வியாழன், 25 ஆகஸ்ட், 2011

ஜோதிடம் பார்ப்பவரின் ஜாதகம் அமைப்பு;


ஜோதிடம் பார்ப்பவரின் ஜாதகம் எப்படி இருக்கணும்?
ஜோதிடம் பார்க்க புத்தகம் படித்தால் மட்டும் போதுமா என ஜெயதேவ் எழுதியிருந்தார்.ஜோதிடம் புத்தகம் பார்த்து படிக்கலம்.ஆனால் ஜோதிடம் தொழிலாக செய்யவும்,ஜோதிடம் பிறருக்கு சொல்லவும் உங்கள் ஜாதகத்தில் சில கிரக நிலை அமைப்பு வேண்டும்.  இது பற்றிய ஒரு ஜோதிட பாடல் சொல்வதை பாருங்கள்.

சோமானும்புந்திவீட்டில் சொகுசுடன்வீற்றிருப்ப
வாகுரு உச்சமெய்த மகிழுடன்வெள்ளி பார்க்க
தாமதமின்றிதர்க்க சாஸ்திரவல்லோனாவான்
சேமமேயில்லைகண்டாய் சீமையோர்க்கின்னூல்தானே.

(கெள்சிகநாடி 8 ஆம் பக்கம்)

விளக்கம்;சந்திரன் புதன் வீட்டில் நல்ல நிலமையில் இருக்க உச்சமாய் இருக்கும் குருவை சுக்கிரன் நல்ல நிலையில் இருந்து பார்க்க இந்த ஜாதகர் தர்க்க சாஸ்திரத்தில் வல்லவனாக இருப்பான்.(இவர்களிடம் வாதம் செய்ய ஆரம்பித்தால் யாரும் மீள முடியாது அந்தளவு வாக்குவாதம் செய்வதில் கெட்டிகாரர்களாக இருப்பார்கள் தப்பு செய்தாலும் தன் பேச்சு திறமையால் கேள்வி கேட்பவர்களை குழப்பி விடுவதில் கில்லாடிகள்.உதாரணம் ஆ.ராசா,நித்யானந்தா

இது தர்க்க சாஸ்திரத்தில் வல்லவராக இருப்பவர் பற்றிய பாடல் ஆகும்..
ஜோதிடம் சொல்லக்கூடியவரின் ஜாதக நிலை பற்றிய பாடல்;

ஆனகேந்திரத்திற்புந்தி யிருக்க்ரெண்டாம்வீட்டாதி
தானுமே யுச்சமாகத் தரும்புக ருபயமேவ
ஊனமின்மூன்றினல்லோ ருறவெள்ளியுச்சமாக
மானிலத்துதித்த காளை சோதிடம்வழுத்தவல்லோன்.

(ஜாதக அலங்காரம்)

விளக்கம்;கேந்திரத்தில் புதன் இருக்கவும் இரண்டுக்கு உடையவன்
உட்சமாகவும் சுக்கிரன் மீனத்தில் உட்சம் பெற்று மூன்றில் நல்லவர்கள் இருக்க மாநிலத்தில் பிறந்த ஜாதகர் ஜோதிடம் என்னும் கணித சாஸ்திர வல்லவராக இருப்பார்.


மேற்க்கண்ட பாடல் குறிப்பிடும்படி என் ஜாதகம் இருப்பதாலோ ,என்னவோ குறைந்த வயதிலேயே ஜோதிடம் தொழிலாக செய்ய ஆரம்பித்துவிட்டேன்...

ஜாதகம் பார்த்து பலன் சொல்ல விரும்புபவர்கள் தங்கள் ஜாதகத்தில் இரண்டாமிடம் ,மூன்றாமிடத்தோடு புதன்,செவ்வாய்,சுக்கிரன்,குரு,கேது சம்பந்தம் பெறுகிறார்களா என பார்க்கவும்.நினைவாற்றல் தரும் கிரகமான புதன் வலுப்பெற வேண்டும்.ஒழுக்கம்,கண்ணியம்,நேர்மை ,பகுத்தறிதல் போன்றவற்றை தரும் குரு பலம் பெற்று இருத்தல் வேண்டும்.தெய்வ சக்தியும் இருக்க வேண்டும்.இதற்கு 5,9 ஆம் இடம் கெடாமல் இருக்க வேண்டும்.இரண்டாமிடத்தை எத்தனை கிரகம் பார்க்கிறதோ அந்தளவு பேச்சாற்றல் பலப்படும்.நித்யானந்தா வுக்கு பேச்சுதான் பலமே...அது இல்லைன்னா ஒண்ணுமில்ல..எதிராளிகளின் அதாவது பக்த கோடிகளின் மனதில் என்ன நினைக்கிறார் என்பதை (சைக்காலஜி)இவரால் சுலபமாக ஊடறிந்து கண்டறிய முடியும் என்கிறது ஜோதிடம்...அது மட்டுமின்றி வார்த்தை பிரயோகம்..மூளை சலவை செய்வதில் இவர் கைதேர்ந்தவர்.



1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

Its like you read my mind! You appear to know so much about this, like you wrote the book in it or something.
I think that you can do with some pics to drive the
message home a little bit, but instead of that, this is
great blog. A fantastic read. I'll certainly be back.