செவ்வாய் ;
செவ்வாய் பூமா தேவியின் மகன். பூமாதேவி [பார்வதி] சக்தியாகும். செவ்வாய் பூமிக்காரன். பூமியும் செவ்வாயும் ஒன்றாக் இருந்ததாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். பூமியிலிருந்து செவ்வாய் பிரிந்தாகவும் அதனால் செவ்வாய் பூ புத்திரர் அதாவது சகோதர காரகர் ஆகிறார் என்று கூறப்படுகிறது. செவ்வாய் உறுதியான இறுக்கமான ஒரே பாறையாக இருக்கும்.
எந்த வேலையும் சக்தி இன்றி செய்ய முடியாது. செவ்வாய் உஷ்ணம். உடலில் உஷ்ணமில்லை என்றால் உண்ணும் உணவு ஜீரணமாகாது. ஆனால் அதே சமயம் அதிகப்படியான உஷ்ணம் உடலில் தொந்தரவுகளைத் தரும். செவ்வாயின் பகை கிரகமான புதன், சனி இவர்களுக்கு கூட குறிப்பிட்ட அளவு செவ்வாயின் ஆதரவு தேவை. அதே சமயம் அதிகப்படியாகவும் இருக்கக் கூடாது.
உதாரணமாக தானியம் வேக அளவான நெருப்பு தேவை. அதே சமயம் அதிகப்படியான நெருப்பும் கூடாது. அதிகப்படியான நெருப்பு தானியத்தின் சுவைக் கெடுத்து விடும். அது போல் ஒரு மனிதனுக்கு தனது கர்மாவை செய்ய அளவான சக்தி வேண்டும். அளவுக்கு அதிகமான சக்தியை உபயோகித்தால் தனக்கும் தொந்தரவு. அடுத்தவருக்கும் தொந்தரவாக அமையும்.
செவ்வாய் ஈகோ. ஒருவருக்கு அதிகப்படியான ஈகோ இருந்தால் கிரிமினல் ஆக மாறும் நிலை ஏற்படும். இதனால் தன்னை தானே அழித்துக் கொள்ளும் நிலை ஏற்படுகிறது. அதே சமயம் புத்திசாலிதனத்தில் தனி திறமை இருந்து அளவான ஈகோ இருக்கும் போது மக்களுக்கு பயன்படுவதுடன் தனக்கும் உபயோகமாக இருக்கும்.
ஒருவருக்கு மிக அதிக அளவில் ஈகோ இருந்தால் ஏதோ ஒரு நாள் இராகுவின் தொடர்பு ஏற்படும் காலத்தில் ஈகோவை [கால புருஷனை] அழித்து விடுகிறது. வலுவான புதன் அல்லது இராகு ஒரு நாள் ஈகோவை அழித்து விடும்.
ஒரிரு புண்ணிய ஆத்மாக்களைத் தவிர உலகிலுள்ள ஒவ்வொரு மனிதனிடமும் மிருகத் தன்மையும், அகங்காரமும் இருக்கிறது. கீழ் நிலையில் மிருகத் தன்மைக்கு அதிபதி செவ்வாய் . உயர் நிலையில் அகங்காரத்திற்கு அதிபதியாக செவ்வாய் ஆகிறார். மிருகத் தன்மையும் அகங்காரமும் வேலை செய்யும் போது மனிதனிடம் விவேகத்திற்கு வேலை இல்லாமல் போய் விடுகிறது. சுயநலம் காரணமாக உணர்ச்சிகளின் வேகம் செயல் படும் போது வெறி தன்மை ஏற்பட்டு விடுகிறது. இதற்கு செவ்வாய் காரணம் ஆகிறார். இந்த இரண்டு நிலைகளின் எல்லைக்குள் தான் மனித வாழ்க்கை நடை பெற வேண்டும்.
ஒருவர் பிறந்த ஜாதகத்தில் செவ்வாய் உச்சமாக இருக்கும் ஜாதகரிடம் கோபமும், ஈகோவும் அதிகமாக இருப்பதை அறிய முடிகிறது. உடலில் வலு அதிகமாக இருக்கும். சிற்றின்பத்தை நுகருவதற்கு அதிகமாக அதில் ஈடுபாடு காட்டுவார். அதனால் ஜனனேந்திரியத்தில் கோளாறுகள் ஏற்படுத்தவும் செய்யும்.
உணர்ச்சி வேகம் கட்டுபடும் போது தன்னம்பிக்கை, தைரியம், பலம், சுதந்திரம், சக்தி, செயல் ஆற்றும் திறமை, தலைமை தாங்கும் திறமையும், சக்தியும் கொடுக்கிறது. இவர்கள் தான் போலீஸ், இராவணுத்தில் பணியாற்றும் வாய்ப்பு பெறுகிறார்கள். இவர்கள் துணிவோடு எதிர்நீச்சல் போட்டு வாழ்கையின் மேல் மட்டத்திற்கு எட்டி பிடித்து விடுவார்கள். புரட்சி செய்து வெற்றி காணச் செய்யும். எப்பேர்ப்பட்ட வல்லமை பெற்ற பகைவர்கள் ஆனாலும் அவர்களை வெல்லும் வீரனாக ஆகும் தகுதியை ஏற்படுத்தும்.
வழக்குகளிலும் வெற்றி பெற செய்யும். யாருக்கும் தலை வணங்காமல் தன் மானத்துடன் வாழ்வார். பொறியில் துறையில் சாதனை படைப்பார்.
நான்கு வித உபாயங்களில் தண்ட உபாயத்திற்குரியவன் செவ்வாய். நாம் வாழும் இடமோ பூமி, நம்மை வாழ வைக்கும் பொறுப்பு பூமிக்கரான் செவ்வாய்க்கு உண்டு. ஆகையால் பூமி காரனது முழுமையான பலம் இந்த பூமியில் பிறந்தவர்களுக்கு மாபெறும் மூல பலமாக இருப்பதில் வியப்பில்லை.
நான்கு வித உபாயங்களில் தண்ட உபாயத்திற்குரியவன் செவ்வாய். நாம் வாழும் இடமோ பூமி, நம்மை வாழ வைக்கும் பொறுப்பு பூமிக்கரான் செவ்வாய்க்கு உண்டு. ஆகையால் பூமி காரனது முழுமையான பலம் இந்த பூமியில் பிறந்தவர்களுக்கு மாபெறும் மூல பலமாக இருப்பதில் வியப்பில்லை.
செவ்வாய் ராகு அல்லது செவ்வாய் குரு அல்லது செவ்வாய் சூரியன் இணைவு பெற்ற ஜாதகர் பிடிவாத குணம் – மந்த தன்மை போன்ற குணங்கள் இருக்கும். அதன் மூலம் பல பிரச்சினைகளை சந்திக்கிறார் ..செவ்வாயால் உண்டாகும் பிரச்சினைகள் தீர செவ்வாய் தோறும் செவ்வாய் ஓரையில் முருகணை முல்லை மலரால் அர்சித்து வழிபடவும்.
1 கருத்து:
செவ்வாய் ராகு ேேமேஷத்தில் இருந்தால்?
லக்னம் :ரிஷபம்
கருத்துரையிடுக