கடன்
தொல்லை தீர ,வாங்கிய கடனில் சிறிதளவு இந்த நாளில் திருப்பி கொடுத்தால்
கடன் விரைவில் தீரும்..இதை மற்றவர்களுக்கும் தெரிவித்து உதவி செய்யுங்கள்...கடனால் துன்ப்படுவோர் அதிகம்..!!
செவ்வாய் கிழமையில் பெரும்பாலும் கடனை திருப்பி செலுத்துங்கள் ..குளிகை நேரத்தில் யாரிடமும் கடன் வாங்கி விடாதீர்கள் கடன் அதிகமாகி கொண்டே இருக்கும்..முடிந்தளவு வட்டியை கட்டிவிடுங்கள் இல்லையெனில் அதுவே பெருமளவு கவலையை உண்டாக்கிவிடும்..கடன் நியாயமான செலவுகளுக்கு மட்டுமே வாங்குங்கள்...ஒரு கடன் கட்ட இன்னொரு கடன் என வாங்கி கொண்டே போகாதீர்கள் ஏதேனும் வருமானம் இருந்துகொண்டே இருப்பவர்களுக்கு கடன் பெரிய சுமை அல்ல...விரைவில் தீரும் வருமானம் குறைந்துகொண்டே இருந்தால் முதலில் அதை சரி செய்யுங்கள்....!!
அரசனை நம்பி புருசனை கைவிட்டது போல..ஏதேனும் எப்போதோ வரப்போகும் லாபத்தை எண்ணி இன்று வேலைக்கு போகாமல் இருந்தால் அது மோசமானது...அந்த வருமானம் அல்லது லாபம் கிடைக்காமலே போய்விடலாம்...!! தினமும் வேலை செய்யுங்கள் தினமும் சம்பாதியுங்கள்..நீங்கள் கோடீஸ்வரனாக இருப்பினும் வேலை செய்யுங்கள் அதுவே மனம்,உடலுக்கு முக்கிய சக்தியாகும்..!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக