ஞாயிறு, 2 அக்டோபர், 2011

சனி பெயர்ச்சி பலன்கள் 2012 ;மேசம்

சனி பெயர்ச்சி பலன்கள் 2012 ;மேசம்

ஐப்பசி மாதம் 15 ஆம் நாள் 1.11.2011 செவ்வாய்க்கிழமை காலை 10.12 மணிக்கு சனி பகவான் கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு திருக்கணிதம் பஞ்சாங்கப்படி பெயர்ச்சியாகிறார்.

இதன்படி 12 ராசிகளுக்கும் உண்டாகும் பலன்களை எழுதி வருகிறது.நமது தளம் ஹேக் செய்யப்பட்டதில் மேசம் ராசிக்கு உண்டான பலன்கள் விடுபட்டதாக வாசகர்கள் குறிப்பிட்டதை தொடர்ந்து மீண்டும் ஒரு முறை போஸ்ட் செய்யப்படுகிறது.

மேசம் ராசி செவ்வாய் அதிபதி ராசி.செவ்வாய்க்கும் சனிக்கும் ஏழாம்பொருத்தம்.ஏழரை சனி,அஷ்டம சனி வந்தால் அதிகம் பாதிக்கப்படும் ராசிகளில் மேசமும் ஒன்று.

தற்சமயம் வரும் சனிப்பெயர்ச்சியில் மேசம் ராசிக்கு கெடுபலன்கள் பெரிதாக உண்டாகாது.காரணம் மேசத்துக்கு சனி 7 ஆம் இடத்துக்கு வருகிறார் ..இருப்பினும் களத்திர ஸ்தானத்துக்கு வருவதால் அந்த காரகத்துவம் பாதிக்கத்தானே செய்யும்..? மனைவி ஸ்தானம்,கூட்டாளி ஸ்தானம் 7.அதுவே பத்துக்கு பத்தாமிடமாகவும் வருவதால் தொழில் ஸ்தானமும் ஆகி விடுகிறது.

ஆக,சனிபெயர்ச்சியால் மேச ராசிக்கு மனைவியால் வீண் விரயங்களும்,குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகளும் உண்டாகலாம்..தொழில் கூட்டாளிகளுடன் கவனமுடன் இருக்க வேண்டும்.நண்பர்களால் ஏமாற்றம் உண்டாகலாம்...ஜாதகத்தில் சனி திசை,கேது திசை,சந்திர திசை நடப்பவர்களுக்கு பாதிப்பு சற்று அதிகம் காணப்படலாம்..

மேசம் ராசியினர் காலப்புருச லக்னப்படி முதல் ராசிக்கு சொந்தக்காரர்கள்.சிவனை ஞாயிறு தோறும் வழிபடுவது,ஆற்றோரம் இருக்கும் சிவனுக்கு 9 வகையான அபிசேகம் செய்விப்பது மிக்க நன்மை தரும்..குறிப்பாக அசுவினியில் பிறந்தவர்கள் இதை செய்வதால் சொந்த வீடு கனவு நிறைவேறும்.

பரணியில் பிறந்தவர்களுக்கு பல வீடுகள் வாங்கும் யோகம் உண்டு.அவர்கள் இந்த சிவ பூஜையை முறைப்படி செய்து வந்தால் இன்னும் சிறப்பு.குறிப்பாக நீங்கள் பிறந்த நட்சத்திரம் அன்று இதை செய்ய வேண்டும்.

6 கருத்துகள்:

'பரிவை' சே.குமார் சொன்னது…

ம்... சனியின் பார்வை எல்லோருக்கும் நலமாய் அமையட்டும்.

பெயரில்லா சொன்னது…

தனுசு ராசி பலன்களை எழுதுங்கள் ... நன்றி!

பெயரில்லா சொன்னது…

Rishaba ராசி பலன்களை எழுதுங்கள் ... நன்றி!

wathani Jeya சொன்னது…

கும்பம், கன்னி, மீனம் ஆகிய ராசிகளுக்கு எழுதவும்...... wel come you
wathani

wathani Jeya சொன்னது…

wel come you
please wtrite
kumbam, meenanam, kanni rhari

wathani

Inquiring Mind சொன்னது…

மேஷத்தின் ராசியதிபதி செவ்வாய்.. அதற்குகந்த கடவுள் முருகன் என்று கேள்விபட்டிருக்கிறேன்.. எந்த கடவுளை பிரதானமாக கும்பிடுவது?