மிதுனம்,கன்னி,தனுசு,மீனம் லக்னத்தார் திருமணம் ஆகும் வரை தாயை தெய்வமாக மதிப்பர்.திருமணத்துக்கு பின் மனைவியை அதிகம் நேசிப்பர்...மனைவி சொல்படி நடப்பர்.மாமியார் மருமகள் பிரச்சினை இவர் வீட்டில்தான் அதிகம்...
இவர்களில் புத்திசாலிகள் பலர்,இரண்டு பக்கமும் ஆமாம் சொல்வார்...நீ சொல்வதுதான் கரெக்டு என அம்மாகிட்டயும் ,மனைவி கிட்டயும் சமமாக சொல்லி நல்ல பிள்ளையாக இருப்பர்.
தாய்க்கு முன் மனைவியை பாராட்டினால் நம்ம அம்மாவா இப்படி என நினைக்குமளவு அம்மா ருத்ர தாண்டவர் ஆடுவார்...அம்மா சொல்வதுதான் எனக்கு முக்கியம் என மனைவிக்கிட்ட சொல்லிட்டா போச்சு..அப்புறம் எதுக்குடா என்னை கட்டிக்கிட்ட என பொண்டாட்டி பெட்டியை தூக்கிடுவா ..பாவம் இவர் படும் பாட்டை பார்க்கனுமே.கம்பி மீது தினமும் நடப்பது எல்லாம் அதிசயமே இல்ல இவர் செய்ற பேலன்ஸ் க்கு முன்னாடி.
தனிக்குடித்தனம் இவர் போயிட்டா அதிர்ஷ்டம் இவரை விட்டு போய்விடும்.நிம்மதி,சுகமும் போயிடும்.இருவரும் இவருக்கு இரு கண்கள் அம்மா,மனைவி இருவரும் ஒரு வீட்டில் இருந்தால்தான் அதிர்ஷ்டம்,தொழில் இரண்டும் நடக்கும்...
மேற்க்கண்ட நான்கு லக்னங்களில் பிறந்து,அம்மா சொல்வதைதான் கேட்பேன் என சொல்லி மனைவியை துன்புறுத்தியதால், தொழிலில் நிறைய நஷ்டம் வந்து பாதிப்படைந்தவர்கள் நிறைய பேரை பார்த்திருக்கிறேன்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக