புதன், 24 ஆகஸ்ட், 2011

சனி பெயர்ச்சி பலன்கள் 2011-மிதுனம்

சனி பெயர்ச்சி பலன்கள் 2011-மிதுனம்

திருக்கணிதம் பஞ்சாங்கப்படி,கர வருடம் ஐப்பசி மாதம் 15 ஆம் தேதி,(1.11.2011)செவ்வாய்க்கிழமை காலை 10.12 மணிக்கு சனிபகவான் கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு செல்கிறார்.


இந்த பெயர்ச்சியால் ஒவ்வொரு ராசியினருக்கும் ஏற்படும் நன்மை தீமை பற்றி எழுதி வருகிறேன்.அதன் வரிசையில் இன்று மிதுனம் ராசியினருக்கு சனி பகவான் என்ன செய்வார் என பார்ப்போம்.



மிதுனம் ராசி (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை, புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

மிதுன ராசிக்கு அதிபதி புதன் பகவான்.புதன் கணக்கன்.வித்யாகரகனாகிய புதனை ஆட்சி வீடாக கொண்ட நீங்கள் அறிவாளிகள்.பின்னே...அறிவுகிரகம் புதன் ராசியை கொண்டவராச்சே.உங்கள் பகுத்தறியும் கேள்விகள் பிறரை வியக்க வைக்கும்.எதையும் கணக்கிட்டு செயல்படுத்துவதில்,சூழ்நிலையை யூகம் செய்து அதற்கேற்றார்போல் நடந்துகொள்வதில் நீங்கள் கில்லாடி.

சனி உங்கள் ராசிக்கு ஐந்தாமிடமாகிய புத்திர,பித்ரு ஸ்தானத்திற்கு வருகிறார்.இந்த இடம் நீங்கள் எடுக்கும் காரியங்களில் வெற்றி பெறுவதை பற்றி சொல்லும் இடமாகும்.

வைகாசி 23 ஆம் தேதி நடந்த ராகு கேது பெயர்ச்சி உங்கள் ராசிக்கு அனுகூலமாக இல்லை.அதற்காக உங்கள் குலதெய்வம் கோயிலுக்கு ஒரு முறை சென்று வாருங்கள்.குழந்தைகள் படிப்பு மற்றும் உத்யோக விசயங்களுக்காக உங்களை விட்டு பிரிவார்கள்.இவ்வருடம் தொழில் ரீதியாக பணமுடக்கம் ஏற்படும்.அதற்கான பலன்கள்ஐப்பசி 15 க்கு பிறகுதான் கிடைக்கும்.

ஆவணி புரட்டாசி மாதங்களில் சகோதரர்களுக்குள் வாக்குவாதம் உண்டாகலாம்.கவனம் தேவை.

ஐந்தாமிடத்து சனி சில முடக்கங்களை ஏற்படுத்தினாலும் சென்ற இரண்டரை ஆண்டுகளில் உடல் ஆரோக்கியம்,சொத்துக்கள் சார்ந்த பிரச்சனைகளில் சிக்கி தவித்த உங்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி நன்மை தரும்படியே அமைகிறது.

பூர்வீக சொத்து சம்பந்தமாகஒரு முடிவு கிடைக்கும் என்றாலும் பிரச்சனை தீராது.இன்னும் இரண்டரை வருடம் காத்திருக்க வேண்டும்.அல்லது நட்டத்தில் விட்டு கொடுக்க வேண்டும்.

தொழிலில் முன்பு இருந்த மந்த நிலை மாறி விறு விறுப்பு கூடும்.குழந்தைகள் வழியில் செலவுகள் அதிகரிக்கும்.

இவ்வருடம் தீபாவளி அன்று முதல் ஆறு நாட்களுக்குள்ளாக வீட்டில் கணபதி ஹோமம்,சுதர்ஸன ஹோமம் செய்தால் நன்கு சுபிக்‌ஷமான பலன்கள் உண்டாகும்.

உங்கள் ராசி அதிபதி பெருமாளையோ,உடனடி பலன் தரும் மதுரை மீனாட்சியையோ தரிசனம் செய்து வந்தால் மனச்சங்கடங்கள் அனைத்தும் தீரும்!

வாழ்க வளமுடன்!


Read more: http://www.astrosuper.com/2011/07/2011_04.html#ixzz1Vupa4LeH

1 கருத்து:

T.K.Theeransamy,Kongutamilarkatchi சொன்னது…

என்ன தலைவா! எனக்கு பேர்வச்சு

ஊர்வச்ச உங்களுக்கு ஒரு பிரச்சனையா?உங்க பிளாக்க முடக்கி அடக்க நினைக்கிற!உங்க வளர்சியை பிடிக்காத கும்பல! நம்ம கொங்கு நாட்டு பாணியில கட்டுக்குள் கொண்டு வந்தா!சொல்லுங்கா ....டி.கே.தீரன்சாமி,theeranchinnamalai.blogspot.com