வியாழன், 5 ஏப்ரல், 2018

வங்கிப்பணி,மருத்துவகல்வி யாருக்கு கிடைக்கும்..? ஜாதக பலன்கள்


ஒரு மாணவன் மருத்துவம் படிக்க சூரியன்,சந்திரன் கெடாமல் இருப்பது அவசியம்.செவ்வாய் ,குரு மறையாமல் இருப்பது அறுவை சிகிச்சை நிபுணர் ஆக உதவும்.சனி கேந்திரம் திரிகோனத்தில் இருப்பது மக்கள் செல்வாக்கு புகழ் உண்டாக வழி செய்யும்..

வங்கி பணிக்கு குரு ,புதன் ஜாதகத்தில் கெடாமல் இருப்பதும் பலமாக இருப்பதும் அவசியமாகும்..




9 , 10 , 11 , ல்  கேது  அமையப் பெற்றாலும்  , மருத்துவக்கராகன் சந்திரன் உச்சம்  பெற்றாலும் , சூரியன்  , செவ்வாய் , இணைந்து    காணப்பட்டாலும் () பரிவத்தனை  அடைந்தாலும்   மருத்துவக் கல்வி அமையும்.


லக்கனத்திற்கு  2 , 10 ,  ல் செவ்வாய் ,  சனி , போன்றவர்கள்  ஆட்சி  பெர  வேண்டும்.  மற்றும்   செவ்வாய்   9 ல் அமர்ந்து   குரு  பார்வை   பெற்றால் I a s    ஆகலாம் .


 3 , 6 , 10 ,11 , ல்   செவ்வாய்  அமர்ந்து குரு  பார்வை  செய்தால்   அரசு   வேலை  கிடைக்கும்.    10 ல்  குரு  அமைய  பெற்றவர்கள்  வங்கியில்  வேலை   பார்ப்பர்.


 10 ல் சுக்கிரன்  பலம்  பெற்று   சுக்கிரனை  குரு  பகவான்  பார்வை  செய்தால்   கலைத்துறையில்  தொழில்  அமையும். 


 லக்கனாதிபதி  2, 12 ம் வீடுகளின் அதிபர்களுடன்  சம்பந்தம்  பெற்றால் சிறை  செல்லும்  அமைப்பு  உண்டாகும்.

அசுபர்கள்   2 ,12 , ம்  வீடுகளில் அமர்ந்து திசா புத்தி காலங்களில்  சிறை செல்லும்  வாய்ப்பு  ஏற்படும்.

. ஜாதகத்தில்  யோகத்தை  தரக்கூடிய  கிரகங்கள்  வக்கிரம்   அடையக்கூடாது.

. சனி பகவான்  வக்கிரம் அடைந்தால்   காரியத்தடை ,   வியாபார  நட்டம் , காரியம்  தோல்வி  ஏற்படும் 
.
 குரு  பகவான்   வக்ரம்   அடைந்தால் சுபகாரியம்,   எடுக்கும்  காரியம் , வெற்றி , உயர்வு , பெருமை  ஏற்படும் 
.
. செவ்வாய்  வக்ரம்  அடைந்தால் விபத்து , உடல் நலக்குறைவு  சகோதரனுடன்  கருத்து  வேறுபாடு தோன்றும்.

 7 ல் சூரியன்  - சனி  சம்பந்தம்  பெறுவது  நல்லத  அல்ல  ஆயுள்காரகன்  சனி   சூரியனுடன்  சேர்ந்து   அஸ்தங்கம்  அடைந்தால் ஆயுள்  தோஷம்  ஏற்படும்.

 . சகோதர காரகன்  செவ்வாய்  3 ம்  இடத்தில்  இருப்பது   சகோதர  தோஷம்  காட்டும்.  காரகோ  பாவ  நாசன்  விளக்கம்  ஆகும்.

. லக்கனத்திற்கு  ()  சந்திரனுக்கு    8 ல்  ராகுவும்   () 12 ல்  சனி  பகவான் அமரக்  கூடாது .

. சந்திரன்   6 ,8 ,ல்  இருப்பதும்  நன்றல்ல .

. பிறப்பின்  கால திசை  கிரகம்   லக்கினத்திற்கு   6 ,8 , 12 , க்கு  உடையவராகி  திசையை  தொடங்காமல்  இருப்பது  நல்லது. , 

 லக்கனாதிபதி 5 , 9 ,  க்குடையவர் சம்பந்தம்  பெற்று எங்கு இருப்பினும்  யோகவான்  ஆவார்


கருத்துகள் இல்லை: