sani peyarchi 2012 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
sani peyarchi 2012 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 7 டிசம்பர், 2011

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2011-2014 ;ஏழரை சனி பயம்

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2011-2014

சனிப் பெயர்ச்சி திருக்கணிதம் அடிப்படையில் 15.11.2011 அன்று நடைபெற்றாலும் வாக்கிய பஞ்சாங்கப்படிதான் திருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் கடைபிடிக்கப்படுகிறது.அதாவது வரும் 21.12.2011 அன்று தமிழ்கத்தின் அனைத்து சனி பகவான் ஆலயத்திலும் வழிபாடுகள்,ஹோம பூஜைகள் நடத்த இருக்கிறார்கள்;

சனிப்ரீதி ஹோம பூஜையில் கலந்துகொள்ளலாமா என கேட்டால் தாராளமாக கலந்து கொள்ளலாம்.சனீஸ்வரர் அம்சமான பொருட்களால் செய்யப்படும் ஹோமங்களால் நம் தோசங்கள் சிறிதளவாவது குறையும் என்றால் கலந்து கொள்வது தவறில்லை.

சனீஸ்வரர் கண்டு நாம் பயப்பட வேண்டியதில்லை.சனி யால் கெட்டவர்களை விட வாழ்ந்தவர்கள் அதிகம் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.சுக்கிர திசையால் பல யோகங்களையும்,அதிர்ஷ்டத்தையும் பெற்று மிக சிறிய வயதில் சேலத்தில் பிரபல தொழில் அதிபர் ஆகிவிட்ட எனது நெடுநாள் வாடிக்கையாளர் அவர்.அவருக்கு நிறைய அதிர்ஷ்டத்தை கொடுத்தது அவர் ஜாதகப்படி நடக்கும் சுக்கிர திசைதான்.அது இன்னும் பல வருடங்களுக்கு அவருக்கு அதிர்ஷ்டத்தை தர இருக்கிறது.செல்வம்,புகழ் தர இருக்கிறது.ஆனால் அவர் ராசி விருச்சிகம் என்பதால் அவரை சுற்றி இருப்பவர்கள் இனி அவ்வளவுதான் என்ற ரீதியில் பயமுறுத்த குழம்பி போய்விட்டார்.என்னிடம் புலம்ப ஆரம்பித்துவிட்டார்.அவருக்கு நான் சொல்வது இதுதான்.அவர் ஜாதகத்தில் லக்கினத்துக்கு யோகமான சுக்கிர திசை மிக வலிமையுடன் சிறப்பாக திசை நடத்தி வருகிறது.எனவே எந்த பாதிப்பும் தொழில் ரீதியாக இல்லை.உங்கள் அத்தனை உழைப்பும் வீணாகிவிடாது.தொழில் ரீதியாக இன்னும் கடுமையாக உழைத்தும் இன்னும் அடுத்த கட்டத்துக்கு செல்வீர்கள்.உடல் ஆரோக்யம் கொஞ்சம் பாதிக்கலாம்..குடும்ப ரீதியாக சில சிக்கல்கள்,பண விரயம் ஆகலாம்..அதற்காக முற்றிலும் நீங்கள் அனைத்திலும் நஷ்டம் ஆகி விடுவீர்கள் என அர்த்தம் இல்லை என சொன்னேன்.

எனவே ஏழரை சனியாக இருந்தாலும்,அஷ்டம சனியாக இருந்தாலும் சனிப் பெயர்ச்சி ஆகிவிட்டது.வழக்கம் போல நீங்கள் செயல்படுங்கள்.வீணாக நீங்களும் பயந்து பிறரையும் பயமுறுத்த வேண்டாம்...எல்லோருக்கும் ஒரே மாதிரியான பலன்கள் நடப்பதில்லை.

பலவீனமான திசை அதாவது 6,8,12 க்குடைய்வன் திசை சனி திசை,சந்திர,சூரிய,செவ்வாய் திசை,ராகு,கேது திசை நடப்பவர்கள் மாத்திரம் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

தமிழ்க முதல்வர் ஜெயலலிதா பல கோயில்கள் புனரமைக்க பல கோடி ஒதுக்கியிருப்பதும்,ஊனமுற்றோருக்கு சிறப்பு பேருந்து அறிவிப்பும்,அணையில் நீர் திறப்பும் என சனிப்பெயர்ச்சிக்குண்டான பரிகாரங்களை வேகமாக செயல்படுத்தி வருகிறார்.அவர் ராசிக்கு அவர் செய்து கொள்கிறார்.

கொட நாட்டில் சிறப்பு சனிப்பெயர்ச்சி யாகம் மிக சிறப்பாக 21.12.2011 அன்று நடக்கப்போகிறதாம்....இதெற்கெல்லாம் காரணம் அவரது தெளிவான ஜோதிட நம்பிக்கை.

அன்னதானம்,உடை தானம்,பெரியோர்களை மதித்தல் ,என சம்பாதிப்பதில் ஓரளவு தான தர்மம் செய்து வாருங்கள் அது மட்டுமே உங்களை காக்கும்.!!

செவ்வாய், 8 நவம்பர், 2011

திருநள்ளாறு சனிபகவான் வரலாறு tirunallar temple history

திருநள்ளாறு சனிபகவான் வரலாறு;



திருநள்ளார் சனிஸ்வரர் ஆலயத்தில் சனிபெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கப்படி,21.12.2011 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.திருக்கணிதபடி சனி பெயர தொடங்கிவிட்டது 1.11.2011.முழுமையான சனி பெயர்ச்சி 15.11.2011 காலை 10.12 ஆகும்.


திருநள்ளாறு கோயிலுக்கு ஒரு காலத்தில் ஆதிபுரி என்பது பெயராகும்.அங்குள்ள சிவனை வழிபட்டு பிரம்மா பரிகாரம் பெற்றதாக ஸ்தலபுராண வரலாறு சொல்கிறது.பிரம்மதேவர் பூஜித்த சிவனுக்கு தர்ப்பாரண்யேஸ்வரர் ‘’ என்பது பெயராகும்.இங்குள்ள ஸ்தல விருட்சம் தர்ப்பை ஆகும்.

இங்குள்ள லிங்கம் சுயம்புவாக தோன்றியதாகும்.முசுகுந்த சக்கரவர்த்தி ஆண்ட காலத்தில் அந்த ஆலயத்திற்கு வந்து வழிபாடு செய்துள்ளார்.இந்த புண்ணிய ஸ்தலத்திற்கு நளவிடங்கர்’’நளேஸ்வரம்’என்று பற்பல பெயரும் உண்டு.நளமகாராஜா கலிபுருடனின் அம்சமான சனி பகவானால் பல்வேறு இடையூறுகளுக்கு ஆளாகி,இறுதியில் இக்கோயிலுக்கு வந்து நளதீர்த்தத்தில் நீராடியபின் கலி நீங்கி சகல சம்பத்துகளையும் பெற்றான்.

இங்குள்ள தர்ப்பாராண்யேஸ்வரர் விக்ரகத்தின் கீழ் சனிபகவானால் எழுதி(முனிவர்களாகவும் இருக்கலாம்)பிரதிஷ்டை செய்யப்பட்ட இயந்திரமொன்று இருக்கிறது.இதுவே இந்த திருத்தலத்தின் பரிகார மகிமைக்கு காரணமாகும்.

கலிபுருடனாகிய சனிபகவான் நளமன்னன் முன் தோன்றி,நீ என்னிடம் விரும்பும் வரத்தை கேட்டு பெற்றுக்கொள்வாயாக’’என்று கேட்க,நளன் உனது ஆட்சி நடக்கும் காலத்தில் என் வரலாற்றைக் கேட்டாரை நீ அடையாமல் இருப்பாயாக’’ என்று வேண்டினான்.இதனை நளவெண்பா ,கலி நீங்கு காண்டத்தில்,

‘’உன் சரிதம் சொல்ல உலகாளும் காலத்தும்
மின் சொரியும் வேலாய்!மிக விரும்பி-என் சரிதம்
கேட்டாரைநீயடையேல் என்றாந்கிளர்மணிப்பூண்
வாட்டானை மன்னன் மதித்து’’

என்று கூறுகிறது.எனவே சனிபகவானின் பிடியில் சிக்கியோர் அக்காலத்தில் நளமன்னனின் சரித்திரத்தை வாசிப்பது சிறந்த பரிகாரமாகும்.என அக்க்காலம் முதல் நம் பெரியோர் சொல்லி வந்திருக்கின்றனர்.இதில் உள்ள சூட்சுமம் என்னவெனில்,இவனை விட நாம் கஷ்டப்படவில்லை என தைரியம் வரும் அளவுக்கு கஷ்டத்தை நளன் பட்டதுதான்.

சனி தனது சஞ்சாரத்தின் போது ரோகிணி சாரத்தில் நுழையும்போது உலகம் பெரும் அழிவுகளை சந்திக்கும் என்றும்,போர்,வறுமை,வெள்ளம்,பசி,பட்டினி என மக்கள் துன்புறுவர் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

வராஹிமிரர் தனது ப்ருஹத் சம்ஹிதை நூலின் 47 வது அத்தியாயம் 14 வது சுலோகத்தில் கீழ்க்கண்டவாறு சொல்கிறார்.

’’ரோஹிணி சகடமர்க்க நந்தனோயதி
பிநத்திருதிரோ(அ)தவாசிகி!
கிம்வதாமியத நிஷ்டசாகரே
ஜகத் சேமுபயதி ஸ்ங்க்சயம்’’

இன்னொரு பாடலில் பிரளய காலத்துக்கு ஒப்பானதொரு நிலையை உலகம் சந்திக்கும்’’என்ரு கூறுகிறது.மேலும் இக்கருத்தை காஸ்யபர்,பிரம்மகுப்தர் ஆகியோரும் ஒப்புக்கொள்கின்றனர்.

சனி தன் தந்தை சூரியனை விடவும் பலமானவனாக மாற வேண்டும் என்பதற்காக காசியில் லிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டு அதன்படி சனீஸ்வரர் என் பெயர் பெற்றார் என புராணம் சொல்கிறது.அதன்படி நாமும் காசி விஸ்வநாதரை வழிபட்டால் சனி தோசத்துக்கு சிறந்த பரிகாரமாக அமையும்.


திருநள்ளாறு சென்று அங்குள்ள தீர்த்தகட்டங்களில் முதலில் நீராட வேண்டும்.

1.பிரம்ம தீர்த்தம்
2.வாணிதீர்த்தம்
3.அன்ன தீர்த்தம்
4.அகத்திய தீர்த்தம்
5.நளதீர்த்தம்
6.நளகூப தீர்த்தம்

இதில் நீராட முடியாதவர் நள தீர்த்தத்தில் மட்டுமாவது நீராடலாம்.முதலில் குளக்கரையில் உள்ள வினாயகரை மூன்று முறை வலம் வந்து வழிபட்டு,குளத்தை உருவாக்கியோருக்கு நன்றி சொல்லிவிட்டு,தீர்த்தத்தை மூன்று முறை தலையில் தெளித்துவிட்டு,அதன்பின் கறுப்பு நிற வஸ்திரம் கட்டிக்கொண்டு,உடலில் நல்லெண்ணெய் தேய்த்துக்கொண்டு,மேற்கு பார்த்து நின்று குளிக்கலாம்.தலையில் நீலோத்பவ மலரை வைத்து மூழ்குவது இன்னும் சிறப்பு.அதன்பின் புத்தாடை அணிந்து,கறுப்பு நிற வஸ்திரங்களையும்,எள்,எள்சாதம்,முதலியவற்றை தானம் செய்வது விசேஷமாகும்.

நீராடும்போது இந்த மந்திரத்தை சொன்னால் இன்னும் விசேஷம்.

‘’அஷ்ய ஸ்ரீ சனீஸ்வர கிரஹ
மந்த்ரஷ்ய;
அகஸ்த்ய ரிஷி காயத்ரி சந்த;
சனிச்சர தேவதோ
மம கிரஹ பீடா நிவாரணார்த்தே
சனைச்சர கிரக சுப பல
சித்தியர்த்தே ஜெபே விநியோக’’

கடுமையாக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கறுப்பு நிற பசுவை தானம் செய்வது சிறந்த பரிகாரம்.

ஏழரை சனி,அஷ்டம சனி,அர்த்தாஷ்டம சனி போன்றவை நடக்கும் ராசியினர் நவகிரஹ ஹோமம் வீட்டில் செய்வது நல்ல பரிகாரம்.


சனி, 29 அக்டோபர், 2011

சனி பெயர்ச்சி பலன்கள் 2011-2014 தனுசு

சனி பெயர்ச்சி பலன்கள் 2011-2014; நல்ல நேரம் சதீஷ்குமார்

சனி பெயர்ச்சி 15.11.2011 அன்று செவ்வாய் கிழமை காலை 10.12 மணிக்கு உண்டாகிறது..இது முழுமையான பெயர்ச்சி நாள் ஆகும்.ஏற்கனவே நான் குறித்திருந்த நாள் 1.11.2011 சனி நகர துவங்கும் நாள் அதாவது சனி வளையம் ஆகும்.

சனி ஒரு ராசியில் இரண்டரை வருடம் என்ற விகிதத்தில் 12 ராசிகளையும் ஒருமுறை சுற்றி வருவதற்கு 30 வருடங்கள் ஆகும்.அந்த 30 ஆண்டுகளில் பொதுவாக மனித வாழ்க்கையிலும் சரி;வீட்டிலும் ,நாட்டிலும் அரசியல்,ஆன்மீகம்,சமுதாயம்,தொழில்துறை என எல்லாவற்றிலும் ஏதாவது ஒரு மாற்றம் ஏற்படுவது இயல்பு;அதனால்தான் முப்பது வருடத்துக்கு மேல் வாழ்ந்தவனும் இல்லை.முப்பது வருடத்துக்கு மேல் வீழ்ந்தவனும் இல்லை என்பார்கள்.உதாரணம் எம்.ஜி.ஆர்,ரஜினி..இவர்கள் 30 வயது வரை வறுமையில் உணவுக்கே வழியில்லா நிலையில் வாழ்ந்தவர்கள்.ரஜினி கண்டக்டராக இருந்தாலும் சினிமாவில் நடிப்பதற்காக சென்னையில் கஷ்டப்பட்டவர்தானே,அதுபோல..30 வயதுவரை சொகுசாக வாழ்ந்துவிட்டு வாழ்ந்து கெட்ட குடும்பமாய் கஷ்டப்பட்டவ்ர்களும் உண்டு.

அவரவர் ராசிக்கு (சந்திரன் நிற்கும் இடம் ராசி) 12ல் சனி வரும்காலம் ஏழரை சனி காலம் ஆகும்.சந்திரனுக்கு எட்டில் சனி வரும் காலம் அஷ்டம சனி ஆகும்.இவை இரண்டும் மனிதனுக்கு அதிக கஷ்டம்,துன்பம்,மந்தம் தரும் என்பதால் ஏழரை சனி என்றாலே எல்லோருக்கும் பயம் வந்துவிடும்.ஜோதிடம் பார்க்க போனால் உனக்கு ஏழரை அதான் இப்படி கஷ்டப்படுற என சொல்லிவிட்டார்கள் என்பர்.

தனுசு ராசிக்கு இந்த சனி பெயர்ச்சி என்ன செய்யும்..? என பார்ப்போம்..மற்ற ராசிக்கான பலன்கள் ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.அதை படிக்காதவர்கள் நமது நல்ல நேரம் ப்ளாக்கில் தேடி படிக்கலாம்.

தனுசு என்றால் வில்லில் இருந்து புறப்பட்ட அம்பைப்போல் எதிலும் வேகமானவர்கள்னு அர்த்தம்.தன ஸ்தானாதிபதி சனி லாபஸ்தானத்தில் உச்சம் பெறுகிறார்.எனவே தன லாபங்களுக்கு குறைவிருக்காது.11 ஆம் இடத்தில் சனி இருக்கும் வரை நீங்க யோககாரர்தான்.

.இது மிக யோகமான காலமாகும்.தொழிலில் நல்ல முன்னேற்றம்,அதிக வருமானம்,குடும்பத்தில் மகிழ்ச்சி,என கலக்க போறீங்க.இதுவரை இருந்து வந்த கஷ்ட பலன்கள் மாறி ஏற்றமான காலமாக இது அமையும்.வராத பணம் திரும்ப கிடைக்கும்.பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.திருமண முயற்சிகள் கைகூடும்.பூர்வீக சொத்துகளினால் லாபம் உண்டாகும்.உங்களுக்கு இதுவரை இருந்து வந்த பண பிரச்சினைகளும் தீரும்.

11ல் சனி மூத்த சகோதரர்களுக்கு பாதிப்பையும் கொடுக்கும்.நிலம்,வீடு வாங்கும் யோகமும் உண்டாகும்.

உங்கள் ராசிக்கு யோகம் தரும் பரிகாரம்;ஏழைகளுக்கு ஆடை தானம் செய்வது.

வங்கித்துறை,கல்விதுறை,ஆன்மீக துறை,நிதி துறையில் இருக்கும் இந்த ராசியினருக்கு வரும் நவம்பர் 1 முதல் தொழிலில் படிப்படியாக முன்னேற்றம் உண்டாகும்.மதிப்பு மரியாதை புகழ் உண்டாகும்.எதிர்கால வாழ்விற்காக நிரந்தர சேமிப்பு உண்டாகும்.இழந்த பொருள் திரும்ப கிடைக்கும்.குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்த இது நல்ல நேரம்.ராசியில் இருந்து சனி 1,5,8 ஆமிடங்களை பார்ப்பதால் பூர்வபுண்ணியத்தால் உங்கள் தடைகள் எல்லாம் விலகி நீங்கள் உயர்ந்த நிலையை அடைய இருக்கிரீர்கள்.உங்கள் மனதில் உள்ள பெரிய திட்டங்களை நிறைவேற்றும் காலம் இது.

சனி வக்ரம்;

15.2.2012 -2.8.2012
26.3.2013-15.8.2013
10.4.2014-28.8.2014

இக்கலாங்களில் நீங்கள் கவனமுடன் செயல்படுங்கள்.தொழிலில் திடீர் சிக்கல்கள் உண்டாகும் காலம் இது.பொறுமையுடன் செயல்பட வேண்டும்.


புதன், 5 அக்டோபர், 2011

சனி பெயர்ச்சி பலன்கள் 2012 ;மீனம்

சனி பெயர்ச்சி பலன்கள் 2012 ;மீனம்

கர வருடம் ஐப்பசி 15 ஆம் நாள் 1.1.2011 அன்று காலை 10 மணிக்கு சனி கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.இதனால் ஏற்படும் பலன்களை ஒவ்வொரு ராசிக்கும் எழுதி வருகிரொம்.அந்த வரிசையில் மீன ராசி.


பூரட்டாதி 4 ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி,ரேவதி நட்சத்திரங்களை உடைய மீனம் ராசி அன்பர்களே.குருவின் ராசியை பெற்ற நீங்கள் குருவின் முழு ஆசியை பெற்றவர்.இயற்கையிலேயே தெய்வ சக்தி நிரம்பியவர்.உங்கள் கருத்துக்கள் தெளிவாக இருக்கும்.சுய தொழில்,அரசு,ஆன்மீகம்,ஷேர் மார்க்கெட்,கமிசன்,ஆசிரியர்,பேச்சாளர் போன்ற துறைகளில் ஜொலித்து கொண்டிருப்பவர் நீங்கள்.

செவ்வாய், 4 அக்டோபர், 2011

சனி பெயர்ச்சி பலன்கள் 2012 ;கும்பம்

சனி பெயர்ச்சி கர வருடம் ஐப்பசி 15 ஆம் நாள் 1.11.2011 காலை 10 மணிக்கு கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு சனி பெயர்ச்சியாகிறார்.அது சமயம் எந்தெந்த ராசிக்கு என்ன நன்மை தீமை என பார்த்து வருகிறோம்.அதில் இன்று கும்பம் ராசி.


கும்பம் ராசிக்கு ராசிக்குறிய படமாக கலசம் படம் போட்டிருப்பார்கள்..காரணம் இவர்கள் மங்களகரமானவர்கள்.பல கோயில் கும்பாபிசேகம்,ஊர் நல்ல காரியங்களில் இவர்கள் முக்கியஸ்தர்களாக இருப்பதை பார்க்கலாம்...

ஞாயிறு, 2 அக்டோபர், 2011

சனி பெயர்ச்சி பலன்கள் 2012 ;மேசம்

சனி பெயர்ச்சி பலன்கள் 2012 ;மேசம்

ஐப்பசி மாதம் 15 ஆம் நாள் 1.11.2011 செவ்வாய்க்கிழமை காலை 10.12 மணிக்கு சனி பகவான் கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு திருக்கணிதம் பஞ்சாங்கப்படி பெயர்ச்சியாகிறார்.

இதன்படி 12 ராசிகளுக்கும் உண்டாகும் பலன்களை எழுதி வருகிறது.நமது தளம் ஹேக் செய்யப்பட்டதில் மேசம் ராசிக்கு உண்டான பலன்கள் விடுபட்டதாக வாசகர்கள் குறிப்பிட்டதை தொடர்ந்து மீண்டும் ஒரு முறை போஸ்ட் செய்யப்படுகிறது.

மேசம் ராசி செவ்வாய் அதிபதி ராசி.செவ்வாய்க்கும் சனிக்கும் ஏழாம்பொருத்தம்.ஏழரை சனி,அஷ்டம சனி வந்தால் அதிகம் பாதிக்கப்படும் ராசிகளில் மேசமும் ஒன்று.

வெள்ளி, 23 செப்டம்பர், 2011

குடும்ப ஜோதிடம் astrology book

குடும்ப ஜோதிடம்/சனி பெயர்ச்சி பலன்கள்/வாஸ்து/ராசிபலன்/கைரேகை/ஜோதிடம்/ஜாதகம்;

குடும்ப ஜோதிடம்;

பத்து வருடங்களுக்கு முன்பு ஜோதிடம் கற்றுக்கொள்ள ஆர்வம் வந்தபோது கொடுமுடியில் ஜோதிடம் பார்ப்பதில் பிரபலமாக இருந்தவரிடம் சென்று எனக்கு தினசரி ஒரு மணி நெரம் ஜோசியம் சொல்லிக்கொடுங்க..நான் கத்துக்கிறேன்..அதுக்குண்டான கட்டம் கொடுத்துவிடுகிறேன்..என கேட்டபோது அவர்..தம்பி..லிஃப்கோ பதிப்பகம் வெளியிட்ட குடும்ப ஜோதிடம் புக் வாங்கி நல்லா மனப்பாடம் பண்ணு...நிறைய ஜாதகம் வாங்கி நீ படிச்சதையும் ஜாதகத்தையும் ஒப்பிட்டு பார்த்து,அவங்க நடைமுறை வாழ்வையும் பார்த்து,இதில் சொல்லப்பட்ட விசயம் நடைமுறையில் ஒத்து வருதான்னு ஆராய்ச்சி பண்ணு.ஜோசியத்துல உனக்கு நிறைய ஆரவம் இருந்தா ,நிறைய ஆராய்ச்சி பண்ணு.அதே நினைப்பா இருந்தா,ஆராய்ச்சி செஞ்சிகிட்டே இருந்தாதான் இந்த கலை உனக்கு வரும்னார்...

புதன், 31 ஆகஸ்ட், 2011

சனி தோசம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரம்

ஜோதிடம்;சனி தோசம் நீங்க..

சனி பெயர்ச்சியால் வரும் நவம்பர் 1 முதல் அதிக பாதிப்பை பெறும் கன்னி,துலாம்,விருச்சிகம்,மீனம் ராசியினர் சனி தோசம் நிங்க செய்ய வேண்டிய பரிகாரம் என்னவென்றால் ...


1.தினசரி காகத்துக்கு சாதம் வைக்கலாம்
2.சனி ஆதிக்கம் உடைய உடலூனமுற்றோருக்கு உதவ்லாம்
3.ஏழைகளுக்கு அன்னதானம் செய்யலாம்..இதுதான் தானத்தில் சிறந்தது.
4.சாம்பல் நிற ஆடைகளை அணியலாம்..
5.கீழான நிலையில் இருப்போருக்கு உதவி
6.சனிக்கிழமை தோறும் எள் தீபம் நவக்கிரகங்களுக்கு ஏற்றலாம்.
7.பிரதோசம் தோறும் சிவ வழிபாடு
8.கடுமையான உழைப்பு அவசியம்.இக்காலங்களில் உங்கள் உழைப்பு எவ்வளவு இருந்தாலும் பலன் குறைவு என்பதால் அதிக உழைப்பு மிக அவசியம்
9.ஆஞ்சநேயர்,வினாயகர் வழிபாடு மிக நன்மை தரும்.இருவரும் சனியை வென்றவர்கள்.
10.தாய்,தந்தையை வணங்குங்கள்.உறவினர்களை அழைத்து விருந்து வையுங்கள்.குலதெய்வ பூஜை செய்து விருந்து வைத்தால் மிக நன்மை உண்டாகும்.

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

சனி தோசம் நீங்க வழிபடவேண்டிய கோயில்;கொடுமுடி

சனிபெயர்ச்சி 2011 வரும் நவம்பர் 1 ஆம்தேதி திருக்கணித பஞ்சாங்கப்படி வருகிறது.திருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் வாக்கிய பஞ்சாங்கப்படிதான் சனி பெயர்ச்சி அனுசரிக்கப்படும். வாக்கிய பஞ்சாங்கப்படி 21.12.2011 புதன்கிழமை அன்றுதான் பெயர்ச்சியாகிறார்.நாடு முழுவதும் அன்றுதான் கொண்டாடப்படும்.துல்லியமான கணிதம் திருக்கணிதம் மட்டுமே.எனவே திருநள்ளாறு கோயில் செல்ல நினைப்பவர்கள் நவம்பர் 1ஆம் தேதியே சென்ரு வழிபடுவது இன்னும் அதிக பலன்களை கிடைக்கப்பெறுவது மட்டுமில்லாமல்,நெரிசலில் சிக்கிக்கொள்ளாமலும் வழிபடலாம்.


                                                    நளதீர்த்தம்,திருநள்ளார்

திருநள்ளாறு சனீஸ்வரர் காக வாகனத்தில் அமர்ந்து சிவனுக்கு இடப்புறத்தில் அமர்ந்திருக்கும் அதே அமைப்பில் ஈரோடு மாவட்டம் கொடுமுடி மகுடேஸ்வரர் ஆலயத்திலும் சனிபகவான் அருள்பாலிக்கிறார்.கொடுமுடி மகுடேஸ்வரர் ஆலயம் திரேதா யுகத்தில் அதாவது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கோயிலாகும்.இங்கு சிவன்,பிரம்மா,விஸ்ணு ஆலயங்கள் தனித்தனியே உள்ளன.இரண்டாயிரம் ஆண்டுகள் ப்ழமையான வன்னி மரத்தின் அடியில் பிரம்மா வீற்றிருக்கிறார்.தமைழகத்தின் மிக பழமையான பிரம்மன் ஆலயம் இது.

இக்கோயிலின் எதிரில் தென்வடல் முகமாக திரும்பி பாயும் காவிரி ஆறு கண்கொள்ளாகாட்சி.இக்கோயில் காசி யில் இருக்கும் காசி விஸ்வநாதர் கோயில் அமைப்பை கொண்டுள்ளது என்பர்.

அகத்தியருக்கு சிவபெருமான் தன் திருமணகோலத்தை காட்டிய இடம்.அப்பர்,சுந்தரர்,திருஞானசம்பந்தர் பாடல் பாடிய ஸ்தலம்.கொங்குகோயில்களில் முக்கியைடம் பெற்ற சிவதலம்.கொங்கேழு தலங்கள் என போற்றப்படும் தலகங்களில் இதுவும் ஒன்று.

                                            மகுடேஸ்வரர் கோயில்,கொடுமுடி
  
இங்குள்ள பிரம்மாவை,சிவனை மட்டுமல்ல,பெருமாள் ஸ்ரீரெங்கம் பெருமாளின் சயன கோலத்தில் அருள் பாலிப்பதை காண்பதும் மெய்சிலிர்க்கவைக்கும்.சனிப்பெயர்ச்சியில் கொடுமுடி வழிபாடு மிக சிறப்பு வாய்ந்தது.திருநள்ளாறு செல்ல முடியாதவர்கள் இங்கு சென்றுவரலாம்.
ஆலயம் அமைந்துள்ள இடம்;ஈரோடு டூ கரூர் செல்லும் பாதையில் பஸ் பயணம் ஒருமணிநேரம்..45 கிலோமீட்டர்.