ரிசபம்,துலாம்,கடகம் ராசியினர் பணத்தை தண்ணீராக செலவழித்தாலும் பணம் அருவி போல கொட்டுவதும் இவர்களுக்குதான்..ஒரு சிலருக்கு பண நெருக்கடி இப்போ இருந்தாலும் வசியம் அதிகம் கொண்டவர்கள் இவர்கள்தான்.இவர்களை தேடி பணம் வரும்.உறவுகள் ,நட்புகள் இவர்கள் அன்பை அதிகம் விரும்புவர் காரணம் குழந்தை போன்ற மனசு.தனக்கு எதுவும் வெச்சிக்கிறாரோ இல்லையோ குடும்பத்துக்கும் உறவுக்கும் அதிகம் செலவு செய்வர்.
எல்லோரும் சந்தோசமா இருக்கனும் நல்லா சாப்பிடனும்..ஒரு சின்ன நிகழ்வை கொண்டாட்டமாக மாற்றும் மேஜிக் இவங்க கிட்டதான் இருக்கு.லட்சுமியின் அருள் நிறைந்தவர்கள் அம்மா ,அத்தை,தங்கை,அக்கா பாசம் அதிகம் இவங்களுக்கு கிடைக்கும்..அவர்களிடம் நைசா பேசி காரியம் சாதிப்பதில் வல்லவர்கள்..இவங்க பேசினாலே போதும் அந்தளவு பேச்சில் சுவாரஸ்யம் இருக்கும்.நாளைக்கு என எதுவும் வெச்சிக்கிறாங்களா தெரியாது இன்று சந்தோசமா இருந்தோம் என்ற திருப்தி இவங்ககிட்ட எப்பவும் இருக்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக