வியாழன், 16 ஆகஸ்ட், 2012

ஜாதகத்தில் செவ்வாய் அமர்ந்த ராசிபலன்


ஜாதகத்தில் செவ்வாய் அமர்ந்த ராசிபலன்;
ஒருவர் ஜாதகத்தில அதாவது அவர் பிறக்கும்போது செவ்வாய் இருக்கும் ஸ்தானத்தைக் கொண்டு பலன்களைப் பொதுவானதாகக் கவனிக்கலாம்.
செவ்வாய் லக்னத்தில் இருக்கப் பிறந்தவர் கருணையில்லாதவராகவும், கடின சித்தராகவும், திடீரென்று கோபாவேசமே காட்டுபவராகவும், திருட்டு புத்தியுடையவராகவும் இருப்பார். மற்றும் அதிகமாக வித்தையில்லாதவர் என்றும் கூறலாம். சிறுவயதில் தந்தைக்கு பீடை தருபவராகவும் இருப்பார்.
இரண்டாவது ஸ்தானத்தில் செவ்வாய் இருக்கப் பிறந்தவர் அதிக படிப்பு இல்லாவிட்டாலும், செல்வம் உள்ளவராக இருப்பார். சுபகாரியத்தில் பிhயம் உள்ளவராக இருப்பார். நேத்ர வியாதிகள் இவரைப் பிடிக்கும். முன்கோபி, துஷ்டன் என்றும் பலர் சொல்ல நேரிடும்
செவ்வாய் மூன்றாவது ஸ்தானத்தில் இருக்கப் பிறந்தவர் செல்வ விருத்தியுள்ளவர். ஆனாலும் திடீர் திடீர் என்று கோபம் பொங்கும் ஸ்பாவமுள்ளவராக இருப்பார். பிறரை நிஷ்டூரம் செய்து பேசுவதில் பிரியம் உள்ளவர். பந்துக்கள் சிநேகிதர்களுக்கு விரோதியாகவும் இருப்பார்.
நான்காவது இடத்தில் செவ்வாய் இருக்கப் பிறந்தவர் களத்திர பீடையுள்ளவராக இருப்பார். தீர்க்காயுள் உள்ளவர். மாதுர் கண்டம் உள்ளவர். ஐதரியசாலி. ஸ்திரீகள் இவரை வெறுக்க நேரிடும்.
செவ்வாய் ஐந்தாவது இடத்தல் இருக்க பிறந்தவர் தாய்க்கு ரோகம் கொடுப்பவர். தாய் மாமனுக்கும் தோஷம், புராணக் கதைகளில் வல்லவராகவும் இருப்பார். ஆனால் துஷ்டன் என்றும் பெயர் வாங்க வேண்டிய நிலை ஏற்படும்.
ஆறாவது இடத்தில் செவ்வாய் இருக்கப் பிறந்தவர் அற்ப ஆயுள் உள்ளவராக இருப்பார். மனைவிக்குப் பீடை சிறுவயதிலேயே இரண்டாவது விவாகம் செய்து கொள்ளநேரிடும். சுகஜீவனம் என்றும் சொல்லலாம்.
செவ்வாய் ஏழாவது இடத்தல் இருக்கப் பிறந்தவர் கூஷய ரோகத்தினால் கஷ்டப்படவேண்யவராக இருப்பார். களத்திர தோஷம் உண்டு என்றும் சொல்லவேண்டும். சகோதரர்கள் அநேகர் உண்டு.
எட்டாவது இடத்தல் செவ்வாய் இருக்கப் பிறந்தவர் அரசர்களால் வெகுமதியளிக்கப்படும் நிலையடைவார். மாதுர் கண்டம். அற்ப ஆயுள். ஆயுதங்களால் ஆபத்து உடையவர். கடினமான மனநிலையுள்ளவர் என்றும் சொல்லலாம்.
செவ்வாய் ஒன்பதாவது இடத்தில் இருக்கப் பிறந்தவர் வியாபாரியாயிருப்பார். ஆனால் பாக்ய நாசம் உண்டு. பிறரிடம் சேவகம் செய்யவேண்டிய நிலை ஏற்படும். தெய்வ பக்தியில்லாதவர் என்றும் சொல்ல வேண்டும்.
பத்தாவது இடத்தில் செவ்வாய் இருக்கப் பிறந்தவர் பலவித உபாயங்கள் தெரிந்தவராகவும், ஆசாரமுள்ளவராகவும் இருப்பார். அவருடைய குலத்தவர்கள் பெருமைப்படக்கூடிய நிலையில் இருப்பார். பேசுவதில் வல்லவராகவும். தைரியசாலியாகவும் இருப்பார்.
பதினோராவது இடத்தில் செவ்வாய் இருக்கப் பிறந்தவர் நல்ல வசனம் உள்ளவராகவும், செல்வம் சேர்;ப்பதில் கருத்துடையவராகவும் பிதுர் சகோதரர் உடையவராகவும் இருப்பார்.

பனிரெண்டாவது இடத்தில் செவ்வாய் இருக்கப் பிறந்தவர் களத்திரபீடையுள்ளவராக இருப்பார். சகோதரர் பீடை உண்டு. வாத சரீரியாகவும் இருப்பார். அல்ப புத்திரர்கள் உடையவர்.

1 கருத்து:

Unknown சொன்னது…

நல்ல தகவல் நன்றி