திங்கள், 2 மார்ச், 2015

செல்வந்தராக, வெற்றி மேல் வெற்றி பெறும் ஜாதகர் யார்..? ஜோதிடம்

Astrology ஜோதிடம்

அசுர குரு ,தேவ குரு எனும் குருவும்,சுக்கிரனும் கெட்டாலும் வாழ்வில் சுகமும் இல்லை...முன்னேற்றமும் இல்லை..சுக்கிரன் வசதி வாய்ப்புகளுக்கு அதிபதி என்றால் குரு செல்வாக்குக்கு, கெளரவத்துக்கு,குழந்தை பாக்யத்துக்கு  அதிபதி..இவை இல்லாவிட்டால் வாழ்வில் அர்த்தம் இல்லை..செவ்வாயும்,சனியும் உங்களுக்கு சக்தி கொடுப்பவர்கள்..எனர்ஜி இருப்பவர்கள்தான் அதிகம் உழைக்க முடியும்..இல்லாவிட்டால் சோம்பலும்,சலிப்பும்தான் இருக்கும்.திறமை இருந்தால்தானே எல்லாவற்றையும் உருவாக்க முடியும்.அதை தருபவர்கள் புதன்,மற்றும் சந்திரன்...

எதையும் துணிந்து செய்யவேண்டும் எனில் நல்ல நிர்வாகதிறன் வேண்டுமெனில் சூரியன்,ராகு,செவ்வாய் துணை வேண்டும்.வாழ்வில் எதற்காக இதையெல்லாம் செய்தோம்..இனி என்ன செய்யப்போகிறோம்..மற்றவருக்காக என்ன செய்யப்போகிறோம் எனும் ஞானத்தை நல்லது கெட்டதை உணர்த்துபவர்கள் கேது மற்றும் குரு ஆவார்கள்...
ஜாதகம் எப்படி இருப்பினும் யோகமான கிரகத்தின் நட்சத்திரத்தில் அமர்ந்த கிரகத்தின் திசை நடந்தால் அவர் சுகவாசியாக வெற்றி மேல் வெற்றி பெற்று வாழ்கிறார்...சூரியன்,சந்திரன் இரண்டு ஒளி கிரகங்கள் கெட்டால் வாழ்க்கை இருள் நிறைந்து காணப்படுகிறது..தாய்,தந்தை வழிகாட்டல் இல்லா குழந்தை நிலைதான்..சூரியன் ஆத்மபலத்தை கெடுத்துவிடுகிறார்...நிர்வகிக்கும் தன்மையை சிதைத்து விடுகிறார். சந்திரன் மனதை கெடுத்து, மனம் போன போக்கில் வாழும் நிலையை உண்டாக்குகிறார்..

ஒருவர் ஜாதகத்தில் லக்னாதிபதி,பிறந்த நட்சத்திர அதிபதி,பிறந்த ராசி அதிபதி ,பிறந்த கிழமை அதிபதி கெடாமல் இருந்தால் வாழ்க்கை சுபிட்சமாக இருக்கும் வாழ்வில் வெற்றி மேல் வெற்றி பெறலாம்..ஜதகத்தில் பல யோகங்கள் இருப்பினும் அதன் திசை புத்தி வந்தால்தான் அதை அனுபவிக்க முடியும்.
 

-----------------------------------------------------------------
பூசம்,அனுஷம்,உத்திரட்டாதி போன்ற சனியின் நட்சத்திரங்கள் அனைத்தும் சுபகாரியம் செய்ய மிகவும் உகந்தவை...எந்த காரியமும் செய்யலாம் நிலையான நீடித்த பலன்களை கொடுக்கும்..அதுவும் பூசம் நட்சத்திரம் குருவின் அம்சம் கொண்டிருப்பதால் மிக தெய்வீகமானது...இவை உங்கள் ராசிக்கு எட்டாவது ராசியின் நட்சத்திரமாக வந்தால் மட்டும் தவிர்த்து விடுங்கள்..இன்று பூசம் நட்சத்திரம்..இன்று சுபகாரியம் ,தொழில் துவங்கும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.
 ---------------------------------------------------
 பிறந்த தேதி என்பதை விட பிறந்த நட்சத்திரத்துக்கு சக்தி அதிகம்...பிறந்த நாள் கொண்டாடும்போது பிறந்த மாதத்தில் வரும் பிறந்த நட்சத்திர நாளில் வழிபாடு செய்வது நீண்ட ஆயுள் தரும் என முன்னோர்கள் கருதினர்.

 ------------------------------------------
கபிஸ்தலம் :
கும்பகோணம் - திருவையாறு பாதையில் பாபநாசத்துக்கு கிழக்கே 3 கிலோ மீட்டர் தொலைவில் கபிஸ்தலம் உள்ளது. பெருமாளின் விளையாட்டுகளில் மிகவும் முக்கியமாக நமக்கு கஜேந்திர மோட்சம் நினைவுக்கு வரும். அது நடந்த இடம் இத்தலம்தான் என்பது குறிப்பிடத்தக்கது. வாலிக்கு பெருமாள் நேரடியாக காட்சிக் கொடுத்த இடம் என்பதால் இந்த ஊருக்கு கபிஸ்தலம் என்ற பெயர் ஏற்பட்டது. திருமழிசை ஆழ்வார் இங்கு மங்களாசனம் செய்துள்ளார்.

அவர் இத்தலத்தில் எழுந்தருளியுள்ள பெருமாளை, ஆற்றங்கரையில் கிடக்கும் கண்ணன் என்று சொல்லி வணங்கினார். எனவே பக்தர்களும் அதுபோல் வழிபட வாழ்வில் கஷ்டங்கள் நிவர்த்தியாகும். வாழ்க்கையில் தொடர்ந்து வறுமையில் இருப்பவர்கள், தொழிலில் லாபம் பெற முடியாதவர்கள், நோயால் அவதிப்பட்டு கொண்டிருப்பவர்கள் இத்தலத்து கண்ணனை வழிபட நினைத்தது நடைபெறும். இத்தலத்தில் ஒருநாள் முழுவதும் தங்கி இருந்து அர்ச்சனை, ஆராதனை செய்து வழிபட்டால், பகவான் கருடன் மூலம் பறந்து வந்து நம் கஷ்டங்களை போக்குவார் என்று தல வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 -------------------------------------------

மூன்றாம் பிறை -அதிர்ஷ்டம் உண்டாக பரிகாரம்;

கை, கால் முகம் கழுவிவிட்டு,கையில் ஒரு மலர் ,ஒரு ரூபாய் காயின் எடுத்துக்கொண்டு வீட்டு வாசலுக்கு வாங்க..வானத்தை பாருங்க.மூன்றாம் பிறை..தெரியும்..உங்கள் குலதெய்வத்தையும்,இஷ்ட தெய்வத்தையும் வணங்கி உங்கள் லட்சியங்களையும்,ஆசைகளையும் நினைத்து,வாழ்க வளமுடன்..வாழ்க வையகம்..செழிப்புடன் வாழ்க என மூன்று முறை சொல்லிவிட்டு வீட்டுக்குள் சென்று பூஜையறையில் அந்த மலரை வைத்துவிட்டு தீபம் ஒன்றை ஏற்றுங்கள்.....நீங்கள் நினைத்தவை விரைவில் கிடைக்கும்..!

கருத்துகள் இல்லை: