ஏர்செல் ,ஏர்டெல் ரீசார்ஜ் கூப்பன்கள்,ஆட் ஆன் கார்டுகள் விற்பவர்கள் தான் ரீட்டீலர்கள் என்பார்கள்..அதான் நாம கடையில் போய் ரீசார்ஜ் கார்டு வாங்குவோமே அவங்கதான்...
ஒரு பி.எஸ்.என்.எல் 55 ரூபாய் ரீசார்ஜ் கார்டு ஈரோட்டில் இரண்டு ரூபாய் அதிகம் வைத்து விற்கிறார்கள்..இதுவே கரூரில் 5 ரூபாய் செர்த்து 60 ரூபாயாக கொள்ளையடிக்கிறார்கள்..ஒரு நாளைக்கு எத்தனையோ கார்டுகள் ஒரே கடையில் விற்கப்படுகின்றன..அப்படி பார்த்தா ஒரு நாளைக்கு இவனுக கொள்ளையடிக்கும் பணம் எவ்வளவுன்னு பருங்க..பிஸியான கடைகள் எல்லாம் ஒரு நாளைக்கு 5,000 ..பத்தாயிரம் என கார்டுகள் விற்கிறார்கள்..கார்டுக்கு அஞ்சு ரூபாய் அதிகம் வாங்கினா லாபம் பாருங்க..
ஏன் இப்படி மேக்ஸிமம் விலைக்கு மேல விக்குறன்னு கேட்டா இந்த ஏர்டெல் கம்பெனிகாரன் எங்களுக்கு கமிசனே தர மாட்டேங்கிறான்..அவன் மட்டும் அந்த பட்டனை அமுக்கு இதை அமுக்குன்னு சொல்லி ஒரு நாளைக்கு எவ்வளவோ கொள்ளை அடிக்கிறான்..ஆனா எங்களுக்கு ஒரு ரூபா சேர்த்து கமிசன் கொடுன்னா முடியாதுன்றான்..எல்லா கம்பெனியும் அப்படிட்ய்ஹ்தான் அதான் வாங்குறவன்கிட்டியே சேர்த்து வாங்குறோம்னு சொல்றாய்ங்க..என்னய்யா அநியாயமா இருக்குன்னு கலெக்டர் கிட்ட ஈரோட்டு மக்கள் புகார் கொடுத்தோம்..அவரும் எச்சரிக்கை செஞ்சார்...அடுத்த வாரமே அந்த கலெக்டரை வேறு ஊருக்கு மாத்திட்டாங்க இந்தம்மா...இது எதுக்குத்தான் கலெக்டரை எல்லாம் பந்தாடுதோ தெரியல..கரூர் நிலைமைதான் படு மோசம்.மத்த ஊர்களில் எல்லாம் நிலமை எப்படியோ..இப்ப ரீசார்ஜ் கார்டு விக்கிறவன் எல்லாம் ஒண்ணு சேர்ந்து சங்கம் ஆரம்பிச்சு இதை மூரைப்படி ‘’ செய்றானுக..யாரும் கேள்வி கேட்க கூடாதுல்ல..
7 கருத்துகள்:
வேதனையான விடயம் பாஸ்,
வாடிக்கையாளர்களிடம் பணத்தினைச் சூறையாடும் இம் மாதிரியான நபர்களைத் திருத்தும் நோக்கில் கவுன்சிலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் பாஸ்.
////கலெக்டர் கிட்ட ஈரோட்டு மக்கள் புகார் கொடுத்தோம்..அவரும் எச்சரிக்கை செஞ்சார்...அடுத்த வாரமே அந்த கலெக்டரை வேறு ஊருக்கு மாத்திட்டாங்க இந்தம்மா...இது எதுக்குத்தான் கலெக்டரை எல்லாம் பந்தாடுதோ தெரியல..////
நீங்க தானே அவங்களுக்கு வக்காலத்து வாங்கனீங்க. இப்பதானே ஆரம்பிச்சிருக்கீங்க இனிமேல் போகப் போகப் பாருங்க.
நீங்க FULL TT போடுங்க. உங்களுக்கு தானே லாபம்.
மணி அதுக்காக நான் எல்லாத்துக்கும் வக்காலத்து வாங்க முடியுமா..?
அக்கிரமம்.
I use online recharge.So no extra money :)
ஏர் டெல், ஏர் செல், கம்பெனி அவர்களுக்கு கமிஷன் தரவில்லை என்றால், அவர்கள் அந்த பொருட்களுக்கு ரீ டீலர்களாக இருக்க அவசியமில்லை. கடைகாரர்களுக்கு கம்பெனி கமிஷனும் வேண்டும் மக்களின் பணமும் வேண்டும்.
இதற்க்கு பணம், நேரம் விரையமானாலும் பராவாயில்லை, சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை அந்த கம்பெனி மீதும் ரீ டீலர்கள் மீதும் எடுக்க வேண்டும். வாடிக்கையாளர்களின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டும்
கருத்துரையிடுக