வெள்ளி, 7 அக்டோபர், 2011

புலிப்பாணி ஜோதிடம் 300;ஒழுக்கமில்லாத பெண்ணின் ஜாதகம்

புலிப்பாணி ஜோதிடம் 300;ஒழுக்கமில்லாத பெண்ணின் ஜாதகம்;

புலிப்பாணி சித்தரின் பாடல்;

ஆரப்பா யின்னமொரு புதுமையை கேளு
அம்புலியும் அசுரகுரு யேழில் நிற்க
கூரப்பா கிழவனுக்கு மாலையிட்டு
குமரியவள் மதனத்தால் பலனை கூடி
சீரப்பா செல்வனையும் பெற்றெடுத்து
சிறப்பாக தொட்ட்லிட்டு ஆட்டுவாளாம்
பாரப்பா பார்த்தவர்கள் பிரமிக்கத்தான்
பாங்கியவள் ஸ்தனங் குலுங்க வருவாள் பாரே.

பாடல் விளக்கம்;

புதுமையான இன்னொரு ஜாதக அமைப்பை கூறுகிறேன்.கூர்மையுடன் கேட்டுக்கொள்.சந்திரனும்,சுக்கிரனும் லக்கினத்துக்கு ஏழில் நின்றால் இந்த ஜாதகி கிழவனுக்கு மாலையிடுவாள்.ஆனால் மனநிறைவில்லாது காம உணர்வினால் பல ஆண்களுடன் கூடி ஒரு குழந்தையும் பெற்றெடுப்பாள்.அந்த பாலகனை ஊரார் பிரமிக்க சிறப்பாக தொட்டிலிட்டு ஆட்டுவாள்.இவள் பல ஆண்கள் பார்த்து மயங்கும்படி ஸ்தனங்கள் குலுங்க வெளியில் ந்டமாடுவாள் என்று கூறலாம்..


என் விளக்கம்..;இந்த பாடல் நடைமுறையில் ஒத்து வருகிறதா என கேட்டால்,நிறையவே ஒத்து வருகிறது.ஆனால் மேற்க்கண்ட ஜாதக அமைப்பு லட்சத்தில் ஒரு பெண்ணுக்குத்தான் அமையும்.சுக்கிரனும்,சந்திரனும் கூடுவது இயல்பு என்றாலும் லக்கினத்தில் 7 ல் கூடுவது ரொம்ப குறைவு.அப்படி அமைப்பு இருப்பினும் சுப கிரக பார்வை இருப்பின்,இந்த பாதிப்பு சற்று குறையும்.கிரகங்கள் நல்ல கிரகத்தின் சாரம் பெற்றால் இன்னும் கெடு பலன் குறைய வாய்ப்புண்டு.ஆனால் சந்திரன்,சுக்கிரன் இணைவு காம உணர்வை மிக அதிகமாக்கும் என்பது என் ஜோதிட அனுபவத்தில் உண்மை..

2 கருத்துகள்:

Unknown சொன்னது…

பாடலும் விளக்கமும் அருமை நண்பா

செங்கோவி சொன்னது…

இதை மட்டுமே வைத்து முடிவுக்கு வரலாமா-ன்னும் சொன்னா பதிவு முழுமை பெறும்.

ஏன்னா படிக்கிறவங்க அவசரப்பட்டு தப்பான முடிவுக்கு வந்திடக்கூடாதில்லையா?