தமிழ்வலைப்பதிவர்கள் தமிழ்மணத்தின் அடிமையா? tamil bloggers vs tamilmanam
தமிழ்மணம் என் பதிவுகளை திரட்ட மாட்டோம் என சொன்ன பிறகு அது பத்தி எதுக்கு பேசணும் என இருந்தேன்.ஆனால் இன்று என் நண்பர்களை தமிழ்மணம் நிர்வாகிகள் படுத்தி எடுத்ததை,தனி மெயிலில் மிரட்டுவது , பார்த்த பின் ஒரு கண்டன பதிவு எழுத வேண்டும் என்பதற்காக இது.;
பதிவர் பன்னிகுட்டி ராமசாமி எழுதிய ஒரு பதிவு மிக சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.தமிழ்மணம் பயோ டேட்டா என்ற அவரது பதிவில் தமிழ்மணத்திடம் கேட்ககூடாதது..? என்பதில் கட்டண சேவையை குறித்திருந்தார்.இது தமிழ்மணம் நிர்வாகத்தை மிக கடுப்படித்துவிட்டது.உடனே தஸ் புஸ் என ஆங்கிலத்தில் கமெண்ட் மழை பொழிய ஆரம்பித்துவிட்டனர்.(.தமிழ் சேவை நோட் திஸ் பாயிண்ட்)
பெயரிலி என்ற,தமிழ்மண நிர்வாகி (இவரு முனைவராம்)டா,டே என பேச ஆரம்பித்தார்..உனக்கு மீசை முடி முளைக்கிறதுக்கு முன்னாடியே எல்லா மயிரும் முளைச்சிருச்சி என்பது போல கமெண்ட் போட்டிருந்தார் (நாகரீகம் நோட் திஸ் பாயிண்ட்)
அதாவது பன்னிகுட்டி ராமசாமி பதிவில் கமெண்ட் போட்டவர்களையெல்லாம் மிரட்டி அவர்களுக்கு இப்போது ஈமெயில் போய் கொண்டிருக்கிறதாம்...உன்னை நீக்கி விடுவேன்..தமிழ்மணத்திற்கு எதிராக குரல் கொடுக்குறாயா என்று.
ஜெயலலிதா,அஞ்சாநெஞ்சன் அழகிரி அண்ணன் மிரட்டலையெல்லாம் தூக்கி சாப்பிடும் வணம் அராஜகம் செய்கிறது தமிழ்மணம்..தமிழ்வலைப்பதிவர்களை கொத்தடிமை போல பாவிக்கிறது...அதில் இணைப்பவர்கள் தனக்கு எதிராக பேசினால் நீக்கிவிடுவார்களாம், என்ன கொடுமை..?
தமிழில் நான்தான் எழுதுகிறேன்..கருத்துகளை நான்தான் கொட்டுகிறேன்.என் எழுத்தை உன் பக்கத்தில் ஓசியில் காட்டுகிறாய்...இது போல பல நண்பர்களின் எழுத்து குவியலை உன் பக்கத்தில் காட்டி சந்தை படுத்தி திரட்டி நடத்துகிறாய்..சொல்ல போனால் நீதான் எங்கள் பதிவுகளை காப்பிபேஸ்ட் செய்து பிழைக்கிறாய்...கஷ்டப்பட்டு எழுதறது நாங்க..அதை நோகாம திரட்டிட்டு என்னென்னா சட்டம் பேசுற நீ..?
ஒரு பொருளை உற்பத்தி செய்பவனுக்கு அதிக உரிமையா? விற்று தருபவனுக்கு அதிக அதிகாரமா..?
எங்களை வைத்து ஹிட்ஸ் அடித்துவிட்டு இன்று உனக்கு அதிக ஹிட்ஸ் தருகிறேன்..எனக்கு பணம் கொடு என எங்களிடம் கேட்க ஆரம்பித்துவிட்டாய்...வெள்ளைக்காரன் இந்தியாவில் செய்த அதே வியாபார தந்திரம்..நாளை இணைக்கும் ஒவ்வொரு பதிவரும்...குறிப்பிட்ட தொகை கட்ட வேண்டும் என்பாய்..?
டெரர் கும்மியில் அந்த பதிவில் கமெண்ட் போட்டவர்களை கூட தமிழ்மணம் திரட்டியில் இருந்து நீக்குவோம் என ஈமெயில் அனுப்ப எவ்வளவு துணிச்சல்..தைரியம்..? சில பிரபல பதிவர்கள் நமக்கு தெரிந்தவர்களும் அதில் நிர்வாகிகளாக இருக்கின்றனர்.அவர்களின் வேலைதான் இது...
தமிழ்மணம் எப்போ பணம் கேட்க ஆரம்பித்ததோ அப்போதே அதன் தமிழ் சேவையும் சந்தி சிரித்து விட்டது...ங்கொய்யாலே நீ என் பதிவை திரட்டி செய்றது தமிழ் சேவைன்னா அப்புறம் யோசித்து நானே எழுதும் பதிவு என்ன மலையாள சேவையா..?
வருசம் ரெண்டு புக்கை பத்து பதிவருக்கு கொடுத்து சிறந்த பதிவர் விருது கொடுத்துட்டா நீ தமிழுக்கு ஒரே புடுங்கா புடுங்கிட்டன்னு அர்த்தமா..? நீ இப்போ பண்ற வேலை எல்லாமே பணம் சம்பாதிக்கத்தான்னு தெரியும்...ஆனா அதுக்கும் இவ்வளவு அதிகாரம்,மிரட்டல்..?
நான் சோதிடம் பத்தி எழுதக்கூடாதுன்னு சொல்ல நீ யாரு..? என் சோதிடம் 64 தமிழ் கலைகளில் ஒன்று..என்பது உனக்கு தெரியுமா..? தமிழ் வளர்க்கிறாராம் தமிழ்..என் தமிழ் இலக்கியத்திலும் ,புராணத்திலும் எங்கு நிமித்தம் இல்லாமல் இருக்கிறது..?
டிஸ்கி;நான் உறுதியாக சொல்லமுடியும்..தமிழ்மணம் சோதிட பதிவுகள்,காப்பிபேஸ்ட் பதிவுகள் இணைக்க மாட்டோம் என வடிகட்டுவதற்கு காரணம் அவர்கள் தமிழ் தொண்டு அல்ல.நூற்றுக்கணக்கான ப்ளாக்குகளை தமிழ்மணம் கட்டண சேவைக்கு திருப்ப வேண்டும் என்பதே, இதுவே இப்போது அவர்களின் அடிப்படை அவர்கள் கொள்கை.இது இன்னும் கொஞ்சம் நாளில் பச்சையாகவே தெரியும்.
அதற்காக நாசூக்காக ,அழகான எழுத்துகளில் பூசி மெழுகி கதை விடுவார்கள். தமிழ் பதிவர்களை நாங்கள்தான் வளர்க்கிறோம்..நாங்க இல்லைன்னா தமிழே அழிஞ்சிரும்..இன்னும் எத்தனை நாளைக்குடா இதையே சொல்வீங்க..?
என் பதிவுகளை இண்ட்லியில இணைச்சா,தமிழ்வெளியில இணைச்சா,என் பதிவு உலகம் முழுக்க போகாதா..?
என் எழுத்து பவரா இருந்தா இந்த பிரபஞ்சத்தையே பொத்துகிட்டு கூட போகும்...
தமிழ்மணம் யோக்கியதையை வெளிச்சம் போட்டு காட்டிய பதிவுகள்;
20 கருத்துகள்:
You said very very very very very very very very very very very very correct. . .
Tamilmanam ena payriya APPATAKKARA?
பெயரலி ஒரு வெள்ளாள சாதி வெறியன். அவன் ஒரு மன நிலை சரியில்லாதவன்.
தமிழ்மணம் இல்லையென்றால், ஒரு பதிவரின் வாசகர்கள் விட்டுச் சென்று விடுவார்கள், என்ற நினைப்புதான்.
ஒரு தளத்தின் வாசகர்கள், எப்பொழுதும் வாசகர்களாக இருப்பார்கள், புது வாசகர்கள் வேறு திரட்டி மூலம் வருவார்கள், திரட்டி இல்லையென்றால் கொஞ்சம் லேடாகும்.
பிரபல தளங்களை வெளியேற்றி விட்டால், அவர்களின் நிலமை என்னவென்று தெரியும்.
அண்ணே, உங்க துணிச்சலுக்கு ஒரு சல்யூட்!
பூனைக்கு மணி கட்டியே ஆகவேண்டிய நேரம் வந்துடுச்சு......!
தீபாவளி இப்பவே வந்த மாதிரி
இருக்கு..!!
:-)
:) super
இது தான் டாப்பு!மத்ததெல்லாம் டூப்பு!
தேவையான பகிர்வு
ஆம் நம்மை கொத்தடிமை போல பாவித்து விட்டார்கள் போல
நான் தான் முதலாவதா?
எல்லார் பதிவுளையும் தமிழ் மனம் டவுசர் கிளியுதே இங்க என்ன பண்ணுதுன்னு வந்தேன், சேம் பிளட்.....
//என் எழுத்து பவரா இருந்தா இந்த பிரபஞ்சத்தையே பொத்துகிட்டு போகும்...//
:-)
அடேங்கப்பா!!
நண்பர்கள் அனைவருக்கும் நன்றி
தமிழ்மணம் இல்லையென்றால், ஒரு பதிவரின் வாசகர்கள் விட்டுச் சென்று விடுவார்கள், என்ற நினைப்புதான்.//ஒவ்வொரு ப்ளாக் பெயரை டைப் செய்து தேட சோம்பல் பட்டுக்கொண்டு தமிழ்மணம் போய் வருகிறார்கள்.இதுதான் உண்மை.இல்லையென்றாலும் இண்ட்லி,தமிழ்வெளி என போய் வருவார்கள்.தமிழ்மணம் தமிழுக்கு தொண்டாற்ற காரணம் இப்படி ஒருநாள் அதிகாரம் செய்யத்தானோ
பூனைக்கு மணி கட்டியே ஆகவேண்டிய நேரம் வந்துடுச்சு......!//
பெரிய மணியாவே கட்டிவிட்ருவோம் தலை
அண்ணே, உங்க துணிச்சலுக்கு ஒரு சல்யூட்!//
நன்றிண்ணே..நாம தமிழ்மணத்தை நம்பியா இருக்கோம்..எதுக்கு கட்டண சேவைக்கு மாத்துனன்னு சண்டை போட்டேன்.நான் பணம் தருவேன்னு நம்புனாய்ங்க..பனம் தரலை.அதனல சோதிட பதிவுன்னு வெளியேத்தினாங்க..இன்னிக்கு அவங்களை பத்தி கொஞ்சம் நெகடிவ்வா செய்தி வந்ததும்..அவர்கள் பசுத்தோல் போர்த்திய புலி னு காட்டிட்டாங்க
அம்மாவை பத்தி நீங்க எழுதும் போதே அவிங்களுக்கு
எரிஞ்சிருக்கும் . அதான் ஏதாவது ஒரு காரணத்தை காட்டி
தூக்கியிருப்பார்கள் . போறாங்க யாருக்கு நஷ்டம் ?
//என் எழுத்து பவரா இருந்தா இந்த பிரபஞ்சத்தையே பொத்துகிட்டு போகும்...//
முற்றிலும் உண்மை. எழுத்து நமக்கு கிடைத்த வரப்பிரசாதம்... நீ இதை எழுது அதை எழுது என்று சொல்லவோ... இல்லை நமது எழுத்தை கேவலப்படுத்தவோ யாருக்கும் உரிமையில்லை...
நமது எழுத்தை வாசிக்கும் நண்பர்கள் எப்போதும் நம்மோடு இருப்பார்கள்.
நல்ல பகிர்வு.
கருத்துரையிடுக