astrosuper லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
astrosuper லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2015

ஜோதிட சூட்சுமங்கள் -2 ,ஜோதிடர்கள் ஜாதகம் பார்க்க உதவும் 51 பாய்ண்ட்ஸ்

ஜோதிட சூட்சுமங்கள் 2 ஜோதிடர்கள் ஜாதகம் பார்க்கும் முறை

ஜாதகம் பார்க்கும்போது ஜோதிடர்கள் இவற்றையெல்லாம் ஆராய்ச்சி செய்ய வேண்டும் என என் குரு சொல்வார்..அதை கீழே கொடுத்துள்ளேன்.


1.லக்னம் சரம்,ஸ்திரம்,உபயம்
2.நட்சத்திரம் பாதம்,-பாகை-கலை -விகலை
3.ராசி சரம்,ஸ்திரம்,உபயம்
4.நாளும் ஓரையும்
5.ஓரையும் கெள்ரியும்
6.திதியின் இருவகை (வளர்பிறை -தேய்பிறை )
7.யோகத்தின் 27 விபரம் 
8.அயன விபரங்கள் 
9.கரணத்தின் பலாபலன்
10.லக்னத்தில் இருப்பவர்
11.லக்னத்தை பார்த்தவர்
12.லக்னாதிபதி நின்ற ஸ்தானம் 
13.லக்னாதிபதி பார்த்த ஸ்தானம் 
14.லக்னாதிபதியுடன் சேர்ந்தவர்
15.லக்னாதிபதியை பார்த்தவர்கள் 
16.லக்கின சாரம் 
17.லக்கின பாவம் இரு ஆதிபத்தியம் 
18.லக்கின பாவம் இரு ஆதிபத்தியம் 
19.லக்கின சுபர் -பாபர் -யோகர்-மாரகர்
20.ராசிக்கு சுபர் -பாபர்-யோகர்-மாரகர்கள்
21.ஒரே ராசி ஒரே லக்கினத்தில் பிறந்திருந்தால்..?
22.திசை புத்திக்கு போதக ,வேதக,பாசககாரர்கள்,நட்சத்திர சாரங்கள்
23.திசாநாதனுக்கு புத்திநாதன் எங்கே..?
24.திசாநாதனை பார்த்தவர்கள்
25.திசாநாதனை சேர்ந்தவர்கள்
26.திசாநாதன் நின்ற இடம்
27.திசாநாதன் பார்த்த இடம்
28.புத்தி நாதன் நின்ற இடம்
29.புத்தி நாதன் பார்த்த இடம்
30.திசாநாதனை எந்த கிரகமும் பார்க்க வில்லை எனில்..? என்ன பலன்..?

31.புத்திநாதனை எந்த கிரகமும் பார்க்காத போது..?


32.திசாநாதனை கிரகங்கள் சேராதபோது..?
33.புத்தி நாதனுடன் எந்த கிரகமும் சேரவில்லை எனில்..?
34.ராகுபகவானின் நிலைபாடுகள்
35.கேதுவின் நிலை
36.பருவகால விபரங்கள்
37.முக்குண வேளைகள் ஏழுவித ஹோரைகள்-திதி சூனியம் விபரம்
38.பஞ்சவித ஸ்தானம்
திரிகோணம் -1,5,9
கேந்திரம் -1,4,7,10
உபஜெயம் -3,6,10,11
அபோலிகம் -3,6,9,12
பணபரம் -2,5,8,11

39.வருஷாதிபன்
40.மாதாதிபன்
41.வாராதிபதின் 
42.ஹோராதிபன்
43.அந்த்ராதிபன்
44.தினகால திரிபாகாதிபன்
45.ஆகுல தோஷம்
46.கிரகண தோசம்-சூரிய கிரகணம்
47.கிரகண தோசம்-சந்திர கிரகணம் 
48.லக்ன தியாஷ்யம் 
49.வார தியாஷ்யம்
50.திதி தியாஷ்யம்
51.நட்சத்திர தியாஷ்யம்

புதன், 25 ஜூலை, 2012

செவ்வாய்,சனி சேர்க்கை நாட்டுக்கு கெடுதலா..?

ஆடி 20 வரை சனி, கன்னியில் செவ்வாயுடன் இருக்கிறது...சனி,செவ்வாய் சேர்ந்து ஒரு ராசியில் இருக்கும்போது புதிதான நோய்,கலவரம்,பெண்கள் எதிரான பிரச்சினை,பூகம்பம்,பெரிய விபத்துக்கள்,மத்திய மாநில அரசுகளுக்கு பெரும் சிக்கல்,மத்தியில் ஆட்சி கவிழ்ப்பு....முக்கிய மக்கள் தலைவர்கள் மரணம் போன்றவை இதுவரை நடந்திருக்கின்றன...இன்னும் 10 தினங்கள் இந்த சூழலுக்கு வாய்ப்பிருக்கிறது..

ஆனால் குரு பார்வை இதை முடிந்தளவு தடுத்து வருகிறது...துலாம் வீட்டில் மறுபடியும் இரு கிரகங்கள் சேர்கின்றன...அப்போது குரு பார்வை இல்லை..அப்போ செவ்வாய்,சனி செய்யும் பாதிப்பை தடுக்க இயலாது...இதற்கு அடுத்த வீட்டில் ராகுவும் உச்சத்தில் இருக்கிறது...இது ஆகஸ்ட்,செப்டம்பர் மாதத்தில் நிகழ்கிறது...இவை எல்லாம் நாட்டிற்கு துர்பலனே...மேற்சொன்னபலன்கள் அப்போது நடக்க அதிக வாய்ப்புண்டு...

செவ்வாய் சகோதரகரகன் என்பதால் சகோதர யுத்தமும் நடக்கும்..செவ்வாய் ஆயுதம் என்பதல் ஆயுத போரும் நடக்கலாம்...செவ்வாய் இப்போது கன்னியில் இருப்பதால் கடலும் வற்றும் என்ற பழமொழிக்கு ஏற்ப பொங்கி வரும் காவிரியும் ஆடி மாதத்தில் வறண்டு இருக்கிறது...நாடெங்கிலும் நிலத்தடி நீரும் வற்றிக்கொண்டிருக்கிறது!!!

செவ்வாய், 11 அக்டோபர், 2011

2012 ஆங்கில புத்தாண்டு பலன்கள்;சிம்மம் leo

2012 ஆங்கில புத்தாண்டு பலன்கள்;சிம்மம் leo;

மகம்,பூரம்,உத்திரம் 1 ஆம் பாதம் வரை;

யாரிடமும் எதற்காகவும் ,அவமானப்படாத,தலை குனிந்து வாழ சகிக்காத ராசிக்காரர் நீங்கள்.எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குவீர்கள்.எதிரிகள் கையோங்கினாலும் காத்திருந்து அவர்களை புறக்கணிப்பதில் பாடம் புகட்டுவதில் வல்லவர் நீங்கள் (ஜெயலலிதாவை கற்பனை செய்ய வேண்டாம்.ஒவ்வொரு சிம்ம ராசியினருக்கும் இந்த குணம் உண்டு)

பூரம் நட்சத்தினர் நல்ல வசதியான வாழ்வை படிப்படியாக பெற தொடங்குவர்.இவர்களுக்கு எல்லாமே சிறப்பாக அமைந்துவிடும்.ஆடி மாதம் பூரம் பூரம் நட்சத்திரத்தில் பிறந்திருந்தால் உங்களிடம் தனித்துவமான திறமைகள் இருக்கும்.மகம் நட்சத்திரம் காரர்கள் சமூகத்தில் ஒரு நல்ல அந்தஸ்தை பெறுவர்.கோயில் காரியங்களை,மக்களை ஒருங்கிணைத்து சமூக புரட்சி செய்வதில் வல்லவர்.தர்ம சிந்தனை அதிகம் உடையவர்.உத்திரம் நட்சத்திரகாரர்கள் அரசு சார்ந்த துறையில் இருப்பர்.உயர்ந்த அந்தஸ்து மனிதர்களின் நட்பை பெற்றிருப்பர்.கோபம் அதிகம் மகம்,உத்திரம் நட்சத்திரக்காரர்களுக்கு இருக்கும்.

வியாழன், 25 ஆகஸ்ட், 2011

ஜோதிடம் பார்ப்பவரின் ஜாதகம் அமைப்பு;


ஜோதிடம் பார்ப்பவரின் ஜாதகம் எப்படி இருக்கணும்?
ஜோதிடம் பார்க்க புத்தகம் படித்தால் மட்டும் போதுமா என ஜெயதேவ் எழுதியிருந்தார்.ஜோதிடம் புத்தகம் பார்த்து படிக்கலம்.ஆனால் ஜோதிடம் தொழிலாக செய்யவும்,ஜோதிடம் பிறருக்கு சொல்லவும் உங்கள் ஜாதகத்தில் சில கிரக நிலை அமைப்பு வேண்டும்.  இது பற்றிய ஒரு ஜோதிட பாடல் சொல்வதை பாருங்கள்.

சோமானும்புந்திவீட்டில் சொகுசுடன்வீற்றிருப்ப
வாகுரு உச்சமெய்த மகிழுடன்வெள்ளி பார்க்க
தாமதமின்றிதர்க்க சாஸ்திரவல்லோனாவான்
சேமமேயில்லைகண்டாய் சீமையோர்க்கின்னூல்தானே.

(கெள்சிகநாடி 8 ஆம் பக்கம்)

விளக்கம்;சந்திரன் புதன் வீட்டில் நல்ல நிலமையில் இருக்க உச்சமாய் இருக்கும் குருவை சுக்கிரன் நல்ல நிலையில் இருந்து பார்க்க இந்த ஜாதகர் தர்க்க சாஸ்திரத்தில் வல்லவனாக இருப்பான்.(இவர்களிடம் வாதம் செய்ய ஆரம்பித்தால் யாரும் மீள முடியாது அந்தளவு வாக்குவாதம் செய்வதில் கெட்டிகாரர்களாக இருப்பார்கள் தப்பு செய்தாலும் தன் பேச்சு திறமையால் கேள்வி கேட்பவர்களை குழப்பி விடுவதில் கில்லாடிகள்.உதாரணம் ஆ.ராசா,நித்யானந்தா

இது தர்க்க சாஸ்திரத்தில் வல்லவராக இருப்பவர் பற்றிய பாடல் ஆகும்..
ஜோதிடம் சொல்லக்கூடியவரின் ஜாதக நிலை பற்றிய பாடல்;

ஆனகேந்திரத்திற்புந்தி யிருக்க்ரெண்டாம்வீட்டாதி
தானுமே யுச்சமாகத் தரும்புக ருபயமேவ
ஊனமின்மூன்றினல்லோ ருறவெள்ளியுச்சமாக
மானிலத்துதித்த காளை சோதிடம்வழுத்தவல்லோன்.

(ஜாதக அலங்காரம்)

விளக்கம்;கேந்திரத்தில் புதன் இருக்கவும் இரண்டுக்கு உடையவன்
உட்சமாகவும் சுக்கிரன் மீனத்தில் உட்சம் பெற்று மூன்றில் நல்லவர்கள் இருக்க மாநிலத்தில் பிறந்த ஜாதகர் ஜோதிடம் என்னும் கணித சாஸ்திர வல்லவராக இருப்பார்.


மேற்க்கண்ட பாடல் குறிப்பிடும்படி என் ஜாதகம் இருப்பதாலோ ,என்னவோ குறைந்த வயதிலேயே ஜோதிடம் தொழிலாக செய்ய ஆரம்பித்துவிட்டேன்...

ஜாதகம் பார்த்து பலன் சொல்ல விரும்புபவர்கள் தங்கள் ஜாதகத்தில் இரண்டாமிடம் ,மூன்றாமிடத்தோடு புதன்,செவ்வாய்,சுக்கிரன்,குரு,கேது சம்பந்தம் பெறுகிறார்களா என பார்க்கவும்.நினைவாற்றல் தரும் கிரகமான புதன் வலுப்பெற வேண்டும்.ஒழுக்கம்,கண்ணியம்,நேர்மை ,பகுத்தறிதல் போன்றவற்றை தரும் குரு பலம் பெற்று இருத்தல் வேண்டும்.தெய்வ சக்தியும் இருக்க வேண்டும்.இதற்கு 5,9 ஆம் இடம் கெடாமல் இருக்க வேண்டும்.இரண்டாமிடத்தை எத்தனை கிரகம் பார்க்கிறதோ அந்தளவு பேச்சாற்றல் பலப்படும்.நித்யானந்தா வுக்கு பேச்சுதான் பலமே...அது இல்லைன்னா ஒண்ணுமில்ல..எதிராளிகளின் அதாவது பக்த கோடிகளின் மனதில் என்ன நினைக்கிறார் என்பதை (சைக்காலஜி)இவரால் சுலபமாக ஊடறிந்து கண்டறிய முடியும் என்கிறது ஜோதிடம்...அது மட்டுமின்றி வார்த்தை பிரயோகம்..மூளை சலவை செய்வதில் இவர் கைதேர்ந்தவர்.