வெள்ளி, 6 ஏப்ரல், 2018

முனிவர் விட்ட சாபம் ஜாதகத்தில் அறிவது எப்படி..?

முனிவர் விட்ட சாபம்

உங்க முன்னோர்களோ அல்லது தாய் தந்தையோ முனிவர்கள் அல்லது மகான்களிடம் சாபம் வாங்கியிருந்தால் அதை கண்டுபிடிப்பது எப்படி..முனிவர் சாபம் பொல்லாதது..அது நம்மையோ நம் குழந்தைகளையோ வாழ்வில் அதிக போராட்டத்தையோ அல்லது உடல் ரீதியாக ஊனத்தையோ கொடுத்து வாழ்நாள் முழுக்க கண்ணீர் சிந்த வைத்துவிடும்.உடல் அங்க குறைபாடாக இருந்தாலும் கை கால்கள் செயலற்று போக கூடிய பக்கவாத நோய் உட்பட புற்று நோய் போன்ற கடுமையான நோயாக இருந்தாலும் அதன் பிண்ணனியில் முனிவர் சாபம் இருக்கும்..

ஜாதகத்தில் 1,4,7,10 ல் சனி இருந்து அவரை குரு உட்பட சுபர் யாரும் பார்க்காவிடில் இந்த முனிவர் சாபம் இருப்பது உறுதியாகும்

இதனால் ஜாதகருக்கோ அல்லது தாய் தந்தைக்கோ அல்லது மகன் மகளுக்கோ கடுமையான நோய்கலின் தாக்கம் உண்டாகும் குடும்பத்தில் யாருக்கேனும் பக்கவாதம் போன்ற வாதம் சம்பந்தமான நோய்கள் இருக்கலாம்

இது போன்ற கடுமையான தோசங்கள் நீங்க திலக் ஹோமம் செய்வது நல்லது ராமேஸ்வரம் குடும்பத்துடன் சென்று முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் செய்வது நலம் தரும்...








கருத்துகள் இல்லை: