திருமண பொருத்தம் உங்க பையனுக்கோ பொண்ணுக்கோ பார்க்கும்போது ஒன்றுக்கு இரண்டு ஜோதிடர்களை கலந்து ஆலோசிப்பது நலம்..எனக்கு ஈமெயிலும் வாட்சப்பிலும் கூட பொருத்தம் பார்க்க ஜாதகங்கள் அனுப்புகிறார்கள் ..நான் நட்சத்திர பொருத்தம் மட்டும் பார்க்காமல் ஜாதக கிரக பலத்தையும் ஆராய்ந்து நடக்கும் திசை பெண்னுக்கும் வரனுக்கும் மாமனார் மாமியாருக்கும் எப்படி என்பதுவரை பார்ப்பது உண்டு...திருமணத்துக்கு பின் அதிர்ஷ்டமா தரித்திரமா என்பது ஜாதகம் பார்த்தவுடன் தெரிந்து விடும்..
திருமண பொருத்தம் சம்பந்தமாக நிறைய கட்டுரைகள் எழுதி இருக்கிறேன் அதை எல்லாம் தேடி படித்த பின் இதயும் படியுங்கள் தெளிவு பிறக்கும்..
ஜாதகத்தில் 10 மிடம் மாமியார் ஸ்தானமாகும். 10 மிடத்தில் ராகு கேது இருந்தால், பூரண ஆயுள் உண்டு.
7 ல் சுபர் இருந்து 7 ம் அதிபதி சுக்கிரனுடன் சேர்ந்தால் இளமை திருமணம் .
7 ம் அதிபதி
2 ல் பலம் பெற்று 7 ல் குரு இருந்தால் வாலிப வயதில் கெட்டி மேளம் முழங்க திருமணம்.
லக்கின கேந்திரத்தில் சுக்கிரனும் , சுக்கிரனுக்கு கேந்திரத்தில் சனியும் இருந்தால் இளமை திருமணம்.
1 ம் அதிபதி இருவரும் 5, 7 , 9 , 11 , ல் இருந்தால் வாலிப வயதில் திருமணம் நடைபெறும்.
லக்கினதிபதி சுக்கிரன் ஆகி அவர் 1 , 4
, 7 , 10 , ல் இருந்தால்
இளமை திருமணம்.
7 ல் குரு (அ) சுக்கிரன்
இருந்து அசுபர் சேர்க்கையோ
, பார்வையோ இல்லாமல்
இருந்தால் இளமையில் திருமணம் நடைபெறும்.
சந்திரனுக்கு கேந்திரத்தில் குரு “ கஜ கேசரி யோகம்” சந்திரனுக்கு 1 , 5 , 9 , ல் குரு இருந்தால் “ சந்திர யோகம்” ஏற்படும் . உயர்ந்த பதவி , புகழ் , நீண்ட ஆயுள் போன்றவை ஏற்படும்.
1 4 , 7 , 8 ,
ல் கருதிய சனி சேய் நிற்க தெண்டங்கள் மிக உண்டாகும் , திரவிய நாசமாகும்
, கொண்டதோர் மனைவி வேறாகும்.
7 ல் கேது அடைய பெற்றவர்களுக்கு தார தோஷம், கணவன் , மனைவி பிரிவு , இரு தார யோகம் , ஜல கண்டம் , போன்றவை ஏற்படும்.
அதிபதி ராகுவுடன் சேர்க்கை பெற்று 6 ல் இருந்தால் இரண்டுக்கும் மேற்பட்ட மனைவிகள் அமையும்.
7 ம் அதிபதியும் சுக்கிரனும் இணைந்து இராசி அம்சத்தில் காணப்பட்டால் இரு தார யோகம் ஏற்படும் .
101 . 7 ல் சுக்கிரன், சனி இணைவு இருந்தால் இருதார யோகம் 31 வயதில்
ஏற்படும்
கானு லக்கினம் நாலேழ் பத்தினில் கோணு சுக்கிரன் புத்தி இருந்தால் தோணு மற்றைய தோஷங்கள் யாவுமே பானு கண்ட பனியென அகலுமே.( 1,4,7,10 ல் புதன் ,சுக்கிரன் இருந்தால் தோசங்கள் யாவும் விலகி அதிர்ஷ்டம் உண்டாகும் )
. 7 ம் வீட்டில் அசுபர்கள் அமையப் பெற்று (அ) பார்வை செய்தால் நல்ல முறையில் திருமணம் ஆகாது. உறவில் திருமணம் ஆக தடை கொடுக்கும்.
. 7 ல் புதன் இருந்தால் மாமான் வழியில் திருமண ஏற்படும் . 7 ம் அதிபதியும் புதனும் சேர்ந்து குடும்பாதிபதியுடன் இணைந்தால் மாமான் மகளை மணம் செய்யும் அமைப்பு.
. 7 ம் அதிபதி செவ்வாயுடன் சேர்ந்து (அ) செவ்வாய் பார்வை பெற்றால் சகோதிரியின் பெண்ணை மணக்கும் அமைப்பு.
. 7 ம் அதிபதி 4 ம் அதிபதியுடன் இணைந்து இருந்தால் (அ) பார்வை
பெற்றால் தாய் வழி உறவில் திருமணம் ஏற்படும்.
7 ம் வீட்டிற்கு சந்திரன் தொடர்பு ஏற்பட்டாலும் தாய் வழி உறவில் திருமண அமைப்பு உண்டாகும்.
7 ம் அதிபதி 9 ம் அதிபதியுடன் சேர்ந்தாலும் (அ) பார்த்தாலும் (அ ) சூரியன் தொடர்பு இருந்தாலும் தந்தை வழியில் திருமண அமைப்பு ஏற்படும்.
(ஏக) நட்சத்திரம் ரோகிணி , திருவாதிரை , மகம் , அஸ்தம்
, விசாகம் , திருவோணம் , உத்திராட்டாதி ரேவதி , ஆகிய நட்சத்திரம் ஒன்றாக வந்தால் சிறப்பு திசா சந்திப்பு கூட தோஷம் தாராது.
பரணி , ஆயில்யம் , சுவாதி , கேட்டை , மூலம் , சதயம்
, அவிட்டம் , பூரட்டாதி இவை ஏக நட்சத்திரமாக வந்தால் திருமணம் செய்யக் கூடாது.
ஆண் , பெண்
இருவருக்கும் 27 ஆவது ஆக வந்தால் இருவரும் ஒரோ ராசியாக வந்தால் திருமணம் செய்யலாம் . ஆனால் வேறு ராரியாக வந்தால் திருமணம் கூடாது. தினப் பொருத்தம் வராது . சுக்கிரன் 1 , 5 , 9 ல் அமைந்து 2 , 7 , 10 க்கு உடையவர் இணைந்து 10 ல் பலம் பெற்று அமைந்தால் காம வெறி இருக்கும். 60 வயது ஆனாலும் பெண் தேடுவார்.
சுக்கிரன் 2 ல் இருந்து 7 ம் அதிபதி 11 ல் இருந்தால் இளமையில் திருமனம் ஏற்படும் . 7 ம் அதிபதி சுபர் ராசியில் இருந்து சுக்கிரன் ஆட்சி , உச்சம் , பெற்றாலும் இளமையில் திருமணம் ஏற்படும்.
. பெண் நட்சத்திரத்திலிருந்து ஆண் நட்சத்திரம் 7 வது ஆக வந்தால் திருமணம் செய்யக்கூடாது. சில நட்சத்திரத்திற்கு விதி விளக்கு (உ . ம்)
திருவாதிரை ,
உத்திரம் . பூரம் - அனுசம் , சித்திரை - அஸ்தம் ஆகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக