சனி, 1 அக்டோபர், 2011

உங்கள் ஜாதகப்படி வணங்க வேண்டிய தெய்வம்

உங்கள் ஜாதகப்படி வணங்க வேண்டிய தெய்வம்;
ஜோசியம்,ராசிபலன் அடிப்படியில்தான் தெய்வ சக்தியும் இயங்குகிறது.கிரகம் சரியில்ல..அவன் இப்ப கஷ்டப்படும் காலம்..அதுக்கு அப்புறம் அவனுக்கு நல்ல புத்தி நான் கொடுப்பேன் என சாமியே கிரகத்தை பார்த்து எஸ்கேப் ஆகிறது.சபரிமலை போனாலும்,திருப்பதி போனாலும் உடல் பலம் தான் முதலில் நமக்கு கிடைக்கும்.அதன் பின் மூலிகை குணம்...அதனால் நம் மனதுக்கு உண்டாக்கும் மன பலம்..அதன் பின் மனதில் தெளிவு..இதனால் தெளிவான பேச்சும்,வாழ்வும் இதுதான் கிடைக்கும் பலன்...அதன் பின் விசேஷ சக்திகள் எல்லாம் கிடைக்க செய்ய உங்கள் ஜாதகப்படி வணங்க வேண்டிய தெய்வம் கண்டறிந்து வழிபடுங்கள்.


5 ஆம் பாவம்,9 ஆம் பாவங்கள் தான் தெய்வ ரகசியம்,சாபம்,முன்னோர் சங்கதி பற்றியெல்லாம் சொல்லுமிடம்...இதை பத்தி கணிச்சுதான் உங்கப்பன் சாபம் பெற்ற இடம் வாங்குனான் அதனால் உன் குலமே திகார் சிறையில் இருக்கு என சோதிடம் சொல்கிறோம்.

பல சாபம் பெற்ற இடங்களை வாங்கி குவித்ததால்தான் வீரபாண்டி ஆறுமுகமும்,நேருவும் சிறைகளில் வாட வேண்டிய நிலை உண்டானது.அதனால் நிலம் வாங்கும்போது கவனம் தேவை.

ஜாதகப்படி வணங்க வேண்டிய தெய்வம் பற்றி பார்ப்போம்;


உங்கள் ஜாதகத்தில் ஐந்தாம் பாவத்தில் சூரியன் இருந்தாலோ பர்த்தாலோ -சிவபெருமானை வணங்கினால் நல்ல பலன் கிடைக்கும்.

சந்திரனாக இருந்தால்,பார்த்தால்;சக்தியை வழிபாடு செய்யலாம்,பைரவர் வழிபாடு செய்யணும்.

செவ்வாயாக இருந்தால்;முருகனை வழிபடுங்கள்.

சுக்கிரனாக இருந்தால்;அம்பாளை,சக்தியை துர்க்கையை,வடக்கு பார்த்த காளியை,மகாலட்சுமியை வணங்கலாம்..

சனியாக இருந்தால்;ஐயப்பனை,அய்யனாரை,கருப்பரை,மாடனை வணங்கலாம்.

குருவாக இருந்தால்;குருவாயூர் கிருஷ்ணன்,திருச்செந்தூர் முருகன்,தட்சிணாமூர்த்தி


குறிப்பு;பல கிரகங்கள் பார்த்தால் ,இருந்தால் எந்த சாமியை கும்பிடுவது என வெங்கடேச குருக்கள் கேட்டார்.எந்த கிரகம் பலமாக இருக்கிறதோ அந்த கடவுளை வழிபட வேண்டியதுதான்.சூரியனும் சுக்கிரனும் இருந்தால் சிவனையும்,சக்தியையும் வழிபடலாம்...சனியும் சுக்கிரனும் இருந்தால் ஐயப்பனையும்,மகாலட்சுமியையும் வணங்கலாம்..இப்போதுதான் எல்லோரும் எல்லா சாமியையும் கும்பிடுறாங்க.இந்துக்கள் சிலர் முஸ்லீம் தர்க்காக்களை கூட விட்டு வைப்பதில்லை.மனிதருக்கு அவ்வளவு துன்பம்.முன்பெல்லாம் சிவன்னா சிவனை தவிர எந்த கடவுளையும் கும்பிட மாட்டார்களாம்...நான் பெருமாளை மட்டுமே இஷ்ட தெய்வமாக வழிபடுகிறேன்.

1 கருத்து:

gvsivam சொன்னது…

விளக்கமில்லாத பதிவு.இன்னும் விளக்கமாகவே கூறலாமே,
உதாரணமாக
5ல் சூரியன் இருந்தாலோ பார்த்தாலோ சிவனை வழிபடலாம் என்கிறீர்கள்.சரி...ஆனால் 5ல் சூரியன் இருந்து 5ஐ சுக்கிரன் பார்த்தால்
1.சூரியன் இருப்பதால் சிவனை வழிபடுவதா?
2.சுக்கிரன் பார்ப்பதால் லக்ஷ்மியை வழிபடுவதா?
3.அல்லது இரண்டையும் வழிபடலாம் என்கிறீர்களா?

இதுபோல் எந்த பதிவாக இருந்தாலும் முழுமையான விளக்கம் அளியுங்கள்.