7 ½ சனி தோஷ நிவர்த்தி முடியும் போது செல்ல வேண்டிய திருத்தலம் திருநள்ளாறு மயிலாடுதுறையில் இருந்து 30 கி .மீ
தொலைவில் உள்ளது .
7 1/ 2 சனி ஆரம்பகாலத்தில் செல்ல வேண்டிய ஸ்தலம் குச்சனூர் ஆகும் .
வழித்தடம் : தேனியில் இருந்து 28 .கி.மீ தொலைவில் உள்ளது .
( சின்னமலையிலிருந்து அதிக பஸ் வசதி உண்டு .
அஷ்டமச்சனி பாதிப்பு நீங்க புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியால் இருந்து 5 கி .மீ தூரம் உள்ள எட்டித்தளி ஸ்ரீ அகத்தீசுவரர் ஸ்வாமியை வழிபட அஷ்டமச்சனி , ராகு , கேது தோஷம் ,களத்திர தோஷம் அனைத்தும் நீங்கும் .
சனி தோஷம் அனைத்தும் நீங்க திருநறையூர் சென்று சனீஸ்வர பகவானை சனிக்கிழமையில் 8 முறை வலம் வந்து சனீஸ்வர வழிபாடு செய்தால் சிறப்பு தரும் .
இங்கு சனீஸ்வரருக்கு இரும்புக்கொடி கம்பம் , பலிபீடம் , தனி காக வாகனம் உள்ள ஆலயம் .
வழித்தடம் ; கும்பகோணம் _ திருவாரூர் சாலையில் 10 கி. மீ
தொலைவில் உள்ள நாச்சியார் கோயில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் கோயில்
, சித்த நாத சுவாமி கோயிலுக்கு இடையில் அமைந்துள்ள ஸ்ரீ பர்வதவர்த்தினி உடனுறை ஸ்ரீ இராமநாத சுவாமி ஆலயத்தில் மங்கள சனீஸ்வரர் உள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக