நம் ஜாதகத்தில் எதிரிகள் ஸ்தானம் என்பது ஆறாமிடமாகும்.எதிரிகள் என்றால் யாரை எதனை குறிக்கும்..? ருணம்,ரோகம் என்பதும் எதிரிகள் தான் கடன்,நோய் என்பதை முக்கிய எதிரிகளாக சொல்லலாம்..ஒருவருக்கு ஜாதகத்தில் லக்னத்துக்கு ஆறாமிடத்தில் இருக்கும் கிரகத்தின் திசாபுத்தி நடக்கும்போது ,அல்லது ஆறாம் அதிபதி திசை நடக்கும்போது மருத்துவ செலவு உண்டாகிறது…சிலருக்கு அறுவை சிகிச்சை நடக்கிறது.சிலர் கடனாளி ஆகிவிடுகிறார்கள்…
இந்த மாதிரி திசை துவங்கும் முன் வங்கி லோன் மூலம் வீடு கட்டுதல்,வாங்குதல் செய்யலாம் தோசம் குறையும்.இல்லையெனில் தொடர் மருத்துவ செலவுகள் உண்டாக்கும்..
மேசம்-சிம்மம்,துலாம் -சூரியன்,சுக்கிரன்,மகரம்-சனி
ரிசபம்-கன்னி,விருச்சிகம் -புதன்,செவ்வாய்
மிதுனம்-விருச்சிகம் -செவ்வாய்,தனுசு-குரு
கடகம்-கும்பம்-சனி,ரிசபம்-சுக்கிரன்
சிம்மம்-மகரம்-சனி,மேசம் செவ்வாய்
கன்னி-மேசம்-செவ்வாய்,மீனம்-குரு
துலாம்-மீனம்-குரு,சிம்மம் -சூரியன்
விருச்சிகம்-மேசம்,மிதுனம்-செவ்வாய்,புதன்
தனுசு-ரிசபம்-கடகம்-சுக்கிரன்,சந்திரன்,மிதுன புதன்
மகரம்-சிம்மம்-சூரியன்,விருச்சிக செவ்வாய்
கும்பம்-கடகம்-சந்திரன்,துலா சுக்கிரன்
மீனம் -துலாம்-சுக்கிரன்,கன்னி புதன்
மேற்க்கண்ட ராசி, லக்னத்தாருக்கு மேற்க்கண்ட திசைகள் கடும் பிரச்சினைகள்,நோய்,எதிர்ப்பு,எதிரி,நஷ்டம் போன்றவற்றை தந்துவிடுகிறது...6,8 மற்றும் பாதாகாதிபதி திசைகளையும் கொடுத்துள்ளேன்...
ஆறாம் வீட்டில் சூரியன் ,சனி,செவ்வாய் ராகு கேது ஆகிய பாவ கிரகங்கள் அமர்ந்தால் அவர்களுடைய திசாபுத்திகளில் நல்ல பலன்களை கொடுப்பார்கள் என சொல்லப்படுகிறது.ஆனால் ராகு ,கேதுக்களை தவிர சூரியன்,சனி,செவ்வாய் அமரும்போது இவரை தேடி வம்புச்சண்டை வாசலில் நிற்கும்.கோர்ட் கேஸ் பிரச்சினைகள் உண்டாகிறது.
செவ்வாய் சகோதர காரகன் என்ப்தால் சகோதரனுக்கு கூட இந்த பிரச்சினை உண்டாகலாம்..சூரியன் அமரும்போது சூரியன் தந்தையை குறிப்பதால் தந்தைக்கு அறுவை சிகிச்சையோ ,பணவிரயமோ நடக்கலாம் அல்லது தந்தை வழியில் யாருக்கேனும் பாதிப்பை உண்டாக்கலாம்…
ஆறாம் வீட்டில் சுப கிரகங்கள் அமர்ந்தால் தீமையான பலன்களே நடக்கும்.பொதுவாகவே 6,8,12 ஆகிய இடங்களில் சுப கிரகங்கள் மறைய கூடாது.அதான் காரகத்துவங்களும் ,அதன் மூலம் கிடைக்கும் சுகங்களும் மறைந்துவிடும்.சுக்கிரன் சுகாதிபதி,களத்திரகாரகன்,ஆடம்பரம்,வசதி வாய்ப்புகளை கொடுப்பவர் அவர் மாறைந்துவிட்டால், இவை எல்லாம் கெட்டுவிடும்.சுகவாசியாக வாழ இயலாது.குடும்ப வாழ்க்கையிலும் மகிழ்ச்சி இருக்காது.பணம் சேர்ப்பது இயலாத ஒன்று.சந்திரன் மறைந்தால் தாய் நோயாளியாகிறார்.மனம் எப்போதும் குழப்பத்தில் இருக்கும்.சந்திரன் லக்னத்துக்கு எத்தனையாவது அதிபதியாக வருகிறாரோ அவர் ஸ்தானமும் கெடுகிறது.நீரால் கண்டம் உண்டாகிறது.
குரு மறைந்தால் செல்வாக்கும்,சொல்வாக்கும் மறைகிறது.யாரும் நம்மை மதிப்பதில்லை என்ற புலம்பல் எப்போதும் இருக்கும் குழந்தைகளால் பல மன உளைச்சல்கள் உண்டாகும்.லக்னத்துக்கு குரு எந்த காரகத்துவம் வகிக்கிறாரோ அதுவும் கெட்டு விடுகிறது.சமூகத்திலும்,உறவிலும் மதிப்பும் மரியாதையும் கெடுகிறது.
சுகர்,பிரசர் என நோயால் துன்பங்களும் உண்டாகும்.சந்திரன் ஆறில் மறையும்போது ஆஸ்துமா போன்ற மூச்சு ,நுரையீரல் சார்ந்த வியாதிகளும் குரு மறையும்போது சர்க்கரை,தோல் வியாதிகளும் உண்டாகின்றன..சுக்கிரன் மறையும்போது அழகு கெடுகிறது.
காரக கிரகங்கள் 6ல் மறையும்போது அவர்கள் தான் நம் எதிரிகளாக வருகிறார்கள்..1ஆம் அதிபதி 6ல் மறையும்போது ,நாமே நம் தலையில் மண்ணள்ளிப்போட்டுகிறோம்.நம் முன்னேற்றத்துக்கு தடையாக இருப்பது நாமே என்ற நிலை உண்டாகிறது எல்லோரையும் எதிரியாக்கிகொள்கிறோம்.
2ஆம் ஆதிபதி 6ல் அமரும்போது வரவு செலவு எதிரியாகிவிடுகிறது குடும்பமே எதிரியாகி விடுகிறது.நம் பணம் நம் பங்காளிக்கு போய்விடும்..அல்லது வட்டிக்காரகனுக்கு போய்விடும்.3ஆம் அதிபதி 6ல் அமரும்போது நம் இளைய சகோதரன் நமக்கு எதிரியாகிறான்.மாமனாரும் முறைச்சிக்கிட்டேதான் இருப்பார்.நம் வீரியம் கெட்டுபோகிறது.இதனால் தாம்பத்தியத்தில் சிக்கல் உண்டு.எந்த முயற்சியும் செய்யாமல் ஒரே மாதிரியான வாழ்க்கை.

4ஆம் அதிபதி 6ல் அமரும்போது அம்மாவே எதிரியாகிவிடுகிறார் சிலருக்கு மட்டும்.எப்போதும் அம்மாவை குறை சொல்லிக்கொண்டே இருப்பார்கள்..அம்மாவும் நோயாளியாக இருப்பார்..5ஆம் அதிபதி 6ல் இருக்கும்போது ,எதிரி நம்மை வெற்றி கொள்வார்.நம் சொத்து நம் பங்காளிகளுக்கு போய்விடும்.6ஆம் அதிபதி 5ல் இருக்கும்போது பங்காளி நம் மீது வழக்கு போட்டால் நாம்தான் வெற்றி பெறுவோம்.பங்காளி சொத்து நமக்கு கிடைக்கும்.
7ஆம் அதிபதி 6ல் இருந்தால் திருமணம் தாமதமாக செய்வது நல்லது.மனைவியுடன் அடிக்கடி கருத்து வேறுபாடு உண்டாகும் நமக்கு பிடிக்காததை மனைவி செய்வார்.
8ஆம் ஆதிபதி 6ல் இருப்பது நல்லது. நஷ்டமில்லாத ஜாதகம்.துயரமில்லாத ஜாதகம்.9ஆம் அதிபதி 6ல் இருந்தால் தந்தையே எதிரியாகிவிடுகிறார். நம் முன்னேற்றத்துக்கு அவரே முட்டுக்கட்டையாக இருக்கிறார்.அல்லது அவர் நோயாளியாக இருந்து நமக்கு மன உளைச்சலை தருகிறார்.10 ஆம் அதிபதி 6ல் மறைந்தால் தொழில் மறைகிறது.எதிரியின் தொல்லையால் சொந்த தொழில் பாதிக்கிறது.கண் திருஷ்டி அதிகம்.தொழிலால் கடன் உண்டாகிறது.11ஆம் அதிபதி 6ல் அமர்ந்து விட்டால் மூத்த சகோதரன்12 எதிரியாகிறார்.12ஆம் அதிபதி 6ல் அமர்வது நல்லது விரய செலவுகள் இருக்காது.அதே சமயம் தூக்கமும் கெடும்.தூக்கத்துல நடக்குற வியாதி,தூக்கமே வர மாட்டேங்குது என புலம்புபவர்கள் இவர்கள்தான்.
பொதுவாக 6ஆம் அதிபதி வலிமையாக ஆட்சி உச்சம் பெற கூடாது.6ஆம் இடம் சகோதரர்கள்,பெரியப்பா,சித்தப்பா மகன்கள் போன்ற பங்காளிகளை குறிக்கும்.சொத்து பிரச்சினை,வில்லங்கம் எல்லாம் இவர்கள் மூலம் வந்தால் இவர்கள் நம்மிடம் தோற்க வேண்டுமானால் 6ஆம் அதிபதி வலிமையாக இருக்க கூடாது.6ஆம் இடத்தை குரு பார்த்தால் நல்லது. எதிரி தொல்லை இருக்காது எதிரியை வெல்லலாம்..6ல் செவ்வாய் அல்லது ராகு கேது இருந்தால் எதிரிகள் நம்மைக்கண்டு அஞ்சுவார்கள்…அதே சமயம் எதிர்ப்புகள் அதிகமாகவே இருக்கும்.6ல் செவ்வாய் இருப்பவர் மீது எத்தனை வழக்கு போட்டாலும் உடைத்துக்கொண்டு வெளியே வருவார்.
6ஆம் இடத்தில் என்ன காரகத்துவ கிரகம் இருந்தால் என்ன பலன் என எழுதி இருக்கிறேன் இதுவே 6ஆம் அதிபதி எங்கெங்கு இருந்தால் என்ன கெடுலை செய்யும் என எழுதினால் இன்னும் பதிவு நீளமாகும்.அடுத்த பதிவில் எழுதலாம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக