செவ்வாய், 11 அக்டோபர், 2011

2012 ஆங்கில புத்தாண்டு பலன்கள்;சிம்மம் leo

2012 ஆங்கில புத்தாண்டு பலன்கள்;சிம்மம் leo;

மகம்,பூரம்,உத்திரம் 1 ஆம் பாதம் வரை;

யாரிடமும் எதற்காகவும் ,அவமானப்படாத,தலை குனிந்து வாழ சகிக்காத ராசிக்காரர் நீங்கள்.எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குவீர்கள்.எதிரிகள் கையோங்கினாலும் காத்திருந்து அவர்களை புறக்கணிப்பதில் பாடம் புகட்டுவதில் வல்லவர் நீங்கள் (ஜெயலலிதாவை கற்பனை செய்ய வேண்டாம்.ஒவ்வொரு சிம்ம ராசியினருக்கும் இந்த குணம் உண்டு)

பூரம் நட்சத்தினர் நல்ல வசதியான வாழ்வை படிப்படியாக பெற தொடங்குவர்.இவர்களுக்கு எல்லாமே சிறப்பாக அமைந்துவிடும்.ஆடி மாதம் பூரம் பூரம் நட்சத்திரத்தில் பிறந்திருந்தால் உங்களிடம் தனித்துவமான திறமைகள் இருக்கும்.மகம் நட்சத்திரம் காரர்கள் சமூகத்தில் ஒரு நல்ல அந்தஸ்தை பெறுவர்.கோயில் காரியங்களை,மக்களை ஒருங்கிணைத்து சமூக புரட்சி செய்வதில் வல்லவர்.தர்ம சிந்தனை அதிகம் உடையவர்.உத்திரம் நட்சத்திரகாரர்கள் அரசு சார்ந்த துறையில் இருப்பர்.உயர்ந்த அந்தஸ்து மனிதர்களின் நட்பை பெற்றிருப்பர்.கோபம் அதிகம் மகம்,உத்திரம் நட்சத்திரக்காரர்களுக்கு இருக்கும்.

ஜெயலலிதா சனி பெயர்ச்சியான ஐப்பசி 15 ஆம் நாளுக்கு காத்திருப்பது போல நீங்களும் அந்நாளுக்காக காத்திருக்க வேண்டும்.காரணம் 7 வருடங்களாக உங்களை முடக்கி வைத்திருந்த ஏழரை சனி அன்றுதான் விலகுகிறது.தொழிலில் இனி சுறுசுறுப்பு,அதிக வருமானம்,தொட்டதெல்லாம் துலங்கும் காலம் இனி தொடங்குகிறது.

டிசம்பர் 26 வரை குரு வக்ரமாக இருப்பதால் அதுவரை பணக்கஷ்டம் இருந்துதான் தீரும்.குடும்பத்தில் குழப்பம் இருக்கும்.காரிய தடை காணும்.வருகின்ற புத்தாண்டில் 2012 மிக விசேஷமாக அமைய போவது உங்களுக்குதான்.பல புதிய திட்டங்களை தீட்டி வெற்றி பெறுவீர்கள்..வீடு கட்ட,திருமணம் முடிக்க பொன்னான காலம்.தொழில் அபிவிருத்திக்கு சிறப்பு.

பரிகாரம்;முருகன் சன்னதியில் உங்கள் நட்சத்திரம் வரும் நாளில் சிறப்பு அபிசேகம் செய்யுங்கள்.

8 கருத்துகள்:

'பரிவை' சே.குமார் சொன்னது…

நல்லாயிருக்குமுன்னு சொல்லியிருக்கீங்க... பார்க்கலாம்.

test சொன்னது…

மெய்யாலுமா பாஸ்? நன்றி!

• » мσнαη « • சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
• » мσнαη « • சொன்னது…

///பூரம் நட்சத்தினர்........... ///

இந்த ஏழு வருஷத்தில் கேட்ட முதல் நல்ல செய்தி!!!!மாற்றம் நிகழ்ந்தால் மிக்க மகிழ்ச்சி !!

தகவலுக்கு மிக்க நன்றி!!

Trading Options சொன்னது…

Thanks sir.....

செங்கோவி சொன்னது…

அப்போ நான் இன்னும் 20 நாள் பொறுத்தால் போதுமா.......ஓகே.

C.P. செந்தில்குமார் சொன்னது…

நல்ல நேரம் தொடங்கியாச்சு.....

அருப்புக்கோட்டை பாஸ்கர் சொன்னது…

நல்ல செய்திக்கு நன்றி