதுடன்    பூமியையும்   சுற்றுகிறது.   மூன்றாவது  பூமியோடு   சூரியனையும்   சுற்றுகிறது.   கை  குழந்தையுடைய   தாய்    மனது   எப்போதும்   குழந்தையைச்    சுற்றிக்   கொண்டு   இருப்பது  போல்   சந்திரன்   பூமியையும்  சூரியனையும்   சுற்றிக்  கொண்டே  இருக்கும்.  

மனதுக்கும்   சந்திரனுக்கும்  ஒரு  தொடர்பு   உண்டு.  சந்திரன்  வளர்ந்து     தேயும்   தன்மையுடையவர்.  ஆகவே    மனிதனின்    மன்நிலையிலும்   அடிக்கடி   மாற்றம்   ஏற்படுகிறது.    

பெளர்ணமி   காலங்களில்    கடலில்   மாற்றங்கள்    ஏற்படுகிறது.   பெளர்ணமி  மற்றும்  அமாவாசை   காலங்களில்  அறுவை  சிகிச்சை  செய்யக்  கூடாது.   பெளர்ணமியில்  ரத்தம்  அதிகமாகவும்.  அமாவாசையில்  ரத்தம்   குறைந்தும் போகும்.   அமாவாசை  மற்றும்  பெளர்ணமி   காலங்களில்  தியானம்  செய்வது  சிறப்பானது.

சந்திரன் மனம்,  ஒவ்வொரு  மனிதனிடம்   பெண்  தன்மை  உள்ளது.  ஒவ்வொரு   பெண்ணிடமும்  ஆண்  தன்மை  உள்ளது.   ஒரு  மனிதனுக்கு   பின்னால்  ஒரு  பெண்  உள்ளாள். மனிதனின்  மனம்  சுத்தமாக  [சந்திரன்]  இருக்கிறது. ஆனால்  சந்திரனுக்கு   கிடைக்கும்.கிரகத்தின்   சேர்க்கை   பார்வைக்கு  ஏற்ப   மன  நிலை   மாறுதல்  அடைகிறது.   உதாரணமாக   நீர் [சந்திரன்] சுத்தமாகவும்   நிறமில்லாமலும்,   வாசனையற்ற   நிலையிலும்,    சுவையற்ற   நிலையிலும்  இருக்கிறது.    நீருடன்   சேரும்    கெமிகல்   மினரல்  ஏற்ப   அதன்  நிறம்,  வாசனை,  சுவை  எல்லாம்  ஏற்படுகிறது.  ஆனால்  எந்த   ஒரு  செயலும்   சந்திரனின்றி       நடைபெறாது.  ஆகவே   சந்திரன்  உடல்காரகன்    என  அழைக்கப்படுகிறார்.  உடல்  அழகு  உடல்  கவர்ச்சி  அளிக்கிறார்.   வட்டமான   முகம்  அனைவரையும்   கவரும்    தன்மையை   அளிக்கிறார்.   ஒருவர்     உடல்   இன்றி     எந்த  செயலும்   செய்ய  முடியாது.

  இடப்பெயர்ச்சி,  இடமாற்றம்,  பிராயணம்  போன்றவைகள்    நடை  பெற   சந்திரன்   காரணம்  ஆகிறார்.ஜெனன   ஜாதகத்தில்   சந்திரன்    ரிஷிபத்தில்  முதல்  3  பாகைகள்  இருந்து  ,   நட்பு   கிரகங்களின்   தொடர்பும்,  பகை   கிரகங்களின்  தொடர்பு  இன்றி    இருந்தால்  அந்த  ஜாதகரின்  சரீர ஆரோகியத்திற்கு    உத்திரவாதம்   உண்டு.  முக  வசீகரம்,  இரத்த  புஷ்டி  அளிப்பவர்.  உள்ளத்தின்   உறுதிக்கும்   வாய்ப்புண்டு.   மன வளம்,  பொருளாதார  நிலையில்   உயர்வும்  கிட்டும்.   

பார்வையில்  கவர்ச்சியும்,  பெருந்தன்மையும், பெரும்  புகழ்,   பெரு வாழ்வு,  பேரானந்தம்,   பேருள்ளம், என  மகிழ   வைப்பார்,   தாயின்  நல்வாழ்த்துக்கள்  கிடைக்கும்  ,சயன்   சுகம்  உண்டு.

சந்திரனை  மையமாகக்   கொண்டு   திதி,  கரணம்,  யோகம்,   திதிசூன்யம்  போன்ற  அமைப்புகள்  ஏற்படுகிறது.   சந்திரனைக்  கொண்டு  விரதங்கள்  அனுசரிப்பதும்,  பண்டிகைகள்  கொண்டாதலும்   கோயில்களில்   திருவிழாக்கள்   உற்சவங்கள்,  சுப   காரியங்கள்   நிர்ணயிக்கப்படுகிறது.    திருமணங்கள்  நிர்ணயம்   செய்வதும்    சந்திரனின்   ஓட்டத்தை  வைத்து   முடிவு   செய்யப்படுகிறது.

moon herbals சந்திரனின்  ஒளியில்  மூலிகைகள்   வளர்கிறது.   சந்திரன்  வெண்மை  நிறம்,   வெண்மை   நிறப்  பொருட்கள்   அனைத்தும்   சந்திரன்    காரகன் ஆகிறார்.  இரவில்   சந்திரனைக்  கண்டு   மயங்காதவர்கள் பூமியில்     யாராவது உண்டா?  குளிர்ச்சிக்கு அதிபதியான சந்திரனின் நிலவொளி  எவ்வளவு   குளிர்ச்சியாய்   இருக்கிறது.   மனதில்  மகிழ்ச்சியும்  அளிக்கிறது.  தாம்பத்திய  சுகத்திற்கு  துண்டும்   காலமாகவும்  இருக்கிறது.

ஜோதிட  உலகத்தைப்  பொறுத்த வரையில்   சந்திரன்   தாய் காரகம்  பெறுகிறார்.  தாயிடமிருந்து   தான்  உடல்  தோன்றுகிறது.   ஆகவே  சந்திரன்   உடல் காரகன்  ஆகிறார்.   ஜெனன   ஜாதகத்தில்   சந்திரன்  நிலையைப் பொறுத்து தான்   சரீரம்  [உடல்]  பருத்தும்,   இளைத்தும்   காணப்படும்.   ஒருவர்   ஜெனன     ஜாதகத்தில்   சந்திரன்   வலு  பெற்று   அமைந்திருந்தால்  அந்த  ஜாதகர்  தனது  மதியால்   அனைத்தையும்   வெல்லக்   கூடிய  நிலை  உண்டாகும்.

சூரியன்   கால  புருஷனுக்கு   முதல்   வீட்டில்  [மேசத்தில்]   உச்சம்  பெறுவது  போல்  சந்திரன்    கால   புருஷனுக்கு   இரண்டாம்  வீட்டில் [ரிஷிபத்தில்]  உச்சம்  பெறுகிறார்.

tiruppati tirumalai சந்திரன் பலம் இழந்தவர்கள் முதியோர் இல்லத்தில் இருக்கும் முதிய்வர்களுக்கு சேவை செய்வதன் மூலமும் தாய்க்கு மனம் குளிர பார்த்துக்கொள்வதன் மூலமும்,திருப்பதி வருடம் ஒருமுறை சென்று நடந்து மலை ஏறி ஏழுமலையானை தரிசித்து  சந்திரனின் அருளை பெறலாம்..

கருத்துகள் இல்லை: