ஒருவர் ஜாதகத்தில் 9 , 10
, 11 ல் கேது அமையப்பெற்றால் மருத்துவக்கராகனாகிய சந்திரன் உச்சம் பெற்று அமையப்பெற்றால் மருத்துவக்கல்வி அமைகிறது .
சூரியன் + செவ்வாய் இணைந்து காணப்பட்டாலும் , பரிவர்த்தனை பெற்றாலும் மருத்துவக் கல்வி அமையும்
.
9 மிடம் நன்றாக இருக்க வேண்டும் . குருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் அமைந்தால் “ குரு மங்கள
யோகம் ” ஏற்படும் .
வழக்கறிஞர் படிப்புக்கு வாக்கு ஸ்தானத்தில் குரு , புதன்
, பலம் பெற்று காணப்பட வேண்டும் .
அதோடு 2 , 10 க்கு அதிபதிகள் பரிவர்த்தனை பெற்றால் பெரும் 6 மிடம் பலம்
பெற்று , 6 க்கு அதிபதியும் பலம் பெற்றால் தான் வக்கீல் தொழில் உண்டாகும் .
மற்றும் 1_2
, 2 _ 9 , 2
_ 11 ஆகியோர் பரிவர்த்தனை அடைய வேண்டும் .
கலெக்டர் படிப்பு படிக்கப் 2 . 11
ஆகிய ஸ்தான்ங்களில் செவ்வாய் , சனி ஆட்சி பெற்றுக் காணப்பட்டால் தேர்வில் வெற்றி பெற்று யோகம் பெறுவார் .
செவ்வாய் பலம் பெற்றவர்கள் அறுவை சிகிச்சை செய்யும் டாக்டர்களாக விளங்குவார்கள் . சூரியன் சாரத்தில் செவ்வாய் நின்றாலும் செவ்வாய் சாரத்தில் சூரியன் நின்றாலும் டாக்டர் தொழிலில் சாதனை செய்வார்கள் .
ஒருவருக்கு கல்வி தடைப்பட்டாலும் 2 , 4 , 5
க்கு அதிபதிகள் திசை நடைபெறும் போது தடைபட்ட கல்வியை மீண்டும் தொடரும் நிலை ஏற்படும் .
கோச்சாரம் கெடும் போதும் 7
½ சனி அஷ்டமசனி நடைபெ றும் போது நன்றாக படிக்கும் மாணவர்கள் கல்வியில் குறைந்த மதிப்பெண் பெற்று தோல்வி அடையும் நிலை ஏற்படும் .
புதன் நின்ற வீட்டிற்கு அதிபதி புதனுக்கு 1 . 4 , 7 , 10 போன்ற கேந்திரங்களில் இருந்தால் உயர்ந்த படிப்பு , பட்டப் படிப்பு ஏற்படுகிறது .
மற்றும் 2 மிடத்தில் சனி , ராகு போன்ற கிரகங்கள் அமைந்தால் கல்விக்கு தடை ஏற்படும் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக