வெள்ளி, 6 ஏப்ரல், 2018

மேசம்,சிம்மம்,விருச்சிகம் ராசிக்காரங்க எப்படிப்பட்டவங்க தெரியுமா..?

அவன் ஒரு சூடுபிடிச்சவன் என கிராமங்களில் சொல்வார்கள் கோபக்காரர்கள் ,கலககாரர்களை பார்த்து இப்படி சொல்வதுண்டு..
மேசம்,விருச்சிகம்,சிம்மம் ராசிக்காரர்களை சூடுபிடிச்சவங்க என சொல்லிடலாம் ஆனா ராசியிலோ லக்னத்திலோ குரு இருந்தால் சூடு குறையும்..சித்திரை மாசம் பிறந்தவங்களும் சூடு பார்ட்டிதான்.
இவங்களை போல நல்லவர்கள் ,அடுத்தவர்க்கு உதவி செய்யும் குணம் கடுமையான உழைப்பு யாரிடமும் இருக்காது.அதே சமயம் இவர்கள் நேர்மையானவர்கள் ..தன்மானம் அதிகம் உடையவர்கள் மத்தவங்க நேர்மையா இல்லை என்றால் தன்மானத்துக்கு பங்கம் வந்தால் மட்டும் இவர்களுக்கு சூடு பிடிக்கும்..அடுத்தவருக்கு சூடும் போடுவார்கள் ...பலாப்பழம் மாதிரிதான் முகத்தில் அடுப்பு எரிந்தாலும் உள்ளே பனிக்கட்டிதான்.இவங்களை மனசார பாராட்டினா கூல் பார்ட்டி ஆகிடுவாங்க.

கருத்துகள் இல்லை: