திருமண பொருத்தம் ஜோதிட விதிமுறைப்படி பார்க்கும் ஜோதிடர்கள் மிக குறைவாகிவிட்டனர்.நட்சத்திர பொருத்தம் மட்டும் பார்ப்பதோடு சரி.பையன் வீட்டார்,பெண் வீட்டார் மனநிலை புரிந்து ,பொருத்தம் சொல்லிடுறாங்க.ஜாதக கட்டம் கூட பார்ப்பதில்லை.ஒருவருக்கு நாகதோசம் இருந்தால் இன்னொருத்தருக்கும் நாகதோசம் இருக்கனும்..செவ்வாய் ஒருவருக்கு இருந்தால் இன்னொருத்தருக்கும் செவ்வாய் தோசம் இருக்கனும்.இவை சாதாரணம் அல்ல.இருவரது உடல் தாம்பத்யம்,மனப்பொருத்தம் சார்ந்த முக்கிய பொருத்தங்கள்...
இரவு வாழ்க்கை முக்கியம் ..இரவும் இல்லை..உறவும் இல்லை என ஒருவருக்கு ஜாதகத்தில் இருந்துவிட்டாலும் பிரிவை தடுக்க முடியாது.ராசி பொருத்தம்,லக்ன பொருத்தம்,அதன் பின் தான் நட்சத்திர பொருத்தம்,ஜாதக பொருத்தம்,பார்க்கனும்.இருவருக்கும் நடக்கும் திசை இருவர் குடும்பத்தையும் முன்னேற்றுமா குப்புற தள்ளுமா என்பதையும்,பையன் ஜாதகத்தில் மனைவியை மதிப்பானா ,மிதிப்பானா,பொறுப்பாக குடும்பம் நடத்தும் தகுதி இருக்கா என்பதையும் ,அவன் ஒழுக்கம்,தாம்பத்ய நிலை,சம்பாத்யம்,தொழில் ஸ்தானம்,மாமனார் மாமியார் ஸ்தானம் உட்பட கவனிக்க இயலும்...
3ஆம் இடம் காம ஸ்தானம்..அது மிகப்பலமாக இருந்துவிட்டாலும் சிக்கல்....ரொம்ப பலவீனமாக இருந்துவிட்டாலும் சிக்கல்...12ஆம் இடம் இரவில் நடக்கும் உறவை சொல்லுமிடம்...அது பலமாக இருந்துவிட்டால் இரவு தாண்டி பகலும் படுக்கை சுகம்.12ஆம் இடம் கெட்டால் இரவு நரகமாகிவிடும்..இப்படி நிறைய இருக்கு.பொருத்தம் பார்ப்பதில் அதிக அக்கறை தேவை என்பதற்காக இதை எழுதுகிறேன்.
----------------------------------------------------
சுக்கிரன் உச்சமாக இருக்கிறார்.ஒரு துறையில் சர்ச்சை வருகிறது அதன் அதிபதி கிரகம் கோட்சாரப்படி பலமோ பலவீனமோ அடைந்திருக்கும். சர்ச்சை வந்ததால் இதனால்தான் என யோசித்தேன்.எழுதுகிறேன் அவ்வளவுதான்.
..சினிமாவுக்கு சுக்கிரன் தான் அதிபதி.சுக்கிர பலம் இல்லையேல் கலைத்துறைக்கு வர முடியாது.ஆட்டம்,பாட்டம்,கொண்டாட்டம்தான் சுக்கிரனின் குணமே..சுக்கிரன் என்றாலே ஆடம்பரம்,எல்லாவித சுகம் அனுபவித்தல் தான்.சுக்கிரன் கெட்டவர்களுக்கு சுகம் கிடைக்காது.கஷ்டப்பட்டு சுகம் அனுபவிக்கனும்.சுக்கிரன் பலமா இருந்தா சுகம் தேடி வரும்.சுக்கிரன் பணத்துக்கு அதிபதி என்பதால்தான் சிறிது தகுதி இருந்தாலும் சினிமா துறையில் பெரும் பணம் கிடைக்கிறது.
.துலாம் ராசியின் குணமும் அதுதான்.சுக்கிரனின் ராசியல்லவா.எல்லோரிடமும் கூடி கொண்டாடவே விரும்புவர்.தனிமை இவர்களுக்கு பிடிக்காது.சுக்கிரன் உச்சமாக தற்போது இருப்பதால் உல்லாசம் சார்ந்த சர்ச்சைகள் வருகின்றன..புதன் விரைவில் நீச வீடு மீனத்துக்கு செல்வார்.அப்போது புதனுக்குண்டான கணக்குகள் துறை சார்ந்தவை,கல்வி துறை சார்ந்த சர்ச்சைகள் வெளியாகும்..
=================
கடந்த 7 வருடமாக குழந்தைகளுக்கு நியூமராலஜிபடி பெயர் வைத்துக்கொண்டிருக்கிறேன்.அதிர்ஷ்ட ஜோதிடம் நியூமராலஜி புக் எழுதிய சமயத்தில் அதிகம் தபால் வரும்...குழந்தைக்கு ஜாதகம் கணித்து பிடிச்சதை வெச்சிக்கலாம்னு ஏழு விதமான பெயர்கள் எழுதி ஜாதக பலனும் எழுதி தபாலில் அனுப்புவேன்.இப்ப வாட்சப்,மெயில் பிரபலம் ஆகிட்டதால இதில்தான் அதிகம்.இப்போதெல்லாம் நட்சத்திரப்படி மட்டும் அல்ல,நியூமராலஜிபடி பெயர் வைப்பதும் ஒரு கட்டாய சம்பிரதாயம் ஆகிவிட்டது...!!!
============================
மேசம்,கடகம்,துலாம்,மகரம் இவை எல்லாம் சர ராசிகள்.வேகம் அதிகம்.,எதுவா இருந்தாலும் இப்பவே நடக்கனும் என்பார்கள்...ராசி,லக்னம் இரண்டுமே மேலே இருக்கும் நான்கு ராசிகளில் இருந்தால் ஜெட் வேகம்தான்.எதையும் அவசரமா செஞ்சுட்டு அப்புறம் கலங்கி நிற்பார்கள்..
நிறைய பயணம் இவர்கள் தான் செய்வார்கள்..காலில் சக்கரம் என்பது இவர்களுக்குதான்.எதையாவது முயற்சி செய்து கொண்டே இருப்பது,யாரிடமாவது பேசிக்கொண்டே இருப்பது,தனக்கு செய்ய வேலை இல்லைன்னா அடுத்தவங்க வேலையை தன்னுடையது போல இழுத்துப்போட்டுக்கொண்டு செய்வார்கள்..!!
நல்ல மனசு,தங்க குணம்...சொந்த வாழ்வில் நிறைய போராட்டம் இருந்தாலும், மனதில் அழுதாலும், வெளியே சிரிக்கும் அன்புள்ளம் கொண்டவர்கள்..!! கடவுள் துணை நிற்க்கட்டும்.
3 கருத்துகள்:
அறிந்து கொண்டேன்.
அருமை... நன்றி
Super
கருத்துரையிடுக