blogger லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
blogger லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 16 அக்டோபர், 2011

தமிழ் வலைப்பதிவர்கள் தமிழ்மணத்தின் அடிமையா?


தமிழ்வலைப்பதிவர்கள் தமிழ்மணத்தின் அடிமையா? tamil bloggers vs tamilmanam

தமிழ்மணம் என் பதிவுகளை திரட்ட மாட்டோம் என சொன்ன பிறகு அது பத்தி எதுக்கு பேசணும் என இருந்தேன்.ஆனால் இன்று என் நண்பர்களை தமிழ்மணம் நிர்வாகிகள் படுத்தி எடுத்ததை,தனி மெயிலில் மிரட்டுவது , பார்த்த பின் ஒரு கண்டன பதிவு எழுத வேண்டும் என்பதற்காக இது.;


பதிவர் பன்னிகுட்டி ராமசாமி எழுதிய ஒரு பதிவு மிக சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.தமிழ்மணம் பயோ டேட்டா என்ற அவரது பதிவில் தமிழ்மணத்திடம் கேட்ககூடாதது..? என்பதில் கட்டண சேவையை குறித்திருந்தார்.இது தமிழ்மணம் நிர்வாகத்தை மிக கடுப்படித்துவிட்டது.உடனே தஸ் புஸ் என ஆங்கிலத்தில் கமெண்ட் மழை பொழிய ஆரம்பித்துவிட்டனர்.(.தமிழ் சேவை நோட் திஸ் பாயிண்ட்)

பெயரிலி என்ற,தமிழ்மண நிர்வாகி (இவரு முனைவராம்)டா,டே என பேச ஆரம்பித்தார்..உனக்கு மீசை முடி முளைக்கிறதுக்கு முன்னாடியே எல்லா மயிரும் முளைச்சிருச்சி என்பது போல கமெண்ட் போட்டிருந்தார் (நாகரீகம் நோட் திஸ் பாயிண்ட்)

அதாவது பன்னிகுட்டி ராமசாமி பதிவில் கமெண்ட் போட்டவர்களையெல்லாம் மிரட்டி அவர்களுக்கு இப்போது ஈமெயில் போய் கொண்டிருக்கிறதாம்...உன்னை நீக்கி விடுவேன்..தமிழ்மணத்திற்கு எதிராக குரல் கொடுக்குறாயா என்று.

ஜெயலலிதா,அஞ்சாநெஞ்சன் அழகிரி அண்ணன் மிரட்டலையெல்லாம் தூக்கி சாப்பிடும் வணம் அராஜகம் செய்கிறது தமிழ்மணம்..தமிழ்வலைப்பதிவர்களை கொத்தடிமை போல பாவிக்கிறது...அதில் இணைப்பவர்கள் தனக்கு எதிராக பேசினால் நீக்கிவிடுவார்களாம், என்ன கொடுமை..?

தமிழில் நான்தான் எழுதுகிறேன்..கருத்துகளை நான்தான் கொட்டுகிறேன்.என் எழுத்தை உன் பக்கத்தில் ஓசியில் காட்டுகிறாய்...இது போல பல நண்பர்களின் எழுத்து குவியலை உன் பக்கத்தில் காட்டி சந்தை படுத்தி திரட்டி நடத்துகிறாய்..சொல்ல போனால் நீதான் எங்கள் பதிவுகளை காப்பிபேஸ்ட் செய்து பிழைக்கிறாய்...கஷ்டப்பட்டு எழுதறது நாங்க..அதை நோகாம திரட்டிட்டு என்னென்னா சட்டம் பேசுற நீ..?

ஒரு பொருளை உற்பத்தி செய்பவனுக்கு அதிக உரிமையா? விற்று தருபவனுக்கு அதிக அதிகாரமா..?

எங்களை வைத்து ஹிட்ஸ் அடித்துவிட்டு இன்று உனக்கு அதிக ஹிட்ஸ் தருகிறேன்..எனக்கு பணம் கொடு என எங்களிடம் கேட்க ஆரம்பித்துவிட்டாய்...வெள்ளைக்காரன் இந்தியாவில் செய்த அதே வியாபார தந்திரம்..நாளை இணைக்கும் ஒவ்வொரு பதிவரும்...குறிப்பிட்ட தொகை கட்ட வேண்டும் என்பாய்..? 


டெரர் கும்மியில் அந்த பதிவில் கமெண்ட் போட்டவர்களை கூட தமிழ்மணம் திரட்டியில் இருந்து நீக்குவோம் என ஈமெயில் அனுப்ப எவ்வளவு துணிச்சல்..தைரியம்..? சில பிரபல பதிவர்கள் நமக்கு தெரிந்தவர்களும் அதில் நிர்வாகிகளாக இருக்கின்றனர்.அவர்களின் வேலைதான் இது...

தமிழ்மணம் எப்போ பணம் கேட்க ஆரம்பித்ததோ அப்போதே அதன் தமிழ் சேவையும் சந்தி சிரித்து விட்டது...ங்கொய்யாலே நீ என் பதிவை திரட்டி செய்றது தமிழ் சேவைன்னா அப்புறம் யோசித்து நானே எழுதும் பதிவு என்ன மலையாள சேவையா..? 

வருசம் ரெண்டு புக்கை பத்து பதிவருக்கு கொடுத்து சிறந்த பதிவர் விருது கொடுத்துட்டா நீ தமிழுக்கு ஒரே புடுங்கா புடுங்கிட்டன்னு அர்த்தமா..? நீ  இப்போ பண்ற வேலை எல்லாமே பணம் சம்பாதிக்கத்தான்னு தெரியும்...ஆனா அதுக்கும் இவ்வளவு அதிகாரம்,மிரட்டல்..?

நான் சோதிடம் பத்தி எழுதக்கூடாதுன்னு சொல்ல நீ யாரு..? என் சோதிடம் 64 தமிழ் கலைகளில் ஒன்று..என்பது உனக்கு தெரியுமா..? தமிழ் வளர்க்கிறாராம் தமிழ்..என் தமிழ் இலக்கியத்திலும் ,புராணத்திலும் எங்கு நிமித்தம் இல்லாமல் இருக்கிறது..? 

டிஸ்கி;நான் உறுதியாக சொல்லமுடியும்..தமிழ்மணம் சோதிட பதிவுகள்,காப்பிபேஸ்ட் பதிவுகள் இணைக்க மாட்டோம் என வடிகட்டுவதற்கு காரணம் அவர்கள் தமிழ் தொண்டு அல்ல.நூற்றுக்கணக்கான ப்ளாக்குகளை தமிழ்மணம் கட்டண சேவைக்கு திருப்ப வேண்டும் என்பதே, இதுவே இப்போது அவர்களின் அடிப்படை அவர்கள் கொள்கை.இது இன்னும் கொஞ்சம் நாளில் பச்சையாகவே தெரியும்.
அதற்காக நாசூக்காக ,அழகான எழுத்துகளில் பூசி மெழுகி கதை விடுவார்கள். தமிழ் பதிவர்களை நாங்கள்தான் வளர்க்கிறோம்..நாங்க இல்லைன்னா தமிழே அழிஞ்சிரும்..இன்னும் எத்தனை நாளைக்குடா இதையே சொல்வீங்க..? 

என் பதிவுகளை இண்ட்லியில இணைச்சா,தமிழ்வெளியில இணைச்சா,என் பதிவு உலகம் முழுக்க போகாதா..?

என் எழுத்து பவரா இருந்தா இந்த பிரபஞ்சத்தையே பொத்துகிட்டு கூட போகும்...

தமிழ்மணம் யோக்கியதையை வெளிச்சம் போட்டு காட்டிய பதிவுகள்;


தமிழ்மணம் என்றதொரு சர்வாதிகாரம்.



தமிழ் மணம் - ஊரை விட்டுப் போரேன் ஊராரோ!!!


தமிழ் மனங்களை புண்படுத்திய தமிழ்மணம்..!





செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

புதிய பதிவர்கள் கவனிக்கவும்!


புதிய பதிவர்கள் கவனிக்கவும்!
நாளுக்கு நாள் புதிய பதிவர்கள் பதிவுலகத்திற்க்கு வருகை தருவது மகிழ்ச்சி தருகிறது(புது ஃபாலோயர்ஸ் கிடைப்பாங்களே-;)) அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.
ஒரு வருசமா பதிவுலகத்தில் சிக்கி சின்னா பின்னாமாகி ,காசை நிறைய விட்டு(பிரவுசிங் செண்டர்ல..இப்ப கம்ப்யூட்டர் வாங்கிட்டென்),முக்கி திணறி 100 ஃபாலோயர்ஸ் கிடைச்ச அருகதையில உங்ககிட்ட சில வார்த்தைகள்.....
நான் அட்வைஸ் பன்ணல..ஒரு சில ஐடியாக்கள் அவ்வளவுதான்...
புதிய பதிவர்கள் முதலில் செய்ய வேண்டியவை......
1.
எல்லாமே ஹிட்ஸ்க்காகத்தான்.என்றாலும் ஹிட்ஸை எதிர்பாராமல் அவ்வப்போது சமூகத்திற்க்கும் மெசேஜ் கொடுங்கள்.

2.
காப்பி பேஸ்ட் தவிர்த்து விடவும்..இதனால் எந்த பெயரும் நமக்கு கிடைக்க போவதில்லை.சமூகத்திற்க்கு பயன்படும் என்றால் போடலாம்.முக்கிய செய்தி என்றால் போடலாம் தவறில்லை.ஆனால் அதை வைத்தே பதிவுலகத்தில் காலம் ஓட்ட முடியாது...(சொந்த அனுபவம் நிறைய இருக்கு ஹி..ஹி)

3.
ரொம்ப ஹாட்டா எதுவும் எழுதிட வேண்டாம்..கவிதையை எழுதி தள்ளாதீங்க..இங்க முக்காவாசி வைரமுத்து..வாலி தான்..
.
4.
பதிவின் பக்கங்களை அழகாக்குறேன் பேர்வழின்னு கலர்கலரா எழுத்தை மாத்தாதீங்க..கண்ணுக்கு கெடுதல்..இது போல பல தளங்களுக்கு சென்று நான் ஓடி வந்துவிட்டேன்....ஃப்ளாஷ் விளம்பரங்களை பக்கம் முழுவதும் தோரணம் கட்டாதீங்க..அதுவும் எரிச்சலை தரும்..அது மூலமா ஆதாயம் இருந்தா ஓகே.

5.
குறைந்த பட்சம் 100 பதிவர்களிடமாவது உறுப்பினர்களா சேருங்க அப்பதான் உங்களுக்கும் 50 உறுப்பினர்கள் சேருவாங்க..எனக்கு யார் ஃபாலோயர் சேர்ந்தாலும் அவர்களிடம் நானும் ஃபாலோயர் ஆகிறேன்.....இது நல்ல பலன் தருகிறது...நீங்கள் யாரிடமாவது ஃபாலோயராக இணைந்து அவர்கள் உங்களிடம் ஃபாலோயராக சேரவில்லை என்றால் அவர்கள் பிரபல பதிவர்கள் என அறிந்துகொள்க..அவர்களிடம் நமக்கு எதுவும் தேறாது..பின்னூட்டம் உட்பட.

6.
நம்மை போல..புது பதிவர்கள் யார் வந்தாலும் ஃபாலோயராக சேருங்கள்.ரொம்ப நல்லா அவங்க எழுதினாத்தான் ஃபாலோயர் ஆகணும்னு இல்லை.உடனே அவர்கள் போடும் பதிவுகளுக்கு சென்று மறுமொழி இடுங்கள்.குறைந்தபட்சம் ஸ்மைலி யாவது போடவும்...

7.
யாருடைய பதிவையாவது நீங்கள் எடுத்து கையாண்டால் அவர்களுக்கு லின்க் கொடுத்து விடவும் அல்லது நன்றி என போட்டு விடவும்..இது பதிவுலக சட்டம்.

8.
நீங்கள் மொக்கை பதிவர் என்றால் அதான் என்னை பொல..ஹிட்ஸ் மட்டுமே எதிர்பார்ப்பவர் என்றால் சீசனுக்கு தகுந்தாற்போல பதிவு போட வேண்டும்..எந்திரன் சீசன் இது ..எந்திரன் சம்பந்தமாக ஒரு பதிவு போட்டு விட்டீர்களா...அதுக்கு தான் இப்ப மார்க்கட்.ஒரு நாளைக்கு 500 ஹிட்ஸ் குறைந்தது நிச்சயம்...

9.
நிறைய புது பதிவர்களில் மறுமொழி நாம் போட்டால் ,உங்கள் மறுமொழி சேமிக்கப்பட்டுள்ளது. பதிவு ஓனர் சொன்னால் வெளியிடுகிறோம்..என வருகிறது.. இது செம கடுப்பை கிளப்புகிறது..நீங்க என்ன பெரிய வினவா,சவுக்கா ..அல்லது பிரபல பதிவரா.. நமக்கு தேவை மறுமொழி..அப்பப்ப அது வந்தாதான் அப்பப்ப தமிழ்மணம் மறுமொழி திரட்டியில உங்க பேரு வரும் யாராவது ஒண்ணு ரெண்டு நல்ல உள்ளம் உள்ளே நுழையும்..அதனால் செட்டிங் சென்று கமெண்ட் மாடரேசன் .டிக் பண்ணி விடவும்..அதே போல நாலு இங்கிலீஸ் எழுத்து வரும் அதை டைப் பண்ணாத்தான் உள்ளே போக முடியும்..அதற்காகவே நான் கமெண்ட் போடாமல் திரும்பியது நிறைய..அதையும் நீக்கவும்.
.
10.
நம்ம பதிவை எல்லாம் பிரபல பதிவர்கள் படிப்பாங்களா என சோர்ந்து போக வேண்டாம் எல்லாமே உள்ளே வரும் ஆனா எதுவும் கமெண்ட் போடாது... ஏன்னா அவங்களுக்கு இமேஜ் இருக்குதுன்னு அவங்களே நினைச்சுகிறாங்க..
.
11.
அப்புறம் கூட்டு களவாணிங்க..இங்க ஜாஸ்தி.மெயில் சாட்டிங்க் ல பேசிக்குவாங்க..என்னோட பதிவு போட்ருக்கேன்..இதுல பின்னூட்டம் ஓட்டு போட்ரு..உனக்கும் போட்டுடறேன் னு பேசிக்குவாங்க...அதே மாதிரி 6 பெரு ஓட்டு போட்டா போதும் ஹிட்ஸ் தான்..நல்ல பதிவு நாம போடல..அதனால் நமக்கு ஓட்டு விழலை ந்னு ஏமாந்துடாத..மக்கா..சூதானமா பொழச்சுக்க...

12.
உங்களுக்கு யாராவது கமெண்ட் போட்டா உடனே அவங்க பதிவுக்கு போயி கமெண்ட் போட்ரு...அதுதான் நல்லது...கமெண்ட் போடறவன் உன் எழுத்து அமர காவியம் நு நினைச்சா போடறான்..ஏதோ.. அண்ணன் நமக்கும் கமெண்ட் போடுவாருன்னு நம்பிதானே போடுறான்.. அவனுக்கு நீ துரோகம் பண்ணலாமா..?
நன்றே செய் அதை இன்றே செய் னு எதுக்கு சொன்னாங்க...இதுக்குதான்....அப்படி மறுமொழி போடலன்னா ,தனிப்பட்ட முறையில் அவங்க மெயில் ஐடிக்கு போய் அண்ணே..நான் உனக்கு இத்தனை பதிவுல..இத்தனை கமெண்ட் மொய் வெச்சிருக்கேன்..எனக்கு நீ இத்தனை பதிவுல  இத்தனை கமெண்ட் போடல...அதனால ஒழுக்கமா வந்து மொய் கணக்கு தீருன்னு சொல்லு தம்பி..அண்ணன் அலறிக்கிட்டு வருவான்.. 
-
இன்னும் அரசியல் இருக்கு...சொல்வேன்.அடுத்த பதிவுல...