எண்கணிதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எண்கணிதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 16 ஆகஸ்ட், 2012

ஜாதகத்தில் செவ்வாய் அமர்ந்த ராசிபலன்


ஜாதகத்தில் செவ்வாய் அமர்ந்த ராசிபலன்;
ஒருவர் ஜாதகத்தில அதாவது அவர் பிறக்கும்போது செவ்வாய் இருக்கும் ஸ்தானத்தைக் கொண்டு பலன்களைப் பொதுவானதாகக் கவனிக்கலாம்.
செவ்வாய் லக்னத்தில் இருக்கப் பிறந்தவர் கருணையில்லாதவராகவும், கடின சித்தராகவும், திடீரென்று கோபாவேசமே காட்டுபவராகவும், திருட்டு புத்தியுடையவராகவும் இருப்பார். மற்றும் அதிகமாக வித்தையில்லாதவர் என்றும் கூறலாம். சிறுவயதில் தந்தைக்கு பீடை தருபவராகவும் இருப்பார்.
இரண்டாவது ஸ்தானத்தில் செவ்வாய் இருக்கப் பிறந்தவர் அதிக படிப்பு இல்லாவிட்டாலும், செல்வம் உள்ளவராக இருப்பார். சுபகாரியத்தில் பிhயம் உள்ளவராக இருப்பார். நேத்ர வியாதிகள் இவரைப் பிடிக்கும். முன்கோபி, துஷ்டன் என்றும் பலர் சொல்ல நேரிடும்
செவ்வாய் மூன்றாவது ஸ்தானத்தில் இருக்கப் பிறந்தவர் செல்வ விருத்தியுள்ளவர். ஆனாலும் திடீர் திடீர் என்று கோபம் பொங்கும் ஸ்பாவமுள்ளவராக இருப்பார். பிறரை நிஷ்டூரம் செய்து பேசுவதில் பிரியம் உள்ளவர். பந்துக்கள் சிநேகிதர்களுக்கு விரோதியாகவும் இருப்பார்.
நான்காவது இடத்தில் செவ்வாய் இருக்கப் பிறந்தவர் களத்திர பீடையுள்ளவராக இருப்பார். தீர்க்காயுள் உள்ளவர். மாதுர் கண்டம் உள்ளவர். ஐதரியசாலி. ஸ்திரீகள் இவரை வெறுக்க நேரிடும்.
செவ்வாய் ஐந்தாவது இடத்தல் இருக்க பிறந்தவர் தாய்க்கு ரோகம் கொடுப்பவர். தாய் மாமனுக்கும் தோஷம், புராணக் கதைகளில் வல்லவராகவும் இருப்பார். ஆனால் துஷ்டன் என்றும் பெயர் வாங்க வேண்டிய நிலை ஏற்படும்.
ஆறாவது இடத்தில் செவ்வாய் இருக்கப் பிறந்தவர் அற்ப ஆயுள் உள்ளவராக இருப்பார். மனைவிக்குப் பீடை சிறுவயதிலேயே இரண்டாவது விவாகம் செய்து கொள்ளநேரிடும். சுகஜீவனம் என்றும் சொல்லலாம்.
செவ்வாய் ஏழாவது இடத்தல் இருக்கப் பிறந்தவர் கூஷய ரோகத்தினால் கஷ்டப்படவேண்யவராக இருப்பார். களத்திர தோஷம் உண்டு என்றும் சொல்லவேண்டும். சகோதரர்கள் அநேகர் உண்டு.
எட்டாவது இடத்தல் செவ்வாய் இருக்கப் பிறந்தவர் அரசர்களால் வெகுமதியளிக்கப்படும் நிலையடைவார். மாதுர் கண்டம். அற்ப ஆயுள். ஆயுதங்களால் ஆபத்து உடையவர். கடினமான மனநிலையுள்ளவர் என்றும் சொல்லலாம்.
செவ்வாய் ஒன்பதாவது இடத்தில் இருக்கப் பிறந்தவர் வியாபாரியாயிருப்பார். ஆனால் பாக்ய நாசம் உண்டு. பிறரிடம் சேவகம் செய்யவேண்டிய நிலை ஏற்படும். தெய்வ பக்தியில்லாதவர் என்றும் சொல்ல வேண்டும்.
பத்தாவது இடத்தில் செவ்வாய் இருக்கப் பிறந்தவர் பலவித உபாயங்கள் தெரிந்தவராகவும், ஆசாரமுள்ளவராகவும் இருப்பார். அவருடைய குலத்தவர்கள் பெருமைப்படக்கூடிய நிலையில் இருப்பார். பேசுவதில் வல்லவராகவும். தைரியசாலியாகவும் இருப்பார்.
பதினோராவது இடத்தில் செவ்வாய் இருக்கப் பிறந்தவர் நல்ல வசனம் உள்ளவராகவும், செல்வம் சேர்;ப்பதில் கருத்துடையவராகவும் பிதுர் சகோதரர் உடையவராகவும் இருப்பார்.

பனிரெண்டாவது இடத்தில் செவ்வாய் இருக்கப் பிறந்தவர் களத்திரபீடையுள்ளவராக இருப்பார். சகோதரர் பீடை உண்டு. வாத சரீரியாகவும் இருப்பார். அல்ப புத்திரர்கள் உடையவர்.

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

ஜோதிடம் என்றால் ரொம்ப பிடிக்கும்


எனக்கு ஜோதிடம் என்றால் ரொம்ப பிடிக்கும்..ஜோதிடம் ஒரு அறிவியல்..ஜோதிடம் ஒரு கணக்கு...காலம் கணித்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம்..அதே சமயம் நம்,உழைப்பும்,முயற்சியும் அவசியம்..திறமை இருந்தும் ஜெயிக்காதவன்,கடுமையாக உழைத்தும் ஜெயிக்காதவன்,முயற்சி செய்தே ஓய்ந்தவன் பல கோடி...காலம் பார்த்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம்..எனக்கு ஜோதிடத்தின் மீது அதிக நம்பிக்கை உண்டு..அது பற்றி நிறைய புத்தகம் ஆர்வமாக வாங்கி படிச்சிக்கிட்டே இருக்கிறேன்..என் அலுவலகத்தில் 2000க்கும் மேற்பட்ட ஜோதிட புத்தகங்களை அடுக்கி வைத்திருக்கிறேன்..தினசரி ஒன்றை படிக்கிறேன்..ஜோதிடம் பிறருக்கு சொல்வதையும் தொழிலாகவும் மாற்றிக்கொண்டு விட்டேன்..பிடிக்காத வேலையை செய்வதை விட பிடிச்ச வேலையை செய்வது,அதன் மீது பொருள் ஈட்டுவது தான் சரி என நினைக்கிறேன்..ஜோதிடம் என்பது ஏமாற்று,பொய் என அதை பற்றி சிறிதும் முயற்சித்து ஆராயாமல் பொத்தாம் பொதுவாக பேசுபவர்களை நான் ..அவர்களது அறியாமை என ஒதுங்கிவிடுவேன்..

நான் இன்னும் செய்ய வேண்டியது என யோசிக்கும்போது நான்
 படிச்சதுல பிடிச்சது,ஜோதிடத்தில் முக்கியமான சின்ன சின்ன தகவல்களை இங்கு பகிர ஆரம்பிச்சிருக்கேன்..ஏன்னா என் பக்கத்துல எனக்கு பிடிச்சதை தான் எழுத முடியும்.என்னைபோல ஜோதிடத்தில் ஆர்வமாக இருக்கும் நண்பர்களுக்கு இது பயன்படும்..ஜோதிடம் பற்றி முடிந்தளவு எளிமையக பகிரும்போது,அதை பற்றி சிறிதும் அறியாதவர்களுக்கு கொஞ்சம் புரியவும் தொடங்கும்...ஜோதிடத்தை அவநம்பிக்கையாக பார்ப்பவர்களுக்கு கொஞ்சம் நம்பிக்கை உண்டாக்க முடியும் என்றாலும் மகிழ்ச்சியே..அது 10 பேரா இருந்தாலும் சரி..

வெறும் ராசிபலன் மட்டும் ஜோதிடம் அல்ல...பிறந்த ஜாதகம் மட்டும் ஜோதிடம் அல்ல..உலகில் ஒவ்வொரு அசைவிலும் ஜோதிடம் இருக்கிறது..முக்காலமும் சொல்ல முடியும்..நான் அந்தளவு மகான் அல்ல...ஆனால் முக்காலமும் சொல்வது ஒரு கணக்குதான்....கணக்கிடும் திறமை,வேகத்தை பொறுத்து எதையும் முன்கூட்டியே கணித்து சொல்ல முடியும்..அதற்கு இறையருள் ஆசியும் வேண்டும்..நான் தொடர்ந்து பயிற்சி பெறுவேன்..ஜோதிடம் என்பது ஜோதி திடம்..மனதை திடப்படுத்துவது..நம்பிக்கை அற்றவர்களுக்கு நம்பிக்கை உண்டாக்குவது..அதுதான் என் நோக்கமும்..

செவ்வாய், 11 அக்டோபர், 2011

2012 எண்கணித பலன்கள் astro numerology

2012 எண்கணித பலன்கள் astro numerology;

எண்கணிதம் பற்றி நான் எழுதிய அதிர்ஷ்ட ஜோதிடம்,பிரபஞ்ச ரகசியம் ஆகிய இரு நூல்கள் என் ஜோதிட தொழிலுக்கு அடிப்படை.இப்போது அந்த ஜோதிட புத்தகங்கள் ரீ பிரிண்ட் ஆகி விற்பனை ஆகி கொண்டிருக்கின்றன..அந்த புத்தகத்தில் எழுதியதை ஏன் இன்னும் இணையதளத்தில் எழுதவில்லை..அதை எழுதினால் இன்னும் நன்றாக இருக்குமே...என கேட்டு ஃபோன் செய்த திரு சேலம்,பழனியப்பா ஸ்டோர்ஸ் ஷங்கர் அவர்களுக்கு நன்றி.என்னிடம் ஜோதிட ஆலோசனை பெற்றவர்களும் இணையத்தில் என் ஜோதிட கட்டுரைகள் படிப்பது சந்தோசம் தருகிறது.


1.1.2012 தொடங்கும் ஆங்கில புத்தாண்டு பொறுத்தவரை மொத்த கூட்டு எண் 7 வருகிறது.இது கலைத்துறைக்கு புகழ் கூட்டும்.பல புதிய சாதனைகளை தமிழ் சினிமா செய்யும்.கலைகள் வளர ஒரு பிரம்மாண்ட திட்டத்தை மத்திய அரசு,மாநில அரசுகள் உருவாக்கும்.இதன் மூலம் அழிந்து வரும் கலைகள் உயிர் பெறும்.

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

பிறந்த தேதி மர்மங்கள் /நியூமராலஜி


எண்கணித ஜோதிட ஆச்சர்யங்கள்



பிறந்ததேதி யை வைத்துதான் பெரும்பாலும் ராசி எண் போன்றவற்றை கணிக்கிறோம்,பார்க்கிறோம்...பிறந்ததேதியின் கூட்டுஎண்கள் எந்தளவு வேலை செய்கின்றன...அதன் பலன்கள் என்ன என்று பார்ப்போம்,


பிறந்ததேதி எண் ஒருவரது குணத்தையும் செயல்பாட்டையும் குறிக்கிறது.ஒருவரது பிறந்ததேதி 5 என்றால் (5,14,23)அவர் வேல்கமும்,டென்சனும் நிரைந்தவர்..நிறைய பேசுவார்.நிறைய விசய ஞானமும் இருக்கும்.பதட்டம் அதிகமுண்டு.ஒரு இடத்தில் ரொம்ப நேரம் இருக்கமாட்டார்.புதிதாக எதையாவது செய்ய முயற்சித்துக்கொண்டே இருப்பார்.மற்றவர்களை கவர முயற்சிப்பார்.இவரது வரவை விட செலவுகளெ அதிகம் காணப்படும்.

இவரது பிறந்த தேதி கூட்டு எண்;1,5,6,9 போன்ற வலுவான எண்களாக இருப்பின் நிலையான வெற்றியை பெறக்கூடியவராகவும்,நிறைய சம்பாதிக்க கூடியவராகவும் இருப்பார்.எதிலும் வெற்றி பெறுவார்.இதுவே வலுவில்லாத எண்களாக இருப்பின்,2,3,4,7,8 வாழ்வின் பிற்பகுதி மிகவும் போராட்டம் நிறைந்ததாக காணப்படும்.இந்த எண் குறிக்கும் ஆண்டுகளில் மிக கஷ்டமும்,தோல்வியும் உண்டாக்கும்.

2 ஆம் என் ஆதிக்கத்தில் பிறந்து கூட்டு எண் 8,9 என வந்தால் அவர்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள்.பெரும்பாலும் நோயாளிகளாகவே காணப்படுகிறார்கள்.வீண் வம்பு,வழக்குகளில் சிக்கி கொள்பவர்களாக இருக்கிறார்கள்.குடும்ப வாழ்வு போராட்டம் மிக்கதாக இருக்கிறது.
பிறந்த தேதி 4 ம் கூட்டு எண் 2,4,7,8 என அமைந்தால் கடன் பிரச்சனை,நண்பர்களால் நஷ்டம் என ஏற்படுகிறது....

கூட்டு எண் 7 வருபவர்கள் மன்மத ராஜாக்களாக பலரை பார்த்திருக்கிரேன்.கூட்டு எண் 4 ,8 பெரிய கடன் பிரச்சனைகளில் சிக்கி துன்பப்படுபவர்களை பார்த்திருக்கிறேன்.கூட்டு எண் 7 கலைத்துறையில் நல்ல வெற்றி தரும்.கூட்டு எண் 2 குழப்பமான வாழ்வையே தருகிறது.கூட்டு எண் 8 போராட்டம் ,தடங்கல்,தாமதம் என துன்புறுத்துவதாக சொல்லியிருக்கிறார்கள்.



புதன், 24 ஆகஸ்ட், 2011

சனி பெயர்ச்சி பலன்கள் 2011-மிதுனம்

சனி பெயர்ச்சி பலன்கள் 2011-மிதுனம்

திருக்கணிதம் பஞ்சாங்கப்படி,கர வருடம் ஐப்பசி மாதம் 15 ஆம் தேதி,(1.11.2011)செவ்வாய்க்கிழமை காலை 10.12 மணிக்கு சனிபகவான் கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு செல்கிறார்.


இந்த பெயர்ச்சியால் ஒவ்வொரு ராசியினருக்கும் ஏற்படும் நன்மை தீமை பற்றி எழுதி வருகிறேன்.அதன் வரிசையில் இன்று மிதுனம் ராசியினருக்கு சனி பகவான் என்ன செய்வார் என பார்ப்போம்.



மிதுனம் ராசி (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை, புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

மிதுன ராசிக்கு அதிபதி புதன் பகவான்.புதன் கணக்கன்.வித்யாகரகனாகிய புதனை ஆட்சி வீடாக கொண்ட நீங்கள் அறிவாளிகள்.பின்னே...அறிவுகிரகம் புதன் ராசியை கொண்டவராச்சே.உங்கள் பகுத்தறியும் கேள்விகள் பிறரை வியக்க வைக்கும்.எதையும் கணக்கிட்டு செயல்படுத்துவதில்,சூழ்நிலையை யூகம் செய்து அதற்கேற்றார்போல் நடந்துகொள்வதில் நீங்கள் கில்லாடி.

சனி உங்கள் ராசிக்கு ஐந்தாமிடமாகிய புத்திர,பித்ரு ஸ்தானத்திற்கு வருகிறார்.இந்த இடம் நீங்கள் எடுக்கும் காரியங்களில் வெற்றி பெறுவதை பற்றி சொல்லும் இடமாகும்.

வைகாசி 23 ஆம் தேதி நடந்த ராகு கேது பெயர்ச்சி உங்கள் ராசிக்கு அனுகூலமாக இல்லை.அதற்காக உங்கள் குலதெய்வம் கோயிலுக்கு ஒரு முறை சென்று வாருங்கள்.குழந்தைகள் படிப்பு மற்றும் உத்யோக விசயங்களுக்காக உங்களை விட்டு பிரிவார்கள்.இவ்வருடம் தொழில் ரீதியாக பணமுடக்கம் ஏற்படும்.அதற்கான பலன்கள்ஐப்பசி 15 க்கு பிறகுதான் கிடைக்கும்.

ஆவணி புரட்டாசி மாதங்களில் சகோதரர்களுக்குள் வாக்குவாதம் உண்டாகலாம்.கவனம் தேவை.

ஐந்தாமிடத்து சனி சில முடக்கங்களை ஏற்படுத்தினாலும் சென்ற இரண்டரை ஆண்டுகளில் உடல் ஆரோக்கியம்,சொத்துக்கள் சார்ந்த பிரச்சனைகளில் சிக்கி தவித்த உங்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி நன்மை தரும்படியே அமைகிறது.

பூர்வீக சொத்து சம்பந்தமாகஒரு முடிவு கிடைக்கும் என்றாலும் பிரச்சனை தீராது.இன்னும் இரண்டரை வருடம் காத்திருக்க வேண்டும்.அல்லது நட்டத்தில் விட்டு கொடுக்க வேண்டும்.

தொழிலில் முன்பு இருந்த மந்த நிலை மாறி விறு விறுப்பு கூடும்.குழந்தைகள் வழியில் செலவுகள் அதிகரிக்கும்.

இவ்வருடம் தீபாவளி அன்று முதல் ஆறு நாட்களுக்குள்ளாக வீட்டில் கணபதி ஹோமம்,சுதர்ஸன ஹோமம் செய்தால் நன்கு சுபிக்‌ஷமான பலன்கள் உண்டாகும்.

உங்கள் ராசி அதிபதி பெருமாளையோ,உடனடி பலன் தரும் மதுரை மீனாட்சியையோ தரிசனம் செய்து வந்தால் மனச்சங்கடங்கள் அனைத்தும் தீரும்!

வாழ்க வளமுடன்!


Read more: http://www.astrosuper.com/2011/07/2011_04.html#ixzz1Vupa4LeH